Monday, September 18, 2006

தில்லி புத்தக கண்காட்சி-- :((

தலைநகர் புத்தக கண்காட்சின்னு தலைப்பு பார்த்துட்டு எதோ நான் பெருசா புத்தங்கள வாங்கி அத பத்தி எழுதுறேன்னு நினச்சுட்டு படிக்கறவங்க.. மன்னிச்சுடுங்க...நான் எனக்கு நடந்த ஒரு சோகக்கதைய சொல்லனும்.. எல்லாரும் புத்தகத்த வாங்குனா,, நான் வம்ப விலை குடுத்த வாங்கினேன்..

எல்லாரும் தான் புத்தக கண்காட்சிக்கு போறாங்க , நாமளும் போய் பாத்து, அத பத்தி தமிழ்மணத்துல எழுதனும்னு நினச்சுட்டு சனிக்கிழமை தூக்கத்த தியாகம் செஞ்சுட்டு போனேங்க...(புத்தகம் படிக்கிற பழக்கம் எல்லாம் இருக்கான்னு கேக்காதீங்க). .. நான் என் பெண், மற்றும் என் colleague ஒரு பஞ்சாபி பெண் மூனு பேரும் காலை 10 மணிக்கு எல்லாம் பிரகதி மைதானத்துக்கு போய்டோம்.
எங்க கல்லூரியின் புத்தக வெளியீட்டு துறையும் ஒரு ஸ்டால் போட்டிருந்தாங்க, அங்க தாங்க முதல்ல போனேன் .அங்க போனா பாஸ் நின்னுட்டிருந்தார் ..என்னையும் 'May I Help You' card குத்திக்க சொல்லி, கொஞ்ச நேரம் நிக்கவெச்சுட்டார். அது கூட பரவாயில்லைங்க. அவர் போனதும் எஸ்கேப் ஆயிட்டோம்.

அப்ப தாங்க வந்த்துச்சு வம்பு.கூட வேலை செய்யிற சக தோழியோட பெண்ண பார்த்தேன். +2 படிக்கிறா... 'aunty நான் சும்மா வந்தேன். எனக்கு கொஞ்சம் புக்ஸ் பிடிச்சிருக்கு.ஆனா பணம் கொண்டுவரலை.நீங்க குடுங்க aunty, நாளைக்கு அம்மாகிட்ட வாங்கிகோங்களேன்னா. சனிக்கிழமை அவ பிறந்த நாள் வேற . ஆசப்பட்டு கேக்குறான்னு பிறந்தநாள் பரிசா 500 ரூபாய்க்கு புக்ஸ் வாங்கிக்கோனு சொல்லி, ஒரே 1000 ரூபாய் நோட்டா இருந்த்தால, வா நானும் வர்ரேன்னு சொன்னேன். அவ, இல்லை நானே வாங்கிக்குறேன். அது next hall ல இருக்கு.நீங்க இருங்க நான் போய் வாங்கீட்டு வரேன்னு சொலீட்டு பணத்த வாங்கீட்டுபோய்ட்டா. நாங்க பக்கத்துல இருக்கிற சின்மையா மிஷன் ஸ்டால பார்துட்டு, புதுச்சேரியில இருந்து ஒரு நிருவனம் ஸ்டால்ல இருந்தவங்க கூட சந்தோசமா கொஞ்ச நேரம் தமிழ பேசீட்டு, அவளுக்காக காத்துட்டு இருந்தோம். ஒரு மணி நேரம் களிச்சு வந்தாங்க அந்த பொண்ணு.. 800 ரூபாய்க்கு வாங்கிட்டேன் aunty.. sorry னா..பரவாயில்லை... என்ன புக்ஸ் வாங்கினேன்னு கேட்டேன். Creative Writing in English then, வேற கொஞ்சம் புக்ஸ், அது என் பிரென்ட்ஸ் கிட்டே இருக்கு, நாளைக்கு சொல்றேன். லேட்டாயிடுச்சுன்னு சொல்லீட்டு, ஒடியே போய்ட்டா.
கூட இருந்த தோழி 'எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு, இவ என்னமோ பண்ணி இருக்கான்னு' புதுசா ஒரு குண்ட தூக்கி போட்டா. என் பெண் வேற 'அவள பத்தி எனக்கு தான தெரியும்னு' ஒத்து ஊதுனா.பேசாம் இருங்க ரெண்டு பேரும்னு சொல்லி அடக்கி வச்சேன்.

