Tuesday, April 17, 2007

ஆஹா எத்தனை அழகு....

லட்சுமி கிட்ட இருந்து தப்பிச்சுட்டு வந்தா நம்ம காட்டாறு கிட்ட மாட்டிக்கிட்டேன். அதுனால இந்த அழகு காட்டாறுக்கும், எங்க அம்மணிக்கும்.

மழலை உலகம்


பிஞ்சுக் குழந்தைகள், அதாவது பிறந்த குழந்தைலிருந்து 3 மாத குழந்தை வரை, பார்த்தீங்கன்னா, தூக்கத்தில சில சமயம் சிரிக்கும், அழுகற மாதிரி உதட்டை பிதுக்கும். பெரியவங்க சொல்லுவாங்க, அது கடவுள் கிட்ட பேசி சிரிக்குதுன்னு. ஆனா இது வரைக்கு அது ஒரு புரியாத புதிர், அதிசியம், அழகு, கொள்ளை அழகு இது. அப்படி எந்த உலகத்துல தான் இருப்பாங்களோ.. எவ்வளவு நேரம் வேனா பார்த்துட்டே இருக்கலாம். என் பெண் பிறந்தப்போ இப்படி தூக்கத்தில சிரிக்கும் போது அவள எடுத்து கசக்கி கொஞ்சுனா, உடனே அழுக ஆரம்பிச்சுடுவா.. அம்மா சொல்லு வாங்க, குழந்தைய சமாளிக்கிறத விட உன்ன சமாளிக்கிறது தான் எனக்கு பெரும்பாடா இருக்கு.. நீ முதல்ல ஆஃபீஸ்க்கு போன்னு விரட்டி விடுவாங்க.

முதல் நாலு, அஞ்சு மாசம் எங்கேயும் நகர மனசு வராது, முகத்தில் பல சேஷ்டைகள் பண்ணும். இதோ இதோ இது என் சொத்து அப்படீன்னு ஒரு கர்வம் அப்போ. ஆஃபீஸ்ல இருந்து வந்த பின்னால சில சமயம் அழுதுட்டு இருந்தா, நம்ம எடுத்த அப்புறம் அழுகைய நிறுத்தும்...அப்ப மனசுல ஒரு பெருமிதம் வரும் பாருங்க..அது எல்லாம் அனுபவிச்சு பார்க்க வேண்டிய அழகு. இப்ப நினச்சாலும் கண்ணு ஈரம் ஆகுது.ம்ம்ம்ம்

கருப்பு
கருப்பாக இருப்பவர்களுக்கு ஒரு வசீகரம், கம்பீரம், அதீத அழகு. கருப்பு அழகற்றதுன்னு எப்படியோ ஒரு கருத்து நமக்குள்ள வந்துருச்சு. குழந்தை பிறந்தா, நல்லா இருக்கான்னு கேக்குறதுக்கு முன்னாடி, குழந்தை 'சிவப்பா, அழகா இருக்கா' ன்னு கேப்பாங்க. அப்படீன்னா, கருப்பு அழகற்றதுன்னு முடிவு. வெள்ளைத் தோலுக்கான ஏக்கம் இல்லாத மக்கள் நம்மிடையே மிக சொற்பம். வெள்ளைத் தோலுக்கு கிடைக்கும் தனி மரியாதை, அந்தஸ்து தான் இதற்கு காரணம். தோலின் நிறத்த பார்த்து அறிவையும், நட்புக்கான தகுதியையும் எடை போடுற உலகம் தானே இது.


என்னதான் சொல்லுங்க கருப்பாக இருக்கும் ஆண்,பெண்களின் அழகே தனி தான்.

தாய்மையும் நட்பும்.


என்ன மன உலைச்சல் இருந்தாலும் அம்மாவ பார்த்தா, இல்ல ஃபோன்ல பேசினா கூட போதும் மனசு லேசாயிடிது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சகிப்புத்தன்மையோட, அன்பு காட்டறது தான தாய்மை?. நம்மள பார்த்து சந்தோஷ படற ஒரு நிஜம். அது மாதிரி 'நான் இருக்கேன்னு' பல சமயங்கள்ல நம்ம நண்பர்கள் கிட்ட இருந்து வெளிப்படற 'இந்த தாய்மை' ஒரு தனி அழகு.

