Saturday, May 19, 2007

அடென்ஷன் ப்ளீஸ் டென்ஷன் பார்ட்டீஸ்






எளிய உடற்பயிற்சிகள் நடை, கைக்கிளிங்க்..(இது எல்லாம் யாரு பண்ணுவான்னு கேக்குறவுங்க...கலர் பார்த்துட்டே கூட இது எல்லாம் பண்ணலாம்) அல்லது விளையாட்டு.

உணவில் நார்சத்து, புரதச்சத்து நிறைந்த சமச்சீரான உணவு வகைகளை உட்கொண்டு, அதிக கலோரிகளை குறைக்கலாம், லாம் இல்லை..குறைக்கனும்

நண்பர்களுடன் சிறிது நேரம் மனம் விட்டு பேசுதல், பெற்றோர்கள், கணவன் அல்லது மனைவியுடன், குழந்தைகளுடன் தங்கள் நேரத்தை பகிர்ந்துகொள்ளும் போது மன அமைதி கிடைப்பதால் மனஅழுத்தம் குறைகின்றது.

முக்கியமா டென்ஷன் ஆகாதீங்க...நீங்க டென்ஷன் ஆகி வீட்ல இருக்குறவுங்களையும் டென்ஷன் ஆக்காதீங்க..

புகை பிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்க்கவும்.

கொஞ்சம் வெயிட் ஜாஸ்தியா இருந்தா உணவு முறை மற்றும் உடற் பயிற்சிகளை கடைபிடித்து உடல் எடையை குறைத்துக்கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

சிலர் நாங்க எல்லாம் " Pure Non-Veg" னு சொல்லுவாங்களே, அவங்க எல்லாம் தங்கமணி சொல்றத கேட்டு பெரிய மனசு பண்ணுங்க சாமி...

இது எல்லாம் உயர் ரத்த அழுத்ததை தடுக்க, ஒருவேலை இருந்தா, கம்மி பண்ண...

சரி இப்ப எதுக்கு இது எல்லாம்னு பார்க்கறீங்களா....டென்ஷன் ஆகாதீங்க மக்களே..

17ஆம் தேதி Hypertension Day

இது எல்லாம் உங்களுக்கு தெரியும்னு எனக்கும் தெரியும்.... எதோ நண்பியா நியாபகப் படுத்தறேன் ..அந்த்தே

  • Non-modifiable Risk Factors - தடுக்க முடியாத காரணிகள்- வயது, மரபு வழி காரணிகள்.

  • Modifiable Risk Factors- தடுக்க கூடிய காரணிகள். இது நம்ம கையில தாங்க இருக்கு.

நீங்க எல்லாம் ஆரோக்கியமா, பல்லாண்டு பல்லாண்டு சந்தோஷமா வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்குறேன்

(தலைப்பு.- அப்ப தான் வந்து படிப்பீங்கன்னுதான்.....என்ன?... நாங்க எல்லாம் டென்ஷன் பார்ட்டீஸான்னு டென்ஷன் ஆகாதீங்க..:-)))))).

Tuesday, May 08, 2007

கடவுளே உன் படைப்பை நிறுத்தி விடு

இப்படித்தான் தோன்றியது நேற்று ஒரு செய்தியை பார்த்த பின். மனிதம் இல்லாத உலகில், மனிதர்களை நம்பி பிறக்கும் குழந்தைகள் படும் கஷ்டங்களை பார்த்தால், பிறக்காமல் இருப்பது நன்று என்று தோன்றுகிறது.

பணம், அதிகாரம், நாகரீக போதையில் மயங்கி கிடக்கும் மனிதனை முதலில் தெளிய வைத்துவிட்டு பின் படைக்கும் தொழிலை பாரும் கடவுளே.

நாளுக்கு நாள் மனிதனுக்கு தேவைகளும், ஆசைகளும் அதை அடைய வாய்ப்புகளும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. எந்த விலை கொடுத்தாகினும், எந்த பாவத்தினை செய்தாகினும் இந்த வசதி வாய்ப்பினை அனுபவிக்க அவன் சிறிதும் யோசிப்பதில்லை. ஆண் ,பெண் இரண்டுபேருமே இதில் சலைத்தவர்கள் இல்லை.

அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறனோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இது போல உணர்ந்த போதெல்லாம் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் தவறியதில்லை... அதனால் இதையும் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்று வட மாநிலங்களில் அநேக வீட்டில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் பத்தில் இருந்து பதினைந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். அதுவும் பெண் குழந்தைகள். பட்டினி சாவில் இருந்து தப்பிக்க இவர்களின் பெற்றோர்கள் இவர்களை அனுப்பி வைத்து விட்டு, வருடக் கணக்கில் இவர்கள் என்ன ஆனார்கள் என்று எட்டிப் பார்ப்பது இல்லை. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அதிகம்.

நேற்று தொலைக்காட்சியில் பார்த்த ஒரு செய்தி.12 வயது சிறுமி ஒருத்தி, கை, கால் விரல்கள் எல்லாம் அடி வாங்கி அடி வாங்கி கருப்பாக மாறி, நசுங்கி, காயப்பட்டு...அய்யோ என்று எனக்கு அலற தோன்றியது. மேலும், எனக்கு சொல்லவே கஷ்டமாக இருக்கிறது...அந்த வீட்டில் இருந்த ........ (அவர்களை என்ன சொல்லி குறிப்பிடுவது என்று தெரியவில்லை) அந்த பிஞ்சின் கண்ணத்தில் இஸ்திரி பெட்டியை வைத்து அழுத்தி.....கண்கள் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை..அடி வாங்கி வாங்கி அநத அளவிற்கு வீங்கி இருந்தது.. ...உடம்பு பூராவும் காயப்ங்கள்..தீப்புண்கள்..வாய்விட்டு அழுதே விட்டேன்.

மிருகங்கள் கூட அவைகளுக்கு ஏதாவது ஆபத்து வரும்பொழுது தான் தாக்கும். ஆனால் இவர்கள்?....அப்படி என்ன பெரிய தவறை அந்த குழந்தை செய்திருக்கப் போகிறது? மற்றொரு குழந்தைக்கும் இதே போல நேர்ந்த கொடுமையை சொல்லி காவல் நிலையத்தில் அழுத காட்சி, எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.ஏதோ ஒரு தொண்டு நிறுவணம் தலையிட்டு அந்த குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறது.

இந்த உலகத்தில் தூய்மை என்ற சொல்லுக்கு பொருள் என்னை கேட்டால் குழந்தைகள் என்று தான் சொல்லத்தோன்றும். கள்ளங்கபடமின்றி, வெளிப்படையாக பேசி, யாராயிருந்தாலும் அதிகமாக ஆராய்ச்சி செய்யாமல் எளிதாக நம்பி, உண்மையாக நேசித்து, சிரிப்பை மட்டுமே விரும்பும் ஒரு அற்புத பருவம். ஆனால் இன்றைய குழந்தைகளின் வாழ்வில் இந்த பருவம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதும் நம்மால் தானே?.

இந்த அற்புதத்தை நாம் எந்த அளவிற்கு பாதுகாத்து, ரசித்து வருகிறோம் என்பது நம் மனசாட்சிக்கு தெரியும். பணம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு இன்று மனிதன் ஆடும் ஆட்டம்...
..ஹ்ம்ம்ம்.

வறுமையின் கொடுமையிலிருந்து மீள இன்று இக்குழந்தைகள் எந்த வேலை செய்யவும் தயங்குவதில்லை என்பது நாம் அறிந்த உண்மை. தான் பெற்ற குழந்தை ஒழுக்கத்தின் சின்னமாக வாழவேண்டும் ஆசை படும் அதே மனிதன் தான் தன் பாலியல் இச்சையை இன்னொரு குழந்தையிடம் பணத்தை காண்பித்து தீர்த்துக் கொள்கிறான்.

