Monday, June 25, 2007

தலை வாழை விருந்து




வீடுகளில் தற்போது வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் அறவே இல்லாது போய்விட்ட ஒன்று.ஹோட்டல்களில், கல்யாண விருந்துகளைத் தவிர மற்ற சமயங்களில் வாழையிலையில் உணவருந்துவதில்லை என்ற நிலை வந்துவிட்டது! ப்ளாட்டுகளில் வாழை இலை கிடைப்பது கஷ்டம்...நாகரீகம், சூழ்நிலை, நேரமின்மை ஆகியவற்றால் இன்று வாழை இலை சாப்பாடு என்றால் அது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

ஆனால், வாழை இலையில் சூடான உணவு வகைகளை வைத்து சாப்பிட்டு பழகியவர்கள், தட்டில் சாப்பிட்டால் மனத்திருப்தி அடைய மாட்டார்கள். வாழையிலையின் நுனி சாப்பிடும் நபருக்கு இடது கைப்பக்கம் இருப்பதாகப் போட வேண்டும் என்பது மரபு. ஏனெனில் சாப்பிடுவதற்கு அகலமான பகுதி வலது கை அருகில் அப்போது அமையும் என்பதுதான் காரணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.


பருப்பு, நெய், சாதம், சாம்பார், பதார்த்தங்கள் என எல்லாம் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். இதில் பொறியல், கூட்டு, பச்சடி, ஊறவைத்த பருப்பு இப்படி எல்லாவகையான எல்லா வித சுவையுள்ள உணவும் இருக்கும்....


அப்பளம், வடை, ஊறுகாய், உப்பு இவை சாப்பிடுபவரின் இடது கை மேல் ஓரத்தில் வைப்பார்கள்... ஏன்? இந்த வகை பதார்த்தங்கள் குறைவாக சுவைக்கு மட்டுமே என்பதை உணர்ந்து சாப்பிடத்தான். கொஞ்சம் தூரத்தில் உள்ளவற்றில் நமது கவனம் செல்லாது இல்லையா?. அதுவும் பருப்பு வெல்லம் போட்ட பாயசம் பரிமாறுவார்கள். காரணம் பசி நேரத்தில் உணவு உண்ண நமக்கு உடனடி சக்தி வேண்டுமே! வெல்லம் குளுக்கோஸாக மாறி சக்தியை அளிக்கும் இதுவே அதிகமானால் உணவைக் குறைத்து போதும் என்ற நிலையை ஏற்படுத்தி விடும்!


தென்னிந்திய ஸ்டைல் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சாப்பாடு பாருங்க.....:-)))

1. உப்பு

2.ஊறுகாய்

3.சட்னி பொடி

4. பாசிப்பயிரில் செய்த சாலட்
5.கடலைப் பருப்பு கூட்டு
6.தேங்ககாய் சட்னி

7. அவரை பொறியல் 8. கரிப்பலா பொறியல், 9. எழுமிச்சம் சாதம், 10. பப்படம், 11. சிப்ஸ் வகைகள், 12. இட்லி, 13. சாதம், 14. பருப்பு, 15. பச்சிடி, 16. ரசம் 17. உளுந்தினால் ஆன உணவு 18. கத்திரிக்காய் கூட்டு 19.இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு பச்சிடி 20 வறுத்த மைதாவினால் ஆன உணவு 21. அவியல் 22. வெண்டைகாய் 23. சாம்பார் 24. இனிப்பான பால் 25. வடகரி 26. போளி. 27. வெஜிடபிள் உப்மா 28. இஞ்சி சட்னி 29. பாயஸம் 30. தயிர் 31. மோர்.



{யப்ப்பா...இத தட்டச்சு பண்றதுக்குள்ளேயே நான் ஒரு வழி ஆயிட்டேன். இதையெல்லாம் சமைச்சு.....31 ஐட்டம்....இதுல மூனு ஐயிட்டம் பண்றதுக்கே

நாம (ன்) (ங்க) விடற பீலா.. ஹ்ம்ம்ம்}



வாழையிலைச் சூட்டுக்குத் ஒரு பிரத்யேக சுவையும் மணமும் உண்டு என்பதுடன், இதில் ஒரு மருத்துவத் தன்மையும் உண்டாம். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் இருக்குமாம். நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.


