Tuesday, September 12, 2006

தில்லியும் நானும் தமிழும்

தலைநகர் தில்லிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு, என்னத்த சொல்ல நான் இன்னும் இந்த சூழ்நிலைக்கு முழுசா மாறல. இதுல எனக்கு பெருசா வருத்தமில்லை. ரொம்பவே சந்தோசம்னு வேணுன்னா சொல்லிக்கலாம். தனியா ஒரு பெண் இங்கு வந்து குப்பகொட்றது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு தெரிஞ்சும், கிடைச்ச வாய்ப்பை நழுவவிட மனசில்லாம, 'தில்லியில் இல்லாத தமிழர்களா'ன்னு நினைச்சுதான் இங்கன வந்தேன். வந்தப்புறம்தான் தெரிஞ்சது, தலைநகரத் தமிழர்கள் எந்த அளவுக்கு உதவியா(?) இருக்காங்கன்னு.. ஏறத்தாழ ஒரு வருஷம் தனியா இருக்க வேண்டிய சூழ்நிலை..

சரி, இப்ப தில்லித் தமிழர்களின் தமிழ்மொழி பற்றை மட்டும் இங்க அலசுவோம்.

பஸ்சுல போறப்போ இறங்க வேண்டிய இடம் தெரியாம, தமிழர்னு தெரிஞ்சு உதவி கேட்டா, பதில் ஒன்னு ஆங்கிலத்துல வரும் இல்லைன்னா இந்தியில சொல்லுவாங்க.... நமக்கு வர்ற ஆத்துரத்துல நல்லா நாலு போடலாமுன்னு தோணும். தாய்மையும் ஊர்பாசம் ஒன்னா தலைதூக்கி தொலையட்டும்னு விட்டுற சொல்லும். ஆனா என் பொண்ணு இப்படியான சந்தர்பங்கள்ள தமிழ்ல எதாவது விவகாரமா திட்னப்புறம் அந்தபக்கம் reaction தமிழ்ல வரும்.

நம்மள மாதிரி புதுசா இறக்குமதி ஆகறவங்கள ஏளனமா பார்க்கிறதும்,முகத்தை திருப்பிக்கறதும் இங்க ரொம்ப சகஜம். நம்மை தெரியாவங்கதான் இப்படின்னா, கல்லூரியில வேலை செய்யிற சகதமிழர்கள் அதைவிட ஒரு படி மேலே, "ஐயோ எதுக்கு இங்க எல்லாம் வந்தீங்க.இங்க adjust பன்றது ரொம்ப கஷ்டம்.. அதுவும் நம்ம ஊர்ல வளர்ந்து பொண்ணுக இந்த cultureக்கு ஒத்து வரமாட்டாங்க."இங்க இருக்குற பொண்ணுக எல்லாம் ரொம்ப modern and stylish. கோயமுத்தூர்ல இருந்துட்டு இங்க எப்படி?...(கோவைய இவங்க பார்த்ததுருக்க கூட வாய்ப்பில்லை)எதுக்கு வீணா ரிஸ்க் எடுக்குறே, வேண்டாம்..... பொண்ண இங்க கூட்டீட்டு வரவேண்டாம்னு" ஒரே brain washing.. இந்த CBSE Syllabus படிக்கிறதும் கஷ்டம்.. பேசாம உங்க ஊரிலேயே எதாவது ஹாஸ்டலில் விட்டுறுன்னு" ஆளாளுக்கு advice வேறு.. எதோ நம்ம மேல ரொம்ப அக்கறை இருக்குற மாதிரி..


இதையெல்லாம் என் பெண்ணிடம் சொல்லப்போக அவளும் முதல்ல பயந்துட்டா!.. அனால் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே அவள் சொன்னது எனக்கு வியப்பா இருந்துச்சு.."என்னம்மா எந்த subject லேயும் யாருக்கும் basics கூட தெரியவில்லை.. இதுக்கு போயி நீ அந்த அலட்டு அலட்டுனே".,எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. இத்தனைக்கும் அந்த பள்ளியில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பு,நம்ம ஊரின் கல்வித்தரம் பத்தி பெருமயா உணர்ந்த தருணம் அது.

இந்த பதிவ எழுத ஆரம்பிச்ச பின் நடந்த Intresting matter ஒன்ணு.. என் பொண்ணு வகுப்பில ஒரு தமிழ் பெண்... இங்கேயே பிறந்து வளர்ந்த பெண்.. school prayer ல ஒவ்வொரு வாரமும், ஒரு வகுப்பு பிரார்த்தனை பாடல் பாடவேண்டும்.. இந்த 'நலம் விரும்பி' யாருக்கும் தெரியாமல் வகுப்பு ஆசிரியிரிடம் போய் இன்றைக்கு, என் பெண்ணோட பேர் சொல்லி , 'இவ இன்னைக்கு Prayer Song பாடுவான்னு' சொல்ல, அதையும் அறிவிச்சுட்டாங்க. அந்த நலம் விரும்பியும் சக மாணவிகளும் சேர்ந்து இவ முகம் போற போக்க பார்த்து சிரிச்சுட்டு இருந்திருக்காங்க.. இவ உடனே சமாளிச்சுட்டு, நாங்க கோவை நிறுவணத்துல எப்போதும் பாடற பாட்டு நினைவுக்க வர மேடையேறி பாடி முடிசுட்டா.. அந்த பாட்டு இதோ

''அன்பே தெய்வம்
அறிவே தெய்வம்
ஆணந்தமே தெய்வம்
பண்பே தெய்வம்
பரிவே தெய்வம்
பணியே நம் தெய்வம்
நற் பணியே நம் தெய்வம்''

இதுல இரண்டு வரிகள் மறந்துட்டாலும் ஒரு வழியா பாடி முடிச்சுட்டா. இதுல என்னனா, ஒவ்வொறு வரியும் பாடி முடிச்ச பின்.. மாணவர்களையும் ஆசிரியர்களையும் சேர்ந்து பாட சொல்லி இருக்கா..இதற்கு முடிந்த அளவுக்கு ஆங்கில விளக்கமும் கொடுத்துட்டு வந்துட்டா,
நம்ம நலம் விரும்பி மூச்சு விடலை அதுக்கு அப்புறம்..

மற்ற மாநிலத்தை சேர்ந்தவங்க பெரும்பாலும் அவங்க மொழியிலேயே பேசுறாங்க... ஆனா நம்ம தமிழ் மக்கள் தான் பந்தா.. இங்க இருக்கிற "தமிழ்த்தாயெல்லாம்" அவங்க குழந்தைகள் இந்தி சரியா படிக்கலைன்னு தவிக்குற தவிப்பிருக்கே...அவங்களை பார்த்தா ஹிந்தித்தாய் ஆணந்தக்கண்ணீர் விட்டு கேவிகேவி அழுவா. அத்தனை சுவாரசியமான காட்சி அது....அதே குழந்தைகளுக்கு நம்ம தாய்மொழியான தமிழ் ஏழுத படிக்க வரலைன்னு இவங்க வருத்தப்படாதப்போ மனசுக்கு கஷ்டமா இருக்கு.

எங்கு வாழ்ந்தாலும் தாய்மொழிக் கல்வியென்பது அவர்களது வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதுனு உளவியல் வல்லுனர்களினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கு. அனா இங்க தாய் மொழில பேசறதே கஷ்டம்னு நினைக்கறவங்க கிட்டே எங்க போய் தாய் மொழிய படிக்க சொல்றது. இதுல குழந்தைகளை சொல்லி தப்பு இல்லை.. வேறு வழி இல்லை அவர்கள் பள்ளியில் இந்தியில தான் பேசனும்..அனால் குறைந்தபட்சம் வீட்ல தமிழில் பேசினா அவர்களுக்கும் ஒரு மொழிப்பற்று வரும்..தமிழ் திரைப்படங்கள் பார்ப்பது (அல்லது பார்ப்பதாகச் சொல்வது) கூட கேவலம் என்று நினைப்பவர்கள் இக்குழந்தைகள்..

ஓரு முறை எய்ட்ஸ் விழிப்புணர்வில மதத் தலைவர்களை ஈடுபடுத்துற ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொலைபேசினேன்.. அந்தப் பக்கம் இருந்த பெண்.." are you a tamilian?" னு கேட்டா...நான் எப்படி கண்டுகண்டுபடிச்சீங்கன்னு கேட்டதற்கு.."from your pronounciation" என்றார்.. தமிழர்கள் பேசும் ஆங்கிலம் தனியா தெரியுமாம்..அரைகுறை ஆங்கிலம் தெரிந்த அந்தப் பெண் சென்னையை சேர்ந்தவர்.. 10 வருடமாக அங்கு வேலை பார்க்கிறாள்.. நேரில் சென்றபோது தான் விஷயம் தெரிந்தது..அப்ப கூட அவள் தமிழில பேசல..இந்தியில் தான் பேசினா..நான் பிடிவாதமா தமிழில பேச அவளும் பிடிவாதமா இந்தியில பேச.. நல்ல காமெடி... நமக்கு பொறுமை இல்ல அதுக்கு மேல பேச "எனக்கு இந்தி தெரியாது.. உங்க பாஸ பார்க்கனும்.. நீங்க சொல்ல நினச்சத அவர்கிட்டே சொல்லுங்க, நான் அவர்கிட்டே ஆங்கிலத்துல பேசிக்குறேன்" னு சொல்ல..பயந்துட்டா.. அப்புறம் வருது அழகான தமிழ்..

பொதிகை தொலைகாட்சியில் உலக தமிழர்களை பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு வெள்ளிகிழமையும் இரவில் ஒளிபரப்பாகிறது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. பல தலை முறைகளாக அங்கு இருக்கும் தமிழர்கள் தமிழை கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வம், நம் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கும் பண்பு, மனம் நெகிழச்செய்கிறது. அவர்கள் நடை, உடை ,வாழ்க்கை முறை வீட்டின் அமைப்பு எதுவும் மாறவில்லை. 3 , 4 தலை முறைகளாக வெளிநாட்டில் இருப்பவர்களா இவர்கள் என வியப்படையச் செய்கிறது அவர்களின் மாறாத பண்பாடு.

