Wednesday, June 27, 2007

Mr/Mrs.கில்லி


பரபரப்பான வாழ்வியல் சூழலில் சிக்கிக்கொண்ட பின்னர் குடும்பம் என்பது ஆத்மார்த்தமான பினைப்பு என்பதெல்லாம் போய் ஒரு வர்த்தககட்டமைப்பாய் மாறிவிட்ட அவலத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இலக்குகளை நோக்கி ஓடும் விற்பனை பிரதிநிதிகளாய் தம்பதியர் ஆலாய்பறந்தால்தான் குடும்ப தேவைகளை ஓரளவிற்காவது பூர்த்தி செய்ய முடிகிறது. திறமையான விற்பனை பிரதிநிதிக்கு கிடைக்கும் ஊக்கத்தொகை போல திறமையானவர்களின் குடும்பத்தில் போலியான நிறைவும்,மற்ற குடும்பங்களில் நம்பிக்கையின்மையும், சலிப்பும் சச்சரவுகளும் தொடர்கின்றன.

குடும்பத்தின் வெற்றிக்கு இருவரின் பங்கும் சமமானது என்றாலும் புரிந்துணர்வு என்பது ஒத்த அலைவரிசையில் இல்லாவிடில் எத்தனை நிறையிருந்தும் விழலுக்கிறைத்த நிரே...புரிந்துணர்வினை இரு வகையில் உருவாக்க இயலுமென நம்புகிறேன், ஒன்று ஆத்மார்த்தமான பினைப்பினால் வருவது அல்லது ஆடுகிற மாட்டை ஆடியும்,பாடுகிற மாட்டை பாடியும் கறக்கிற வழி....இந்த பதிவில் இரண்டாவது வகை பற்றி எனக்கு தெரிந்ததை அல்லது நான் புரிந்துகொண்டதை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இவை இரு பாலாருக்கும் பொருந்தும்.

1.ஒத்துழைப்பு, இது மிக முக்கியமான மந்திரச்சொல்...இதை எப்படி உங்கள் இனனயிடமிருந்து பெறுவது. ஒரு எளிய வழி சொல்கிறேன் முயற்சித்துப் பாருங்கள்.உங்களுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ அவர்கள் அறியாமல் அவர்களின் உலகத்தில் நுழைந்து பாருங்கள்.அவர்களின் செயல்கள், எண்ணங்கள், நடவடிக்கைகள், பிரச்சினையை அணுகும்விதம், பலம்,பலவீனம் போன்றவைகளை விருப்பு வெறுப்பின்றி கவனியுங்கள், மிக முக்கியம் நீங்கள் மோப்பம் பிடிப்பதை அவர்கள் அறியக்கூடாது. இதில்தான் உங்களின் வெற்றி இருக்கிறது.

ஒரு கட்டத்தில் நீங்கள் மிக எதார்த்தமாக நீங்கள் அவரைப் போலவே செயல்பட ஆரம்பியுங்கள், அதாவது கண்ணாடி பிரதிபலிப்பதைப் போல,அவருக்கு அது ஆச்சர்யமாகவும் அதே நேரத்தில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது(ஈகோதான்) ரசிக்க துவங்கியிருப்பார். சந்தர்ப்பங்களில் அவர் சொல்ல வருவதை முந்திக்கொண்டு நீங்களே சொல்லுங்கள், மனிதர் ஒரு கட்டத்தில் அசந்து போய்,நீங்கள் அவரைப் போல செயல்படுவதாக நம்பி அவரையறியாமலே உங்களுக்கு தேவையான அதீத ஒத்துழைப்பினை தரத்துவங்குவார்.இது வெறும் முதல்படிதான் இங்கேயே சந்தோஷப்படாதீர்கள்.

2.பொதுவில் மனிதர்கள் அனைவரும் சுயநலமும், தான் என்கிற ஈகோவும் பிசைந்த கலவைதான்.எதிலும் முதலில் தங்களின் நிலைப்பாடும், பாதுகாப்பும்தான் முக்கியம் என கருதுவர்.அதை உறுதி செய்யும் பதட்டத்தில்தான் பாதிக்கு மேலான பிரச்சினனகள் தோன்றுகின்றன. சரி, முதல் கட்டத்தில் அவரின் ஈகோவை கரைத்திருப்பீர்கள், இப்போது அவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள்.அதாவது நீங்கள் நினைப்பதை அல்லது விரும்பியதை அவரின் மீது பட்டவர்த்தனமாய் திணிக்காதீர்கள்.

