Thursday, September 30, 2010

இனி ஒரு விதி செய்வோம்.....


மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றினை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.அதன் சாரம் இதுதான்...
 
ஆந்திரா, அஸாம், பீஹார், தில்லி, கோவா, கேரளா, மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா,, மிசோரம், ராஜஸ்தான், உத்திரபிரேதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பதின்மூன்று மாநிலங்களில் உள்ள ஐந்து முதல் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட  12,477 குழந்தைகளிடையே நடத்திய ஆய்வில் 66.8% குழந்தைகள் உடல் சார்ந்த வன்முறையினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிற்து. மேலும் 55% குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலே சொன்ன 12,477 குழந்தைகளில் 2317 குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் என போகிறது அந்த ஆய்வறிக்கை.

எதிர்கால சமூகத்தின் பிரதிநிதிகளில் 66.8 விழுக்காட்டினர் உடலியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றனர் என்பது வேதனையான நிதர்சனம்,இம்மாதிரியான அத்து மீறல்கள் அந்த பிஞ்சு உள்ளங்களில் எத்தகைய எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதை சொல்லித்தான் யாரும் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.உலகத்தில் இந்தியாவில்தான் தெருவோர குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம், நம்மிடம் இருக்கும் கணக்கின் படி இந்தியாவில் 18 மில்லியன் குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கின்றனர்.இந்தவகையில் உலகில் நாம்தான் முதலிடம்...

இந்த நிதர்சனங்கள் இப்படியிருக்க...இப்படியும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதானிருக்கிறது...
31 comments:

தோழி said...

தெருவோர குழந்தைகள் பற்றி கவலைப் பட ஒரு அரசாங்கமும், கருத்துச் சொல்ல உங்களைப் போன்றவர்களுமிருக்கிறீர்கள்...

இங்கே, போரினால் அநாதையாக்கப் பட்டு, அங்கஹீனத்துடன் அவலத்தில் இருக்கும் எங்கள் குழந்தைகளுக்கு... ம்ம்ம்ம்... வலிக்கிறது...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

18 மில்லியன் குழந்தைகள் ஆ :(
அரசின்
எந்த ஒரு நல்ல விசயமும் சென்றடையமுடியாத தெருவோர இடத்தில் இருக்கும் அவர்களுக்கு ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும்.

இந்தியாவில் அதிகமான என்.ஜி . ஓ க்கள் இருந்தும் இந்நிலை தொடர்வது ஏனோ?

சென்ஷி said...

@ தோழி - :((

சங்கிலியன் said...

காலம்செய்த கோலம்.. கடவுள் செய்த குற்றம்..

வசந்த் said...

அக்கா

வலிக்கத்தான் செய்யுது அக்கா... இனி பழைய மாதிரி எழுதுவீங்களோ மாட்டீங்களோனு நினச்சுட்டு இருந்தேன்...

நன்றி...

கவிதா | Kavitha said...

மங்கைஜி

//66.8% குழந்தைகள் உடல் சார்ந்த வன்முறையினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிற்து.//

ஆண், பெண் இருவருமா அல்லது பெண் குழ்ந்தைகள் மட்டுமா?

மிகவும் வேதனை தரும் விஷயம், இதற்கு வறுமை மட்டுமே முழு முதற்காரணம்.. :((


@ தோழி :((((, மனதை மிகவும் கனமாக்குகிறது உங்களது பின்னூட்டம் :((

டுபாக்கூர் பதிவர் said...

”இனியாவது ஒரு விதி செய்வோம்”

இந்த தலைப்பு இன்னும் பொறுத்தமாய் இருக்குமோ!

கோபிநாத் said...

:(

காட்டாறு said...

@தோழி, கவலைப் படுவதால என்ன ஆக போகுது தோழி. பொது மக்களாகிய நாம் என்ன செய்யலாம் என மங்கை போன்ற ஆளுங்க சொல்லும் போது, அணில் பிள்ளை போல நாம் பின்பற்றலாம். அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும் போது, உங்களை பார்த்து இன்னும் 4 பேரு செய்யப் போறாங்க... பின் அந்த 4 பேரைப் பார்த்து.....

வாங்க ஆரம்பிக்கலாம்...

chandru2110 said...

அவங்கெல்லாம் பொறந்ததே அங்கதான் , அவங்கள் அங்கேயும் மகிழ்ச்சியா வாழறாங்க , கொட்டுற மழையில கூட, நான் அதை ரசிச்சுருக்கேன். அவங்க வாழ்க்கையோட மாற்றத்தை அவங்களே கொண்டு வருவாங்க.

Thekkikattan|தெகா said...