பாவடை தாவனி

பாவாடை தாவனி, லோலாக்கு, ஒத்தை சடை, சைட்ல ஒரு ரோஸ், விபூதி கீரல் அதுல லேசா குங்குமப்பொட்டு..இந்த அழகு வேற எதுலங்க இருக்கு...அதுவும் தாவனி போட ஆரம்பிச்ச புதுசுல, இடுப்பும், முதுகும் தெரியுதேன்னு நெளிஞ்சு நெளிஞ்சு நடக்குற அழகு. எங்க ஸ்கூல்ல 9 ஆம் வகுப்பில இருந்து கண்டிப்பா தாவனி போடனும். அந்த முதல் நாள் அனுபவம் இன்னும் பசுமையா இருக்கு மனசுல. தாவனி போடுட்டு பசங்களுக்கு முன்னாடி போறதுக்கு வெட்கம். எங்களை பார்த்து அவங்களுக்கு அதுக்கு மேல வெட்கம். தாவனி நல்லா நிக்கிறதுக்கு ஒரு டஜன் பின்னூசிகள குத்தி... எதுக்கு எடுத்தாலும் சிரிப்பு, தான் தான் அழகி என்ற ஒரு மமதை, ஓயாத பேச்சு... லட்சுமி சொன்ன மாதிரி இந்த வயது தான் அழகு. இப்பெல்லாம் கிராமத்துல கூட இந்த அழகு மிஸ்ஸிங்.

அடுத்து

எல்லாம் சொல்லீட்டு உங்களைப் பத்தி சொல்லலைனா அழகுக்கே அழகில்லாமல் போய்விடும்.

ஒவ்வொருவரிடமும் நான் ரொம்ப ரசிக்கும் அழகு.

அக்கா பேசும் போது ஒவ்வொரு முறையும் 'ப்பா' போட்டு பேசறது.

எங்க அம்மணி, படித்து, உணர்ந்து போடற பின்னூட்டங்களும், வரும் பின்னூட்டங்களைப் பார்த்து வெளிப்படுத்தும் மகிழ்ச்சியும் அழகு.

அழகப்பன் எங்களை எல்லாம் நேசமுடனும் 'தாயீ' என்று அழைப்பது அழகு.

நகைச்சுவை நாயகரின் சமீபத்திய
விசேஷம் அழகு.

தங்கம்மாவின்
இயல்பான, வெளிப்படையான பேச்சு அழகு.


மிஸ் கன்ஃப்யூஸியஸ் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை எல்லாம் பார்த்து அம்மணியே குழம்பிப் போய் , அப்புறம் அதிலேயே இன்ஸ்பயர் ஆகி, அடுத்த புரியாத பதிவை தயார் செய்வது அழகு. (ஆமா... என்ன ஆச்சு ஆளக் கானோம்.)

இவங்க மனசுக்குள்ள இன்னும் எத்தனை விஷயங்கள் தான் இருக்கோ. இவங்க எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடறது இல்லை. ஒவ்வொரு முறையும் நல்லா இருக்குன்னு மட்டும் சொல்றதுக்கு எனக்கே கஷ்டமா இருக்கும். வேற எதுவும் எழுத தெரியாது. ஆனா சில வரிகள் படிச்சா அன்னைக்கு பூரா மனசு அதிலேயே இருக்கும். உதாரணத்துக்கு

//வாழ்வோடு பிணைத்து வைத்திருந்த கயிறுகள் ஒவ்வொன்றாக அறுந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கை என்பது, இப்போது காண்பதுபோல வித்தைக்காரனின் கூடாரமாக, சர்க்கஸ் காட்டுபவன் நடக்கும் கயிறாக, மகாநடிகர்களின் மேடையாகத்தான் எப்போதும் இருந்ததா…? //

இதோ இப்போ புதுவெள்ளமா வந்து அசத்தும் இவளின் பட படப் பேச்சு அழகு.

இன்னும் இருக்கு. ஆனா என் பதிவ படிச்சா சிலருக்கு கொட்டாவி வருதாம்:-)

அதுனால மத்தவங்கள பத்தி எல்லாம் தனிப் பதிவா போடுக்கலாம்.

எதோ எனக்கு தெரிஞ்சத தெரிஞ்ச விதத்தில எழுதி இருக்கேன்.

சரி.. இப்ப யாரையும் கூப்பிடலைன்னா கொத்தனார் வூடு கட்டி அடிப்பார்.