நம் முன்னோர்கள்களின் வாழ்க்கை முறையில்தான் எத்தனை சிறப்பம்சங்கள். அவர்கள் வகுத்துள்ள வாழ்க்கை விதிகள் யாவுமே மனிதர்களின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பெருக்கிப் பாதுகாக்கும் சிறப்புகள் படைத்தவை என்று நன்கு தெரிந்தும் ஏனோ நாம் அதை எல்லாம் விட்டு வெகு தூரம் வந்து விட்டோம்.

சாம்பார், ரசம் சாப்பிட்ட பிறகு பாயசம் போடுவது... சாப்பாட்டில் ஒரு நிறைவைத் தந்துவிடும். பிறகு மோர் சாதம் சாப்பிடும்போது அந்த இனிப்பான பாயசம் நெஞ்சிலே ஏப்பமாக வராமல் இருக்கும்.இப்படிப்பட்ட வாழ்க்கையைக் கடைபிடிக்கும் நம்மைப் பார்த்து மேலைநாட்டவர்கள் வாழத் தெரியாதவர்கள் என்று சொல்வது பொறாமையின் சொற்களே தவிர வேறென்ன...


பாயாசமே 64 வகை வைக்கிறார்களே!

அதே மேலை நாட்டவர்கள் உணவில் கொழுப்பு, மாவு இவை தவிர ஒன்றும் இருப்பதில்லை! மற்ற சத்துகளையெல்லாம் மருந்தாக இணைத்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் நமக்கோ உணவே மருந்தாகிவிடுகிறது.



தலைவாழை இலை போட்டு மரியாதை, பணிவு, சூடான சாப்பாடு... அன்புடனும் மன்வாசனையுடன் கூடிய இந்த விருந்துக்கு ஏங்காதவர்கள் யார்?.

(சமீபத்தில் படித்த பத்திரிக்கை செய்தியொன்றின் தாக்கத்தில் எழுதியது)

60 comments:

கோவி.கண்ணன் said...

மங்கை,

அறுசுவை உணவிற்கு நன்றி !

நட்சத்திர வாழ்த்துக்கள் !

மணியன் said...

ஆகா, பசி கிளம்பிவிட்டதே !

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!!

யாழ்.பாஸ்கரன் said...

வலைப் பூவில் தலை வாழை விருந்து சுவை மிகுதியாக உள்ளது நன்றி
வாழ்த்துக்கள்

இராம்/Raam said...

மங்கை,

நட்சத்திர வாழ்த்துக்கள்...

:)

காலையிலேயே மதிய சாப்பாட்டை ஞாபகப்படுத்திட்டிங்க..... இங்கே எல்லா இடத்திலேயும் தட்டு தான், அதுவும் வெல்லம் போட்ட சாம்பார் வேற... :(

குட்டிபிசாசு said...

///பருப்பு வெல்லம் போட்ட பாயசம் பரிமாறுவார்கள். காரணம் பசி நேரத்தில் உணவு உண்ண நமக்கு உடனடி சக்தி வேண்டுமே///

உண்வோடு இதுபோன்ற கொழுப்பற்ற இனிப்பு சாப்பிட்டால் நல்ல செறிமானம் ஆகும், வாயுக்கோளாறும் வராமல் இருக்கும்.

குட்டிபிசாசு said...

வாழையிலைக்கு அக்குபிரஷர் பாய்ண்ட்ஸ் மாதிரி போட்டு அசத்திடீங்க!!

வாழ்த்துக்கள்!!

இந்த வாரம் முழுக்க அடிச்சி ஆடுங்க!!

துளசி கோபால் said...

வாழை இலை முழுசும் நம்பர்ஸ் போட்டு பறிமாறுனது அடுக்கவே அடுக்காது.

அதுவும் குளுருக்குப் பயந்து, சமைக்கச் சோம்பலா இருக்கும் இந்த நேரத்தில்......... (நறநற)

வல்லிசிம்ஹன் said...

நட்சத்திர மங்கைக்கு வாழ்த்துக்கள்.