வரலக்ஷ்மி விரதம் எல்லாம் போட்டி போட்டுகொண்டு கும்பிடுகிறார்கள்.. அதிலும் innovation எல்லாம் பண்ணி...எல்லாவற்றிலும் ஒருவரை விட ஒருவர் மிஞ்சவேண்டும் என்று நினைக்கிறார்கள்.. ஆனால் அதே போட்டி தாய்மொழி கற்பதிலும் இருந்தால் நன்றாக இருக்கும்..."தாய் எவ்வளவு முக்கியமோ அது போலவே தாய்மொழி மிகவும் அவசியம்" என்பதை புரிய வைத்தால் போதும்...குழந்தைகள் தமிழை பக்தியுடனும் சிரத்தையுடனும் படிக்க ஆரம்பிப்பார்கள்

தமிழைத் தமிழனே புறக்கணிக்கும் அவல நிலை மாறும்...

76 comments:

சென்ஷி said...

உங்கள் கருத்தை வரவேற்கின்றேன்
டில்லியில்தான் னானும் உள்ளேன்

சென்ஷி

மங்கை said...

சதயம் அவர்களே

//இன்னொரு நீளமான பதிவு...//

நினச்சேன்..இந்த comment வரும்னு.. shorten பன்லமான்னுதான் இத்தன நாள் இருந்தேன்... ம்ம்ம்.. முடியலை.. ஆனா..பதிவு போட்ட அடுத்த வினாடியே வந்த உங்க பின்னூட்டத்துக்கு நன்றி..

உங்க பால்ய சினேகிதன் குறுக்கிடாதற்கு அவனுக்கு முதல் நன்றி
:-))

//SeNsHe said...
உங்கள் கருத்தை வரவேற்கின்றேன்
//

உங்கள் அனுபங்களையும் எழுதுங்கள்

நன்றி

கைப்புள்ள said...

1999இல் முதன்முதலில் தில்லி வந்த போது நான் அனுபவித்ததை எல்லாம் நீங்களும் இப்போது அனுபவிக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஆனால் உங்களுக்கு இருக்கும் இந்த கோபம் சிறிது நாட்களில் படிப்படியாகக் குறைந்து விடும். நம்புங்கள். எனக்கும் நடந்தது தான் இது.

என்னடா இரு மலையாளிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது மலையாளத்தில் பேசிக்கிறாங்க, இரு பெங்காலிக்காரர்கள் பேசிக் கொள்ளும் போது பெங்காலியில் பேசுகிறார்கள்...நம்ம ஆளுங்க மட்டும் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேசுகிறார்கள் என்ற ஆதங்கம் எனக்கும் இருந்தது. ஆனால் தில்லி தமிழர்கள் என்ற ஒரு சாரார்கள் இருக்கிறார்கள். நாற்பது வருடங்களுக்கு மேலாக டெல்லியிலேயே வசிப்பவர்கள், அவர்களது குழந்தைகள் டெல்லியிலேயே பிறந்து வளர்பவர்கள், சிபிஎஸ்ஈ பள்ளிகளில் படிப்பவர்கள், வீட்டில் தமிழில் பேசப் பழக்கப் பட்ட குழந்தைகள் மட்டும் தமிழில் பேசும், மற்றவர்கள் நம்மூரில் வடக்கத்தியவர்கள் பேசுவது மாதிரி உடைச்சு உடைச்சுத் தான் பேசுவார்கள். தில்லியின் வளர்ச்சிக்கு இவர்களது பங்களிப்பு பெரியது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும் இன்ன பிற தொழில்களிலும் புகழ் பெற்று விளங்குவார்கள்.
ஏசியன் ஏஜ் என்ற பத்திரிகையில் இரு வருடங்களுக்கு முன் அவர்களைப் பற்றி ஒரு செய்தியும் வந்தது. அந்த செய்தியில் எனக்கு தற்போது நினைவு உள்ள வரையில் குறிப்பிடத் தக்கவர் தூர்தர்ஷனின் செய்தி வாசிப்பாளர் சுகன்யா பாலகிருஷ்ணன், அவரது மாமனாரும் ஒரு பிரபலமானவர் தான்(பெயர் நினைவில்லை). நீங்கள் ஒரு பெங்காலி இந்தி பேசுவதற்கும், ஒரு தமிழர் இந்தி பேசுவதற்கும் வித்தியாசத்தைக் கூர்ந்து கவனித்தீர்கள் ஆனால் புரியும். நம்ம ஆளு இந்தி மிக சுத்தமாகப் பேசுவார், பெங்காலிக் காரர் வீட்டில் பெங்காலி பேசுவதால், அவரது இந்தியில் அந்த accent தெரியும். தமிழ்நாட்டிலிருந்து தில்லி செல்லும் நம் போன்றோருக்குத் தான் தமிழரே தமிழ் பேசாதது ஒரு குறையெனத் தோன்றும். ஆயிரம் இருந்தாலும்...நம்மாளுங்க மட்டும் ஏன் இப்படி? என்று ஆதங்கப்பட்டு ஆதங்கப்பட்டு நானும் அடங்கிவிட்டேன்.

சரி...இதெல்லாம் விடுங்க. தில்லியிலும் தில்லியைச் சுற்றியும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளது. நீங்கள் தெற்கு தில்லியில் இருக்கும் பட்சத்தில் எதையும் மிஸ் செய்யாதீர்கள். உங்க மற்ற தில்லி அனுபவங்களையும் எழுதுங்க.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவ் விடயத்தில் ஈழத் தமிழர்கள் சற்று வித்தியாசம்; எந்த நாடு சென்றும் பெரும்பான்மையினர்,தமிழ் பிள்ளைகளுடன் பேசுவது; தமிழ் கற்பிப்பது; எமது கலை,கலாச்சாரத்தில் ஈடுபடபைப்பதென்பது,நடக்கிறது.எத்தனை தலைமுறைக்கு என்று தெரியவில்லை. இங்கே கோவில் விழாக்கள் கூடச் சிறப்பாக நடக்கிறது.பாரிசில் தமிழர்,தமிழருக்குத் தொலைபேசி எடுத்தாலே,"வணக்கம்" எனத்தான் ஆரம்பிப்பார்கள்.ஈழத்தமிழர் தொலைக்காட்சி,வானொலி கூட தூயதமிழிலே நடாத்தப்படுகிறது. பாரதத்தில் இது தொடர்வது;வினசமே!
என் பக்கத்தில்" பாரிஸ் பிள்ளையார் தேரில்" படங்கள் பாருங்கள்!
யோகன் பாரிஸ்

http://johan-paris.blogspot.com/

dondu(#11168674346665545885) said...

உங்கள் பெண்ணை தில்லி தமிழ் கல்விக் கழகம் பள்ளி ஒன்றில்தானே (DTEA) சேர்த்தீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மங்கை said...

//உங்கள் பெண்ணை தில்லி தமிழ் கல்விக் கழகம் பள்ளி ஒன்றில்தானே (DTEA) சேர்த்தீர்கள்//

இல்லை..நான் பணி புரியும் கல்லூரியை
சேர்ந்த பள்ளியில் தான்.இது அருகில் இருப்பதாலும், மேலும் புது இடமாக இருப்பதால்.. தனியாக வேறு எங்கும் அனுப்ப பயம்.

நன்றி
மங்கை

ரவி said...

கடுமையான பணிகளுக்கிடையேயும் உங்கள் பதிவை படிச்சு முடிச்சிட்டேன்..

என்னங்க யாரோ ஜப்பான் காரர் எல்லாம் தமிழில் பின்னூட்டம் போட்டு இருக்காங்க ? ச்ச்ச்சும்ம்மா

என் கருத்தை விரிவாக பிறகு எழுதுவேன், இப்போது ஜூட்...

Anonymous said...

இதே கதை தான் புனேவிலும். இங்கும் தமிழர்கள் இந்தியில் 'போல்' வதில் சிறந்தவர்கள்.

நன்கு விரிவாக எழுதி இருக்கிறீர்கள். உங்கள் பதிவை அறிமுகம் செய்த செந்தழல் ரவிக்கு நன்றி.

யாத்ரீகன் said...

கேட்கவே சங்கடமாய்த்தான் இருக்குது..

dondu(#11168674346665545885) said...

அதெல்லாம் சரி. பெண் என்ன எல்.கே.ஜி. அல்லது யூ.கே.ஜீயா, பெரியவள் என்றால் முதலில் தமிழ் படித்திருக்க வேண்டுமே?

முதல் ஐந்து வகுப்புகளுக்கு தமிழ் மீடிய கல்விதான்.

மேலும் டி.டி.இ.ஏ. பள்ளிகளில் தில்லியில் கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன.
1. ஆர்.கே.புரம் செக்டர் - 4
2. மோதிபாக்
3. மந்திர் மார்க்
4.ஜனக்புரி
5. கரோல்பாக்
6. லோதி காலனி
7. சரோஜினி நகர் அருகில்

எல்லா பள்ளிகளிலும் நல்ல தமிழ்க் கல்வி. நல்ல தரம். பல ரேங்க் மாணவ மாணவிகள் இப்பள்ளிகளிலிருந்து வந்துள்ளனர்.

லோதி காலனி ஸ்கூல் இன்னும் சில ஸ்கூல்களுக்கு பஸ் வசதி வேறு உண்டு.

ரொம்ப பெர்சனலாக தலையிடுகிறேன் என தயவு செய்து எண்ணாதீர்கள். உங்கள் குழந்தைக்கு நிஜமாகவே நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜடாயு said...

மங்கை,

நல்ல பதிவு. நடை நேரில் பேசுவது போல இருந்தது. இன்னும் நிறைய எழுதுங்கள்.

ஏறக் குறைய பாதித் தமிழ்நாடாக இருக்கும் எங்களூர் பெங்களூர் ரொம்பவே பரவாயில்லை. பொது இடங்களில் தமிழ் பேச யாருக்கும் தயக்கம் இல்லை. தமிழ்ப் படங்கள், பாடல்கள் எல்லா இடத்திலும் கேட்கலாம்.

ஆனால், அதற்கு மேல் தமிழை இங்கேயே வெகுநாள் இருப்பவர்களிடம் பார்க்க முடியாது. தமிழில் சரளமாகப் பேசும் பலருக்கும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.

