Saturday, June 30, 2007

மிஸ்.அனாரா


அனாரா குப்தா 2004 ஆம் ஆண்டின் மிஸ்.காஷ்மீர்.


2004 ஆம் ஆண்டு ஒரு போர்ன் ஃபிளிம்ல நடிச்சார்னு குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டார். 2 வருஷத்திற்கு பிறகு ஜம்மு ஹைகோர்ட், படத்துல இருக்குறது அனாரா இல்லைனு தீர்ப்பு குடுத்தாலும், கீழ் கோர்ட் மீண்டும் விசாரனைக்கு உத்தரவு போட்டது. இன்னும் இந்த 'விசாரனை' நடந்துட்டு இருக்கு.

ஆனா இந்த ரெண்டு வருஷத்துல அந்த பொண்ண உண்டு இல்லைனு பண்ணிட்டாங்க நம்ம காவல் தெய்வங்களும், நீதி தேவர்களும். படத்தில் நடிச்சது இந்த பொண்ணு தான்னு வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்துச்சு. சினிமால வருமே, ஒரு பொண்ண விசாரனை செய்யும் முறை, அப்படியே தான் நடந்திருக்கும் போல. அனாரா முன்னாடியே அவங்க அம்மாவ அடிச்சு, தம்பிகளை அடிச்சு, கொலை பண்ணீருவோம்னு மிரட்டி வலுக்கட்டாயமா சில வாக்குமூலத்த சொல்ல சொல்லி இருக்காங்க. பத்திரிக்கை ரிப்போர்டர்கள் கிட்ட பேட்டி குடுக்கறப்போ சில விஷயங்களை மனசு வீட்டு பேசீட்டு இருக்கும்போது, பின்னால இருந்து போலீஸ் பேனாவால அனாராவ குத்திட்டே இருந்தாங்களாம்.

அந்த படத்துல இருக்குறது அந்தப் பொண்ணு தானான்னு பார்த்து சொல்லுங்கன்னு சன்டிகர்ல இருக்கும் ஃபோரன்சிக் துறைக்கு (Central Forensic Science Laboratory) சொல்ல, அங்க இருந்த புண்ணியவான்களுக்கு கூலியோட கரும்பு திண்ண கசக்குமா, இந்த பிரோஜக்ட ரொம்ப 'அக்கறையோட' பார்த்து, அலசி ஆராய்ச்சி செய்து '' நாங்க படத்த ''frame by frame" பார்த்தோம் கண்டிப்பா அது அனாரா தான்னு தங்கள் கண்டு பிடிப்பை கோர்டுக்கு ரிப்போர்ட் அனுப்பிச்சாங்க.

''Sources at the CFSL said scientists had examined 'frame-by-frame' the pornographic CD sent by the Jammu and Kashmir police on January 23 before coming to the conclusion that the girl in the film was Anara.''

ஆனா நீதி தேவர்களுக்கு இந்த பதில்ல திருப்தி இல்லை. இங்க வட இந்தியாவுல இப்படி சொல்லிட்டாங்களே, ஒரு செகண்ட் ஒபீனியனுக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வச்சாங்க. அங்க இருந்த கடமை வீரர்களும், ''Frame by Frame" பார்த்து, சீச்சீ இது அனாரா இல்லை.. இது வேறு, அப்படீன்னு ரிபோர்ட் குடுத்துட்டாங்க.

In Hyderabad, the Andhra Pradesh Forensic Science Laboratory Director K P C Gandhi said "We had compared the CD as per forensic biometric studies from head to toe, including the fingers, toes and the hair line. We found the lady featured in the blue film sent by the J&K police was not Anara."

''The report was of three pages, but many documents, including still photographs, had been attached with the report, the sources added.''

இப்ப கோர்டுக்கு குளப்பம் ஆயுடுச்சு. தெற்கும் வடக்கும் சரியில்லை எதுக்கும் இன்னொரு ஒபீனியன் கேப்போம்னு குஜராத்துக்கு அனுப்பி வச்சாங்க. (Gujarat Directorate of Forensic Science)

எப்படியோ கோர்ட் 'உத்தரவுப்படி' இப்படி ஒரு சிடிய பார்த்துட்டு என்சாய் பண்ணிட்டு இருக்காங்க ஃபோரன்சிக் மக்கள். இந்த ரெண்டு வருஷத்துல அந்த பொண்ணு என்ன பாடு பட்டிருக்கும், இந்த ரிப்போர்ட் எல்லாம் பத்திரிக்கைல வந்து. . .. ஹ்ம்ம்ம்

ஆனால் மனம் தளராத அனாரா தான் அனுபவிச்ச இந்த கொடுமை எல்லாம் ஒரு சினிமா மூலமா இந்த உலகத்துக்கு சொல்லிட்டாங்க. ஒன்னு விடாம எல்லா நிகழ்வுகளையும் சினிமாவுல கொண்டு வந்திருக்காங்களாம். ''எனக்கு நடந்த கொடுமைகளுக்கு பிறகு வாழக்கூடாதுன்னு தான் இருந்தேன். ஏன்னா நரகம்னா எப்படி இருக்கும்னு இப்ப நான் உணர்ந்துட்டேன். எனக்கு நடந்த இந்த அநியாயம், வேற யாருக்கும் நடக்கக்கூடாதுன்னா, நான் தான் ஏதாவது செய்யனும்னு தான், நானே இந்த படத்துல நடிச்சு இருக்கேன்" அப்படீன்னு சொல்ற அனாரா, படமாக்கும் போது பல இடங்கள்ல நினைவிழந்து விழுந்துட்டாங்களாம்.