நம்மிடம் இருக்கும் கணக்கின் படி இந்தியாவில் 18 மில்லியன் குழந்தைகள் தெருவோரத்தில் வசிக்கின்றனர்.//

அப்போ அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 17% மக்கள் தெருவில் நிற்கிறதுக்கு இது சமம். இங்கே அதுவும் குழந்தைகள் நினைச்சாவே நமக்கு தூக்கம் போயிடும் :( ...

Thekkikattan|தெகா said...

@ Chandru

// கொட்டுற மழையில கூட, நான் அதை ரசிச்சுருக்கேன்//

ரசனை , ரசனை! நீங்க ரசிச்சிட்டு அவங்களோடவே கோணிப்பைக்குள்ளர சுருண்டுகுவீங்களா, அப்பவும் ரசனையோட இரவை கழிச்சிருப்பீங்க. அநாதைக் குழந்தைகளின் வாழ்க்கையும் அழகியலா பார்க்கிறீங்க ... வாழ்க உங்க ரசனை!!

Prabha said...

ஒரு அண்பர் சொன்ன மாதிரி இனியாவது ஒரு விதி செய்வோம்..

சந்த்ரூ....(

என்ன சொல்ல வரீங்கன்னு புரியலை. மங்கையின் முந்தின பதிவுல எதோ ஒரு சோகம்/ மன வாட்டம் மறைந்திருந்தாலும், சுற்றுச்சூழலை ரசித்த விதம் நம் கண்முன்னே நின்னுச்சு... ஆனா இந்த பதிவுல எதை ரசிக்க சொல்றீங்க... பாலியல் பலாத்காரம்/பசி/உதை/அவமானம்/நிராகரிப்பு/ வலி இதையெல்லாம் எப்படிப்பா ரசிக்கறது.. ரொம்ப சுலபமா மாற்றத்தை அவங்க கொண்டு வந்துக்குவாங்கனு சொல்றீங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கையில் அன்பும் நேசமுமாய் தெருக்களில் குடும்பங்கள் இருக்கிறது தான். மறுக்கவில்லை.

மாற்றம் என்பது அவர்களுக்கு குளிர் வெயிலுக்கு பாதுகாப்பு.. அங்கிருக்கும் பெண்களுக்கு மறைவிடம் இல்லாத பாதுகாப்பின்மை போக்குவதற்கு.. ரேஷன் கார்ட் அல்லது அடையாளங்கள் இல்லாமையால் அவர்களுக்கு அரசாங்கத்தில் எப்பவாவது செய்கிற ஒரு சில நன்மைகள் சென்று சேரமுடியாமை..

கல்வி அட்லீஸ்ட் தொழிற்கல்வி போன்றவைதானே

baran said...

மேல் மட்டத்தில் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும் அவை தெருக்கோடியில் இருக்கும் குப்புசாமிக்கும் ராமசாமிக்கும் செவ்வனே சென்றடைய வழியில் வசிக்கும் முதலைகளையும் முள்ளம்பன்றிகளையும் சுத்தம் செய்ய வேண்டும்...

தமிழ் அமுதன் said...

இது காந்தி தேசமாம் ...!;;((

மங்கை said...

தோழி

:(... வருத்தத்தை மட்டுமே இப்பொழுது பகிர்ந்து கொள்ள முடிகிறது.. அவர்களுக்கும் ஒரு விடிவுகாலம் வரும் என்று நம்புவோம்.. முடிந்தால் நம்மால் ஆனதை செய்வோம்... நன்றி

மங்கை said...

என் ஜி ஓக்கள் அவர்களின் நலனிலேயே அக்கறை செலுத்துவதால்... இக்குழந்தைகளின் நிலைமை அப்படியே இருக்கிறது..
நன்றி லட்சுமி

Thekkikattan|தெகா said...

//கிடைத்ததைக் கொண்டு வாழ்க்கையில் அன்பும் நேசமுமாய் தெருக்களில் குடும்பங்கள் இருக்கிறது தான்//

முத்து, வாய்ப்புகள் வழங்கப்பட்டு இது வேண்டுமா, அது வேண்டுமா என்ற நிலையில் அவர்கள் இது போன்ற ஒரு வாழ்க்கையை தேர்வு செய்கிறார்கள் என்றால் விட்டுவிடலாம்.

ஆனால், do they have choices? Making choice is luxury in their case... that is sad!

மங்கை said...

சென்ஷி, சங்கிலியன், வசந்த நன்றி

வசந்த எப்போ எழுத போறே..:)

கவிதா

ஆண் என்ன, பெண் என்ன... யாராயிருந்தாலும் பாதிப்பும், பிரச்சனையும் சமம் தானே... எந்த குழந்தையா இருந்தாலும் அது ஒரு கொடுமையான விஷயம் இல்லையா.. நம்ம நடவடிக்கை எதுவா இருந்தாலும் அது இரண்டு பேருக்குமே நன்மை செய்வதாகவே இருக்கும்/இருக்க வேண்டும்..