முதல் விருந்தே தலை வாழையா.
பிரமாதம்.
கல்யாண சமையல் காத்திருக்குனு சொல்லிட்டீங்க.
காத்து இருக்கோம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழையிலையை பற்றி சிறப்பாக கூறியுள்ளீர்கள், நட்சத்திர வாழ்த்துக்கள்.

- யெஸ்.பாலபாரதி said...

யக்கோவ்வ்வ்வ்,
பதிவை படிக்காமையே நட்சத்திரத்துக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன். படிச்ச பின் நிதானமா(!) திரும்பவும் வாறேன்.

மாலன் said...

வாழை இலையை தென்னிந்தியர்கள் மட்டுமல்ல, தென்னமரிக்க நாடுகளிலும் உணவுகளை pack செய்யப்பயன்படுத்துகிறார்கள். அகன்றது, வலுவானது ஆனாலும் மடக்க வசதியானது (Larger, firmer,yet flexible) என்பதும் அங்கே வாழை இலை தாராளமாகக் கிடைப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். நிகாரகுவாவில் Nacatamal என்ற ஒரு உணவை (காலையில் நாம் இட்லி சாப்பிடுவது போல காபியுடன் அவர்கள் உண்ணும் உணவு)வாழையிலையில் பொட்டலம் கட்டி விற்பார்கள். வெற்றிலையைச் சுருட்டி,அந்தச் சுருளை நார் கொண்டு கட்டும் பீடாப் பொட்டலம் போல, ஆனால் சற்றுப் பெரிதாக இருக்கும் அது. அவர்களும் வாழை இலைக்கு மருத்துவ குணம் உண்டு என்பதால் அது ஆரோக்கியமானது எனக் கருதுகிறார்கள்.

வாழை இலைச் சாப்பாட்டின் முக்கியமான வசதி, சாப்பாட்டிற்குப் பின் அது, சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாமல், எளிதாக கழித்துக் கட்டப்படக்கூடியது (Easily disposable)அந்தக் கோணத்தில் அது இன்று மிக முக்கியமானது.

அன்புடன்
மாலன்

ஜி said...

ஆஹா.. நட்சத்திரத்த ஆரம்பிக்கும்போதே சாப்பாடா?

விருந்தினர உபசரிக்கிறது தமிழர் பண்பாச்சே... ;))

நட்சத்திர வார வாழ்த்துக்கள்...

(நாந்தான் முந்தாநாள் பாசக்கார குடும்பத்திலிருந்து உங்களுக்கு தொலைப்பேசிய ஜி :))

பங்காளி... said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு..

பதிவோட ஃபுல்மீல்ஸ்க்கு ஒரு டோக்கன் குடுத்திருக்கலாம்...

பசிக்குது...ஹி..ஹி...

G.Ragavan said...

முதலில் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள். தலைவாழை விருந்தோடு தடபுடலாகத் துவங்கியுள்ளது விருந்து. வாரம் முழுவதும் இப்படியே இருக்கட்டும். :)

கண்மணி/kanmani said...

ஆஹா தலை வாழை இலை போட்டு அறுசுவையா?...ஒகே விருந்துக்கு நாங்க ரெடி.
வாழ்த்துக்கள் மங்கை.

- யெஸ்.பாலபாரதி said...

//யப்ப்பா...இத தட்டச்சு பண்றதுக்குள்ளேயே நான் ஒரு வழி ஆயிட்டேன். இதையெல்லாம் சமைச்சு.....31 ஐட்டம்....இதுல மூனு ஐயிட்டம் பண்றதுக்கே

நாம (ன்) (ங்க) விடற பீலா.. ஹ்ம்ம்ம//

ஹிஹிஹி
ரொம்ப கவனமா ஆட்டத்தை தொடங்கி இருக்கிற மாதிரி தோணுது...!
ம்.. நடத்துங்க!

பத்மா அர்விந்த் said...