இவங்க மூனு பேர கூப்பிடறேன்

சிவபாலன்

சிந்தாநதி

லக்ஷ்மி

44 comments:

சிவபாலன் said...

மங்கை

அழகு இப்பதிவால் அழகு பெற்றது... சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்.

அது சரி இவ்வளவு அழகான பதிவை போட்டுவிட்டு கடைசியில் என்னை சிக்க வைத்துவிட்டீர்கள்.. Ha Ha Ha.,

அழைப்புக்கு நன்றி.

(புது வேலையில் சேர்ந்திருக்கிறேன்.. அதனால் என் பதிவு கொஞ்சம் தாமதமாகும்.. Hi Hi Hi)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகப்பத்தி எல்லாம் எனக்கு எழுதவராதுன்னு சொல்லிட்டு கலக்கிட்டீங்களே மங்கை.
1.அய்யோ தூங்கறபிள்ளைய ரசிக்கறது தப்பு தள்ளி உட்காருங்க.
2. கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரும்ம்...டொட்டாய்ங் டொட்டய்ன்க்க்
3.4. இரண்டும் சூப்பர்.
5.கொஞ்சம் எல்லாரும் ஊகிக்கட்டும்ன்னு பேரப்போடாம போட்டீங்களாக்கும்.
அழகுதான்.

பொன்ஸ்~~Poorna said...

யக்கா, மிஸ் கன்ஃபியூஸியஸ்[மிஸஸ் இல்லையோ? ;)] நம்ம மதுராக்கா தானே? அங்கிட்டும் என்னோட உரலே போட்டதுல நானும் மிஸ் கன்ஃபியூஸியஸாகிட்டேன்.. கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்... :)))

பங்காளி... said...

டெம்ப்ளேட் அழகா இருக்கு....நைஸ்

ஹி..ஹி...(இது நம்மள பத்தி எளுதுனதுக்கு)

பதிவு ரொம்ப நல்லா வந்திருக்கு அம்மனி...கலக்கறீங்க....

வாழ்த்துக்கள்....

மங்கை said...

நன்றி சிவபாலன்..
நம்ம ஊரு அழக பத்தி எழுதுங்க..

மங்கை said...

லட்சுமி

நல்லா இருக்கா?..சந்தோஷம்...

பொன்ஸ்
மதுராவே தான்..லிங்க் குடுக்கறப்போ தப்பு பண்ணிட்டேன்.. எல்லாம் மதுரா எஃபக்ட்..:-))
அந்த மிஸ்... வந்து Ms...
Miss இல்லை..
Ms பொது தானே...:-)

மங்கை said...

பங்காளி

அப்பாடா..ஒரு வழியா நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்களா? இன்னைக்கு கொட்டாவி ஒன்னும் வரலையா?..சந்தோஷம்...

படிக்கிறதே நாலு பேர்.. அதுல ரெண்டு பேர் பதிவ படிக்க முடியலன்னு சொல்றாங்க..அதான் மாத்தினேன்

இலவசக்கொத்தனார் said...

மங்கை,

அழகான அழகுப் பதிவு. தாவணி பத்தி நல்லவேளை நீங்க சொல்லிட்டீங்க. இது நான் சொன்னா என்ன ஆயிருக்கும்?! :)))

நம்மளை ஏங்க தொத்தனார் ஆகிட்டீங்க? யாருகிட்ட தொத்திக்கிட்டேன்? கொத்திக்கிட்டுதானே இருக்கேன்! :))

அப்புறம் அலைன்மெண்ட் இன்னும் ஜஸ்டிபய்டாதான் இருக்கா? நெருப்புநரியில் இன்னமும் ஜாங்கிரியாத்தான் தெரியுது. :(

மங்கை said...

கொத்தனாரே

தப்பில்லாம எழுதினா என்னோட பதிவில்லைனு நீங்கல்லாம் திரும்பி போயிடுவீங்க இல்ல...நன்றி சொன்னதுக்கு மாத்திட்டேன்..

தாவனி பத்தி நீங்க சொன்னா என்ன? இன்னும் அழகா இருந்து இருக்கும்.:-) அழக அழகுன்னு சொல்றதுல என்ன இருக்கு?..

டெம்ப்ளேட் இன்னும் சரி ஆகலையா என்ன தான் பண்றது...

காட்டாறு said...

