Friday, February 23, 2007

அறமா?.. சட்டமா?


நம்ம சமூகத்தில் அறத்திற்கு அஞ்சி தவறு செய்யாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்?..சட்டம் தான் நம்மை எல்லாம் கப்பாத்திட்டு இருக்குனு நினைக்குறேன்..நாளைக்கே, கொலையும் கொள்ளையும் சட்டத்துக்கு புறம்பானது இல்லைனு சொன்னா, நம்மில் பல பேர் உயிரோடு இருக்க மாட்டோம்...அறத்திற்கு அஞ்சி, இது சமூகத்தின் பாவம் என்று நினனத்துக் கொண்டு தவறு செய்யாமல் இருப்பவர்கள் குறைவு...அப்போ சமூகத்த எது காக்குது?..சட்டம்னுதான்னு நினைக்க தோனுது...சட்டத்திற்கு அஞ்சி வாழ்கிற சமூகம், சட்டத்தில இருக்குற ஓட்டைகளை கண்டுபிடித்து மேலும் மேலும் தவற செஞ்சுட்டு தான் இருக்கும்...

இரண்டு நன்பர்கள் கூட்டு சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பிச்சாங்களாம். நல்லா ஒப்பந்தம் எல்லாம் போட்டு கடைசி வரை பிரியக் கூடாதுனு ஒற்றுமையா தான் நடந்துச்சு எல்லாம். சில நாட்களிலேயே, ஒரு நண்பனுக்கு உடல் நிலை சரி இல்லாம மரணப் படுக்கையில விழுந்துட்டான். அப்போ இரண்டாவது நண்பன் சோகமே உறுவாகி பக்கத்தில உக்காந்து அழுதுட்டு இருக்கான். மரணப் படுக்கையில இருக்கும் நண்பன் சொல்றானாம்

என்னை மன்னிச்சுடு, நான் உனக்கு துரோகம் செஞ்சுட்டேன்.

எனக்கு துரோகமா?..என்ன செஞ்ச அப்பிடி?

உனக்கு தெரியாம நான் நிறைய சொத்த ஒதுக்கீட்டேன்..இப்பவாது உன்கிட்ட சொல்லிட்டேனே..மனசுக்கு நிம்மதியா இருக்குன்னு சொன்னாம்...

அப்ப இன்னொரு கூட்டாளி சொன்னானாம்... இதுக்கு எதுக்கு போய் கவலை படற, நீ மரணப்படுக்கையில இருக்கிறதுக்கே நான் தான் காரணம்..நான் கொடுத்த Slow Poisonனால தான் இன்னைக்கு நீ மரணப்படுக்கையில இருக்கேனு சொன்னானாம்.

நட்பின் ஆழத்தையும் அன்பின் ஆழத்தையும் பல சமயங்களிலே பணமே நிர்ணயிக்கிது.

சமுதாயத்தில நான் என்ன வேனா பண்ண எனக்கு உரிமை இருக்கு. எனகுள்ள இருக்குற id அது பண்ணு இத பண்ணுன்னு ஆசைய தூண்டி விட்டுடுது....ஆனா Super ego, வேண்டாம்மா, இது எல்லாம் தப்பு, நம்ம பெரியவங்க இது எல்லாம் சொல்லி இருக்காங்கனு எனக்குள்ள ஒரு லைட் அடிக்குது... கூடவே வளர்ந்த Super ego சொல்றத ஒதுக்கவும் முடியலை, ஆசையும் அடங்க மாட்டேங்குது, அதுனால மனசுல தோனின ஆசையை நிறவேத்திக்கறதுக்கு சில defence mechanisms வச்சுட்டு என்னோட செயல் பாடுகளுக்கு நியாயம் கண்டுபிடிச்சு வச்சுக்குறேன்.


என்னோட செயல்பாடுகள் அடுத்தவங்க சுதந்திரத்தை பாதிக்கறப்போ தான் சட்டம் நடுவுல வருது. சட்டம் வந்து நீ பண்றது சரியில்லை, மீறி பண்ணேனா இது தான் உனக்கு தண்டனை சொன்னப்புறம் நான் பேசாம இருக்கலாம். இல்லை அதுக்கு அப்புறமும் தப்ப செஞ்சுட்டு தண்டனைய அனுபவிக்கலாம். இதுல நான் மனசாட்சிக்கும் பயப்படலை, சட்டத்திக்கும் பயப்படலை. என்னோட சுய நலம் தான் முன்னாடி டேன்ஸ் ஆடுது.


