Friday, December 01, 2006

Stop AIDS, Keep the promise


உடம்பில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மனிதனை பல் வேறு இன்னல்களுக்கு ஆளாக்கும் உயிர்கொல்லி நோய் இவ்வுலகில் பிறந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. பின்னாளில் எய்ட்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த நோய், மருத்துவர்களுக்கு மட்டுமின்றி, ஒரு நாட்டின் வளர்ச்சித்திட்டத்தில் பங்கு பெறும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சவாலாக இருந்து வருகிறது. இன்று உலகில் 39.5 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் 95% பேர் வளரும் நாடுகளில் இருப்பவர்கள். இவர்களில் சரி பாதிபேர் 25 வயதிலேயே எச்ஐவி பாதிப்பிக்கு ஆளாகி.. பிறகு எய்ட்ஸ் என்னும் பல வித சந்தர்ப்ப வாத நோய்களின் பாதிப்பால் 35 வயதில் இறந்து போகிறார்கள்.
இந்தியாவில் 5.7 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சினால் பாதிக்கப்படுள்ளனர் என்று UNAIDS நிருவனம் கூறுகிறது. இதில் 37 சதவீதம் பேர் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்தியாவில், தமிழ் நாட்டில் தான் எச்ஐவியால் பாதிக்கபட்டவர்கள் அதிமாக இருக்கிறார்கள்

1988 முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் ஒன்றாம் தேதி எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாக வைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சென்ற வருடம் முதற்கொண்டு 2010 வரை ' Stop AIDS, Keep the promise' என்னும் கருப்பொருளே அனைத்து நடவடிக்கைகளுக்கும் மையமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டள்ளது.சமுதாயத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எச்ஐவி தடுப்பு பணியில் இருக்கும் கடமையை நினைவு கூறும் விதமாக இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய சில கடமைகள்...

எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களையும், ஆதாரமான செய்திகளையும் தெரிந்துகொள்ளுதல்.

எச்ஐவி தாக்கிய சக மனிதர்கள் குறித்து இந்த சமூகம் ஏற்படுத்தும் கறைகளயும் ஒதுக்குதலையும் மாற்ற நம்மால் இயன்றதை செய்தல்.

உரிமைகள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளுதல்

எய்ட்ஸ் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள சமுதாயத்தையும் சமூக கருத்துக்களையும் அறவே அகற்ற நம்மால் இயன்ற வரை பாடுதல்.

எச்ஐவி தடுப்புப் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளல்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை விட ஆதரவு தேவை. அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்து அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியானதொரு வாழ்வை அளித்தல்.
நம் அனைவருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது...
தமிழ்நாட்டில் எச் ஐவி/ எய்ட்ஸ்
3.4 லட்சம் பேர் பாதிக்கப்படுள்ளார்கள்... ஆனால் ஆவணங்களில் 1.2 லட்சம் பேரே பட்டியலில் உள்ளனர். தமிழ்நாட்டின் பங்கு இதில அதிகமாக தெரிந்தாலும், இதற்கு காரணம், இங்கு முறையாக நடக்கும் surveillance system, திறமயான முறையில் நடத்தப்படும் விழிப்புணர்ச்சி நடவ்டிக்கைகள், மேலும் நேர்மையான முறையில் கொண்டு செல்லப்படும் பொது சுகாதார திட்டங்கள்.
இந்த வகையில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக கருதப்படுகிறது.

18 comments:

Kuppusamy Chellamuthu said...

நல்ல விஷயம். நன்றி.

ஆனா..இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லியிருக்கலாம்னு தோனுது..

பங்காளி... said...

இத்தனை முக்கியமான பதிவிற்கு யாருமே பின்னூட்டவில்லை...

பரவாயில்லை...நானிருக்கிறேன் ...

விழிப்புணர்வினை ஏற்படுத்த பத்தாம்பசலித்தனமான உத்திகளை கட்டிக்கொண்டு மாரடிக்கிறீர்களோ என்கிற சந்தேகம் எனக்குண்டு...

என் மாதிரியான ஆசாமிகளை ஆலோசகர்களாய் நியமிக்கும் பட்சத்தில் அருமையான அரைவேக்காட்டுத்தனமான உத்திகளை கையாண்டு எய்ட்ஸ்ஸை இந்தியாவை விட்டே கதற கதற ஓடவைத்துவிடுவேன்...ஹி...ஹி..

நான் ரெடி...நீங்க ரெடியா....ஹி..ஹி..

Thekkikattan said...

மங்கை,

//இந்தியாவில் 5.7 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சினால் பாதிக்கப்படுள்ளனர் என்று UNAIDS நிருவனம் கூறுகிறது.//

சி.என்.என் துணுக்குச் செய்திகளின் பகுதியில் இந்தியாவில் 4.5 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சினால் பாதிக்கப் பட்டுள்ளதாக இருந்ததே... இந்த இரு எண்களிலும் யார் சொல்லுவது உண்மை.

இன்னும் வெளிச்சத்திற்கு வராத கேஸ்கள் எவ்வளவு இருக்கும். இந்தியாவில் அதிகமான பண உதவீடு பெரும் விழிப்புணவிற்கென உள்ள விசயங்களில் எய்ஸ்ட்கே முதலீடம் என்ற போதிலும் இன்னும் செய்தி சென்றைடந்தாக தெரியவில்லையே, அப்படியா...?

//சில கடமைகள்...//

பின் பற்றினால் நன்றாகத்தான் இருக்கும்... நன்றி, மங்கை.