கலக்கீட்டம்மா! பாவடை தாவாணி படம் சூசூசூசூசூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!!!!!!!!
ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பாடத்தோணுது.

கருப்பு.... அடடே.... அழகு!

உரிமையோட ஒங்க மனசுக்கு பிடித்த பதிவாளர்களை தோழமையுடன் அழைத்தது மட்டுமல்லாமல், அழகாக அவர்களிடம் நீங்கள் ரசித்ததை சொன்னது ரொம்ப அழகுங்க! அது சரி... "மிஸ் கன்ஃப்யூஸியஸ்"
மேல கோவமா? அவங்க லிங்க் மட்டும் தெரியல! (சிண்டு மூட்டுவதே சிலருக்கு வேலையப்பா)

தமிழ்நதி said...

என் எழுத்து அழத் தூண்டுவதாகச் சொல்றாங்க மங்கை. நீங்க அழகில் சேர்த்திருக்கிறீங்க. அழுகையும் அழகுதானோ சில சமயங்களில்... நன்றி.

இலவசக்கொத்தனார் said...

உங்க வார்ப்புரு பார்த்தேன்.

Text alignment is in justify mode. If you change the alignment to Left aligned then it can be viewed properly in Firefox.

பெருசு said...

யக்கோவ்

இன்னும் தூங்கப்போலீங்களா.ரொம்ப அழகா இருக்குதுங்க.

கோழி கூப்புடற வரைக்கும் முழிச்சிருப்பீங்ளாக்கும்.

துளசி கோபால் said...

அதுலேயும் அடுத்தவங்க குழந்தைதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அழுதவுடனே
திருப்பிக் கொடுத்தறலாம்:-)))))

அந்த மியாவ்ஸ் ரெண்டும் அருமை. எங்க கப்புவும், பூனியும்:-))))

தாவணி பத்தி கொத்ஸ் சொல்லக்கூடாதாப்பா? ஏஏஏஏஏஏஏஏன்? இப்பத்தானே
யாரோ தாவணி போட்ட தீபாவளின்னு எழுதுனாங்க!

பத்மா அர்விந்த் said...

Mangai
I am reading your blog after a long time. new template is very nice and simple.

When the kid is sleep, you have to go and do all pending work, right??

காட்டாறு said...

இப்போ தாங்க உங்க பழய பதுவுகள வாசிச்சேன். இதே தாவாணிப் பெண்கள் படம் வேறு ஒரு பதிவுலயும் இருக்குது. :)

மங்கை said...

காட்டாறு

நன்றி...இந்த பாவாடை தாவனி படம் எதோ மேஞ்சிட்டு இருந்தப்போ கிடச்சது...பாவாடை தாவனி பத்தி ஒரு தனி பதிவா போடனும்னு எடுத்து வச்சேன்..ம்ம்ம்

ஞாபகம் வந்துச்சா பலசெல்லாம்?...
பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திறிந்த பறவைகளேன்னு, பாடத் தோனுதா...:-)

மங்கை said...

நதி..

அதனால தான் அழகுன்னு எழுதலை...வலையேத்தறப்போ இருந்த மன நிலையில இந்த வரிகள் ஞாபகம் வந்துச்சு...அதனால போட்டுட்டேன்...
அழுகை அழகில்ல நதி..வேண்டாம்.. நீங்க எப்பவும் சிரிச்சுட்டே இருங்க...

மங்கை said...

இ.கொ

நன்றி அலைன்மென்ட் மாத்திட்டேன்..

பெருசு..

தூக்கம் வரலைன்னா..இப்படித்தான் பேய் மாதிரி எழுந்து உக்காந்துக்குவேன்..
ரொம்பபபப நாள்..இல்ல..மாசம் கழிச்சு வந்து இருக்கீங்க...நன்றி

மங்கை said...

வாங்க பத்மா

நம்ம குழந்தை வளர்த்த கதையெல்லாம்...வேண்டாம்..
சொ.செ.சூ.வச்சுக்க விரும்பலை..:-))

மங்கை said...

மங்கை said...
//துளசி கோபால் said...
அதுலேயும் அடுத்தவங்க குழந்தைதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அழுதவுடனே
திருப்பிக் கொடுத்தறலாம்:-)))))//

துளசி..அடுத்தவங்க குழந்தை இல்ல..என் குழந்தை அழுதாலும் யான் அப்படித்தான்.