வட இந்திய, ஹிந்திக் கலாசாரம் வெகு வேகமாக பெங்களூரிலும் பரவிக் கொண்டு வருகிறது. இது அதிகமானால் இப்போது தமிழ் இருக்கும் இடத்தில் ஹிந்தி வருவதற்கு ரொம்ப நாள் ஆகாது.

மங்கை said...

டோண்டு சார்

இத்தன தகவல் கொடுத்து இருக்கீங்க, நன்றிகள்... எம்பொண்ணு இப்போ +1 second langauge இல்லை..
அதனால கொஞ்சம் தப்பிச்சேன்..அவள்

உங்க விரிவான தகவலுக்கு நன்றி சார்

மங்கை

மங்கை said...

கைப்ஸ்..

வாங்க.. நீங்களும் இங்க இருந்தீங்களா.

//பெங்காலிக் காரர் வீட்டில் பெங்காலி பேசுவதால், அவரது இந்தியில் அந்த accent தெரியும். //

ரொம்ப correct... பெங்காலியர்கள் பல பேர் எங்கிட்ட சொல்லி இருக்காங்க.. இந்த கலாச்சரம் அவங்களுக்கு பிடிக்கலைன்னு..
என்ன பன்ன.. பிழைக்க வந்து இருக்கோம்..ஹ்ம்ம்ம்..

நன்றி
மங்கை

மங்கை said...

Johan..

//பாரிசில் தமிழர்,தமிழருக்குத் தொலைபேசி எடுத்தாலே,"வணக்கம்" எனத்தான் ஆரம்பிப்பார்கள்//

கேட்கவே எத்தன மன நிறைவா இருக்கு

நன்றி ஜோஹன்

மங்கை said...

ரவி

//கடுமையான பணிகளுக்கிடையேயும் உங்கள் பதிவை படிச்சு முடிச்சிட்டேன்//

அடடடா.... ஏன் ரவி அந்த தப்பெல்லாம் செய்யறீங்க...

ok,,0k..இதுவும் சும்மா..

ரொம்ப thanks படிச்சதுக்கு

மங்கை

மங்கை said...

வாங்க இளமாறன்..

புனாவில என் நன்பர் ஒருத்தர் இருக்கார்.. இப்பாதான் ரெண்டு மாசமா.. பொலம்பி தள்ளரார்

ரவிக்கும் உங்களுக்கும் நன்றி

மங்கை

மங்கை said...

நன்றி ஜடாயு அவர்களே

வராதவங்கல்லாம் வந்து பின்னூட்டம் இடறீங்க....

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

நன்றி

மங்கை

மங்கை said...

இங்கு பின்னூட்டம் இட்ட வணக்கத்துடன் மற்றும் யாத்திரீகன் அவர்களுக்கும் நன்றி

ஜடாயு

//நல்ல பதிவு. நடை நேரில் பேசுவது போல இருந்தது. இன்னும் நிறைய எழுதுங்கள்/./


இந்த பதிவ எழுத எனக்கு ஊக்கம் கொடுத்து, எழுவதற்கும் உதவிய என் நன்பருக்கு மன மார்ந்த நன்றிகள்

மங்கை

Thekkikattan|தெகா said...

நீங்க சொல்வதை பார்த்தால், நம் இந்தியாவுக்குள்தான் இந்த நிலமையோ என்று எண்ணத் தோன்றுகிறது. நண்பர் யோகன் கூறியதைப் போன்று வெளி நாட்டவர்கள் பரவாயில்லை போல.

இதற்கு ஒரு வரியில் விளக்கம் சொல்ல வேண்டுமாயின் "Ignorance" அவ்ளோதான் சொல்ல முடியும். இன்னும் இது போன்ற மக்கள் எதார்த்த வாழ்விலிருந்து வெகு தொலைவில் தன்னை நிறுத்தி, தன்னையே தொலைத்து வாழ்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.

விட்டுத் தள்ளுங்கள், இது போன்ற மூட ஜன்மங்களுடன் உங்களுக்கு தினமும் நண்பர்களாக அக்கப் போர் அடிக்க வேண்டிய நிர்பந்தமில்லையே என்று எண்ணி மகிழ்வடையுங்கள் :-).

துளசி கோபால் said...

மனசுலே இருந்ததைக் கொட்டிட்டீங்க. அதுவரைக்கும் நல்லது.

சிங்காரச் சென்னையிலேயும் சில தமிழ்க்காரங்க இங்கிலிபீஸில் பேசறதுதான் நாகரிகமுன்னு
இருக்காங்க. இதுலே வடக்கேயப் பத்திச் சொல்லிட்டீங்க.

யோகன் சொன்னதுபோல இலங்கைத் தமிழர்கள் தமிழ் பேசுறாங்கதான். ஆனா அவுங்க புள்ளைங்க
அதிலும் ரொம்பச் சின்னவயசுப் பசங்க தமிழ் பேசறதில்லை.

இவ்வளோ என்னத்துக்கு, என் பொண்ணுக்குத் தமிழ் நல்லாப் புரியும். ஆனா பேசவே மாட்டாள். இத்தனைக்கும்
நாங்க வீட்டுலே எப்பவும் தமிழ்தான் பேசறோம்.

அடுத்த தலைமுறை, தாய்மொழியைப் பேசணுங்கறதுதான் இப்பத்துக் கவலை.

மலைநாடான் said...

இரு தமிழர்கள், வெளியிடத்தில் ஆங்கிலத்தில் பேசவில்லையென்றால், அவர்கள் தமிழர்களில்லை என்றொரு விதி செய்துள்ளார்களேயம்மா. நல்ல வேளை இதற்குள் ஈழத்தமிழர்கள் இன்னமும் முற்றாக மூழ்கவில்லை.
நல்ல பதிவு.

ரவி said...

உங்களைப்போல யோகன் சொல்லிய விஷயம் ஆச்சர்யம் தான் எனக்கும்.

G.Ragavan said...

மங்கை, நீளமான பதிவுன்னாலும் நிறைவான பதிவு. படிக்க அலுக்கவேயில்லை.

ஆங்கிலம் தெரியும். இந்தி தெரியும்னு எப்படிதான் காட்டிக்கிறதாம். இப்படித்தான் செய்வாங்க.

பெங்களூர்ல எங்களைப் போல வந்தேறிகள் தமிழ்தான் தமிழா இருக்கும். அதுலயும் முக்காப் பேருக்கு ழ ள ல தகராறு. நிலமை அப்படியிருக்க இங்கயே இருந்தேறிகள் பேசினா கேக்கவே வேண்டாம். அப்பப்பா! அது தவறு என்று சொல்ல முடியாது. இங்கேயே பிறந்து வளர்ந்ததால் இருக்குமோ என்னவோ! ஆனாலும்.....தமிழில் கற்றவர்களும் இருக்கிறார்கள். தமிழர்களிடம் அந்தத் தமிழில்தான் பேசுகிறார்கள். என்னுடைய அலுவலக நண்பன் ஒருவன் பெங்களூர்த் தமிழில் பேசிக் கொண்டிருந்தவன்...இப்பொழுதெல்லாம் என்னை மலைக்க வைக்கும் அளவுக்குப் பேசுகிறான். அவனுடைய அப்பா அதற்கு என்னைக் காரணமாகச் சொல்கிறார் வேறு! ஆக பழக்கமும் விருப்பமும்தான் முக்கியம். நீங்கள் செய்து கொண்டு இருப்பதும் அதுதானே!

Unknown said...

மங்கை,
ஒரு இனத்தை அழிக்க முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும். இது யார் சொன்னது என்று கேட்காதீர்கள் .யாரும் சொல்லியிருக்காவிட்டாலும் நான் சொல்கிறேன். :-)))

தில்லியில் மட்டுமல்ல உலகமெங்கும் தமிழர்களில் 99% இப்படித்தான்.தமிழ்நாடு உட்பட!!!!

மொழி எனபது ஒரு உணர்வு. நிறையப் பேசலாம்....

//இரு தமிழர்கள், வெளியிடத்தில் ஆங்கிலத்தில் பேசவில்லையென்றால், அவர்கள் தமிழர்களில்லை என்றொரு விதி செய்துள்ளார்களேயம்மா. //

:-)))))))

மங்கை said...

தெகி..

//இதற்கு ஒரு வரியில் விளக்கம் சொல்ல வேண்டுமாயின் "Ignorance" அவ்ளோதான்//

இது தான் நானும் நினைக்கிறேன்.. ஆங்கிலத்தில பேசறதுனால அவங்க தகுதி உயருதுன்னு நினச்சு "எமாந்து" தான் போறாங்க..

///விட்டுத் தள்ளுங்கள், இது போன்ற மூட ஜன்மங்களுடன் உங்களுக்கு தினமும் நண்பர்களாக அக்கப் போர் அடிக்க வேண்டிய நிர்பந்தமில்லையே என்று எண்ணி மகிழ்வடையுங்கள்///

நீங்க வேற அந்த பிரச்சனை ஒரு தனி track ல போய்ட்டு இருக்கு...

மங்கை said...

சதயம் said...

//டமில் சர்யா ப்பேஸ வர்றாத்து ஸொன்னாத்தான் மர்யாதையா பாக்குது எல்லார்ம்...ஹி..ஹி//

Yes daa

( கோவிசுக்காதீங்க சதயம் அவர்களே.. நம்மூர்ல பொண்ணுக இப்பிடிதான பேசிக்கிறாங்க.. அதான் முயற்சி செஞ்சேன்..ஆனா நல்லா இல்ல.)

உங்களுக்கு நிறைய அனுபவம் போல இருக்கு..


மங்கை

பூனைக்குட்டி said...

நானும் ஒரு வருஷம் குப்பைக் கொட்டினவன் என்கிற முறையில் கொஞ்சம் உளறிவிட்டுப் போயிருறேன்.

மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை செய்கிறவன் என்கிற முறையில், கம்பெனியில் மற்றவர்கள் இருக்கும் பொழுது அவர்களுக்கு சங்கோஜமாக இருக்கக்கூடாதென்று, நான் தமிழர்களுடனே கூட இந்தியிலோ இல்லை ஆங்கிலத்திலோ பேசுவது உண்டு.