மங்கை said...

நன்றி குப்புசாமி அவர்களே...

வேற ஒரு பதிவு படங்கள்/ டேட்டா எல்லாம் ரெடி பண்ணி வச்சு, வளையேத்த முடியலை...நெட் பிரச்சனையால.. உலக எய்ட்ஸ் தினத்தன்னிக்கு ஏதாவது ஒரு விஷ்யத்த சொல்லனும்னு எழுதின பதிவு இது... ஹ்ம்ம்ம்...நன்றி

///இத்தனை முக்கியமான பதிவிற்கு யாருமே பின்னூட்டவில்லை...

பரவாயில்லை...நானிருக்கிறேன்///

ஹ்ம்ம்ம்... நன்றி.. ..

50 பேருக்கு மேல படிச்சு இருக்காங்க.. பின்னூட்டம் போடற அளவுக்கு impressive ஆ இல்லை போல இருக்கு..

சொல்ல வந்த விஷயம் புரிஞ்சா சரி..

ஹ்ம்ம்ம்..

//விழிப்புணர்வினை ஏற்படுத்த பத்தாம்பசலித்தனமான உத்திகளை கட்டிக்கொண்டு மாரடிக்கிறீர்களோ என்கிற சந்தேகம் எனக்குண்டு..//

எந்த உத்திய சொல்றீங்க?,,,

பங்காளி... said...

மங்கை...

உங்கள் பதிவுகளை ஆப்ரிக்காவில் யாரும் படிப்பதாக தெரியவில்லை...எனவே ஆப்ரிக்க வாழ் மக்களையும் கவரும் விதமாக பதிவெழுத வேண்டுகிறேன்...ஹி..ஹி..

மங்கை said...

வாங்க தெகா

புள்ளி விபரம் பற்றிய சர்ச்சை நடந்துட்டு தான் இருக்கு... இதுல UNAIDS நிறுவனம் சொல்றது தான் பொதுவா தொண்டு நிருவணங்கள் கணக்கில எடுத்துக்குது.. இத மையமா வச்சே திடங்கள் தீட்டப்படுது..

ஆமா தெகா இந்த திட்டத்திற்கு தான் அதிக பண உதவி உலக நாடுகள் கொடுக்குது..

கண்டிப்பா விழிப்புணர்ச்சி அதிகமாயிருக்கு.. அதில எந்த வித சந்தேகமும் இல்லை...

ஆனா இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த முயற்சிகளும், திட்டங்களும் தொடர்ந்து புதிய அணுகுமுறைகளுடன்
செயல்படுத்தவேண்டும்... பாதிக்கப்பட்டவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு...

நன்றி தெகா அவர்களே

மங்கை said...

// பங்காளி
உங்கள் பதிவுகளை ஆப்ரிக்காவில் யாரும் படிப்பதாக தெரியவில்லை...எனவே ஆப்ரிக்க வாழ் மக்களையும் கவரும் விதமாக பதிவெழுத வேண்டுகிறேன்...ஹி.//

ம்ம்ம் என் படத்ததான் போடனும் ஆப்பிரிக்காவில படிக்கனும்னா :-))

வெளிகண்ட நாதர் said...

நல்ல பதிவு! இன்று விழிப்புணர்வு தேவை!
இதற்கும் சென்று வருக!

chella said...

ada, neengalum nammuuruthaanaa. I am from RS Puram!!

மங்கை said...

நன்றி வெளிகண்ட நாதர்

நன்றி செல்லா...நீங்களும் கோவை தானா...சந்தோஷம்..நன்றி

Sivabalan said...

மங்கை,


//இந்தியாவில் 5.7 மில்லியன் மக்கள் எய்ட்ஸ்சினால் பாதிக்கப்படுள்ளனர் என்று UNAIDS நிருவனம் கூறுகிறது.//


மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.

இது எய்ட்ஸ்க்கு எதிரான நமது பிரச்சாரங்கள் தோல்வி அடைய துவங்கிவிட்டதா?


ம்ம்ம்ம்... என்னமோ போங்க..

பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

வெளிகண்ட நாதர் said...

அட நீங்க நம்ம படிச்ச ஊரா?? பீளமேடு நம்ம ஜாகை அப்ப!

Divya said...

உங்கள் பதிவு விழிப்புணர்ச்சியை உண்டாக்கட்டும். நல்லா எழுதியிருக்கிறீங்க மங்கை.

மங்கை said...

அது அப்படி அல்ல சிவா...இப்ப விழிப்புணர்ச்சி இருக்கிறதுநாள தான் மக்கள் உணர்ந்து, சோதனைக்கு முன்வராங்க...
ஆனா இந்த வேகம் பத்தாது...எச்ஐவி நம்மள விட வேகமா பரவீட்டு இருக்கு..

வருகைக்கு நன்றி சிவா

மங்கை said...

///வெளிகண்ட நாதர் said...
அட நீங்க நம்ம படிச்ச ஊரா?? பீளமேடு நம்ம ஜாகை அப்ப!//

PSG studentaa நீங்க...நான் படிச்சது வேலைப் பார்த்தது எல்லாம் PSG groupla தான்..

நன்றி வெளிகண்ட நாதர்

மங்கை said...

நன்றி திவ்யா

Anonymous said...

நல்லா எழுதி இருக்கீங்க..

மங்கை said...

நன்றி பூங்குன்றன்...

உங்கள் பதிவும் அருமை..நன்றி