ஓம் சர்பே பவந்த்து

சுகினஹா
நாவாலும் கரத்தாலும் எவர்க்கும் தீங்கிழைக்காமல் இருப்போம்

அய்யோ...இவளுக்கு என்ன ஆச்சுன்னு நினைக்குறீங்களா...என்னமோ தோனித்து, அப்படியே விரல் வழியா கொட்டீடுத்து....கண்டுக்காதீங்கோ.

பங்காளி மனசில இப்ப - எழுத சொல்வானேன், இந்த கொடுமைய அனுபவிப்பானேன், இதெல்லாம் நமக்கு தேவையா, வம்ப விலை குடுத்து வாங்கீட்டமேனு நினைக்குறார். என்ன பண்ண உங்க தலை எழுத்து....

எல்லாம் P6 புரட்சி னால வந்த கொடுமை.

18 comments:

வடுவூர் குமார் said...

கண்டுகாதீங்க என்று கடைசியில் சொன்னா போதுமா?
படிசிட்டமில்ல.
பல விஷயங்கள் டான்ஸ்தான் ஆடுது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்ன மங்கை, மதுரா பதிவுல போய் P6 புரட்சி செய்ததுல குழம்பிட்டீங்களா?
பரவால்ல மனசுல உள்ளத அப்படியே விரலில் வடிச்சிட்டாலும் தப்பில்ல.சரியாத்தானே இருக்கு எதுக்கு கண்டுக்காதீங்கன்னு எல்லாம்...
ஆபத்து எந்த வழியிலாவது வந்துடுமோங்கற சுயநலமான பயம் தான் தப்பு செய்யாம தடுக்குது..ம்...சரி தான்.

Anonymous said...

நான் ஆறாங் கிளாசில மொதல் Moral Instruction Classல, டீச்சர்ட கேட்டேன், "டீச்சர் ஏசுதான் என் பாவம் எல்லாம் மன்னிச்சிர்வாருல்ல, அப்பன்னா நான் என்ன வேணா பாவம் பண்ணலாமான்னு ..." நிசமாலுமே எனக்கு பயங்கர டவுட்டு. ஏசுவை வேற ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் என்ன டீச்சருக்கு ஃபேவரைட் மாணவி ஆகி, பதினேழாவது, இருபத்தி மூணாவது ரான்கு வாங்குறவளை மூணு மாசம் முதல் ராங்க் குடுத்து ... வேற வழியா இல்லாம அதுக்கபுறம் ரொம்ப நல்லா படிக்க வேண்டியதா போச்சு ... ;)

அன்பு, பாராட்டு, இதுதாங்க என்னைய எப்பவும் நல்லவளாக்குது. மத்தபடி ரொம்ப சந்தேகம்தான் எல்லாமே. பொய் சொன்னா நம்ம உண்மை சொல்லும்போது யாரும் நம்ப மாட்டாங்க, நம்ம அடிச்சா அவங்க அடிப்பாங்க, நம்ம குச்சி ஐஸ் ஷேர் பண்ணா நாளைக்கு பூரியில பாதி கிடைக்கும், இந்த மாதிரி கத்துக்கிட்ட விஷயம் மனசுல ஆழமா நிக்குது! ;)

அதாவது அறத்தில நம்பிக்கை கேள்வி கேக்காத வரைக்கும்தான். சட்டம் ஓட்டை கண்டு பிடிக்கத் தெரியாத வரைக்கும்தான். ஆனால் மனிதம் அனுபவத்தில் அறிந்து வருவது. அப்படின்னு எனக்கு தோணும். நான் முழுமையான சுயநலவாதி. நான் அடுத்தவருக்கு உதவுவது என்றாவது நான் கஷ்டப்படும்போது யாரேனும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை வருவதற்கே.

ரொம்ப பேசிட்டனோ? சாரி.
அருமையான தீம் மங்கை. என்னைய நிறைய பேச வைக்குது!