நம் மொழி தெரியாதவர்கள் உடனிருக்கும் பொழுது நம் மொழியில் பேசுவது நிச்சயமாகத் தரக்குறைவு தான். இதனை நீங்கள் தெலுங்கர்களிடம் பார்க்கலாம். சில ஆன்சைட் மீட்டிங்கில் கூட ஆப்ஷோரில் இருப்பவன் தெலுங்கனாகவும் ஆன்சைட்டில் இருப்பவன் தெலுங்கனாகவும் இருந்தால் அவர்கள் சுலபமாக தெலுங்கில் உரையாடுவதைப் பார்த்திருக்கிறேன். இது மொழிக்கு மரியாதை செய்வது அல்ல, அதிகப் பிரசங்கித்தனம்.

மொழி அடையாளங்களுடன் உங்கள் கம்பெனி உங்களை விரும்புவதில்லை பெரும்பாலும். அதே போல் சம்பளம் கொடுப்பவர் விரும்புவதை செய்வதில், "இந்த விஷயத்தில்" தவறொன்றும் இல்லை.

இந்திக்கு வருகிறேன். அவர்கள் கம்பெனி மீட்டிங்கை கூட சில சமயம் இந்தியில் நடத்துவதுண்டு. கம்பெனியில் "ஒரே" மொழி ஆங்கிலமாக இருக்கும் பொழுதிலும். ஆனால் எல்லாமுறையும் கிடையாது. இது இடத்திற்கு இடம் மாறுபடும். பல கொலிக்கள் இந்தி மீடியத்திலிருந்து வந்து பிரச்சனைகளை ஆங்கிலத்தில் உணர்ந்து கொள்வதில் உள்ள பிரச்சனைகளைப் பார்த்து அவர்களிடம் இந்தியில் உரையாடுவதுண்டு தெரிந்த அளவிற்கு சரளமாய்.

மற்றபடிக்கு தனிப்பட்ட முறையில் தமிழில் பேசுபவர்களுக்கு இந்தியில் பதில் அளிப்பதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது, அது தனிநபர் உரிமை. அதைப் பொதுப்படுத்துவது தவறு. அதேபோல் நீங்கள் தமிழ் மொழியில் மீது அதிக அதிக பிரியம் கொண்டு இந்தி படிக்காமல் இருந்தீர்களேயானல், தமிழ்நாட்டில் இருக்கும் வரை பிரச்சனை கிடையாது. வடமாநிலங்களுக்கு செல்லும் பட்சத்தில் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அந்த மாநிலத்திற்கு பிழைக்கச்செல்கிறீர்கள் என்றால், அந்த மொழியைப் படிப்பதில் தெரிந்து கொள்வதில் உரையாடுவதில் தவறொன்றும் இல்லை. இதனை உங்கள் தமிழ்மொழிப் பற்றுடன் சம்மந்தப் படுத்தாதீர்கள் ப்ளீஸ். அப்படியும் இந்தி படிக்கமாட்டேன் தெரிந்து கொள்ளமாட்டேன், இன்னும் ஒரு மாதமோ இரண்டு மாதமோ என்றால் இந்த மாதிரி பதிவெழுது டெல்லி வாழ் மக்களை அசிங்கப்படுத்தாதீர்.

ஒருவருடம் டெல்லியில் ஓட்டை இந்தியுடன், ஓட்டை ஆங்கிலத்துடன் வெற்றி கரமாகக் குப்பைக் கொட்டியவன் என்ற முறையில்.

Mohandoss.

மங்கை said...

துளசி, ரவி, ராகவன், மலைநாடன், தஞ்சைபுதல்வன், கல்வெட்டு

ஆகியோருக்கு நன்றி..

//இரு தமிழர்கள்,.... செய்துள்ளார்களேயம்மா//

சரியா சொன்னீங்க

மங்கை

மங்கை said...

இதுல நான் டெல்லி வாழ் மக்களை எங்கு அசிங்கப் படுத்தினேன் என்று ரியவில்லை... நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ளவேயில்லை..

இங்கு இருக்க ஹிந்தி மிகவும் அவசியம்..பள்ளி நாட்களில் ஹிந்தி படிக்க வில்லையே என்று இன்று வருத்தப்படுகிறேன்..

ஹிந்தி வேண்டாம்னு நான் சொன்ன மாதிரி நீங்க நினைக்கிறீங்க..சக தமிழர்களிடம் உதவின்னு போனா எங்கள மாதிரி புதுசா போறவங்கள ஆதரிச்சு பேசரதில்லைங்றதுதான் என்னோட ஆதங்கம்.. அலுவலக பணியிலோ, அல்லது மீட்டிங்லயோ எப்படி அய்யா நான் தமிழ எதிபார்பேன்...அந்த அளவுக்கு நான் முட்டாள் இல்லை.. ஹிந்தியை புறக்கணிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.. நானும் ஹிந்தி கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்..
நான் எப்ப சொன்னேன் இந்தி படிக்க மாட்டேன்னு..

//நம் மொழி தெரியாதவர்கள் உடனிருக்கும் பொழுது நம் மொழியில் பேசுவது நிச்சயமாகத் தரக்குறைவு தான்//

நீங்க குறிப்பிட்ட தரக்குரைவான நடவடிக்கைகளில் நான் இது வரை ஈடுபட்டதிலை.. அந்த நோக்கமும் எஅன்க்கு இல்லை.. எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையே இங்கு பகிர்ந்துள்ளேன்
ஊர்விட்டு ஊர்வந்தவர்களிடம் நம் மக்கள் "வேண்டுமென்றே ஹிந்தியில்" பேசுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.. அது அவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம்.. ஆனா அந்த ஆதங்கத்த வெளிப்படுத்துவது என் உரிமை.

நான் எதையும் பொதுபடுத்தி பேசலை
நான் சந்திச்ச தமிழர்கள் அப்பிடித்தான் இருந்தாங்க..

ஒரு பெண்ணாக தனியாக இங்க வந்து நானும் வெற்றிகரமா குப்பை கொட்டீடுதான் இருக்கிறேன்..

பிழைக்க வந்த இடங்கிறதுனால மனசுல எல்லாத்தயும் வச்சுக்கனும், சகிச்சிககனும்னு அவசியம் இல்லை.

நான் எதுக்கு அய்யா அவங்கள அசிங்க படுத்தனும்.. அது தானா நடந்துட்டு இருக்கு...

(தமிழ படிக்கனும்னு சொல்றது இவ்வளவு தப்பா)

ரவி said...

////ஒருவருடம் டெல்லியில் ஓட்டை இந்தியுடன், ஓட்டை ஆங்கிலத்துடன் வெற்றி கரமாகக் குப்பைக் கொட்டியவன் என்ற முறையில்.////

ஓட்டை இந்தின்னா ? அது என்ன மெதுவடையா ?

ஹி ஹி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

துளசியக்கா!
நான் பெரும்பான்மையான புலம் பேர் ஈழத்தமிழர் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு! என்னும் எத்தனை காலமோ!என்ற ஆதங்கம் இருந்ததால்;பாதுகாப்பாக"எத்தனை தலைமுறைக்கு என்று தெரியவில்லை" எனக் குறிப்பட்டதைக் கவனிக்கவில்லையா???நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு சென்றாலே! ஆச்சரியமே!;என் நோக்கத்தில் எவரையும் கேலி செய்வதில்லை. ஆதங்கமே!
ஆனால்;அவுஸ்ரேலியா;ஐரோப்பிய பெருநகரங்கள்;கனடா;அமெரிக்கா எங்கும் தமிழ்ப்பாடசாலைகள்;நடத்தி;கோவில்களிலும் தமிழ் வகுப்புக்கள் நடத்தி,இயன்ற அளவு;இதைப் பிள்ளைகளுக்கு கொண்டு செல்ல முயல்கிறார்கள்.எத்தனை தலைமுறைக்கு என்பது கேள்விக்குறியே!

"வணக்கம்" என்பது புலம் பேர் ஈழத்தமிழர்களிலே! பாரிசில் தான் முதல் ஆரம்பமானது; ஒருதரைச் சந்திக்கும் போது; தொலைபேசி என அது;பரவத் தொடங்கி ஏனைய ஐரோப்பிய நகரங்களில்;லண்டன் தவிர வேகமாகப் பரவி;இப்போ பல ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தோர்,லண்டன் குடிபெயர்ந்ததால் அங்கேயும் துளிர் விடத்தொடங்கிவிட்டது.
ஒரு காலத்தில் தொலைபேசியில்" வணக்கம் யோகன் பேசுறேன்; இன்னாரோடு பேசமுடியுமா" என்று கேட்டால்;கேட்பவர்-அடுத்தவரிடம் பாரிஸ் -அழைப்பு என்று சொல்லுமளவுக்கு; இந்த "வணக்கம்"- பாரிசுக்கு மாற்றீடாக; நகைப்பாக இருந்த விடயம்; இப்போ பழக்கமாகவே! வந்து விட்டது.
இப்போ பாண்டிச்சேரித் தமிழன்பர்கள் கூட பின்பற்றுகிறார்கள்.
இது மகிழ்வான விடயம் தானே!
யோகன் பாரிஸ்

Anonymous said...

///இதனை உங்கள் தமிழ்மொழிப் பற்றுடன் சம்மந்தப் படுத்தாதீர்கள் ப்ளீஸ்.///

மோகன் தாஸ், உங்கள் புரிதலில் சிறிய தவறு என்று நினைக்கிறேன்.

பூனைக்குட்டி said...

//தலைநகரத் தமிழர்கள் எந்த அளவுக்கு உதவியா(?) இருக்காங்கன்னு.. //

//சரி, இப்ப தில்லித் தமிழர்களின் தமிழ்மொழி பற்றை மட்டும் இங்க அலசுவோம்.//

////நான் எதையும் பொதுபடுத்தி பேசலை/////

Super....


ஹலோ உங்கள் ஆபிஸில் இருக்கும் பாலிடிக்ஸ் பத்தி பேசணும்னாலோ இல்லை உங்கள் பெண்ணோட பள்ளிக்கூடத்தில் இருக்கிற பாலிடிக்ஸ் பத்தியோ பேசுறதுன்னாலோ பிரச்சனையேயில்லை, பாலிடிக்ஸ் இல்லாத இடம் ஒன்னு இருக்கா?

