Sunday, December 10, 2006

மனித உரிமை நாள்


வறுமையால் செத்துக்கொண்டிருக்கும் சக மனிதனை காப்பாற்ற செலவு செய்யும் பணத்தைவிட எதிராளி நாட்டின் படைவீரனை கொல்ல அதிக பணத்தை செலவு செய்யும் உலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...


மனித வளத்தை கட்டியெழுப்புவதற்கு தடையாக இருக்கும் முக்கிய காரணி
வறுமை.


வறுமையின் கொடுமையால் பாலியல் தொழிலில் குழந்தைகள்...கொடுமையின் உச்சம்


இன்று மனித உரிமை நாள்.


எல்லா வகையான மனித உரிமை மீறலுக்கும் அடிப்படை காரணி வறுமை.


1996 ஐ முதற்கொண்டு 2015 ஐ இலக்காக நிர்னயித்து, தலை விரித்து ஆடும் வறுமையை பாதியாக குறைக்க உலக நாடுகள் உறுதி எடுத்திருக்கின்றன. இதற்கான முயற்சிகளும் திட்டங்களும் நடந்து கொண்டிருந்தாலும், இது எந்த அளவுக்கு போதுமானதாக இருக்கிறதென்று நம் கண் முன்னே நடக்கும் மனித உரிமை மீறல்களை பார்த்தாலே நமக்கு புரியும்..

14 comments:

Anonymous said...

//வறுமையால் செத்துக்கொண்டிருக்கும் சக மனிதனை காப்பாற்ற செலவு செய்யும் பணத்தைவிட எதிராளி நாட்டின் படைவீரனை கொல்ல அதிக பணத்தை செலவு செய்யும் உலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...//


ஆமாம் மங்கை.
வறுமை என்பது ஏழைகள் மீதான மிக மோசமான வன்முறை என்று காந்தி எழுதி இருக்கிறார்.

Sivabalan said...

மங்கை,

சட்டம் பற்றி அடிப்படை அறிவு கூட இந்த உரிமை மீரல்களை குறைக்கும்.. குறைந்தபட்சம் படித்த்வர்களிடமாவது..

நல்ல பதிவு!

நன்றி

Thekkikattan said...

மங்கை,

இந்த நாளில் ஒரு சோகமான உண்மையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த "வறுமை"யை மூலதானமாகக் கொண்டுதான் உலக அரசியலே இயங்குகிறது. ஏனுங்க வறுமையை முற்றிலுமாக ஒழித்து விட்டால் பிறகு எப்படி நான் பெரியவன், நீ சிறியவன் என்ற பாகுபாட்டில், ஒரு அல்ப சுகத்தில் வாழ்ந்து சாகாமல் இருப்பது?

பிறகு நாங்கள் எப்படி போருக்கான ஆயுதங்களை அது போன்ற வறுமையுற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யாமல், எங்கள் வளத்தைப் பெருக்கிக் கொள்வது? எல்லோருமே எல்லாமே பெற்று விட்டால், சுபிட்சமாக இருந்து விட்டால், பிறகு எதற்கு போட்டியும், பொறாமையும் தலை விரித்து ஆடப் போகிறது உலக நாடுகளிடத்தே, ஒரே தெருவில் வசிக்கும் அண்டையர்களிடத்தே?

இது போன்ற அவலங்கள் நீடித்தால் தான், வித்தியாசங்களில் எங்கள் வாழ்வு சிறப்புற்றாதாக நினைத்து வாழலாம். எல்லாம் அரசியலுங்க... ஒண்ணும் சொல்றமாதிரி இல்லை...

மங்கை said...

//சட்டம் பற்றி அடிப்படை அறிவு கூட இந்த உரிமை மீரல்களை குறைக்கும்.. குறைந்தபட்சம் படித்த்வர்களிடமாவது//

உண்மை சிவா...

சட்ட விழிப்புணர்வு பல அடிப்படை உரிமை மீறல்களை எதிர்த்து போராட உதவும்...

முக்கியமாக படித்தவர்களிடத்தே இந்த விழிப்புணர்வு இன்னும் கம்மி தான்...

Anonymous said...

இளமையில் வறுமை கொடிது...ம்ம்ம்ம்ம்

மங்கை said...

தெகா...


மனிதர்களை மனிதர்கள் ஒடுக்குதல்தான் வறுமையின் மூல காரணி என்று நினைக்குறேன்

கார்ல் மார்க்ஸ் ''ஒரு தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியானது, அவன் செய்த வேலைக்கான பெறுமானமல்ல,அடுத்த நாள் அவன் அரை வயிறு கஞ்சியை குடித்திவிட்டு வேலைக்கு வருவதற்கு அவனுக்கு கொடுக்கப்படும் பிச்சை" என்றார்..

எவ்வளவு உண்மை

மங்கை said...

// பங்காளி... said...
இளமையில் வறுமை கொடிது...ம்ம்ம்ம்ம் //

கொடிதினும் கொடிது இளமையில் வறுமை என்றாள் அவ்வை..

இளமையில் வறுமை
இருந்தால் நம்பிக்கை இல்லாமல் போய் விடுகிறது..

பலவிதமான சட்டவிரோத எண்ணங்களுக்கும் இது தானே காரணம்

நன்றி

கானா பிரபா said...

நம் தாயகத்தைப் பொறுத்தவரை பேரினவாதப் போரால் மனித உரிமை நசுக்கப்பட்டு ஏழைகளாகவும் ஏதிலிகளாகவும் ஆக்கப்படுகின்றது நம் தமிழ் இனம்.

மங்கை said...

மனித உரிமை மீறல்கள் பல தரப்பிலும் நிகழ்வது உண்மையேயாயினும்... ஒரு இனமே அழியும் அளவுக்கு நடப்பது கொடுமை தான் பிரபா...உங்கள் வேதனை புரிகிறது...

மங்கை said...

ஹ்ம்ம்ம்..நன்றி லக்ஷ்மி..

Divya said...

\"வறுமையின் கொடுமையால் பாலியல் தொழிலில் குழந்தைகள்...கொடுமையின் உச்சம்\"

மனதை உலுக்கியது இந்த வரிகள்.

நல்ல பதிவு மங்கை.

Anonymous said...

என்று தனியும் எங்கள் சுதந்திர தாகம்...

Anonymous said...

பூஜைக்கு
பூத்த பூக்கள்
புதைக்கப்படுகிறது
புதைகுழியில்
தினம் தினம்!
புழுதியில் வீசப்பட்ட
இந்த இளம்
பூக்களுக்கு
கருவரை செல்லும்
காலத்தை
கடவுள்தான் காட்டவேண்டும்!
மனசாட்சி இல்லாத
மனிதர்களால் முடியாது!
அவள் தாய்க்கு
அன்று கள்ளிப்பால்
கிடைத்திருந்தால்
ஒருமுறையிலேயே
உயிர்மறித்திருக்கும்!
இன்று
ஓவ்வொருமுறையும்!

மங்கை said...

அருமையான கவிதைக்கு நன்றி பிரேம் அவர்களே..