/அதே மேலை நாட்டவர்கள் உணவில் கொழுப்பு, மாவு இவை தவிர ஒன்றும் இருப்பதில்லை! மற்ற சத்துகளையெல்லாம் மருந்தாக இணைத்துச் சாப்பிடுகிறார்கள்/இது தவறான கருத்து. இங்கேயும் பலவகை உனவும் கைமருந்தும் நாட்டு மருந்தும் உண்டு. வழிவழியாக வந்த சமையல் முறையும் உண்டு. நம்மை பார்த்து வாழத்தெரியாதவ்ர்கள் என்று சொல்வது போன்ற கருத்துக்களும் மிகைதான். எது நன்மைதரும் என்று புரிந்துகொண்டால் எல்லாவற்றையும் பயன்படுதும் குணம் கொண்டவர்கள் நிறைய. நன்றி நவிலல் விடுமுறைக்கு பின் நம் ஊர் தீபாவளி மருந்து போலவே செரிமானத்துக்காக செய்யும் திண்பண்டங்கள் உண்டு, நிறைய சீரகம் சேர்த்து.

பத்மா அர்விந்த் said...

சொல்ல மறட்ந்ஹு போனது: இங்கேய் கொழுப்பும் நார்சத்தும் நிறைந்த உணவு பொருளும் அவசர உணவங்களும் பெருகியது இந்த தலைமுறையில்தான். பாரம்பரிய உணவை யாரும் சமைப்பதில்லை என்று பொருமும் மூத்த தலைமுறைக்காரர்கள் (60 வயதுக்கும் மேல்) சொல்லி சலித்துக்கொள்வார்கள்.

Unknown said...

சாதத்தை நடுவில் வைத்து அதுக்கு கீழ்புறம் வேற அடுக்கியிருக்கீங்களே. இது அடுக்குமா?
ஓனம் ஸபெஷல் மாதிரி. காசு வாங்கிட்டு டோக்கன் தரும் எண்ணம் ஏதாவது உண்டா?
பார்த்தாலே மயக்கம் வருதே. நட்சத்திர வாழ்த்துக்கள்.

மலைநாடான் said...

மங்கை!

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

//இங்கேய் கொழுப்பும் நார்சத்தும் நிறைந்த உணவு பொருளும் அவசர உணவங்களும் பெருகியது இந்த தலைமுறையில்தான். பாரம்பரிய உணவை யாரும் சமைப்பதில்லை என்று பொருமும் மூத்த தலைமுறைக்காரர்கள் (60 வயதுக்கும் மேல்) சொல்லி சலித்துக்கொள்வார்கள்

இதுவே என் எண்ணமும்.//

இலவசக்கொத்தனார் said...

தலைவாழை விருந்து பிரமாதம். எங்க வீட்டில் சில நம்பர்கள் மாறி வரும். அப்புறம் எலுமிச்சை - எவ்வளவு அழுத்திப் பிழிஞ்சாலும் எழுமிச்சை ஆகாது!! கொஞ்சம் மாத்திடுங்களேன். :-)

கதிர் said...

ரெண்டு பார்சல் அனுப்ப முடியுமா!

எக்ஸ்ட்ரா பாயாசத்தோட!

குசும்பன் said...

நன்றாக இருந்தது உங்க விருந்து...
வாழை இலை சாப்பாடு, மண் சட்டியில்
சமைத்த சாதம், வெட்டி வேர் போட்ட
மண் பானை தண்ணீர், இஞ்சி, கொத்தமல்லி போட்ட மத்தினால் கடைந்த மோர்...இந்த வாசனை எல்லாம் எதிலும் வராது...

"வாழை இலையில்"
"இளநரை வராமல் இருக்குமாம். நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்."

வாழை இல்லையையே சாப்பிட்டு விடுகிறேன்.. எப்படி நம்ம ஐடியா!!!

ALIF AHAMED said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!!

வெங்கட்ராமன் said...

ஆரம்பமே அமர்க்களமாக இருக்குதே.

நட்சத்திர வாரம் முழுவதும் எங்களுக்கு நல்ல விருந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்.

Sud Gopal said...

மங்கை...
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

super!!!

அபி அப்பா said...

suparo super!!!

அபி அப்பா said...

30

சினேகிதி said...