நீங்கள் விரும்பியதை பொதுவான கருத்து மாதிரி சொல்லுங்கள், சொல்லும் போதே எங்கெல்லாம் அவர் இடக்கு பண்ணுவாரோ அங்கெல்லாம் 'ஆனால்'னு ஒரு வார்த்தையை சேர்த்து இது நமக்கு ஒத்துவராது என அவருடைய நிலைப்பாட்டினை உங்கள் இருவரின் நிலைப்பாடாக சொல்லி விட்டு அதற்கான தீர்வினை, அதாவது உங்களின் சமாதானத்தை பட்டும் படாமல் கோடி காட்டுங்கள். நிச்சயமாக மேஜிக் நிகழும், 'நீ சொல்றதும் சரிதான்' என புத்திசாலித்தனமாய் முடிவெடுப்பதாய் உங்கள் தீர்மானங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். உங்கள் பங்குக்கு 'நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், நீங்களே சொன்னப்புறம் நான் என்ன சொல்றதுக்கு இருக்கு, உங்க விருப்பப்படியே செஞ்சிரலாம்'னு அடிச்சி ஆடுங்க.

3.இப்போது அவர் முறை, உங்களுக்கு பிடிக்காத ஒன்றை உங்களிடம் சொல்கிறார், அதாவது இந்த கட்டத்தில் அவர் உங்களின் இரண்டாவது கருத்தினை கேட்கும் அளவுக்கு வந்திருப்பார்.உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஆர்வமாய் கேளுங்கள், தொடர்ந்து,அவர் சொல்லும் கருத்தின் நேர்மையை பாராட்டுங்கள்,மனிதர் புகழ்ச்சியில் தடுமாறும் நேரத்தில் பொறுமையாக உங்கள் மறுப்பினை சந்தேகக் கேள்விகளாக தூவுங்கள்.

விவாதத்தை மென்மையாக அதே நேரத்தில் அவரின் போக்கிலேயே வளர்த்து கொண்டு போங்கள், எந்த இடத்திலும் உங்கள் கருத்தென ஊன்றிப்பேசாதீர்கள்,"இப்படி ஆய்ட்டா நாம என்ன பண்றது","அதுக்கு நாம என்ன செய்யலாம்" என பன்மையிலேயே விவாதம் போகவேண்டும். உங்கள் பக்கம் நியாமிருந்தால் நிச்சயமாக ஆனால் மெதுவாக அவர் தன் நிலைப்பாட்டில் தளர ஆரம்பித்திருப்பார் அல்லது அவர் பக்கம் நியாயமிருக்கும் பட்சத்தில் ஆர்வமாய் உங்களுக்கு விளக்க ஆரம்பித்திருப்பார்.அவர் சொலவது சரியாய் இருந்தால் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள் பாவம் எத்தனை நாளைக்குத்தான் அவரை நாமே
ஆட்டுவிப்பது.

4.முதல் மூன்று கட்டங்கள் தொடர வேண்டுமானால் இந்த நாலாவது விஷயம் ரொம்ப முக்கியம், அதாவது உங்களின் இனையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டுங்கள், அதேநேரத்தில்
பாராட்டுகிறேன் பேர்வழியென ஓவராக்ட் கொடுத்து சொதப்பிவிடக்கூடாது. முடிந்தவரை இனிமையாக பேசுங்கள், அவரின் நிறைகளை அடிக்கடி சுட்டிக்காட்டுங்கள், அதே நேரத்தில் அவரின் குறைகளை நேரடியாக கடுமையாய் தடித்த வார்த்தைகளில் விமர்சிக்காமல், "நான் சொல்றத கேளுங்க" என அதிரடியாய் ஆரம்பிக்காது மென்மையான தொனியில் 'எனக்கொன்னு தோணுது சொல்லவா?' என அனுமதி கேட்பது போல ஆரம்பித்து உங்களின் அதிருப்தியை சொல்லிப்பாருங்கள். அந்த கணத்தில் அவர் மறுத்தாலும் அடுத்தடுத்து அந்த குறைகள் காணாமலோ அல்லது உங்களின் பார்வைக்கு வராமலோ போய்விட வாய்ப்புண்டு.