இலவசக்கொத்தனார் said...

//தாவனி பத்தி நீங்க சொன்னா என்ன? இன்னும் அழகா இருந்து இருக்கும்.:-)//

//தாவணி பத்தி கொத்ஸ் சொல்லக்கூடாதாப்பா? ஏஏஏஏஏஏஏஏன்? //

ஆஹா! இப்படி ஆள் ஆளுக்கு உசுப்பி விடுவீங்க, அப்புறம் நான் எழுதப் போயி அந்த ப்ரொபைலிங், இந்த ப்ரொபைலிங் அப்படின்னு கைப்பு மாதிரி வாங்கிக் கிட்டு வரணும். என்ன ஆசைடா சாமி!!! இதுல தில்லானா மோகனாம்பாள் மாதிரி ஏஏஏஏஏஏன்? அப்படின்னு கேள்வி வேற! :))))

மங்கை, பதிவுக்கு மாத்துன அலைன்மெண்டை, கமெண்டுக்கு மாத்தலையே? ஏஏஏஏஏஏன்? :))

அபி அப்பா said...

சகோதரி மங்கை!

கடந்த 24 மணி நேரமாக நான் பட்ட தவிப்பு, ஆஹா அது எனக்குதான் தெரியும். உங்க இந்த அழகு பதிவு படிச்சுட்டேன் நேத்திக்கு ஆனா பின்னூட்டம் போடமுடியலை. பிளாக்கர் சொதப்புது.

அப்டியே நான் நெனைச்சது மாதிரியே நீங்க எழுதீட்டிங்க.
1. குழந்தை கடவுள்கிட்டே பேசிகிட்டு அழும் சிரிக்கும்...ஆஹா சூப்பர், பாத்துகிட்டே இருக்கலாம். அதும் பால்குடிக்கும் குழந்தை அப்பா உள்ள வந்த சத்தம் கேட்டு டபக்ன்னு பால்வழியும் வாயோடு முந்தானைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து வதக் வதக்ன்னு காலை உதைச்சிகிட்டு அப்பாவை பார்த்து கண்சிமிட்டி ஒரு ஆஜர் கொடுத்துட்டு "கொஞ்சம் பாக்கியிருக்கு இதோ வந்துடரேன்"ன்னு சொல்வது போல் டபக்ன்னு திரும்பவும் முந்தானைக்குள் தலைவிடும் அழகு இருக்கே.... இந்த ஒரு ஜென்மம் போதும்....இன்னும் சொல்லிகிட்டே போகலாம்....அருமையான அழகு பதிவு

அபி அப்பா said...

கொத்ஸ் சொன்ன மாதிரி நானும் தாவணி பத்தி எழுதலாம்ன்னு நெனச்சேன்...அபிஅப்பா எழுதுவதை விட நீங்க யாராவது எழுதட்டுமேன்னு விட்டுட்டேன்.

ஆமா பதிவை படிச்சுகிட்டே வரும் போது என் லிங் கூட இருக்கே...தேங்ஸ்:-))

லக்ஷ்மி said...

மங்கை, அழகு விளையாட்டுக்கு கூப்பிட்டதுக்கு நன்றி. பதிவு போட்டாச்சு. அப்படியே மதுராவையும் செல்வ நாயகியையும் மாட்டியும் விட்டாச்சு - யான் பெற்ற இன்பம் பெறுக இந்த 2 பேராவது.

மங்கை said...

இ கொ, அபி அப்பா

என்னங்க இது, நமிதா, அப்புறம் யாரு பேர் கூட வரமாடேங்குது.. சரி யாரோ.. அவங்க போட்டோ எல்லாம் போட்டு, சந்தோஷமா படிச்சு பின்னூட்டம் போடுறீங்க (பொதுவா சொல்றேங்க..உங்களை சுட்டிக்காட்டி சொல்லலை) நம்ம ஊர் பெண்கள்,அழகா தாவனி போடறத எழுத இவ்வளவு தயக்கம்.. ஹ்ம்ம் ரொம்பதான் சமத்து மாஆஆஆஅதிரி ஆக்டு குடுக்காதீங்கண்ணா..:-))

மங்கை said...

அபி அப்பா

ஆமாம்..அந்த நாட்கள் இனிமையானவை தான்..ஹ்ம்ம்ம்,, நன்றி அபி அப்பா.
உணர்ந்து, காத்திருந்து பின்னூட்டம் இட்டதுக்கு..