வாழையிலை விருந்து பிடிக்காத ஆக்களிருக்கினமா என்ன? கனடாவிலயும் ஏதோவொரு சாபப்பாட்டுக்கடை விளம்பரத்தில் வாழையிலையில் விருந்து என்று கேட்ட ஞாபகம்..வாழை இலை விக்கிற விலைக்கு ம்.

தென்றல் said...

ஏ..ங்..க..ப்..பா... வாழை இலை விருந்துல இவ்வளவு விசயங்கள் இருக்கா?

தகவலுக்கு நன்றி!

/யப்ப்பா...இத தட்டச்சு பண்றதுக்குள்ளேயே நான் ஒரு வழி ஆயிட்டேன். /

இதைலாம் சாப்பிடுறதுக்குள்ள....ம்ம் படிக்கிறதுக்குல்ல எனக்கும்தான்...;)

Jazeela said...

வாழை இலைப் போட்டு அன்போடு அழைக்கிறீர்கள் பதிவை படிக்க. ஒவ்வொரு பதிவும் அறுசுவையோடு இருக்கும் என்று நம்புகிறோம்.

நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துகள்.

சேதுக்கரசி said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்!

காட்டாறு said...

அம்மாடி... அம்மாடி... கலக்கிட்டியேம்மா... நட்சத்திரமாமே.... தலவாழ இலப் போட்டதற்கு உனக்கு நன்றிம்மா... பந்தில அமர அழைத்ததற்கு நன்றி தமிழ்மணத்திற்கு நன்றி... நல்லா எழுதுமா...

யக்கோவ்... சாயங்காலமா, நிதானமா வந்து வடை பாயாசத்த சாப்பிடுறேன்... வாசிக்கிறேன் சொல்லுறேனக்கோவ்....

Santhosh said...

மங்கை வாழைஇலை போட்டு விருந்தோட நட்சத்திர வாரத்தை ஆரம்பிக்கறீங்க கலக்கல்... ம்ம்ம்ம்.... படிக்கும் பொழுது நாக்குல எச்சில் ஊறுது..

சிவபாலன் said...

மங்கை,

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!!

கலக்குங்க..

சூப்பர் பதிவு!

லொடுக்கு said...

இந்த வாரம் முழுதும் மணம் கமகமக்கும் போலிருக்கே. தவறாம விருந்துல கலந்துகிடுவோங்கோ.

Santhosh said...

உங்ககிட்ட கேக்காம கொள்ளாம உங்களையும் எட்டு போட கூப்புட்டுடேன்.. கொஞ்சம் கோச்சிகாம ஒரு எட்டு
எட்டிட்டு போயிடுங்க. இங்க என்னோட ஏரியாவுல கூப்பிட்டு இருக்கேன் உங்களை.

gulf-tamilan said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

மங்கை said...

ஆஹா..என்ன சொல்றதுன்னே தெரியலையே ...உங்க பாசத்த பார்த்தா அழுவாச்சி அழுவாச்சியா வருது....

டெலிஃபின் மிக்க நன்றி..

கோவி, மணியன், பாஸ்கரன், இராம் நன்றி..பல தரவை வெல்லம் போட்ட சாம்பார பற்றி சொல்லிட்டீங்க... மருத காரவுகளுக்கு காரசாரமா இல்ல வேணும்..:-))

மங்கை said...

நன்றி குட்டிப்பிசாசு,

நன்றி துளசிக்கா... பார்சல் அனுப்பட்டுமா

மங்கை said...

வல்லி...ஹி ஹி ஹி...கேள்வி இன்னொரு தடவை தெளிவா கேக்கரீங்களா?...

மங்கை said...

நன்றி விக்னேஷ்..

பாலபாரதி நன்றி...அடிக்கடி நம்ம கடை பக்கம் எல்லாம் வாங்க தம்பி...

மாலன் முதல் தடவையா வந்து இருக்கீங்க,,நன்றி

ஜி..என்ன ஜி சொல்லிதான் தெரியனுமா என்ன..நீங்க தான்னு...நன்றி ஜி..

மங்கை said...

வாங்க பங்காளி...பசிக்குதா....இதுக்கு தான் காலா காலத்துல சாபிடனும்னு சொல்றது..வயசான காலத்துல நாம தான் சாக்கிறதையா இருக்கோனும்..
:-))).. சரி சரி திட்டாதீங்க

ஜெயஸ்ரீ said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் மங்கை.
அட்டகாசமான ஆரம்பம்.