5.நிறைவாக...ஏற்றுக்கொள்ளுங்கள், காது கொடுங்கள், நேரம் ஒதுக்குங்கள், அவர்களுக்காக உண்மையாய் கவலைப்படுங்கள், உற்சாகப்படுத்துங்கள், அவர்களின் போக்கில் உங்கள் கருத்தினை இனைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் தனித்தன்மையை உறுதி செய்யுங்கள்.நிலமையை புரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் நீங்கள் மட்டுமே முக்கியமானவர் இல்லை, குடும்ப நலமே முக்கியமென்பதை உணரத்தலைப்படுங்கள்.

இந்த ஐந்து நிலைகளுக்கு பின்னால் திரும்பி பாருங்கள்.இந்நேரத்திற்கு நீங்கள் இருவரும் ஆத்மார்த்தமாய் பின்னி பினைந்திருப்பீர்கள்.

வாழ்க வளமுடன்.

32 comments:

நந்தா said...

நல்ல யோசனைகள். நோட் பண்ணிக்கிட்டேன். எப்பயாவது கல்யாணம்னு ஒண்ணு நடந்தா ஃபாலோ பண்ண்ணிக்கறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வந்துட்டேன் வந்துட்டேன்...முதல்ல நட்சத்திரவாரத்துக்கு வாழ்த்துக்கள்...இனி தான் எல்லாத்தையும் படிக்கணும்..படிச்சுட்டு அது பற்றிப் பின்னூட்டமிடறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யோசனை எல்லாம் நல்லாருக்கு...முதல் யோசனையை கை வந்துடுச்சுன்னாலே எங்க வீட்டுல பிரச்சனை இருக்காது...பின்ன கண்ணாடி மாதிரி பிரதிபலிச்சேன்னு வைங்க..நானும் அத்தனை ஒழுங்கும் பொறுப்பும் நிறைஞ்சவளா ஆகிடுவேனே..அப்புறம் ஏன் பிரச்சனை வரப்போது?

பங்காளி... said...

ஆஹா...

ஆரம்பிச்சிட்டீங்களா...எத்தன அப்பாவிப்பயலுக மண்டைய பிச்சிட்டு அலையப் போறாய்ங்களோ தெரியலையே!

ஹி..ஹி...இதுக்கு போட்டிய ஒரு பதிவெழுனுமே...யோசிக்கனும்...ம்ம்ம்

குட்டிபிசாசு said...

நல்ல யோசனைகள்!! ஆனால் இப்போது எனக்கு பயன்படாது!! இருப்பினும் வாழ்த்துக்கள்!!

ஜி said...

//நல்ல யோசனைகள். நோட் பண்ணிக்கிட்டேன். எப்பயாவது கல்யாணம்னு ஒண்ணு நடந்தா ஃபாலோ பண்ண்ணிக்கறேன். //

ரிப்பீட்டே...

சென்ஷி said...

//நந்தா said...

வழிமொழிந்த

ஜி said...

நல்ல யோசனைகள். நோட் பண்ணிக்கிட்டேன். எப்பயாவது கல்யாணம்னு ஒண்ணு நடந்தா ஃபாலோ பண்ண்ணிக்கறேன். //

டபுள் ரிப்பீட்டே :)

சென்ஷி

சென்ஷி said...

//முத்துலெட்சுமி said...
யோசனை எல்லாம் நல்லாருக்கு...முதல் யோசனையை கை வந்துடுச்சுன்னாலே எங்க வீட்டுல பிரச்சனை இருக்காது...பின்ன கண்ணாடி மாதிரி பிரதிபலிச்சேன்னு வைங்க..நானும் அத்தனை ஒழுங்கும் பொறுப்பும் நிறைஞ்சவளா ஆகிடுவேனே..அப்புறம் ஏன் பிரச்சனை வரப்போது? //

:)))

சென்ஷி

லக்ஷ்மி said...

நல்ல யோசனைகள். நானும் நந்தாவை வழிமொழிஞ்ச ஜியை டபுள் டைம் வழிமொழிஞ்ச சென்ஷியை வழிமொழியறேன்... ஹிஹி...

