விளம்பரத்தேடலுக்கும், விளம்பரப்படுத்துவதற்காகவே அலையும் உலகம் இது. இந்த சகோதரியை நீங்கள் பார்க்க போனால் எழுத பேனாவை எடுத்தால் கூட அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர். ஆனால் இவரிடம் பேசிவிட்டு வந்தால் நம் மனதில் அவர் சொல்வதும் செய்வதும் தானாக பதிந்து விடும். எழுத தேவையில்லை. அவர்தான் கோவையில் ஒரு பிரபல கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டெ ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப் பட்டவர்களுக்கு முகம் சுளிக்காது உதவும் Sr. லயோலா. பல வருடங்களுக்கு முன் இவரை முதல் முதல் பார்த்த போது என்னில் மின்சாரம் பாய்வது போன்ற ஒரு உணர்வு.
பேராசிரியராக பணிபுரிந்துகொண்டே பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர் மாதாமாதம் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அது பெண்கள் கல்லூரியானாலும் பாதிக்கப்பட்ட ஆண்களும் கல்லூரி வளாகத்தினுள் சென்று இவரை பார்க்க முடியும். அளுகையும் விரக்தியுமாக வரும் பாதிக்கப்பட்டவர்கள் , பின்னர் இவரின் அன்பும் உறுதியும் நிறைந்த வார்தைகளால் புத்துணர்வு பெறுகின்றனர்.
இவரிடன் வருபவர்கள் அனைவரும் ஏழைகளானதால் இவருக்கு வேண்டிய பண உதவி, பொருள் உதவி செய்ய மற்றவர்களை கேட்க தயன்குவதில்லை.
துணிக்கடைகளில் துணி, தொழில் அதிபர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை,, பணம் படைத்தவர்களிடம் பணம் என்று சலைகாமல் கேட்கிறார். மாதாமாதம் இவர் நடத்தும் ஆலோசனை கூட்டத்திற்கு பக்கத்து மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.
பாதிக்கப்பட்டபின் இவர்களை அரவனைக்கும் இவர், பள்ளி பள்ளியாய் சென்று விடலைப் பருவத்தினை நேர்த்தியாய் சமாளிக்குக் விதத்தையும் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறார். இந்த வயது குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறுகிறார்.
இவர் செய்யும் இன்னொரு சேவை எனக்கு தெரிந்து யாரும் செய்ததாக தெரியவில்லை. ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து போனால் அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்ய அவர்களின் உறவினர்களே தயங்கு வார்கள். ஆனால் இவரோ அப்படி ஒரு சூழ்நிலையில் எல்லா சடங்குகளையும் இவரே செய்கிறார். இந்துவாக இருந்தால் இவரின் கண்ணியாஸ்த்ரி உடையை மாற்றி, இந்துவாக ஒரு சேலையைக் கட்டிகொண்டு எல்லா சடங்குகளையும் முறைப்படி செய்கிறார். அந்த சடங்குகளை எப்படி செய்ய வேண்டும் (மந்திரங்கள் உட்பட) என்று தெரிந்து வைத்திருக்கிறார். இந்துவாக இருந்தால் மந்திரங்களும், கிறுஸ்துவாய் இருந்தால் ஜபமும் செய்கிறார். அப்பொழுதானே அவர்கள் ஆத்மா சாந்தி அடையம் என்கிறார். இந்த மகத்தான காரியத்தை செய்யும் இவர் கோவையில் அதிகம் பிரபலம் அடையாதவர்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவமனையும், மயானமும் கொண்டு வரத் திட்டமிடிருக்கிறார். மறுமணம், குழந்தைகளின் படிப்பு, மருந்து என்று அதையும் விடாமல் கூர்மையாய் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மதம் கடந்து நிற்கும் இவரின் மனிதாபிமானமும், மனிதநேயமும் மனம் நெகிழ செய்கிறது. இவருடன் சேர்ந்து பணி புரிவதையே நாங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.
தொண்டு நிறுவணங்கள் என்ற பெயரை வைத்துகொண்டு இன்று லட்ச லட்சமாய் அன்னிய நிறுவனங்களிடம் பணம் சுரண்டும் 'சமூக சேவகர்கள்' வெட்கி தலை குனியவேண்டும்.
