உன் கனிவில் அந்த குழைவில்
காட்டும் அன்பில் அரவணைப்பில்
கவனமாய் ஊட்டிய அன்னத்தில்
ரசித்துச் செய்து விட்ட அலங்காரத்தில்
ஆசையாய் அழுந்தத் தந்த முத்தத்தில்
உயிர்த்தெழுகிறது அந்த பொம்மை
ஒரு நிகழ்வு ஏற்படுத்தும் உணர்வை அதன் தன்மை மாறாமல் கவிதை வடிவமாகக் கொடுப்பதற்கு எல்லோராலும் முடியாது. கடலூர் பள்ளியின் மேற்பார்வையின் போது எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டதென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கவித்துமான படைப்புகளை தருபவர்கள் அதையே அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.
வகுப்பறையில் ஒரு குழந்தை, பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த கணத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்வை, கவிதையாய் நடந்த அந்த நிகழ்வை எழுத்தாக்கியிருக்கிறேன். அவ்வளவே!
22 comments:
களங்கமில்லா ஒரு தாய்மையின் இரசிப்பு! எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, வாழ்த்துக்கள்...
நல்ல தருணம்.
நல்ல அழகான கவிதை.
குழந்தையின் புகைப்படம் மிக அழகு அக்கா...
ஒரு உண்மையான அன்பு ஒரு ஜடப் பொருளையும் அழகாக்கிக் காமிக்கும்னு சொல்லுது அந்தக் கவிஜா...
ஆமா, இந்த படமெல்லாம் எங்கிருந்துங்க உங்களுக்கு மட்டும் கிடைக்கிது... நைஸ் படம் :)
//உயிர்த்தெழுகிறது அந்த பொம்மை//
நல்ல வெளிப்பாடு...
arumai
Bommaikke uyir oottiya varigal
TC
CU
அருமையான உணர்வு.
ரசித்தேன் ;)
good
அழகா அற்புதமா வெளிப்படுத்தி
இருக்கீங்க .. மங்கை ..
நெசமாலுமே கவித மாதிரியே இருக்கு :))
நிறைய குழந்தைகளை கவனிக்க ஆரம்பித்திருக்கீறீர்கள் போலிருக்கிறது. முந்தைய கடலூர் பதிவில் இருந்த பள்ளிக் குழந்தைகளின் சீருடையைப் போல இருக்கிற்தே, அங்கே எடுத்ததா?
குழந்தையே கவிதையாகத்தான் இருக்கிறது...:)
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி... :)
சென்ஷி...:)
தெகா...நாந்தேன் அந்த ஃபோட்டோ புடிச்சேன்..:)
எல் கே முதல் வருகைக்கு நன்றி..
நன்றி சந்த்ரூ...
டூ பா...ஒத்துக்கிட்டீங்களா..அதான் மழை கொட்டுது...
முதல் வருகைக்கு நன்றி விருட்சம்...
அனைவருக்கும் நன்றி
உயிர்ப்புள்ள கவிதை..!
எங்கள் வீட்டு சிட்டுக்கள் கண்முன் வர, உணர்வுகளை உள்வாங்கி வார்த்தையாய் மட்டுமன்றி, புகைப்படத்திலும் காண்பிச்சிட்டீங்க. ரெண்டு கவிதைகள் இங்கே!
சரக்கு காலி னு நிரூபணம் ஆயிடுச்சு.. நீங்களும் இங்க இருக்கீங்கன்னு காட்டிக்கறதுக்கு போட்ட பதிவுகள் அன்மைய பதிவுகள்...
யாரோட போட்டி போடறீங்க...
ரமேஷ் அண்ணே நல்லாருக்கீகளா... எதுக்குண்ணே இப்படில்லாம்... அவங்க கிட்ட சரக்கு இல்லேன்னா நீங்க தனியா உங்க சரக்க ஒரு வலைப்பதிவில எழுதுங்களேன்... பெண்கள் பதிவுன்னா கமெண்ட் போட அலயறீன்களே..
ரமேஷ் அண்ணே.. உங்கள யாரும் இங்க மத்தியஸ்தம் பண்ண கூப்பிடலீங்க.. உங்க வேல வெட்டிய பார்த்துட்டு உங்க குடும்பத்த பார்த்துக்குங்க.. வந்துட்டானுக... தூ..
WoooW Mangai....
Ungalin mel innum mathippu koodukiRathu... azakaanathoru nikazvai athee azakuNarchiyudan koduththu irukkeeenga...
///களங்கமில்லா ஒரு தாய்மையின் இரசிப்பு!//
ithaRku mel vimarsanam panna thevai illai.
ennai aRimugapaduththa solli irundheeenga....Chennai la unga HIV colleague Ishwarya oda thozhi... ippo purinjatha...
I could not open your blog for past two days... I wondering y..
Post a Comment