ஆனால் என்னோட டவுட் என்னான்னா.... வேணாம் உடுங்க. அப்புறம் எல்லாரும் வந்து பொது மாத்து மாத்த ஆரம்பிச்சுடுவாங்க என்னைய. அப்பாலிக்கா பேசுவோம் அதைபத்தி.

பத்மா அர்விந்த் said...

//இலக்குகளை நோக்கி ஓடும் விற்பனை பிரதிநிதிகளாய் தம்பதியர் ஆலாய்பறந்தால்தான் குடும்ப தேவைகளை ஓரளவிற்காவது பூர்த்தி செய்ய முடிகிறது.//இதை ஒரு கூட்டத்தில் யாரோ சொல்ல போக, மற்றவர்களிடம் இருந்து அளவுக்குமீறி ஆசைகளை உருவாக்கிக் கொண்டவர்களே நாம் தானே என்று பதில் சொல்லி சமாதானம் செய்ய பாதி நேரம் போய்விட்டது.
மற்ற குறிப்புகளில் முத்து லஷ்மி சொன்னதேதான்.

- யெஸ்.பாலபாரதி said...

இந்த பதிவு நிறைய விசயங்களைப் பற்றி பேசுகிறது. ஆனால்.. எனக்கு அனுபவம் இல்லாத இடங்கள் பற்றியது.

இப்படியான அனுபவங்கள் வாய்க்கும் போது மங்கை நினைவில் நிச்சயம் வருவார் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். :)))

அபி அப்பா said...

அன்பு மங்கை! வணக்கம்! நான் இந்த பதிவில் உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். காரணம் ஒரு 5 பாயிண்டை வச்சிகிட்டு வருஷம் ஒத்துமையாக வாழ முடியுமா என்பதே என் கேள்வி. சத்தியமாக சொல்கிறேன் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் சொல்கிறேன், எனக்கும் என் தங்கமணிக்கும் சண்டையே வந்தது இல்லை. காரணம் "அடக்கிப்பார் இல்லாட்டி அடங்கிப்போ" இந்த பாலிசிதான்.

சரி! உங்க மனைவி திட்டியதே இல்லையான்னு கேட்டா நான் சிரிப்பேன். காரணம் எனக்கு காது இருக்கு. ஒன்னில் வாங்கி ஒன்னில் வெளியே விடுவேன்.

சரி! நீங்க உங்க மனைவியை திட்டியதே இல்லியான்னு கேட்டா அதுக்கும் சிரிப்பேன். காரணம் (வடிவேலஉ பாணியில் படிக்கவும்)"தோ பார் இன்னிக்கு அட்டாக் முடிஞ்சுது! பீ கேர் ஃபுல்....நா என்னய சொல்லிகிட்டேன்" அப்டீன்னு கண்ணாபிண்னான்னு திட்டிடுவேன்.

இதையெல்லாம் விட்டு போட்டு 5 பாயிண்ட் புடிச்சுகிட்டு மாரடிப்பானேன்! என்ன நா சொல்றது!!!:‍))

அபி அப்பா said...

என்னப்பா சென்ஷி! நீ இதுக்கும் ரிப்பீட்டே போட்டே தொலச்சிபுடுவேன்:‍))

அபி அப்பா said...

மங்கை! வாழ்க்கை என்பது சுவாரஸ்யமானது! ஜாலியா வாழ்ந்து பார்க்கனும். அப்பதான் அதோட சுகம் புரியும்.ஈவன் நான் பட்ஜெட் கூட போடமாட்டேன் வீட்டுக்கு. எல்லாம் தங்கமணிதான். நான் அதுக்காக பொறுப்பில்லாதவலன் இல்லை! பிரதிபபட்டீல் வேணுமா கலாம் வேணுமான்னு பெரிய விஷயமெல்லாம் எங்க வீட்டுல நாந்தேன்:_))

சென்ஷி said...

அபி அப்பா,

உங்களை நேர்ல பார்த்ததுலேந்து நீங்க அடிச்ச லூட்டிய பத்தி தனிப்பதிவே போடணும். அது அப்புறம் :)

சென்ஷி said...

//அபி அப்பா said...
என்னப்பா சென்ஷி! நீ இதுக்கும் ரிப்பீட்டே போட்டே தொலச்சிபுடுவேன்:‍))//

:((

பங்காளி... said...

மங்கைஜி...கொஞ்சம் கொஞ்சமாய் மாதாஜி ஆகிக்கொண்டிருக்க்கிறார்....

