Saturday, June 30, 2007

மீனாட்சிக்கு உதவ

மீனாட்சிய உங்களுக்கு எல்லாம் தெரியும்.....அவங்கள பற்றிய அறிமுகம் தேவை இல்லைனு நினைக்குறேன்...

சென்ற முறை தில்லி வந்து இருந்தப்போ சில திட்டங்கள் பற்றி என்கிட்ட பகிர்ந்துக்கிட்டாங்க.... கோவைல எச்ஐவியால பாதிக்கப்பட்டோர்களின் கூட்டமைப்பு அங்கங்க நடந்துட்டு இருக்கு. இந்த கூட்டமைப்பில் இருந்தவங்கெல்லாம் ஒன்னா சேர்த்து இப்ப ஒரே கூட்டமைப்பா செயல் படறாங்க. இதன் மூலமா, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சில தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தனும்னு திட்டம். இவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு சிலரின் உதவிகளை நாடி இருக்காங்க. வேண்டிய உதவிகள் கிடைக்க வில்லை.

மீனாட்சி பகிர்ந்து கொண்ட பதிவுல கண்டிப்பா ஏதாவது செய்வோம்னு நம்மில் பலர் சொன்னோம்.. சும்மா பேசியும், அனுதாப வார்த்தைகளை கொட்றதுனாலேயும் எந்த பலனும் இல்லைங்கறது உங்களுக்கே தெரியும். தனி மடல் மூலமாகவும் என்கிட்ட சிலர் உதவறதா சொல்லி இருக்காங்க . இத எப்படி செய்யலாம் அப்படீன்னு யோசனை கேட்க தான் இந்த பதிவு.

இப்ப மீனாட்சி மற்றும் அவருடன் சேர்ந்து பணியாற்றுபவர்களின் திட்டம் என்னன்னா...குழந்தைகள் கல்வி, மருத்துவ செலவு....கணவனை இழந்த பெண்கள் சொந்த கால்ல நிக்க கம்யூட்டர் பயிற்சி வகுப்புகள்..இது தான் உடனடி தேவை.

மற்றொன்று இந்த கூட்டமைப்பின் இனையதளத்தை மேம்படுத்தி கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பின்னும் மற்றவர்களுக்காக உழைக்கும் இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.

உங்க கருத்துக்களை இப்ப நீங்க சொலுங்க..

நேற்று பேசும்போது பாதிக்கப்பட்ட தமிழரசி என்கிற பெண்ணின் உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கிறதா சொன்னாங்க. இப்ப மருத்துவமனையில இருக்காங்க. தமிழரசி விரைவில் குணமடைய பிரார்திப்போம்.

14 comments:

சென்ஷி said...

பிரார்த்தனையில் பங்கேற்கின்றேன்.
சகோதரியின் உடல்நலம் சீராக ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்

சென்ஷி

அன்பேசிவம் said...

என்னால் முயன்ற உதவிகளை செய்ய காத்திருக்கிறேன்....................

G.Ragavan said...

மீனாட்சியின் உடல் வேதனை தீரனும், மன அமைதி பெறவும் இறைவனை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.

காக்காக் கடவிய நீ காவாது இருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் ஆறுமுகவா!

பாரி.அரசு said...

எங்களுடைய "சிந்தனை அலைகள்" என்கிற அமைப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் வழி கணிணி பயிற்சி அளித்து வருகிறோம். எங்களுடைய மையம் பட்டுக்கோட்டையில் இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் வரை மாணவர்கள் நிறைவாக இருக்கிறார்கள். அதன்பிறகு மீனாட்சியின் அமைப்பினர் விருப்பபட்டால் ஒரு மணி நேரம் அவர்களுக்கு நேரம் ஓதுக்கி தர முடியும்.
அவர்களின் விருப்பத்தையும், விரிவாக பேசவும் pktPari.Arasu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ALIF AHAMED said...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=345862&disdate=6/30/2007


//

:(

மங்கை said...

நன்றி அன்பே சிவம்...

ராகவன்...உடம்பு சரியில்லாம இருக்குறது தமிழ்செல்வி.. உங்க பிரார்த்தனைக்கு நன்றி...


நன்றி பாரி அரசு....நான் அவர்களிடன் இதை சொல்கிறேன்..

மின்னல்..நானும் படித்தேன் இந்த செய்தியை...கொடுமை

பங்காளி... said...

யாரோ இந்தவாரம் இது பத்தியெல்லாம் எளுதமாட்டேன்னு சொன்னதா நியாபகம்.

மீனாட்சிக்கு நிறைய ஊக்கமும் உதவியும் கிடைத்திருக்கும் என நினைத்திருந்தேன்.ம்ம்ம்ம்

எனது குருவருளினால் சகோதரி தமிழ்செல்வி விரைவில் குணமடைவார்.

மங்கை said...

பங்காளி..

இப்பவும் மீனாட்சிக்கு உதவ எழுதின பதிவு தான்... நான் எப்பவும் எழுதுற அறுவையில்லை...:-)))

ஹ்ம்ம் நானும் அப்படித்தான் எதிர்பார்த்தேன்...ம்ம்ம்ம்

Unknown said...

நான் ஏற்கனவே சொல்லி இருந்த மாதிரி என்னால் முடிந்த அளவுக்கு செய்கிறேன் மங்கை.

இராம்/Raam said...

மங்கை,

கண்டிப்பாக என்னால் இயன்ற உதவியை செய்கிறேன்.....

மங்கை said...

நன்றி சந்தோஷ்...இராம்

தென்றல் said...

சகோதரி தமிழரசி விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்!

/பாதிக்கப்பட்ட பின்னும் மற்றவர்களுக்காக உழைக்கும் இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும்../

மங்கை, என்னையும் ஆட்டத்தில சேர்த்துகுங்க! நன்றி!

மங்கை said...

நன்றி தென்றல்...கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன்

காட்டாறு said...

என்ன பண்ணனுமின்னு நீங்களே project போட்டு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும். எப்படி உதவலாமின்னு நானும் மூளைய கசக்கி யோசிக்க வேண்டாம் பாருங்க.