அதுக்கு எதுக்கு டில்லி வாழ் தமிழர்களை இழுக்குறீங்க, அதுவும் ஒட்டுமொத்தமா இதில் பொதுப்படுத்தலைன்னு கதை வேற. முதலில் மென்டாலிட்டியை மாத்திக்கொங்க இல்லாட்டி கஷ்டம், நீங்களும் கஷ்டப்படுவீங்க உங்களைச் சுத்தியிருக்கிறவங்களையும் கஷ்டப்படுத்துவீங்க,

//நான் எதுக்கு அய்யா அவங்கள அசிங்க படுத்தனும்.. அது தானா நடந்துட்டு இருக்கு...// இப்படி....,

//ஒரு பெண்ணாக தனியாக இங்க வந்து நானும் வெற்றிகரமா குப்பை கொட்டீடுதான் இருக்கிறேன்..// இப்போ என்ன சொல்ல வர்றீங்க அடுத்த கதைக்கு போய்ட்டீங்க, பொண்ணா தனியான்னுட்டு...

வெற்றிகரமான்னு எதைச்சொல்றீங்கன்னு தெரியலை, இத்தனை வருத்தங்களை(?) மனசில் வைச்சிக்கிட்டு. நான் சொல்ல வந்த சொன்ன வெற்றி வேற...

செந்தழல் ரவியில் இருக்கும் செந்தழல் வெறும் பீன்சை மட்டும் தான் எரிக்குமா? அப்புறம் எதுக்கு செந்தழல் தீக்குச்சின்னு இருக்கலாமே?

ஹி ஹி,(உங்களுக்காக...)

இளமாறன் வெளக்கமா சொன்னா நல்லாயிருக்கும்.

ரவி said...

////செந்தழல் ரவியில் இருக்கும் செந்தழல் வெறும் பீன்சை மட்டும் தான் எரிக்குமா? அப்புறம் எதுக்கு செந்தழல் தீக்குச்சின்னு இருக்கலாமே?////

நன்றாக சிரிக்க வைத்துவிட்டீர்கள்..

மற்றபடி உங்கள் கருத்துக்கு மங்கையே பதில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

மங்கை said...

எனக்கு ஒன்னு புரியலை..

சக தமிழ் மக்களின் எண்ணங்களையும் அன் அனுபவங்களையும் அழுதறதனால உங்களுக்கு என்ன இழப்புன்னு தெரியலை... அலுவலக பாலிடிக்ஸ் பத்தி யாரு மோகன் பேசினா..
ஆனா என் பெண் தமிழ் பெண் என்ற ஒரே காரணத்தாலதான் அவ அது மாதிரி நடத்தப்பட்டா,,(அதுவும் ஒரு தமிழ் பெண்ணால..இத்தனைக்கும் அவ தாயாரும் நானும் ஒரே அலுவலகத்துல வேலை பார்கிறோம்) அந்த காரணத்துனால தான் அவ தமிழ் பாட்ட பாடவும் செஞ்சா.. இதுல அவளுக்கு பாராட்டும் கிடைச்சது.. அதே வளாகத்துல இருக்கிறதுனால என்ன கூப்டும் பாராட்டதெரிவிச்சாங்க.. இது வெற்றி இல்லையா.. நான் ஆதங்கத்த தெரிவிச்சுகறுதனால நான் வெற்றி பெறலைன்னு ஆயுடுமா..

மோகன்..

நான் பெருசா ஒன்னும் சாதிக்கலை..வாழ்க்கையில் அதிகப்படியான சந்தோசத்தயும்.. அதிகப்படியான சோகத்தையும் சந்தித்தவள் நான்..அதனால எதையும் சமாளிக்கும் பக்குவம் எனக்கு இப்போது வந்துருக்கிறது..இதுவே என் வெற்றி.. அதுவும் இங்க வந்து தான் இந்த தைரியம் அதிகம் ஆயிருக்குன்னு நினைக்கிறேன்..

என் அனுபவங்களை இங்கு பகிர்ந்துளேன்.. இதுல என்ன இருக்கு..
ஒரு சம்பவத்த இங்க கூறனும்...

ஒரு மாதம் முன்பு எங்க flat comlexல
முன்னாடி நம்ம தமிழ் பெண்கள் போல
ஒரு 10 பேர் நின்று கொண்டிருந்தார்கள்
ஒரு பெண் அழுதுட்டு இருந்தா.. சூட்கேஸ், பைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.. மனசு கேக்காம பக்கத்துல போய் கேட்டேன்,, தமிழான்னு..இல்லை we are from Vijayawada னு சொன்னாங்க.. எனக்கு தாய் மொழி தெலுங்கு..அதனால தெலுங்கில பேசி என்ன விசயம்னு கேட்டதுதான், தாமதம்.. ஓவென்று ஒரு பெண் அழ ஆரம்பிசுட்டா.. campus interview ல இங்க இருக்கிற ஒரு பிரபல company ல வேலைக்கு வந்தவங்க ரெண்டு நாள் ஒரு வீட்ல இருந்து இருக்காங்க.. அது தமிழ் காரங்க வீடுன்னு broker சொன்னான்..
எங்க போறதுன்னு தெரியாம முளிச்சுட்டி இருந்தாங்க.. அவங்க பெறோர்களின் மன நிலைய நினச்சு பாருங்க.. பின்னர் நான் என் வீட்டில் அவர்களை 5 நாட்கள் இருக்கச்சொல்லி வேறு வீடு பார்த்து அனுப்பிவைத்தேன் இதில் நாம் என்ன குறைந்து போகிறோம்.. அந்த house ownerkku பெண் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வீட்டை காலி செய்ய சொன்னதை என்ன என்று சொல்வது.. இது உண்மையில் நடந்தது

இந்த மாதிரி தமிழ் மக்கள் இப்பிடி இருகாங்களேன்னு வருத்தப்படறது என்னோட மோசமான மென்டாலிட்டிய காட்டுதுன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்னு தெரியலை...


சக பதிவாளர்கள இது பற்றிய அவங்க கருதுக்கள சொல்லனும்னு வேண்டிகிறேன்

ரவி said...

தமிழன் எங்கே போனாலும் தமிழனே....

தமிழ் நண்டு கதை தெரியும் இல்லையா உங்களுக்கு...

பெண்கள் என்றும் பாராமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய ஹவுஸ் ஓனர் ஒரு தமிழர் தானே..

ஹவுஸ் ஓனர் பேரு விசாரிச்சீங்களா...

எம்முல ஆரம்பிக்கபோகுது...:))))

Hariharan # 03985177737685368452 said...

மங்கை,

இது தமிழ் மொழி மீது பற்று Vs தமிழ் மொழி மீது அக்கறையின்மை என்பதை விட frictions in getting settled in a new place என்ற கோணமே சரி.

கல்லூரியில் சீனியர்கள் ஜுனியர்களை ஒரு எள்ளலுடன் தமிழர்களே என்றபோதும் நடைஒ உடை பாவனையில் ஜூனியர்களிடம் முற்றாக தனித்துவமாக செய்ய அலட்டலாக முதலாண்டில் முயன்று வேடம் பூணுவது மாதிரியானது.


நான் குவைத்துக்கு 1994ல் வந்த போது இங்கிருந்த சீனியர் தமிழர்களில் சிலர் இந்தியா கோவில், குளம்,நிறைந்த அருமையான நாடு, டெக்னிகலாக வேலை, அறிவான க்ளையண்ட்ஸ் நிறைந்த சென்னையை விட்டு ஏன் வந்தீங்க சீக்கிரம் சென்னைக்கோ திரும்பிடுங்கன்னு சொன்னாங்க!

குவைத் ஆரம்ப காலத்தில் ஒரு டெக்னிக்கல் க்ளையண்ட் சைட் மீட்டுக்கு வயதிலும் அனுபவத்திலும் மிகவும் சீனியரானதிருநெல்வேலிக்கார தமிழருடன் பிடிவாதமாக அவருடன் செல்ல விழைந்த போது அவர் எனக்குச் சொன்னது " அங்க என்ன அவுத்துப்போட்டா ஆடுறாங்க" நீ வந்து பாக்குறதுக்குன்னாரு!

நானும் எல்லாத்தையும் சமாளிச்சு 12வருஷமா தாக்குப் பிடிக்கிறேன்

நான் இந்தப்பேட்டையின் பிஸ்தா ஒருவேளை புதியவனான நீ எனக்கு மாற்றாக வந்துவிடுவாயோ எனும் ஆழ்மன சர்வைவல் இன்ஸ்ட்ங்டும் ஒரு காரணி.

தமிழ் மொழி, தமிழ்க்கலாச்சாரத்தை இதில் அநாவசியமாக இழுக்க வேண்டியதில்லை. :-)))

அன்புடன்,
ஹரிஹரன்

Hariharan # 03985177737685368452 said...

மங்கை,

இது தமிழ் மொழி மீது பற்று Vs தமிழ் மொழி மீது அக்கறையின்மை என்பதை விட frictions in getting settled in a new place என்ற கோணமே சரி.

கல்லூரியில் சீனியர்கள் ஜுனியர்களை ஒரு எள்ளலுடன் தமிழர்களே என்றபோதும் நடைஒ உடை பாவனையில் ஜூனியர்களிடம் முற்றாக தனித்துவமாக செய்ய அலட்டலாக முதலாண்டில் முயன்று வேடம் பூணுவது மாதிரியானது.


நான் குவைத்துக்கு 1994ல் வந்த போது இங்கிருந்த சீனியர் தமிழர்களில் சிலர் இந்தியா கோவில், குளம்,நிறைந்த அருமையான நாடு, டெக்னிகலாக வேலை, அறிவான க்ளையண்ட்ஸ் நிறைந்த சென்னையை விட்டு ஏன் வந்தீங்க சீக்கிரம் சென்னைக்கோ திரும்பிடுங்கன்னு சொன்னாங்க!