பெற்றோர்களாலும் ஆபத்து, பள்ளியில் ஆசிரியர்களாலும் தொல்லை, சரி உழைத்து வாழலாம் என்றால் இந்த மனித மிருகங்களின் கொடுமை, வெளியே சமுதாயத்திலும் பாதகர்கள்,பாலியல் துன்புறுத்தல்கள்.எங்கே தான் இவர்களுக்கு பாதுகாப்பு?

குழந்தைப் பருவமும், கனவுகளும், ஆசைகளும் எல்லாக் குழந்தைகளுக்கும் பொது தானே?... இவர்களுக்கு ஏக்கம் இருக்கதா?..தாயின் அன்பையும், தந்தையின் அரவணைப்பையும் நினைத்து ஏங்காதா இவர்களின் மனம்.?..

செய்தியை முழுவதுமாக பார்க்க முடியாமல் போனதால், அலுவலக தோழி ஒருத்திக்கு தொலைபேசியில் கேட்டால், ''எதற்கு நீ இந்த அளவிற்கு உணர்ச்சி வசப்படுகிறாய்..பாவம் தான்..ஆனால் நாம் என்ன செய்ய முடியும்.... தனியாக இருக்கும் போது இது போல செய்திகளை பார்த்து 'உன் நிம்மதியை' கெடுத்துக் கொள்ளாதே'' என்று சொல்லி, தன் "ஆள்" சேட்டில், இவள் ஐடியை 'பிளாக்' செய்து விட்டு வேறு பெண்ணுடன் சேட் செய்வதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டாள். மற்றொருவரிடன் பகிர்ந்து கொண்டபோது..."நீ இது போல செய்திகளைப் பற்றி பேசி பேசி 'இன்ஹேலர்' செலவைத்தான் அதிகப் படுத்தப் போகிறாய்' என்றார். ஹ்ம்ம்

அவ்வளவுதானா?...நம்மால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாமல் முடியாவிட்டாலும், அந்த குழந்தைகளுக்காக ஒரு நிமிடமேனும் நம் மனம் வருந்தக்கூடாதா? இதைப் பற்றி பேசக்கூட நமக்கு விருப்பம் இல்லையே.... ஹ்ம்ம். இது போன்ற வன்செயல்களுக்கு ஆளான பின், மன உளைச்சலின் காரணமாக அவர்கள் பொறுப்பான வாழ்க்கை முறையை கடைபிடிப்பார்கள் என்று நாம் எவ்வாறு எதிர் பார்க்கமுடியும்?. நாளை இந்த குழந்தைகள் வாழ்க்கையில் தோற்றால், அந்த தோல்வி அவர்களுக்கு இல்லை, நமக்கு தான்.

இந்த குழந்தைப் பருவம் என்ற 'அற்புதத்தை' பாதுகாப்பது நம்மால் முடிந்த ஒன்று தானே?.... குறைந்தபட்சம் அதை அழிக்காமலாவது இருக்கலாம் அல்லவா?. தூக்க முடியா பாரத்தை இன்றைய குழந்தைகள் சுமக்கின்றன.
மீண்டும் ஒரு வேண்டுகோள்.... முடிந்தால், இந்தியாவில் உள்ள அன்பர்கள் தங்கள் வாகனங்களில், '1098' என்ற 'Child help line' எண்ணை ஒரு ஸ்டிக்கராக ஒட்டிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக் கெதிரான குற்றங்கள் நொடிக்கு ஒன்று நடப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. நீங்கள் செய்யும் இந்த உதவி சிக்கலில் இருக்கும் ஒரு குழந்தைக்கு உபயோகமாக இருக்கலாம் நன்பர்களே. இந்த எண்ணை எந்த குழந்தையிடமாவது சொல்ல வேண்டும் என்றால்..பத்து, ஒன்பது எட்டு (1098) என்று சொன்னால், அவர்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொள்வார்கள்.

நான் பார்த்த அந்த காட்சியை பார்த்தவர்கள் கண்டிப்பாக சில நாட்களுக்கு சாப்பிடவோ தூங்கவோ முடியாது..ஹ்ம்ம்

Tuesday, May 01, 2007

இன்னைக்கு எனக்கு விசேஷமான நாள்...

இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான நாள். +2 முடிச்சு காலேஜ்ல சேர்ந்தப்ப ஆரம்பிச்சது இந்த பிரச்சனை. மருத்துவர் கிட்ட போனப்ப, +2 டென்ஷன் பொண்ணுக்கு, இந்த வயசில எல்லார்கும் ஏற்படறதுதான், சில பயிற்சிகள் எடுத்தா சமாளிச்சரலாம்னு ஒரெ அட்வைஸ். நமக்கு பரிட்சை டென்ஷனா?அப்படி ஒன்னு இருந்தா நாம உருப்பட்டிருப்பமே. அதெல்லாம் இல்லைன்னு நமக்கு தெரியும்..டாக்டர்க்கு தான் தெரியலை.

சரி, சரி என்ன பிரச்சனைனு பார்க்கறீங்களா...அதாங்க ஆஸ்துமா.. இன்னைக்கு சர்வதேச ஆஸ்துமா நாள்...(எது எல்லாம் தான் கொண்டாடறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சுன்னு நினைக்கரீங்க இல்ல,, என்ன பன்ன எங்க கிட்ட இருக்குற விஷயத்த தான கொண்டாட முடியும்).. கோவைல இருந்து எங்க டாக்டர் எனக்கு வருஷா வருஷம் மே ஒன்னாம் தேதி, நான் எங்க இருந்தாலும் ஒரு மெயில், இல்லைனா ஒரு போன் கால் போடுவார்...அந்த அளவுக்கு ஒரு காலத்தில நாம அவருக்கு ரெகுலர் கிராக்கி...:-)))

கிரேக்க சொல்லான ஆஸ்துமா, மூச்சுத்தினறல்ன்னு பொருள் கொண்டது. சுவாசக் குழாய்கள் சுருங்கி, மூச்சு விடுவதற்கு கஷ்டமாக இருக்கும் ஒரு நிலைமை. மூச்செடுக்கும் போது பூனை கத்தறமாதிரி ஒரு சத்தம் கேட்கும். நெஞ்சில இறுக்கம இருக்கும், சளி, கபம் அதிக அளவில உற்பத்தி ஆகும்.

ஆஸ்துமா பற்றின ஒரு விழிப்புணர்வ எற்படுத்தி, ஆஸ்துமாவால அவதிப்படற குழந்தைகள், பெரியவங்களுக்கு இந்த நோய கட்டுக்குள்ள வைத்திருக்கிறதுக்கு பயிற்சி முகாம் மாதிரி சமுதாய மருத்துவத்துறை இந்த நாள்ல நடத்துறது வழக்கம்.

ஆஸ்துமாவால கஷ்டப்படறவுங்களுக்கு தான் தெரியும் அது எத்தனை கொடுமைன்னு. அந்த சமயத்தில யார் என்ன கேட்டாலும் கோவம் கோவமா வரும். யார் கிட்டேயும் பேச பிடிக்காது, நேரா படுக்க முடியாது, நடக்க முடியாது, முதுகு வலி அப்படீன்னு அன்றாட வேலைகளை செய்ய முடியாம நம்மள ஆட்டி படைக்கும்.

சமீப காலங்கள்ல பெண்கள் அதிக அளவில பாதிக்கப்படறாங்க. மன அழுத்தம், உணர்ச்சு வசப்படுதல், அலுவலகங்களில் இருக்கும் பிரச்சனைனு பல காரணங்கள் இருக்கலாம். மகப்பேறுகாலத்துலேயும் ஏற்படலாம். கருவுற்றிக்கும் போது அதிகமா ஆப்பிள் சாப்டா குழந்தைக்கு ஆஸ்துமா வராம தடுக்கலாம்னு ஒரு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. இத எல்லாரும் நினைவில வச்சுகுங்க நண்பர்களே.