உறுதி, மெண்மை, கண்டிப்பு, அன்பு, வெளிப்படையான பேச்சு, உழைப்பு, துணிவு இது தான் சகோதரி. லயோலா. இவரைப் பற்றி இங்கே எழுதியதே எனக்கு மன நிறைவைத் தருகிறது. இப்பொழுதும் ஏதோ ஒரு உணர்வு என்னுள் பாய்வதை உணர்கிறேன்.
எந்தவித ஆதரவும் இல்லாமல் சேவைமனப்பான்மையே மூலதனமாக வைத்துக்கொண்டு பம்பரமாய் சுத்தி வரும் சதோதரி. லயோலா நம் கண் முன்னே சிரித்த முகத்துடன் நடமாடும் கடவுள்.
29 comments:
இப்படியும் சிலர் இருக்கறதாலேதான் உலகம் இயங்குது.
சிஸ்டர் லயோலா நல்லா இருக்கணும்.
மங்கை,
நல்ல பதிவு. துளசியக்கா சொன்னது போல் இப்படியான மனிதருள் மாணிக்கங்கள் இருப்பதனால் தான் இன்னும் உலகம் இயங்குகிறது போலும்.
மங்கை உங்களுக்கும் இப்படியாகத் தன்னலமற்ற தொண்டு செய்யும் நல்ல உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
கடவுளைப்பார்த்து இருக்கீங்க . நல்லது.
எங்க அப்பா சொல்லுவாங்க நம்ம பக்கத்துல கடவுளை விட கடவுளைக் கண்ட ,கடவுளுக்கு பணிவிடை
செய்யும் அடியார்களைக கும்பிடுவது தான் சிறந்ததுன்னு . அவங்க கடவுள்ன்னா நீங்களும் தான்...அவர் கூட சேர்ந்து சிறு துரும்பானாலும் நகத்திப்போடும் சிறு அடியார் தான் நீங்க.
//துளசி கோபால் said...
இப்படியும் சிலர் இருக்கறதாலேதான் உலகம் இயங்குது.
சிஸ்டர் லயோலா நல்லா இருக்கணும். //
ரிப்பீட்டே....
சென்ஷி
சேவை செய்ய பதவி, பணம் எல்லாம் வேணும்னு சொல்ற மக்கள் இருக்கிற உலகங்க இது. சேவை செய்ய பணம், பதவி எதுவும் தேவை இல்லீங்க. மனசு மட்டும் இருந்தா போதும். அந்த மனசு இந்த சகோதரியிடம் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் சேவை மனப்பான்மையும் எம் மனதை நெகிழ வைக்கிறது. அவரும், அவருடைய சேவையும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த மாதிரி இன்னும் எத்தனையோ நல்ல உள்ளங்கள் விளம்பரமில்லாமல் சேவயே வாழ்க்கையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர்.....
ம்ம்ம்ம்ம்....வணக்கத்துக்குறியவர்கள்
மனிதர்களைக் குறித்த நம்பிக்கை அருகிக்கொண்டு வரும் காலத்தில் இப்படியொரு இதயம் இருப்பது ஆறுதல் மங்கை.
உலகின் நடக்கும், அநீதிகளை சமன்செய்ய சிலரே முன்வருகின்றனர். அவர்களில் ஒருவர் சகோதரி. லயோலா. அவர் எல்லோராலும் அறியப்படாமல் இருப்பது வெட்ககரமான செய்தி..
அவரை வாழ்த்தும் நாம் அனைவரும், அவரிடமிருந்து சிறிதளவேணும் நல்ல விசயங்களை கற்றுக் கொள்ளவும், பின்தொடரவும் முயற்சிப்போம்.
****
நேரில் சந்திக்கும் வாய்ப்புள்ள தாங்கள் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை சகோதரிக்கு தெரிவியுங்கள்
firefoxல் உங்கள் பதிவைப் படிக்க முடியவில்லை. templateஐ சரி செய்ய இயலுமா?
ஆமா...துளசி , வெற்றி கண்டிப்பா... அவங்க நல்லா இருக்கனும்...
லட்சுமி நன்றி..
இவங்க மற்றும் மீனாட்சி இவங்களையெல்லாம் பார்க்கும் போது நான் எல்லாம் ஒன்னும் இல்லை.. ஆனா நாளுக்கு நாள் இந்த பணியில மனநிறைவும், ஆர்வமும் கூடிட்டே போவதென்னமோ உண்மை...
மங்கை
நல்ல பதிவு!
ஆம் இந்த கடவுள்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.
