மனோஜ் குமார் இயக்கத்தில் 1967 ல் வெளியாகிய இந்தப் படம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட். மேலும் பல பல விருதுகளை பெற்றது இந்த படம்.
அப்பா சொல்லுவார், அந்த கால கட்டதில் பிறந்த குழந்தைகளுக்கு பிரான் என்று பெயர் கூட வைக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு கொடுமையான வில்லனாக கொடிகட்டி பறந்தவர் பிரான். முதல் முதலாக வில்லன் கதாபாத்திரத்தை விட்டு இந்த படத்தில்தான் அவர் ஒரு பாஸிடிவ் ரோல் செய்திருக்கிறார்.
பிரானின் அசாத்திய நடிப்புத் திறமை இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது, கமாரின் வரிகள், மன்னா தே இன் குரல், கல்யான்ஜி ஆனந்த ஜீ யின் இசை.. ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு நம் மனதை அள்ளிச் செல்லும்.
பிரானின் அசாத்திய நடிப்புத் திறமை இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது, கமாரின் வரிகள், மன்னா தே இன் குரல், கல்யான்ஜி ஆனந்த ஜீ யின் இசை.. ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு நம் மனதை அள்ளிச் செல்லும்.
இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது கிடைத்த்து....
---------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாடல் அச்சு அசலாய் தமிழ் பாடல் ஒன்றை நினைவுக்கு கொண்டு வருகிறதல்லவா....இவை இரண்டும் வேறு வேறு கால கட்டத்தில் எடுக்கப் பட்ட படங்கள்....கல்யாண்ஜியின் அனுமதியோடு இளையாராஜா இந்த மெட்டினை பயன்படுத்தியதாக கேள்வி.....
11 comments:
அமரத்துவம் வாய்ந்த பாடல் இது. படத்தின் பெயர் “உப்கார்”. மன்னா தே மாதிரியான கலைஞன் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே பெருமிதமாய் இருக்கிறது.
இளையராஜாவும், கல்யாண்ஜியும் பரஸ்பர மரியாதை மற்றும் அன்பின் காரணமாய் தங்களுக்குள் மெட்டுக்களை பரிமாறிக் கொண்டதாக படித்திருக்கிறேன். அந்த வகையில் தமிழில் ஜேசுதாஸ் குரலில் இந்த மெட்டை நமக்கு கிடைத்தது.
அருமையாய் இருக்கின்றது பாடல்..!
//இளையராஜாவும், கல்யாண்ஜியும் பரஸ்பர மரியாதை மற்றும் அன்பின் காரணமாய் தங்களுக்குள் மெட்டுக்களை பரிமாறிக் கொண்டதாக படித்திருக்கிறேன்.///
தகவலுக்கு மிக்க நன்றி ...!
பகிர்வுக்கு நன்றி ;)
உயிரின் வேர்களை அசைத்துப் பார்க்கும் பாடல். கே ஜே_வின் ஆன்மாவை ஊடுருவும் குரல் வளத்துடன், மரணிக்க இயலா வார்த்தைகளைக் கொண்டு செதுக்கப்பட்ட = an immortal song - thanks for sharing!
நல்ல பாடல்கள் மங்கை...பகிர்வுக்கு நன்றி..
எனக்கும் மிகப்பிடித்த பாடல் மங்கை.... பகிர்ந்ததற்கு நன்றி..
பாருங்கையா... நீங்களே பாருங்க.. என்னமோ இளையராஜா இந்த அம்மா கிட்ட வந்து சொன்ன மாதிரி... இதெல்லாம் ஒரு பொழப்ப்பா...
இனிமையான பாடல்கள்.. நன்றிம்மா....
உப்கார் படம் தமிழில் பழநி என்னும் பெயரில் முன்னால் வந்தது. நீங்கள் சுட்டிய பாடல் தமிழில் “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும் என நினைவு.
நான் இரு படங்களையுமே பார்த்ததில்லை. வெறும் கேள்வி ஞானமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Woww...grt song....this was a very famous philosophical song of 60s and a fav one in north India
Post a Comment