(ஏதோ நம்மால முடிஞ்சது..பத்த வச்சிருக்கேன், பார்க்கலாம்...ஹி..ஹி...)

ஜீவி said...

வாழ்க்கை என்பது நாடகமேடை அல்ல; அப்படி எனில்
எல்லாமே நடிப்பாகப் போகக்கூடிய ஆபத்து இருக்கிறது.
ஒருவருக்கொருவர் அவரவர் 'சுயத்தை'ப் பலிகொடுக்காமல் அதைப் புரிந்துக்கொண்டு அனுசரித்துப் போவதில்
சுவாரஸ்யமும் இருக்கிறது; சுவையும் இருக்கிறது.
அனுபவித்துப் பாருங்கள்; புரியும்.
ஜீவி

சென்ஷி said...

எனது தேசிய உரிமையை பறிக்க நினைக்கும் அபி அப்பா டவுன்,,,டவுன்..

// பங்காளி... said...
மங்கைஜி...கொஞ்சம் கொஞ்சமாய் மாதாஜி ஆகிக்கொண்டிருக்க்கிறார்....//

ஏன் இந்த கொலைவெறி பங்காளி

அபி அப்பா said...

இந்த ஜி யார் என்பது எனக்கு தெரியாது! ஆனால் நான் கன்னபின்னானுனு நம்ம முத்துலெஹ்மமிகிட்ட கூட வாதாட தயார்!!! வர சொல்லுங்க! அவஙக என்ன நேரில் பார்த்தவங்க!!!பார்த்துடுவுவும்!!!!(ஸ்டார் வாரம் களை கட்டுமே)(

Thekkikattan|தெகா said...

ஒன்று ஆத்மார்த்தமான பினைப்பினால் வருவது அல்லது ஆடுகிற மாட்டை ஆடியும்,பாடுகிற மாட்டை பாடியும் கறக்கிற வழி....இந்த பதிவில் இரண்டாவது வகை பற்றி எனக்கு தெரிந்ததை அல்லது நான் புரிந்துகொண்டதை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.//

சொல்றதெ பார்த்த முதல் வகை முயற்சி உங்களுக்கே கைகூடல போலிருக்கே :-P

நான் நினைக்கிறேன் "அகங்காரம்"மில்லாமல் நெறைய ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிட்டா (வாங்க சாப்பிட, உப்பு அதிகம் குறைச்சல் போன்ற சம்பாஷனைகளையும் தாண்டி...) தினமும் ஒரு நடை நடந்துகிட்டே எல்லா பிரட்சினைகளும் காணமல் போயிடுமின்னு.

இன்னொரு விசயம், தேவைகள் அதிகரிக்கும் பொழுது வாழ்வும் பரபரப்பாவதில் ஏதாவது சந்தேகம் உண்டா. இந்த உலகமயமாக்களின் தத்துவமே அது தானே... வீடு முழுக்க பொருட்களை வாங்கி குவித்து விட்டு அவைகளை வீட்டிற்குள் குடித்தனம் நடத்த சொல்லிவிட்டு நாம் கடனை கட்டுவதற்கு, 110 டிகிரி வெயிலி வியர்வை சிந்தறோம்.

எனவே, தேவைகள் குறையும் பொழுது வீட்டிற்குள் அமைதி குடி கொள்கிறது என்பது எனது கருத்து. அதுவே இரண்டு தம்பதிகளுக்குமிடையே ஒரு இணைப்பு பாலமாகவும் உதவலாம்.

இது பதிவுக்கு சம்பந்தமில்லையோ...

அபி அப்பா said...

இல்லீங்க மங்கை! நா இந்த விளையாட்டுக்கு வரலை! ஏன்னா என் குரூப் ஜாஸ்தியா இருக்க்கும் போல இருக்கு! தனி மடல் அதிகமா வருது. "ஏன்யா மானத்த வாங்குற"ன்னு...ஸோ நா வெளகிக்கறேன்!!!

மங்கை said...

ஆஹா...தம்பிகளா அண்ணன்களா.. எல்லாம் சமத்துதான்..

இந்த பங்காளிய சொல்லனும்..நான் வேற ஒன்னும் சொல்ற மாதிரி இல்லை..பிள்ளையார் சுழி போட்டுட்டார் இல்ல..