குவைத் ஆரம்ப காலத்தில் ஒரு டெக்னிக்கல் க்ளையண்ட் சைட் மீட்டுக்கு வயதிலும் அனுபவத்திலும் மிகவும் சீனியரானதிருநெல்வேலிக்கார தமிழருடன் பிடிவாதமாக அவருடன் செல்ல விழைந்த போது அவர் எனக்குச் சொன்னது " அங்க என்ன அவுத்துப்போட்டா ஆடுறாங்க" நீ வந்து பாக்குறதுக்குன்னாரு!

நானும் எல்லாத்தையும் சமாளிச்சு 12வருஷமா தாக்குப் பிடிக்கிறேன்

நான் இந்தப்பேட்டையின் பிஸ்தா ஒருவேளை புதியவனான நீ எனக்கு மாற்றாக வந்துவிடுவாயோ எனும் ஆழ்மன சர்வைவல் இன்ஸ்ட்ங்டும் ஒரு காரணி.

தமிழ் மொழி, தமிழ்க்கலாச்சாரத்தை இதில் அநாவசியமாக இழுக்க வேண்டியதில்லை. :-)))

அன்புடன்,
ஹரிஹரன்

மங்கை said...

//நான் இந்தப்பேட்டையின் பிஸ்தா ஒருவேளை புதியவனான நீ எனக்கு மாற்றாக வந்துவிடுவாயோ எனும் ஆழ்மன சர்வைவல் இன்ஸ்ட்ங்டும் ஒரு காரண//

ஹரி.. இது தான் முக்கியமான காரணி..

நான் இங்கு சொன்ன அனுபவங்கள ஒரு பிரச்சனையா நினச்சு சொல்லவே இல்லை... இது ஒரு பகிர்தல் தான்..உண்மை என்னன்னா நான் இது எதிர்பார்கலை.. அதுனால கொஞ்சம் கஷ்டமா இருக்கு..

மத்தபடி இங்கு நான் நானாகவே இருக்கிறேன்.. எந்த பிரச்சனையும் என்னையோ என் பெண்ணையோ பெருசா பாதிக்கலை..

உங்க தெளிவான பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி ஹரி...

மங்கை

மங்கை said...
This comment has been removed by a blog administrator.
மங்கை said...
This comment has been removed by a blog administrator.
VSK said...

தமிழார்வம் கொண்ட சிலரையும், தமிழை மறந்த பலரையும் அனேகமாக எல்லா நாடுகளிலும் காணலாம் என நினைக்கிறேன், மங்கை.

நான் இருவித மக்களையும் சந்தித்திருக்கிறேன், பல்வேறு நாடுகளில்.

முன்னவர்களை நினைத்துப் பெருமைப்படும் நேரத்தில், பின்னவர்களை நினைத்து வருத்தப் படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.

எங்காவது மாலில் அல்லது பொது இடங்களில் தமிழ்க்குரல் கேட்டால், வலியச் சென்று பேசுவது என் வழக்கம்.

முதல் இரு நிமிடங்களிலேயே தெரிந்துவிடும், அவர்கள் இதை விரும்புகிறார்களா இல்லையா என!

அதற்குத் தகுந்தாற்போல் பேச்சை வளர்த்தோ, குறைத்தோ முடித்துக் கொள்வேன்.

சரளமான பதிவுக்கு நன்றி!

Machi said...

மோகந்தாஸூ,
/இதனை நீங்கள் தெலுங்கர்களிடம் பார்க்கலாம். சில ஆன்சைட் மீட்டிங்கில் கூட ஆப்ஷோரில் இருப்பவன் தெலுங்கனாகவும் ஆன்சைட்டில் இருப்பவன் தெலுங்கனாகவும் இருந்தால் அவர்கள் சுலபமாக தெலுங்கில் உரையாடுவதைப் பார்த்திருக்கிறேன். இது மொழிக்கு மரியாதை செய்வது அல்ல, அதிகப் பிரசங்கித்தனம்.
/
ஏப்பா போற போக்குல தெலுங்குகாரங்க மேல சேத்த வாறி அடிச்சிட்டு போறிங்க. சில தெலுங்கு மக்கள் அப்படின்னா எல்லோரும் அப்படின்னு எதை வச்சு முடிவு பண்ணினீங்க?
ஒரு வாதத்துக்கு அவங்க தெலுங்குல பேசினதாவே இருக்கட்டும். 2 பேருக்கும் ஒரு மொழி நல்லா தெரியுது அதனால அதில் பேசிக்கிறாங்க, இங்க "Communication" தான் முக்கியம் இல்லையா? வேலையாகனும்னா "better Communication" வேணும். உங்களுக்கு தெலுங்கு/இந்தி தெரியாம இருந்து அவங்க உங்ககிட்ட தெலுங்கு/இந்தில "Communicate" பண்ணினா அது தப்பு.


/இந்திக்கு வருகிறேன். அவர்கள் கம்பெனி மீட்டிங்கை கூட சில சமயம் இந்தியில் நடத்துவதுண்டு. கம்பெனியில் "ஒரே" மொழி ஆங்கிலமாக இருக்கும் பொழுதிலும். ஆனால் எல்லாமுறையும் கிடையாது. இது இடத்திற்கு இடம் மாறுபடும். பல கொலிக்கள் இந்தி மீடியத்திலிருந்து வந்து பிரச்சனைகளை ஆங்கிலத்தில் உணர்ந்து கொள்வதில் உள்ள பிரச்சனைகளைப் பார்த்து அவர்களிடம் இந்தியில் உரையாடுவதுண்டு தெரிந்த அளவிற்கு சரளமாய். /

ஏன் தெலுங்கு/தமிழ் காரங்க எல்லாம் இங்கிலீசில் வெழுத்து வாங்குறாங்க இந்தி காரன் முட்டாபயல் என்று சொல்லுறீங்களா?
தெலுங்குக்கு மக்களுக்கு ஒரு நீதி இந்தி மக்களுக்கு ஒரு நீதியா? இதில் தெலுங்கு மேல் உள்ள உங்கள் வெறுப்பு தான் தெரிகிறது.


/இது தமிழ் மொழி மீது பற்று Vs தமிழ் மொழி மீது அக்கறையின்மை என்பதை விட frictions in getting settled in a new place என்ற கோணமே சரி/

ஏன் வங்காளகாரனுக்கு இது வரலை?

உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் frictions in getting settled in a new place ஆக இருக்கலாம்.

புரிந்த வரையில் மங்கை சொல்வது வேறு அனுபவம்.

Thekkikattan|தெகா said...

மங்கை மீண்டும் மறந்திருந்திராதீங்க நான் சொன்ன ignorant factorயையும் :-)

இங்கு யாரும் அலுவலகத்தில் முதலாளி கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நம் மொழி வளர பாடுபடுங்கள் என்று பேசிக் கொண்ட மாதிரி எனக்குத் தெரியவில்லையே, இந்த *மோகன் தாஸ்* அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது அந்த கான்செப்ட்.

இப்பொழுது, இது நமது மக்களின் ignorant factorஎ என்பதற்கு ஒரு சொந்த அனுபவம் கொண்டு பார்ப்போம். இதனையும் யாரவது ஒரு மன நலம் படித்தவர் இருந்தால் அலசி, காயப்போட்டு உனக்கு அந்த மொழி தெரியவில்லையென்றால் ஏன் அந்த மாநிலங்களுக்கு செல்கிறாய் என்று கேட்கட்டும்.

இப்ப மேட்டர், சில காலங்களுக்கு முன்பு நாங்கள் ஒரு நான்கு பேர் வட இந்திய சுற்றுலா போயிருந்தோம், ஐந்து மாநிலங்களுக்கு அதில் டில்லியும் அடக்கம்.

எங்களுக்கு கிடைத்த அனுபவம் மதராஸிக்கு ஹிந்தி தெரியாது என்பதே ஒரு ஏளன போக்குக்கு வழிவகுத்து விடுகிறது வடக்கே என்பதே. அது அப்படியாக இருக்க, தத்துபித்து ஆங்கிலத்தைக் கொண்டு பேருந்துகள் பிடிப்பதற்கும், தங்கும் இடங்கள், சுற்றிப் பார்க்க இப்படி அடிப்படை விசய ஞானத்திற்கு படித்தவர்கள் போல் காட்சி தரும் மக்களிடம் அணுகி ஆங்கிலத்தில் கேள்விகள் எழுப்பினாலும் விடை கிடைப்பது என்னவோ ஹிந்தியில்தான்.

நான் கூறுவது அங்கு வாழும் டில்லிவாலாக்களும், அல்லது அந்தந்த மாநில பிராந்திய மொழியிலேயே பதில் கிடைத்தது. அப்படியெனில் அவர்களுக்கெல்லாம் தன் மொழியின் மீது மரியாதையும், பிடிப்பும் இருக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும்.

அது அப்படியாக இருக்கையில் ஏன் நமது அறிவிலிகள் மட்டும் இப்படித் தன்னை வேறு யாராகவோ அடையாளப்படுத்திக் கொள்ள எத்தனிக்க வேண்டும்?

ஒரு சைனீஸ் ஒரு சக சைனருடன் பேசும் பொழுது அங்கீலத்தில் பீத்தியதுவுண்டா, அது போல் ஒரு கொரியர், ஜப்பானீஸ்... சரி அந்த மனசீக மொழி, நடை, உடை, பாவனைகளை நாம் மிஸ் பண்ணுவதால் தானே மாதம் ஒரு முறையேனும் 'நம் மக்கள் வாழும்' பகுதிகளை நோக்கி சென்று வறுகிறோம்... உ.ம்; வெளி நாட்டாவர்களுக்கு 'லிட்டில் இந்தியா' அதிலும் பிறகு பிராந்தியம்தோரும்... இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்.

அடிப்படையில் நமக்கு ஏதோ கோளாறு இருக்கிறது. அதுதான் என்ன?

இது போன்ற நான் எழுதி கொண்டே போகலாம். இது போலவே, எனக்கு கிடைத்த அனுபவம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் எப்படி New Comersகளிடம் நடந்து கொள்கிறார்கள் அல்லது தன்னை விச்சியாசப் படுத்திக் கொள்ளவேணும் என்று என்னவெலாம் செய்கிறார்கள் என்பதையும் கவனித்ததுண்டு. சரி விடுங்க தனிப் பதிவ போட்டு விடுவோம்.

கைப்புள்ள said...