சொன்ன மாதிரி அவ அம்மா கிட்டேயிருந்து போன்.என்ன நீ இப்பிடியெல்லாம் புக்ஸ் வாங்கி குடுத்து இருக்கே, இது தான் நீ குடுக்குற 'Sex education" ஆ ன்னு சொல்லி ஏக வசனம் பேச ஆரம்பிச்சுட்டா... எனக்கு ஒன்னும் புரியலை...அப்புறம் தான் தெறிஞ்சது.. 800 ரூபாய்க்கு ரெண்டு மூனு புக்ஸ் தான் நல்லதா வாங்கி இருக்கா.மத்ததெல்லாம் ஏதோ ரொமான்ஸ் புத்தங்கள வாங்கீட்டு போய்யிருக்கா.. ..ஷிட்னி ஷெல்டன் மட்டும் இல்லாம..அவ வாங்கினதுல ஒரு sample சொல்றேன் பாருங்க.. ' Secret Desires and Fantasies' னு ஒரு புத்தகம். அந்த புத்தகத்த தொடக்கூட எனக்கு கஷ்டமா இருக்குன்னு அழாத குறையா சொன்னா அவங்க அம்மா.மத்ததெல்லாம் பெயர் சொல்லகூட லாயகில்லாத புத்தங்கள். பிறகு நான் சொன்னேன் நான் அவ கூட போகலைன்னு. அந்த பெண் அவ அம்மா கிட்டே 'aunty வாங்கி Birthday present ஆ குடுத்தாங்கன்னு' சொல்லி இருக்கா.
பிறகு என் தோழி எப்படியாவது திருப்பி குடுத்துடுன்னு சொல்ல.. எங்க கல்லூரி ஸ்டால் இருக்கிறதுனால ஏதாவது பண்ணலாம்னு நினச்சுட்டு போனேன். ஆனா அங்க ஆண்கள் தான் இருப்பாங்க. இத போய் அவங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு கஷ்டமா இருந்துச்சு. தைரியத்த வரவச்சிட்டு போனா அங்க மறுபடியும் பாஸ்.. வேற வினையே வேண்டாம்.. பெருசுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.அவர் ரிடையர்ட் மேஜர் ஜெனரல். ஜாடை காமிச்சி ஒருத்தர வெளிய வர சொல்லி எப்படியோ விஷயத்த சொன்னோம். ஒரு மாதிரி சிரிச்சுட்டு சரி நாளைக்கு கொண்டுவாங்க மாத்திக்கலாம்னான். அய்யா ராசா நீ நல்லா இருக்கனும்னு வாழ்த்திட்டு வந்தேன்.

இருந்த காச அவகிட்டே குடுத்துட்டு கடைசியில சில Games CD யும் பெண்ணுக்கு ஏதோ Core Physics புத்தகத்த மட்டும் வாங்கீட்டு வந்த்துட்டோம். என் அலுவலக தோழி இந்த கூத்த மெனக்கெட்டு மத்தவங்களுக்கு போன் பண்ணி சொல்லி.. இப்ப office frends எல்லோரும் aunty எனக்கும் பர்த்டேவருதுன்னு போன் பண்ணீட்டு இருக்காங்க.

இது தேவையாங்க எனக்கு. சனிக்கிழமை கொஞ்ச நேரம் டீவி பார்த்தமா தூங்கினமான்னு இல்லாம.. இது தான் எனக்கும் புத்தகத்துக்கும் ரொம்ப தூஊஊஊஊரம்...

22 comments:

Sivabalan said...

மங்கை அவர்களே

நல்ல பதிவு.

நன்றி.

E said...

aunty.. aunty..enakkum birthday aunty...plssss aunty...

Udhayakumar said...

எனக்கு பிறந்த நாள் முடிஞ்சு போச்சே :-)

இதையெல்லாம் பெருசா நினைக்காதீங்க...

ரிஷி (கடைசி பக்கம்) said...

:)))

nice and natural no add-ins.
my birthday is march 21.

Boston Bala said...

:-)

Thekkikattan|தெகா said...

aunty.. aunty..enakkum birthday aunty...plssss aunty...@:-) Valli

Me too, me too... please aunty... :-)))

Hariharan # 03985177737685368452 said...

மங்கை,

உங்க தோழியை நம்ம எஸ்கே சாரோட கசடற... பெற்றோர்களுக்கு பாலியல் கல்வித் தொடரைப் படிக்கச் சிபாரிசு செய்யுங்கள்.

இதில் இளையதலைமுறையின் தவறுதலான புத்தகங்கள் அறியாமையினால் உந்தப்படும் ஆர்வக்கோளாறின் காரணமாக அமைவதனால் பெற்றோருக்கு காலங்கடந்த படிப்(பினை)பு அவசியமாகிறது.