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

அறம் என்பதே மனிதன் முற்காலத்தில் உருவாக்கிய சட்டம் தானே? உயிர்களை கொல்லாமை ஒரு அறம். ஆனால் அதுவே உணவு மற்றும் உறைவிடத்திற்காக செடி, கொடி, மரங்களை வெட்டிச் சாய்ப்பதை தவறென்று சொல்லவில்லை. இதுபோல அறத்தில்கூட மாமிசம் சாப்பிட்டால் தவறு, தவறில்லை என பல குழப்பங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் மனிதனை மனிதன் மதிப்பதில்கூட அறவழியில் பல குளறுபடிகள் உள்ளன.

அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தனது கொள்கைகளைத் தளர்த்தும்போதும், தனக்கான செயலை வெற்றிகரமாக முடிக்க குறுக்குவழிகளில் முயற்சிக்கும்போதும் நீங்கள் சொல்வதுபோல டான்ஸ் ஆடும் மனநிலை வரத்தான் செய்யும். அதில்தான் நீங்கள் லட்சிய மனிதரா? அலட்சிய மனிதரா? சராசரி மனிதரா என்று சமுதாயம் உங்களை எடை போடும்.

பரிணாம வளர்ச்சியில் நாம் நடப்பதுகூட போராட்டம் தான். அதுவே அடுத்தவர்மேல் ஏறி நடந்தால் அதுவே அக்கிரமம். எனவே உங்கள் மனசாட்சிக்கு சரியெனப்படுவதைச் செய்து, மனசாட்சிக்கும் உங்களுக்குமிடைப்பட்ட தூரத்தை குறைத்து வாழப் பழகுங்கள். அதுதான் மனநிறைவான வாழ்க்கை.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...
This comment has been removed by the author.
மங்கை said...

வாங்க குமார்

முதல் முதல் வந்து இருக்கீங்க,,வந்ததும்
டான்ஸ் ஆட வச்சுடனா... என்ன பண்ண இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ் பண்ணிகோங்க

மங்கை said...

லட்சுமி

ஆமா லட்சுமி, நான் இத செஞ்சா எனக்கு கவுரவக் குறைச்சல், அது என்ன பாதிக்கும்னு நினச்சுதான் நிறைய
தப்பிகள நாம செய்யறதில்லை... இன்றைக்கு அடுத்தவங்கள பாதிக்கும் பல தவறுகள் சமூகத்தில சகஜமான ஒன்னாயிட்டு வருது. அதுனால அதற்கு முந்தி இருந்த களங்கம் இப்ப இல்ல.. ஹ்ம்ம்ம்

(சரி என்னமோ சொன்னீங்களே,, பார்த்தீங்களா, என்ன தான் எண்ணைய தடவீட்டு உருண்டாலும் ஒட்டற மண்ணுதான ஒட்டும் லட்சுமி..:-)).. ஹ்ம்ம்..அதுக்கெல்லாம் சில ராசி வேணும்)

மங்கை said...

//அன்பு, பாராட்டு, இதுதாங்க என்னைய எப்பவும் நல்லவளாக்குது//

நல்லவள் மட்டும் இல்லை மதுரா, வல்லவலும் ஆக்குது என்ன..ஹ்ம்ம்ம்

//நான் அடுத்தவருக்கு உதவுவது என்றாவது நான் கஷ்டப்படும்போது யாரேனும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை வருவதற்கே.//

இந்த சுயநலம் தான் மதுரா என்ன ரெண்டு நாளா ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாக்குது..அத பத்தி நாளைக்கு பதிவு போடுறேன்...

நன்றி மதுரா....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாளைக்கே இன்னோரு பதிவா?
ஆச்சரியம் ஆனால் உண்மை.
சரிசரி...மன உளைச்சலை போக்கும் மருந்தெல்லாம் கைவசம் ரெடியா வச்சுக்குங்க மக்களே.

மங்கை said...

வாங்க கவுதமன்...

//அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தனது கொள்கைகளைத் தளர்த்தும்போதும்//

//எனவே உங்கள் மனசாட்சிக்கு சரியெனப்படுவதைச் செய்து, மனசாட்சிக்கும் உங்களுக்குமிடைப்பட்ட தூரத்தை குறைத்து வாழப் பழகுங்கள். அதுதான் மனநிறைவான வாழ்க்கை. //

இது தான் இந்த பதிவின் நோக்கம்..

அழகா சொல்லி இருக்கீங்க..நன்றி

சிவபாலன் said...

மங்கை

உங்கள் பார்வை சரியே!