அடடா மங்கை மேடம்!
உங்க பதிவு ரொம்ப சீரியஸா போவுது போலிருக்கே. எல்லாரையும் கூல் டவுன் பண்ண உங்கப் பதிவுக்கு சம்பந்தமுள்ள ஒரு பழைய பதிவு இங்கே.

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் தமிழ்நாடு

அப்படியே நமக்கும் சைக்கிள் கேப்ல நமக்கும் ஒரு பப்ளிசிட்டி பாருங்க...ஹி...ஹி...
:)

ஆனாலும் உங்க ஆதங்கம் கொஞ்ச நாள்ல தானாப் போய்டும் பாருங்களேன். நான் மேலே இருக்குற பதிவைப் போட்டதும் கிட்டத்தட்ட டெல்லி விட்டு வரும் போது தான். நம்ம ஆதங்கத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கெடக்கும் போது தானே கொட்ட முடியும்? அந்த விதத்துல நீங்க ஒன்னரை வருஷ அனுபவத்தைப் பகிர்ந்துட்டிருக்கீங்க. என்னடா நம்ம மக்கள் மட்டும் இப்படி இருக்காங்களேன்னு அப்பப்போ நெனச்சீங்கன்னா வேதனையும் மனக் கசப்பும் தான் மிஞ்சும். அதனால just move on.
:)

Thekkikattan|தெகா said...

மங்கை ஒரு தனிப் பதிவு போடுறேன்னு சொன்னேன் போட்டுட்டேன், இதோ சுட்டி

மங்கை said...

/// அடடா மங்கை மேடம்!
உங்க பதிவு ரொம்ப சீரியஸா போவுது போலிருக்கே. எல்லாரையும் கூல் டவுன் பண்ண உங்கப் பதிவுக்கு சம்பந்தமுள்ள ஒரு பழைய பதிவு இங்கே.//

கைப்ஸ்,, நான் சீரியஸா நினச்சு எழுதவே இல்லை.. சும்மா ஒரு experiance sharing தான்.. நாங்களே இது எல்லாம் நினச்சு சிரிச்சுக்குவோம்.. இது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை..
உங்க பதிவும் படிச்சேன்.. நல்லா எழுதி இருந்தீங்க...

சீரியஸா பல விஷயங்கள் நடந்து இருந்தும்.. அத நான் இங்க பகிர்ந்துக்கவே இல்ல... ஏன்னா எந்த இடத்துல பிரச்சனை இல்லாம இருக்கு

ஆனா நன்பர் ஒருவர் இட்ட பின்னூடத்துனால கொஞ்சம் சீரியஸ் ஆயிடுச்சு... மத்தபடி நான் cool தான்
:-)))

ரொம்ப நன்றி உங்க பின்னூட்டத்துக்கு

மங்கை

மங்கை said...

மங்கை அவர்களே...

//1 மற்றும் 25 ஆவது பின்னூட்டம் நம்மளோடதுதான்...அந்த வகையில் அய்ம்பதாவது பின்னூட்டத்தையும் எனக்கே தந்து...நமக்கு சின்னதா ஒரு பப்ளிசிட்டி தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்...ஹி..ஹி...மற்றபடி விரைவில் 100 வது பின்னூட்ட க்ளப்பில் இனைய வாழ்த்துகிறேன்.ஹி..ஹி...100 வது பின்னூட்டமும் ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது என்பதை இந்த நேரத்தில் தெரியப்படுத்திக் கொள்கிறேன்//

ஐயோ சதயம் சார்..

மிஸ் ஆயிடிச்சே.. உங்க பதிவ publish பன்ன பின் தான் படிக்க முடிஞ்சது.. இல்லன்னா golden jublilee க்கு நீங்க தான் ரிப்பன் வெட்டி இருப்பீங்க...

சரி..diamond & platinum jubilee ல நீங்கதான் தலைமை உரை..(ரொம்ப தான் பேராசைனு சொல்றீங்கலா)இப்பவே உங்க appointment குடுத்துடுங்க..

நன்றி...நன்றி...நன்றி...நன்றி...நன்றி.
:-)))

மங்கை

மங்கை said...

சதயம் அவர்களே

இப்பதான் பார்த்தேன்..உங்க பின்னூட்டம் தான் 50 தாவது.. ஹ்ம்ம்ம்
அது எல்லாம் சரி.. தப்பிசுட்டு போறீங்களே.. இங்க நடக்குற சர்ச்சைய பத்தி உங்க கருத்துக்களையும் சொல்லாம்ல

மங்கை

மா.கலை அரசன் said...

மிக மிக நல்ல பதிவு மேடம். உஙகளைப்போன்று தாய்மொழியுணர்வு எல்லோருக்கும் இருந்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் பணி சிறக்க.

கோவி.கண்ணன் [GK] said...

மங்கை அவர்களே...!

நேரடி அனுபவத்தை தமிழ் உணர்வுடன் எழுதியிருக்கிறீர்கள் நன்று...!

அங்குள்ள தமிழர்கள் ஒன்று கூடி அவர்களுக்குள் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தால் சரி.

Unknown said...

Mangai, your way of expressing your thoughts are very good. In fact you have rightly depicted your feelings. We come across such problems everywhere. But... don't you feel that it could be just that they don't want to show it to other people that they are Tamilians. For instance, in Bangalore, most people(Tamilians) prefer to talk in English.. the problem is Karnatakas are so much violent against Tamils..
There should be some reason! we can't just take things at the face value.. please give a thought.

Anonymous said...

I have Vayatherichal...

Do you have Tablet for that ?

மங்கை said...

SK, GK, குறும்பன், delphine, அனைவருக்கும் நன்றி...

Delphine..

//But... don't you feel that it could be just that they don't want to show it to other people that they are Tamilians. For instance, in Bangalore, most people(Tamilians) prefer to talk in English.. the problem is Karnatakas are so much violent against Tamils//

but here nobody is against Tamilians.. infact they prefer tamilians, wether to have as tenents or as employees...in my own instituion they prefer south indians and we have Tamil Synergy also..i dont see anyreason to hide the fact that they are Tamilians,, What big threat is there for Tamilians that others dont have... when we have an informal meeting why should they not talk in tamil..that too to person like me who is new to this place and not very good in Hindi.. this is what i am asking..
defnitly many of them are not very supportive..

mangai

மங்கை said...

மா.கலை அரசன் said...

//மிக மிக நல்ல பதிவு மேடம். உஙகளைப்போன்று தாய்மொழியுணர்வு எல்லோருக்கும் இருந்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் பணி சிறக்க//

நன்றி கலை அரசன்

(இந்த 'மேடம்' மட்டும் விட்டுடுங்க.. எனக்கு பிடிக்காத ஒரு வார்த்தை)

அன்புடன்
மங்கை

கதிர் said...

எனக்கென்னவோ இந்தி பேசுற ஆள பாத்தா நம்ம ஊரு நரிக்கொறவந்தான் ஞாபகத்துக்கு வர்றான்.

எனக்கு இந்தி தெரியாதுன்னு தெளிவா தெரிஞ்ச என் அறை நண்பர்கள் வேணுமின்னே என்னை கலாய்க்கிறதா நெனச்சிகிட்டு என்கிட்ட இந்தி பேசுவானுங்க. நானும் வேணுமின்னே தமிழ்ல பதில் சொல்லுவேன். அப்படியே முழிப்பானுங்க எல்லாரும்!!

என் தமிழ் நண்பர்கள் கூட சொல்வாங்க சீக்கிரம் இந்தி பேச கத்துக்கோங்கன்னு, ஏன் நாம கத்துக்கணும் வேணுமின்னா அவன கத்துக்க சொல்லு. நம்ம ஊருல இருந்து வந்து ஒரே வருஷத்தில தெளிவா இந்தி பேசறாங்க, ஆனா இந்த இந்திக்காரனுங்க மட்டும் ஏன் தமிழ்காரனுங்கள மதிக்காம இருக்காங்கன்னு தெரியலை.

அவ்வளவு எளக்காரம்.

Anonymous said...

Hello,
Nice to see this posting.
am a born in a maharashtrian family and mother tongue is marathi,
but born and brought up in chennai, so i cannot live without tamil news paper, tamil websites, tamil news, tamil cinema,
tamil has influenced somuch that even i think only in tamil.
if i meet some tamilian here in london i feel like my own neighbour, but i dont get the same feeling if i meet another maharashtrian.
if i meet some tamil known people, i absolutely speak only in tamil.
i canot live without it.
raghs

மங்கை said...

தம்பி , Raghs..

நன்றி

Raghs

//tamil has influenced somuch that even i think only in tamil.
if i meet some tamilian here in london i feel like my own neighbour, but i dont get the same feeling if i meet another maharashtrian.
if i meet some tamil known people, i absolutely speak only in tamil.
i canot live without it//

ரொம்ப மனநிறைவா இருக்கு.. இது தான் தமிழ்நாட்டோட பெருமைனு நினைக்கிறேன்..யாரையும் வேற்று ஆளா பார்க்காம அவங்கள்ள ஒருவரா நினச்சுதான் தமிழ்நாட்டு மக்கள் பழகீட்டு வராங்க..

நன்றி
மங்கை

Anonymous said...

Akka,
Romba Nanri.
Thamiz valara paadupaduvom.
Mangadha tamizendru muzhanguvom.
Anbu Thambi
Raghs

தருமி said...

என் போன்ற ஒரு கிணற்றுத் தவளைக்கு இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் நிறைய சேதிகளைச் சொல்லுகின்றன.

தில்லியில் மட்டும் என்ன, நம் தமிழ்நாட்டிலேயே பொது இடங்களில் ஆங்கிலம் பேசுபவருக்குக் கிடைக்கும் மரியாதையே தனிதானே.british legacy அப்டின்னு சொல்றாங்க...ஆனா தமிழனுக்கு மட்டுமே ஏன் இப்படி?

மங்கை said...

வாங்க தருமி சார்

பெரும்பாலானோருக்கு என் கருத்துல உடன்பாடு இருக்கிறத பார்த்தா மனசுக்கு நிறைவா இருக்கு

நன்றி தருமி அவர்களே

மங்கை

மங்கை said...