அன்புடன்,

ஹரிஹரன்

இராம்/Raam said...

//தலைநகர் புத்தக கண்காட்சின்னு தலைப்பு பார்த்துட்டு எதோ நான் பெருசா புத்தங்கள வாங்கி அத பத்தி எழுதுறேன்னு நினச்சுட்டு படிக்கறவங்க.. //

என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணிருக்கீங்களா மேடம்.... :-(((

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...

சாதாரண பேச்சு வழக்கில் ஒருவித நகைச்சுவை இழையோடும் அனுபவப் பதிவு. முடிவில் திருப்பத்துடன் கூடியதொரு குட்டிக்கதை.

மங்கை said...

சிவபாலன் வெள்ளை அவகளுக்கு நன்றி

///சதயம் said...
வம்பை விலை கொடுத்து வாங்குறதுன்னு சொல்லுவாங்களே...அது இதுதானோ.//

ஆமாம், 1000 குடுத்து வாங்கி இருக்கேன்.

நன்றி

மங்கை

மங்கை said...

கடைசி பக்கம் said...
:)))

nice and natural no add-ins.

நன்றி..

வாங்க Boston Bala

:-)

நன்றி

Udhayakumar அவர்களுக்கும் நன்றி

கைப்புள்ள said...

//என் அலுவலக தோழி இந்த கூத்த மெனக்கெட்டு மத்தவங்களுக்கு போன் பண்ணி சொல்லி.. இப்ப office frends எல்லோரும் aunty எனக்கும் பர்த்டேவருதுன்னு போன் பண்ணீட்டு இருக்காங்க.//

நல்லா நகைச்சுவையா எழுதிருக்கீங்க. நல்லாருக்கு
:))

மங்கை said...

தெகி..

நன்றி

அடுத்து aunty birthday இது மாதிரி கொண்டாடீட்டுதான் மத்தவங்களுக்கு.. ஹி ஹி

மங்கை

மங்கை said...

ஹரி, ராம், கிரிதரன்

ராம்

என்னைய வச்சி காமெடி கீமடி பண்ணிருக்கீங்களா மேடம்.... :-(((


சேச்சே.. அப்பிடியெல்லாம் இல்லை ஹி..ஹி

அது வேனா இன்னொறு பதி தனியா போட்டறலாம்

நன்றி

மங்கை

மங்கை said...

கைப்ஸ்

//நல்லா நகைச்சுவையா எழுதிருக்கீங்க. நல்லாருக்கு
:)) //

நன்றி

மங்கை

ரவி said...

காசு திரும்பி வந்துதா இல்லை அவ்ளோதானா ?

மங்கை said...

ravi

நீங்க வேற..

நான் தான் ரொம்ப தாராளமா birthday giftனு சொல்லி குடுத்துட்டனே....அது அவ்வளவுதான். இன்னைக்கு போயிருக்காங்க மாத்தறதுக்கு.. நான் வர மாட்டேனு சொலிட்டேன்..

நன்றி

மங்கை

மங்கை said...

//வைசா said...
மங்கை அவர்களே,

நல்ல நகைச்சுவையான இடுகை. இதிலிருந்து என்ன கத்துக்கிட்டிருக்கீங்க? :-)//

வைசா அவர்களே

புலம்புவனே ஒழிய.. மாறமாட்டேன்.. இது போல பல தடவை நான் பட்டிருக்கேன்..நன்பர்கள்...உறவினர்களுக்கு உதவியோ அல்லது இது போல பரிசு குடுத்து பிரயோஜனமில்லாமல் போயிருக்கு... ஆனா எந்த வித எதிர்பார்பும் இல்லாம செஞ்சாதான அது உண்மையா இருக்கும்...

நன்றி வைசா

மங்கை

Syam said...

செம காமெடி :-)

எனக்கும் ஒரு 1000 ரூபா அனுப்பி வைங்க... :-)

மங்கை said...

நன்றி Syam

துளசி கோபால் said...

என் பர்த்டே போய் இப்பத்தான் ஆறே மாசம் ஆகுது. அடுத்த பர்த்டேக்கு இப்பவே மனுப் போட்டுட்டேன்.

கொஞ்சம் ஏர்லியாப் போச்சோ?

மங்கை said...

துளசி

//கொஞ்சம் ஏர்லியாப் போச்சோ? //

ஹி ஹி.. பரவாயில்ல துளசி..அடுத்த பர்த்டேக்காக நான் வேனா இப்பவே ஒரு யானை பொம்மை அனுப்பறேன்.. கொலுவுக்கும் உபயோகமா இருக்கும்