சட்டம் தான் இன்றைக்கு எல்லாம். பொதுவாக நம்ம வீட்டுக்கு பூஜை போடுவதைவிட அந்த வீட்டின் பத்திரம் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்த்தது என்பதிலேயே நமது செய்லகள் இருக்கும். இதை எதற்கு நான் சொல்கிறேன் என்றால் இன்று நடந்துவரும் மாற்றங்கள் சட்டத்திற்கு முக்கியதுவம் கொடுத்துதான் நடைபெறுகிறது.

இதுவும் ஒரு வகையில் பரிணாமம் தான். சட்டம் முக்கியம் என்ற பரிணாமம்.

என்னை கேட்டால் சட்டம்தான் இன்றைய சூழலில் முக்கியம்.

மங்கை said...

//மன உளைச்சலை போக்கும் மருந்தெல்லாம் கைவசம் ரெடியா வச்சுக்குங்க மக்களே///

ஹி ஹி..கரெக்ட்...அந்த மருந்தே உங்களுக்கே பயன் படும் மக்களே..ஏதாவது ஆச்சுன்னா நம்ம புரட்சித் தலைவியும்..கொ ப செ வும் தான் காரணம்..
:-)))....

மங்கை said...

சிவபாலன்

சட்டம் முக்கியம் 'ஆகிவிட்டது'...

எதிலும் மனித நேயத்தை மட்டும் தங்கள் அளவு கோலாகக் கொண்டு செயல் பட்டால் சட்டமும் அறமும் சேர்ந்து நம்மை காக்கும்...

துளசி கோபால் said...

என்னங்க சட்டம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க.
சட்டமே கூட எல்லோருக்கும் சமம்ன்னு நம்மூர்லே இல்லீங்களே (-:

மாமியார் உடைச்சால்------

மருமகள் உடைச்சால் ------------

அறம் எனப்படுவது யாது?

இதெல்லாம் ரொம்ப ஆழமாப் போகமாட்டாங்கன்னுதான் பாவம்,புண்ணீயம்னு
சொல்லிவச்சுட்டுப் போயிட்டாங்க பாருங்க நம்ம பெருசுங்க.

சுயநலம்- இதுக்கும் ஒண்ணு சொல்லியாச்சு. ஊரார் புள்ளையை ஊட்டிவளர்த்தால்
தன்பிள்ளை தானே வளருமாம்.

எப்படியோ மனசாட்சிக்கு விரோதமில்லாம வாழ்க்கையை நடத்துனாச் சரி.
இல்லீங்களா?

மங்கை said...

ஆமா துளசி..

சுயநலம்...இது தான் உங்களுக்கு நான் கொடுக்குற அடுத்த Bomb...:-)))...

இது பாவம், இது புண்ணியம்னு எல்லாம் எங்கேயும் சொல்ல்லை துளசி.. வேதத்த கையில எடுத்கிட்டவுங்க நமக்கு interpret பண்ணது தான் அது எல்லாம்....

ஹ்ம்ம்ம்..மனசாட்சி...இது இருந்தா போதும்....

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//இது தான் இந்த பதிவின் நோக்கம்..
அழகா சொல்லி இருக்கீங்க..நன்றி //
நன்றி மங்கை.
சிந்திக்கவும், சொல்லவும் வைத்தது உங்கள் பதிவின் வெற்றி.

//இதெல்லாம் ரொம்ப ஆழமாப் போகமாட்டாங்கன்னுதான் பாவம்,புண்ணீயம்னு
சொல்லிவச்சுட்டுப் போயிட்டாங்க பாருங்க நம்ம பெருசுங்க.//
"ஒன்றையொன்று
கொன்று தின்பதே
அன்றாட வாழ்க்கையாய்
அன்றிலிருந்து இன்று வரை...
பருந்தின் கால்களில் பாம்பு;
புழு பூச்சிகளைக்
தின்று கொழுத்த கோழி
பாம்பின் வயிற்றினுள்!
இடையிலே
பாவ புண்ணியம்
எங்கிருந்து வந்தது?"

மங்கை said...

நன்றி கவுதமன்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்த id, superego இதெல்லாம் அண்மையில் ஒரு உளவியலாளரிடம் இருந்து நான் கேள்விப்பட்ட சொற்கள். உளவியல் படிச்சிருக்கீங்களா நீங்க? அப்பனா அது குறிச்சு விளக்கமா எழுதினீஙகனா நிறைய பேருக்க பயனுள்ளதா இருக்கும்