பெருசா பயந்துக்க வேண்டியதில்லைனாலும் ஆஸ்துமாவை குணமாக்க முடியாது!.. ஆனா இந்த நோய் நம்மை பாதிக்காதபடி கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதன் தன்மையை புரிந்து கொண்டு நமக்கு எந்த விஷயம் அலர்ஜியோ அத தடுத்து வருவது, உடற்பயிற்சி, யோகா, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருத்தல், உணர்ச்சிவசப்படாமல் இருத்தல் போன்றவை, இந்நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

முக்கியமா ஆஸ்துமாவினால அவதிப்படவரது குடும்பத்தினரையும் சிகிச்சையில சம்பந்தப்படுத்தி அவர்களுக்கும் புரியவைக்கவேண்டும். ஏன்னா ஒரு நிலையான தீர்வு இல்லைங்கிறதுனால ஆஸ்துமாவுடன் தான் வாழ வேண்டும். இது சாத்தியமான ஒன்றுதானாலும் , நெருக்கமானவர்கள், குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியமானது. அந்த மாதிரி நேரங்கள்ல கண்டிப்பா ஒருவர் உதவிக்கு தேவை. அன்பா பேச, சின்ன உதவிகளை செய்ய முதுகை அளுத்தி விட, மஸாஜ் செய்யன்னு குடும்ப உறுப்பினர்கள் இருந்தா அவதிப்படறவுங்களுக்கு ரொமப உதவியா இருக்கும்.

ஆஸ்துமா நோயாளிகள் பெரும்பாலும் மறுத்துவமனையில இருக்குறவரைக்கும் தான் மறுத்துவர் சொல்வதை கேட்பாங்க. வீட்டுக்கு வந்துட்டாலோ, மூச்சு விடுவது சீராயிடுச்சுனாலோ, அத பத்தி யோசிக்கிறது இல்லை. என்னையும் சேர்த்து தான் சொல்றேன். அந்த பிரச்சனை இல்லாதப்ப அத கட்டுக்கள் வைத்திருக்க என்ன பண்ணலாம்னு யோசிக்கிறது புத்திசாலித்தனம்னு நமக்கு தெரியறது இல்லை. பெரும்பாலனவங்க தனக்கு ஆஸ்துமான்னு ஒத்துக்கறதே இல்லை...அது எதோ ஒரு பெரிய வியாதின்னு ஒரு பயம்..எனக்கு அது வராதுன்னு சொல்லிட்டே தகுந்த சிகிச்சை எதுத்துக்காம அத கண்டுக்காம இருந்து அவஸ்தை படுவது அதிகம்.


மருந்துகள் விட சில கருவிகள் ரொம்ப உதவியா இருக்கும். ஸ்டீராய்ட் கலந்த இன்ஹேலர்கள் தான் எங்களுகெல்லாம் வரப்பிராசாதம். இராட்சனோட உயிர் ஒரு கிளிக்குள்ள தான் இருக்குன்னு விட்டலாச்சாரியார் படத்துல சொல்ற மாதிரி, எங்க உயிர் இந்த நாலு இன்ச் இன்ஹேலர்தான் இருக்கு...:-)). சில சமயம் அது மறந்துட்டோம்னு தெரிஞ்சா போதும், உடனே மூச்சு விடறதுக்கு கஷ்டமா இருக்கும். அது இல்லைங்கிற அந்த ஒரு உணர்வே காரணியாயிடும் அப்போ. அதிகமா சிரிச்சாலும் பிரச்சனை, அழுதாலும் பிரச்சனை. ஹ்ம்ம்ம்.

அதிக வெய்யில், ஹுயுமிடிட்டி, தூசுடன் அடிக்கும் காற்று, மாசு, இதெல்லாம் எனக்கு அலர்ஜி. ஆனா இது எல்லாம் தான் தில்லின்னு இங்க வந்தப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது.
இத பற்றி மேலும் தெரிஞ்சுக்கிறதுக்கு எஸ் கே ஐயா தான் உதவனும். அடுத்த தொடர்க்கு ஏற்பாடு பண்ணுங்க ஐயா.