சென்ஷி நன்றி..
அமாங்க இளா.. ஆனா அந்த மனம் தான் செய்யற பல பேர் கிட்ட போலியா இருக்கு..ஹ்ம்ம்... உதவி தேவை படுகிறவர்களுக்கு பண உதவி கிடைப்பதில்லை...
மங்கை, நீங்களும் பாராட்டுக்குறியவரே!
/எந்தவித ஆதரவும் இல்லாமல் சேவைமனப்பான்மையே மூலதனமாக வைத்துக்கொண்டு பம்பரமாய் சுத்தி வரும் சதோதரி. லயோலா .....
இவருடன் சேர்ந்து பணி புரிவதையே நாங்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறோம். /
அற்புதமான மனங்கள்! நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்தான்.
சதோதரி.லயோலா அவர்களின் புகைப்படம் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பொருள் உதவி தேவையென்றால் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
பங்காளி..
உண்மை...நன்றி...
தமிழ்நதி..
நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கும் நல் உள்ளங்கள் இவர்கள்..
வித்யா..நன்றி...கண்டிப்பாக தெரிவிக்கிறேன்.கோவைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் இவரை சென்று பாருங்கள்...
ரவிசங்கர்..
இன்னும் சரியாக தெரிவதில்லையா?.. சரியாகி விட்டது என்று நினைத்தேன்..
ஹ்ம்ம்..
சரி பார்க்கிறேன்...நன்றி
சிவபாலன் தென்றல் நன்றி
புகைபடம் எடுக்க அவர் அனுமதி கொடுக்கமாட்டார் தென்றல்..ஏதாவது நிகழ்ச்சியின் போது எடுத்தால்தான் உண்டு... ஆனால் இது போல ஊடகங்களில் அவர் புகைப்படம் வருவதை விரும்பமாட்டார்.
"நான் எதற்காக படைக்கப்பட்டனோ அதை செய்து கொண்டிருக்கிறேன்
இதில் சொல்லிக்காட்ட ஒன்றும் இல்லை என்பார்...ஹ்ம்ம்ம்
வாழும் தெய்வம் அல்லது வாழ்விக்கும் தெய்வம் என தலைப்பு வைத்திருக்கலாம்....ம்ம்ம்ம்ம்
மங்கை,
மனிதநேயத்துடன் வாழுமொரு பெண்மணியை அறிமுகம் செய்தமைக்கு நன்றி!
மங்கை உங்களுக்கும் இப்படியாகத் தன்னலமற்ற தொண்டு செய்யும் நல்ல உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
பங்காளி...நீங்க சொன்ன தலைப்பு நல்லா இருக்கு...
நமக்கு அவ்வளவு தான்..:-))
திரு, செல்வா ரொம்ப நன்றி..
மங்கை,
நல்ல பதிவு. திடீரென்று ஒரு குறள் ஞாபகத்திற்கு வந்தது உங்க பதிவை படிச்ச உடனே.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.
Duty demands nothing in turn; How can the world recompense rain?
இவங்க செய்யறது தான் நிஜமான, அறத்துப் பால் சொல்ற duty-ன்னு
நினைக்கிறேன்.
நன்றி ரமேஷ்..
நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்...
இவர் இன்னுமொரு அன்னை தெரசா... வளரட்டும் இவர் பணி. கடவுளைக் கண்ட, மங்கை, நீங்களும் பாராட்டுக்குறியவரே! உங்கள் சேவை ஓங்குக! God is within you; you are god அப்படின்னு சொல்லுவாங்க. கடவுளுடன் பணியில் ஈடுபடும் நீங்களும் கடவுளே!
மங்கை, அழகு பற்றி எழுத உங்களை அழைத்துள்ளேன்.
http://kaattaaru.blogspot.com/2007/04/blog-post_11.html
உங்கள் முதல் அழகை இங்கேயே பாத்துட்டேன். கண்டிப்பா எழுதுங்க.
நன்றி காட்டாறு...:-)
மதன் அவர்களின் "மனிதருக்குள் மிருகம்" என்னை மிரட்டியது!
மங்கை அவர்களின் "மனிதருள் தெய்வம்" என்னை திரட்டியது...
நன்றி சண் சிவா..
அப்படியே வியர்டும் எழுதீருங்க..:-))
மனிதநேயம் கொண்ட நல்ல மனம் வாழ்க!!!
Post a Comment