மங்கை said...

வாங்க ராகவன்... மிக்க நன்றி.


உங்களுக்கு இல்லாததா கண்மணி..
நன்றி...


பாலபாரதி.... உன்ன மாதிரியா எல்லாரும் னு நம்ம சகோதரிகள் கேட்டுட்டா..அதுக்கு தான்..:-)))

பத்மா..டாக்டரம்மா சொன்னா சரியா இருக்கும்..விளக்கத்திற்கு நன்றி பத்மா..

மங்கை said...

வாங்க சுல்தான்...
அதான் விருந்துன்னு சொல்லிட்டனே அப்புறம் எப்படி காசு வாங்குறது...நன்றி

நன்றி மலைநாடன்...

கொத்தனாரே..உங்களுக்கு வேண்டாத 'நீம்பு சாவல்' வேண்டாம்
எடுத்துடறேன்...

தம்பி... குசும்பன் நன்றி..

மங்கை said...

குசும்பன்..பார்த்து கொம்பு முளச்சுடப்போகுது...

மின்னலே நன்றி...

சுதர்சன கோபால், வெங்கடராமன்.. நன்றி..

மங்கை said...

அபி அப்பா..வாங்க வாங்க..நன்றி
ஜூனியர் என்ன சொல்றார்...

நன்றி சினேகிதி..இங்கேயும் நகரங்கள்ல வாழை இலை தட்டுப்பாடு இருக்கும்.

நன்றி தென்றல்..நம்ம கலாச்சாரத்துல தெரியாத விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்குங்க..

மங்கை said...

வாங்க ஜெஸிலா..நீங்க சாப்பிட தயார்னா புதுசு புதுசா போட வேண்டியதுதான்...:-))

நன்றி சேதுக்கரசி...

காட்டாறு..படிக்காம தான் இருக்கியா இன்னும்... அப்போ இம்போசிஷன் எழுது..சாயந்திரம்...

நன்றி ஜெயஸ்ரீ..

மங்கை said...

வாங்க சந்தோஷ்...அழைப்புக்கு நன்றி
ஆஹா பசங்களுக்கெல்லாம் பசி எடுக்க வெச்சுட்டேன் போல இருக்கே...

நன்றி சிவா..

நன்றி லொடுக்கு...அபி அப்பா நிஜமாவே விருந்து போட்டுட்டார்..

மங்கை said...

நன்றி கல்ஃப் தமிழன்

Thekkikattan|தெகா said...

அட அட அட... நீங்களா இந்த வார நட்சத்திரம். சொல்லவே இல்லை.

கொஞ்சம் காசு, காசுன்னு ரெண்டு நாள ஓட வேண்டியதாப் போச்சு. தாமதமா வந்துட்டேன், மன்னிச்சுகோங்க.

உங்க வாழை இழை பறிமாறலை நான் நிதானமா உட்கார்ந்து சாப்பிடுவேனாக்கும்.

கலக்குங்க சொல்றேன். :-)

மங்கை said...

வாங்க தெகா..

சொல்லீட்டா அப்புறம் ஒரு வாரம் தமிழ்மணம் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டீங்க இல்ல.. அதான்..
நிதானமா சாப்பிடுங்க..புது மாப்பிள்ளை வேற...உங்களை ஸ்பெஷலா கவனிக்கனும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அசத்தலா ஆரம்பிச்சு இருக்க்கீங்க !

நல்லாதொரு விளக்கம்.வருங்கால தலைமுறைக்கு ஒரு வாழையிலை பாடம் நடத்திருக்கீங்க.

சென்ஷி said...

ஆரம்பமே அசத்தல்... நட்சத்திர வாரம் கொண்டாடும் எங்கள் நிஜ நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்...

சென்ஷி

மங்கை said...

நன்றி லட்சுமி, சென்ஷி

Revathi said...

Linked this wonderful post to my tamilcuisine. arumai arumai !!

மங்கை said...

நன்றி ரேவதி

Earn Staying Home said...

மிகவும் அற்புதம்