மங்கை said...

லக்ஷ்மி

பயங்கர ஃபாஸ்டா இருக்கீங்க..நன்றி லக்ஷ்மி..:-)

தென்றல் said...

/பிஞ்சுக் குழந்தைகள், அதாவது பிறந்த குழந்தைலிருந்து 3 மாத குழந்தை வரை, பார்த்தீங்கன்னா, தூக்கத்தில சில சமயம் சிரிக்கும், அழுகற மாதிரி உதட்டை பிதுக்கும்./

இரண்டாவது முறையா அந்த அழகை இரசிச்சிகிட்டு இருக்கோம் ;) உண்மையுலேயே அமைதியான அழகு!

பாவடை தாவனி... பெண்களுக்கு தனி அழகுதான். இதுவரை யாரும் சொல்லாத அழகும்கூட...
இனி வரும் காலத்தில, 'பாவடை தாவனி'ய museum தில வச்சாலும் ஆச்சரியபடுவதிற்கில்லை...!

மங்கை said...

//இரண்டாவது முறையா அந்த அழகை இரசிச்சிகிட்டு இருக்கோம் ;) உண்மையுலேயே அமைதியான அழகு!//

ஓ..வாழ்த்துக்கள் தென்றல் அவர்களே.
அனுபவியுங்கள்..

கருத்துக்கு நன்றி

நாகை சிவா said...

மிக அழகாக பதிவு போட்டு இருக்கீங்க அதிலும் என்னுடைய பல அழகை விவரித்து உள்ளீர்கள்.

குழந்தை - நானே சொல்லிட்டேன் என் பதிவில்

கருப்பு - அழகு கருப்பு தான். கருப்பு பேனா, கருப்பு வண்டி அப்படினு கருப்பு மேல நமக்கு சின்ன செண்டிமெண்டே உண்டு.

தாய்மை - என்ன சொல்ல... குரல் கேட்டாலே பரவசம் தான், அவங்களுக்கு இன்னும் ஜாஸ்தி

தென்றல் said...

/ஓ..வாழ்த்துக்கள் தென்றல் அவர்களே.
/
நன்றி-ங்க!

நாகை சிவா said...

இந்த தாவணி சொன்னீங்க பாருங்க அது ரொம்ப சரி... ஆனா நீங்க சரியா சொல்லல, தாவனி சுருக்கிட்டீங்க... அது சுருக்குற விசயம்... அடாடா... தாவணி, சின்ன ஜிமிக்கி, ஒத்த சட, ஒர ரோஜா இல்ல ஒரு சரம் மல்லிக்கை, கீறல் குங்குமம் இல்ல வீபூதி, மெல்லிய புன்முறுவல். பாத்துக்கிட்டே இருக்கலாம். நம்ம கூட படிக்கும் போது பொண்ணுங்க எல்லாம் தாவணி தான். அதிலும் அந்த தாவணி முந்தி கையில் சுத்தி சுத்தி பேசும் போது, நம்மள சுத்தி சுத்தி அடிப்பாங்க.... ஹும்... அந்த அழகு இப்ப எல்லாம் அத்தி பூத்தார் போல தான் காண முடியுது.....

ரொம்ப பீல் பண்ண வச்சுட்டீங்க....

மங்கை said...

ரொம்ப நன்றி சிவா

இனி கொஞ்ச நாள் போனா தாவணி ன்னா என்னன்னு கேப்பாங்க... நான் படிக்கிற காலத்துலயே தாவணி கம்மி ஆயுடுச்சு..அடிக்கடி போடாட்டியும்.. போடறது உண்டு...

//பொண்ணுங்க எல்லாம் தாவணி தான். அதிலும் அந்த தாவணி முந்தி கையில் சுத்தி சுத்தி பேசும் போது, நம்மள சுத்தி சுத்தி அடிப்பாங்க.... //

:-))) ரொம்ப அடி வாங்கினீங்களோ, இன்னும் மனசுல அப்படியே இருக்கே..சரி சரி..இதெல்லாம் மறக்குற விஷயமா என்ன..

ரொம்ப ஃபீல் பண்ரீங்க...நீங்க உங்க பதிவுல ஒரு கதை வேற சொல்லி இருக்கீங்க...:-))

சிவமுருகன் said...