அபி அப்பா...பின் குறிப்பு இந்தப் பதிவு உங்களுக்கு, பங்காளிக்கு, ஜீவிக்கு தெகாக்கு...ஆஹா யாருக்குமே தேவை இல்லை போல இருக்கே.. சரி இது எனக்கே எனக்கா இருக்கட்டும்...

வந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி

மங்கை said...

லட்சுமி.... ராசாத்தி வாம்மா வா.. எல்லாம் முடிஞ்சதா?... இப்ப திருப்தியா?..இல்ல இன்னும் பாக்கி இருக்கா?... வீட்டுக்கு வழி தெஞ்சதா?...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திருப்தியா நீங்க வேற ஒரு குறை தலைவி நீங்க ஊருக்கும் சந்திப்புக்கும் வரலியேன்னு தான்ன்ன்...

வீட்டுக்கு வழி தெரியாம என்ன? வேற போக்கிடம் என்ன இருக்கு வந்து தானே ஆகணும்.

பூனைக்குட்டி said...

//நல்ல யோசனைகள். நானும் நந்தாவை வழிமொழிஞ்ச ஜியை டபுள் டைம் வழிமொழிஞ்ச சென்ஷியை வழிமொழியறேன்... ஹிஹி... //

லக்ஷ்மி, படிச்சுப் பார்த்துட்டுத்தான் வழிமொழிஞ்சீங்களா! ;)

துளசி கோபால் said...

என்ன மங்கை இது?

அவர் அப்படிச் சொன்னால் நாம் இப்படிச் சொல்லணும்......

இப்படியெல்லாம் திட்டம் போட்டுக்கிட்டு ஒத்திகை பார்த்துக்கிட்டு வாழ்க்கை நடத்த
முடியுமா?

அவுங்கவுங்க சொந்த இயல்போட இருக்கணும். அதே சமயம் அடுத்த பாதியின்
கருத்துக்களை மதிச்சு நடக்கணும். அதுக்காக ஒரேதா ஆடிக்கிட்டு இருந்தாலும்
வாழ்க்கை சுவாரசியப்படாதுப்பா.

நம்முடைய குற்றம் குறையோடுதான் மறுபாதி நம்மை ஏத்துக்குது. அதேதான் மறுபாதிக்கும்.

என்னைப் பொறுத்தவரை 'ஜால்ரா' தேவை இல்லை:-))))

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
//நந்தா said...

வழிமொழிந்த

ஜி said...

நல்ல யோசனைகள். நோட் பண்ணிக்கிட்டேன். எப்பயாவது கல்யாணம்னு ஒண்ணு நடந்தா ஃபாலோ பண்ண்ணிக்கறேன். //

டபுள் ரிப்பீட்டே :)

சென்ஷி \\\

அண்ணன்கள் ரிப்பீட் செய்ததை இந்த தம்பியும்

ரிப்பீட் செய்கிறேன் ;))

சிவபாலன் said...

Super!

ramachandranusha(உஷா) said...

மங்கை.
எட்டு போட உங்களை அழைத்துள்ளேன்.

லக்ஷ்மி said...

//நம்முடைய குற்றம் குறையோடுதான் மறுபாதி நம்மை ஏத்துக்குது.//

டீச்சர், 100க்கு 90 இடங்களில் இது நடக்கறதில்லை - எனக்கு தெரிஞ்ச வரை. அதுவும் இங்க நம் அப்படின்றது மனைவியை குறிக்கும் பட்சத்தில் நிச்சயம் அதுக்கு வாய்ப்பே இல்லை. அந்த மாதிரி இடங்களிலும் வாழ்க்கையை இனிமையாக்கிக்க மங்கை இந்த குறுக்கு வழிகளை சொல்லியிருக்காங்கன்னு நான் நினைக்கிறேன்.

கண்மணி/kanmani said...

மங்கை துளசியக்கா சொல்ற மாதிரி ஜால்ரா போட்டுத்தான் அட்ஜஸ்ட் பண்ணனும்னா அதில் ரியாலிட்டி இருக்காது.போலியாகிவிடும். நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒத்தக் கருத்து இருக்க வேண்டாம்.
ஆனா ஒத்துப் போகும் தன்மை இருக்கனும்.

இது எங்க கோட்பாடு.;)