ஜூன் 22 ஆம் தேதி வெளிவர வேண்டிய படம், ஜம்முல சிவ சேனா ஆளுக, விசாரனை நடந்துட்டு இருக்கும் போது இந்த படம் வரக்கூடாதுன்னு தடை உத்தரவு வாங்கிட்டாங்க.

எப்படியோ ஃபோரன்ஸிக் டிபார்ட்மெண்டுல வேலை செய்யற எல்லார் கம்ப்யூட்டர்லேயும் இந்த படம் இருக்கும், இன்னும் அவங்க, frame by frame பார்த்துட்டு இருப்பாங்கன்னு பேசிக்கராங்க.


படத்துல நடிச்சது அந்த பொண்ணா இல்லையாங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் கோர்ட், ஒரு பெணணுங்கிற காரணத்துனால நடத்திய இந்த பொது விசாரணையை பார்க்கும் போது மனதில் ஒரு வெறுமை தான் தோன்றுகிறது. இந்த வழக்குக்கு போலீஸ் குடுத்த விளம்பரமும், அனாராவுக்கு நேர்ந்த கொடுமையும் கண்டிப்பா கண்டிக்க வேண்டியவை. வெறும் எழுத்துகளின் தொகுப்பா தான் நமது சட்டம் நமக்கு தெரியுது. அதை உணர்வு பூர்வமா அனுகி, சட்டம் எதற்காக என்பதை தவறு செய்தவர்கு உணர்த்த எத்தனை முறை நம் காவல் துறையும் நீதி துறையும் முயற்சி செய்து இருக்கு?.

7 comments:

Anonymous said...

சினிமாவில் நடிக்க சேர்த்து விடுகிறேன் என்று சொல்லித்தான் இந்த பெண்ணை அனுபவித்தார்கள். இந்த பெண்ணுக்கு புத்தி எங்கே போச்சுது? சுய மூளை இல்லையா? அதையும் சொல்லுங்க மங்கை!

சென்ஷி said...

கருத்து சொல்ல ஏதும் தோணவில்லை.

ஆனால் இந்த பெண்ணை இந்த அளவுக்கு தூண்டிலில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மகானுபாவர்கள் தப்பித்ததை தனி படமாய் எடுக்கலாம்.


சென்ஷி

அபி அப்பா said...

:-((

பத்மா அர்விந்த் said...

மங்கை
இந்த வழக்கு பத்தி முன்னாடியே படிச்சிருக்கேன். பெண்களை நடத்தற முறை மட்டும் இல்லை, ஆண்களிடம் இருந்து தகவலை வரவழைக்கும் முறையும் (ஏழைகளாக அரசியல் தொடர்பில்லாமல்) சரியில்லைதான். அமெரிக்காவில் சிறை விசாரிப்புமுறைகளை பார்த்தால் அதிர்ந்தே போவீர்கள். எல்லாம் சரியாய் இருப்பது law and orderஇல் மட்டும்தான். சிறையில் ஆண் சிறைகள், பெண் சிறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொன்னும் ஒருவித கொடூரம்.

மிளகாய் said...

ம்ம்ம்ம்ம்...

காட்டாறு said...

பூலான் தேவிகளும், அனாராக்களும் வந்தாலும், நம் மக்களுக்கு புத்தி மட்டும் வராது. சினிமாவில் நடிக்க முயன்று, அனாரா மாதிரி மாட்டிக் கொண்டு வதங்கி நிற்கும் பெண்களின் கதைகள் ஏராளமாய் வந்தும், அதே படுகுழியில் விழும் பெண்களை என்னென்பது? :(

Anonymous said...

மிகவும் நியாயமான வாதம் மங்கை. இந்த மாதிரி வழக்குகளில்(கற்பழிப்பு உட்பட) எல்லாமே சட்டம் சம்பந்தப்பட்டவரின் உணர்வுகளையும் ப்ரைவசியையும் கருத்திலேயே கொள்ளவில்லையோ என்று எனக்கும் நிறைய வருத்தம் இருக்கிறது. உங்கள் பதிவு அதை பிரதிபலிக்கிறது. ஏன் குறைந்த பட்சம் தீர்ப்பு வரும் வரை விசாரனையையாவது பொதுவில் நடத்தாமல் தனிப்பட்ட கோர்ட்டில் நடத்தலாமே அல்லவா? பொதுவில் சமந்தப்பட்டவரின் மானத்தை ஏலம் விட்டு விட்டு கடையில் இவர் நிரபராதி என்று சின்ன எழுத்தில் போடுவது....ஹூம் என்னத்த சொல்ல...கற்பழிப்பு வழக்குகளில் சாட்சி சொல்வதற்கே கூனி குறுக வேண்டியிருப்பது மிகப் பெரும் அவலம்.

தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி

http://www.desipundit.com/2007/07/06/anara/