ஒவ்வொரு அழகும் வித்யாசம், அட அப்படியான்னு போட வைக்கிறது.

நல்லா இருக்குங்க.

லக்ஷ்மி said...

மங்கை, மிஸ். கன்பியூசியஸ் அவங்களோட பக்கத்துக்குள்ள போனால் வெறும் மகளிர் சக்தி இணைப்பு மட்டும்தானே வருது. என்ன ஆச்சு? எதுனா விபரமுண்டா? இல்லை நாந்தான் தப்பான சுட்டி உபயோகிக்கிறேனா? - http://tamizhachchikal.blogspot.com இது கரெக்ட்தானே?

கானா பிரபா said...

வணக்கம் மங்கை

நீங்கள் கேட்ட பாடல் இணைப்பு இங்கே உள்ளது.

http://radiospathy.blogspot.com/2007/04/2.html

மங்கை said...

சிவமுருகன், லக்ஷ்மி நன்றி

லக்ஷ்மி அதான் என் பதிவில சொன்னேன் ஆள கானலைன்னு.. சக்தி இனைப்பு மட்டும் தான் இருக்கு..

கானா பிரபா..

:-)).. சின்ன வயசுல AIR க்கு பாட்டு கேட்டு எழுதி போட்டப்பொ ஏற்பட்ட ஒரு சந்தோஷத்த இப்பவும் உணருகிறேன்...

நன்றி பிரபா..உங்க முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

வணக்கம் மங்கை அக்கா ;-)

ஒவ்வொரு அழகும் அருமை...அருமை

கோபிநாத் said...

முத்துக்கா சொன்னது போல தூங்கற குழந்தையை கொஞ்ச கூடாதுன்னு என் பாட்டியும் சொல்லும்.

\\என்ன மன உலைச்சல் இருந்தாலும் அம்மாவ பார்த்தா, இல்ல ஃபோன்ல பேசினா கூட போதும் மனசு லேசாயிடிது.\\

சரியா சொன்னிங்கக்கா.......இந்த ரெண்டு விஷயத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்.

\\பாவடை தாவனி \\

மத்த எந்த உடையிலும் இல்லாத ஒரு அழகு இதுல இருக்கு.
அப்ப எல்லாம் கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட படிக்கும் பெண்களை இந்த உடையில் பார்க்கும் போது அவுங்க அழகே அழகுதான். ம்ம்ம்ம்....இப்ப அதெல்லாம் எங்க?

மொத்தத்தில் எல்லா அழகும் அட்டகாசம் ;-)))

Anonymous said...

உள்ளேன் மங்கை! :)
இப்படிக்கு, குமாரி கன்ஃப்யூஷியஸ்!

அழகினைப் பற்றி அழகான பதிவு. மூணு மாசத்துக்குள்ள சிரிக்குமா குழந்தை? நான் இப்பதான் கேள்விப்படுறேன், ஃபோட்டோ சூப்பரா இருக்கு, உங்க வார்த்தைகளும் அருமையா இருக்கு இதைப் பற்றி.

மங்கை said...

//உள்ளேன் மங்கை! :)
இப்படிக்கு, குமாரி கன்ஃப்யூஷியஸ்!//

ஆஹா..வாங்கம்மா வாங்க குமாரி.கன்ஃபுயூசியஸ்..

3 மாச குழந்தை தூக்கத்துல தான சிரிக்கும்னு சொன்னேன்.....:-))

மங்கை said...

வாங்க கோபி..

குழந்தை தூங்கறப்போ ரசிக்க கூடாதுன்னு தெரியும்.. ஆனா நாம சொல்றத கேட்டு இருந்தா தான் எப்பவே உருப்பட்டு இருப்பமே.. அதுக்கு தனியா திட்டு வாங்கனும் இல்ல

//மத்த எந்த உடையிலும் இல்லாத ஒரு அழகு இதுல இருக்கு....அவுங்க அழகே அழகுதான். ம்ம்ம்ம்....இப்ப அதெல்லாம் எங்க?///

தாவணி அழக பத்தி எல்லாரும் சொல்றீங்க.. ஆனா பதிவுல சொல்லலை
ஹ்ம்ம்ம்..இப்பவும் கோவைல கல்லூரி விழக்கள்ல மட்டும் சேலையும், தாவணியும் பார்க்கலாம்...

நன்றி கோபி...

Techo_Brainee_Idiot said...

Very super on your thinking