/// ஒரு வேளை நாமெல்லாம், நம் தரப்பு நியாயங்களை மட்டுமே யோசிக்கிறோமோ? Raghs சொல்வதற்கு முன் வரை, நானும் தங்களைப் போலவேதான் நினைத்துக்கொண்டிருந்தேன்///


சார்.. நான் சொல்றது என்னன்னா.. நல்லா தமிழ் தெரிஞ்சிருந்தும்.. உதவின்னு போறப்போ ஹிந்தி தெரியாதவங்க கிட்டே ஹிந்தி பேசிவாங்க பாருங்க அதுதான் டென்சன் ஆகுது...

raghs.. மராத்தி காரங்க வந்து பேசரப்போ தமிழ்ல பேசி வெறுப்பேதியிருப்பார்னு தோனலை..


//நல்ல பதிவு. இங்கு அமெரிக்காவில் பரவாயில்லையோ என தோன்றுகிறது. தமிழர் என தெரிந்தபின், தொல்லை கொடுத்தாவது அவர்களை தமிழில் பேசவைத்து விடுவது என் வழக்கம்!!!//

நன்றி... எங்க அண்ணனும் சொல்வார்.. New york ல தமிழர்கள் சந்திச்சா அழகா தமிழ் பேசாரங்கன்னு .. அவர்கிட்டே நிறைய பேர் தமிழ் கத்துட்டும் இருக்காங்க..

மங்கை

ஜோ/Joe said...

மங்கை,
உங்கள் ஆதங்கத்தை நானும் வழி மொழிகிறேன் .தமிழர்கள் தம் மொழியை எப்போதும் பிறர் மீது திணிப்பதில்லை .அதே நேரம் தமிழர்களுக்கும் பேசும் போது முடிந்த வரை தமிழில் பேசுவது அவசியம்.

மங்கை said...

///மங்கை,
உங்கள் ஆதங்கத்தை நானும் வழி மொழிகிறேன்///

நன்றி ஜோ..

ரவி said...

////தில்லியும் நானும் தமிழும் Itempage> ///

என்று வருகிறது பாருங்க தலைப்பு..உங்கள் டெம்ப்ளேட்டை ஓப்பன் செய்து அதில் இந்த குறிப்பிட்ட வார்த்தை எங்கே இருக்கு என்று பைண்ட் உபயோகப்படுத்தி தேடி, அதில் ஒரு < மிஸ் ஆகுது. அதை போட்டு டெம்ப்ளேட்டை மீண்டும் சேவ் பண்ணுங்க.

Anonymous said...

good post, keep it up

Thekkikattan|தெகா said...

மங்கை,

//தெகா.. ஒரு இடத்துல சந்திக்கிறோம் நமக்கு ஹிந்தி அப்ப கூடதெரியாதுன்னு தெரிஞ்சிறுந்தும் அவசியம் இல்லாம ஹிந்தி பேசினா வருத்தமா இருக்காதா.. மத்தபடி அலுவலக நேரத்திலயோ, ஒரு வட இந்தியர் இருக்கப்பவோ தமிழ் பேசனும்னு நான் சொல்லலை...//

டீச்சர்களில் இரு விதம், முதல் வகை எதிரில் இருக்கும் மாணவனுக்கு எது போன்று சொல்லிக் கொடுத்தால் அவனுக்கு எளிமையாக சொல்ல வந்த விசயம் சென்றடையும், போக வேண்டிய இலக்கிற்கு போய்ச் சேருவான் என்று அறிந்து தெரிந்து சொல்லிக்கொடுக்கும் வகை. அதற்கு நிறைய உழைப்புத் தேவை. படிக்கணும், மனுச மனச ஆராயணும், பிறகு பாடம் எடுக்க வேண்டி வரும்.

இரண்டாவது வகை, தான் பெற்ற இன்பம் பெருக இவ் வையாகமென்று தனக்கு கிடைச்ச செற்ப அனுபவத்தக் கொண்டு, தன்னைப் போலவே பிறரும் இருக்கிறார்கள் என்று தான் தோன்றித் தனமாக நினைத்துக் கொண்டு அதே அளவு எதிர்பார்ப்புடன் ஏனையோரை அணுகுவது.

அதாவது கடினமான முறையில் பாடம் எடுத்தல், தத்திபித்தியாவது கற்றுக் கொள்பவர் கற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும் என்ற கண்மூடித்தனமான அணுகுமுறை. இதற்கு அதிக உழைப்புத் தேவையில்லை,

ஏனெனில் தனக்கு என்ன தெரியுமோ அதனைத்தானே அடுத்தவர்களின் மேல் நாம் புகுத்துகிறோம். எனவே இது போன்ற வாத்தியார்களிடம் மாட்டாமல் வாழ்கையில் வாழ்ந்து வந்து விட்டாலே...We can consider ourselves, we have been gracefully aging :-)))

//தெகா..என் பதிவுல ஏதாவது தப்பா மாதிரி எழுதி இருக்கனா...//

மங்கை, விடுங்க நாம புரிஞ்சுகிட்டதா இங்க முன் வைக்கிறோம், நம்மை போலவே சில பேர் சிந்திக்கலாம், சில பேர் வேறமாதிரி அதே விசயத்தைப் பார்க்கலாம். நாம பாட்டுக்கு நம்ம வழியிலே போயிகிட்டே இருப்போம்.

Like minded people will always be around, so why worry... :-)

கானா பிரபா said...

வணக்கம் மங்கை

சொந்த ஊரை விட்டுப் பிரிந்து தவிக்கும் ஒவ்வொருவிருடைய ஆதங்கமும் உங்கள் எழுத்தில் இருக்கின்றது.

மஞ்சூர் ராசா said...

இரண்டு ஆங்கிலேயர்கள் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
இரண்டு மலையாளிகள் சந்தித்தால் மலையாளத்தில் பேசுகிறார்கள்.
அது போல பொதுவாக எல்லா மொழியினரும் தங்கள் தாய் மொழியில்தான் பேசுகிறார்கள்.
ஆனால் இரண்டு தமிழர்கள் சந்தித்தால் பொதுவாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள் என்பது நிதர்சனமான வேதனையான உண்மை.

இந்த அனுபவம் எனக்கு பல இடங்களில் கிடைத்திருக்கிறது. பல நகரங்கள், மற்றும் நான் சென்ற பல அரபு நாடுகளில் இதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் இதில் விதிவிலக்கும் இருக்கிறது. அது மிக மிக குறைந்த சதவிகிதம்.

சகோதரி மங்கையின் ஆதங்கத்தையும் அதில் பொதிந்திருக்கும் வருத்தத்தையும் முதலில் நாம் புரிந்துக்கொள்ளவேண்டும்.

மங்கை said...

புரிந்து கொண்டதுக்கு நன்றி பிரபா அவர்களே..

மஞ்சூர் ராசா..

//ஆனால் இரண்டு தமிழர்கள் சந்தித்தால் பொதுவாக ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்கள் என்பது நிதர்சனமான வேதனையான உண்மை//

ஆனா இதை நியாயப் படுத்த சிலர் இருக்காங்க இங்க

நன்றி மஞ்சூர் ராஜா அவர்களே

மங்கை

திருமாவளவன் said...

Not all tamils behave like that. I have been living outside TN for last 5 years and I havent come across such experiences . Generalisation of anything is not a wise thing.

Nagarathinam said...

I am also writing HIV/AIDS issues in blog
http://aidsindia.blogspot.com

please comment

நாளும் நலமே விளையட்டும் said...

https://www.blogger.com/comment.g?blogID=28312356&postID=115493605844573744

நாளும் நலமே விளையட்டும் said...

சிறிது நாட்களுக்கு முன் எங்கள் ஊருக்கு ஒரு தமிழர் வந்தார். அவர் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கி என்று தமிழ் நாட்டில் தமிழ் படுத்தி எழுதி இருக்கும் வங்கியில் தான் இங்கு புனேவில் கணக்கு தொடங்கினார்.
அனால் அங்கு இருந்த நமது நெருங்கிய மாநிலத்தை( நம் இனம் அழிவதை பேரன்புடன் நோக்கும்) சேர்ந்த பெண் நாங்கள் எல்லாம் ஹிந்தியில் பேசும்போது உங்களுக்கு என்ன?
ஹிந்தி தேசிய மொழி இல்லையா? என பாடம் எடுத்து உள்ளார்!

நாம் போகும் பகுதியில் உள்ள மொழியை பழகிக் கொள்ளுதல் நமக்கு பயனே ! இருப்பினும் இங்குள்ளவர்களும் பள்ளியில் ஆங்கிலம் கற்றோர் தானே! அவர்கள் ஏன் நம்முடன் பேசும்போது ஆங்கிலம் பேசுவதில்லை?

ALHABSHIEST said...

"ஹிந்தி தேசிய மொழி இல்லையா? என பாடம் எடுத்து உள்ளார்!"
இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாது.இந்தி இந்தியாவின் அலுவல் மொழிகளில்[official language] ஒன்று.அதாவது ஒன்று ஆங்கிலம்.மற்றொன்று இந்தி.அது தவிர அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழி.இவை மூன்றும் அலவலக[official]மொழிகள்."1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது".[ஆதாரம் விக்கிபீடியா].
தேசிய மொழிக்கும் ஆட்சி மொழிக்கும் வித்தியாசம் உள்ளது.தேவையென்றால் கற்றுக் கொள்ளலாம்.தவறொன்றுமில்லை.ஆனால் தேசிய மொழியே இந்தியாவிற்கு கிடையாது என்பதை இதனை வாசித்த பின்னாவது தெரிந்து கொண்டு அதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டு தெரியாதவர்களுக்கு விளக்குங்கள்.
பிரபலமடையும் வரை தமிழனென்று புறக்கணிக்க படுவோம்.பிரபலமானவுடன் இந்தியனாக அங்கீகரிக்க பட்டு விடுவோம்.நாமும் புறக்கணிப்புகளை படிக்கற்களாக எடுத்துக் கொண்டு சந்ததியினரை பற்றிய கவலை இல்லாமல் இந்தியனாக பெருமை கொள்வோம்.

ALHABSHIEST said...

இன்னும் இருக்கு.கொஞ்சம் நேரங்கழிச்சு வாரேன்.