குழந்தைகள் எப்படிப்பட்ட வன்முறைக்கு உட்படுத்தப்படுத்தப் பட்டாலும் அவர்கள் எவரிடமும் அது குறித்து வாய் திறந்து பேசுவதில்லை என்பது கவலைக்குரிய உண்மை..

பிஞ்சுப் பருவத்தில் உள்ளுணர்வின் மேல் விழும் பலமான அடி. இது ரணமாகி, மறக்க முடியாமல், ஆழ்மனதில் வேரூன்றி, வாழ்க்கையைப் பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஆரோக்கியமற்ற எண்ணங்களை மட்டுமே உருவாக்குகிறது.

இது இருபாலாருக்கும் சமம்

மங்கை said...

//டுபாக்கூர் பதிவர் said...”இனியாவது ஒரு விதி செய்வோம்”//

இனியாவது செய்வோம் என்று உறுதி கூறி, செய்வார்கள் என்று நம்புவோம்...

மங்கை said...

காட்டாறு நன்றி
chandru2110

அவர்களே மாற்றத்தை கொண்டு வருவாங்கன்னா, ஏன் அது இவ்வளவு மடங்கா உயர்ந்துச்சு...:)

அவர்கள் மீதான வன்முறை ஏன் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே வருது.. அவர்கள் ஏன் முன்னை விட இப்போ பல இன்னல்களுக்கு ஆளாகிறாங்க...

கவிதா | Kavitha said...

//
பிஞ்சுப் பருவத்தில் உள்ளுணர்வின் மேல் விழும் பலமான அடி. இது ரணமாகி, மறக்க முடியாமல், ஆழ்மனதில் வேரூன்றி, வாழ்க்கையைப் பற்றியும் உறவுகளைப் பற்றியும் ஆரோக்கியமற்ற எண்ணங்களை மட்டுமே உருவாக்குகிறது.

இது இருபாலாருக்கும் சமம் //

ம்ம்ம்.. புரிகிறது. :((

நான் கேட்டது தனியாக ஒருவரை சார்ந்து அல்ல.. இந்த சதவிகிதம் பெண் குழந்தைகளுக்கு மட்டும் என்றால் ஆண் குழந்தைகளுக்கு தனியாக இன்னும் இருக்குமே.. அதுவும் சேர்ந்தால்????? என்ற அதிர்ச்சியில் கேட்டது.

மங்கை said...

தெகா

இதுல ஆழமா போனா நமக்கு தூக்கம் வராது தான்...வெளி வராத விஷயங்கள் இன்னும் எவ்வ்ளோ இருக்கு

நன்றி பிரபா, பரணி, அமுதன்

மங்கை said...

நன்றி கவிதா...:)

மங்கை said...

நன்றி கவிதா...:)

chandru2110 said...

இது மாதிரி தெருவோரத்துல வசிக்க இரண்டு காரணங்கள்தான் இருக்கு
1. அவங்கேல்லாம் பிறப்பிலிருந்தே அப்படிதான் இருக்கணும்
2. அவங்க வசிச்ச ஊர்ல பஞ்சம் வந்து உயிரை காப்பாத்த நகரத்துக்கு வந்துருக்கணும்.
அவர்களே மாற்றத்தை கொண்டு வருவாங்கன்னா, ஏன் அது இவ்வளவு மடங்கா உயர்ந்துச்சு...:)// இதுக்கு ஒரே காரணம் , அவங்க அந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை பெத்துக்குறாங்க. அவங்களுக்கு அந்த சூழ்நிலைய ஏத்துக்கிட்டு , இயல்பான வாழ்க்கையா போய் , அவங்க சந்ததிகளை வளர்த்துக்குறாங்க.
NGO க்கள் காசு போட்டு வீடு கட்டித்தர முடியாது. அவங்கள்ட்ட விழிப்புனர்வ வளர்க்கலாம். அவங்களுக்கு வசதிகளை பெற்றுத்தர முயற்சிக்கலாம், அரசாங்கத்தை வலியுறுத்தலாம். தனக்காகத்தான் போராடுறாங்கன்னு புரிஞ்சும் போராடாமா தன்னோட இயல்பான வாழ்க்ககைய நோக்கி போறவங்க இருக்குறவரை அவங்க அப்படிதான் இருப்பாங்க.

Ramesh said...

ஹா ஹா ஹா ஹா...

மங்கை said...

/Ramesh said...ஹா ஹா ஹா ஹா../

என்ன ரமேஷ...இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல... தவறாம தினமும் வந்து நம்ம பதிவ எட்டி பார்க்கறீங்க பாருங்க... அந்த கடமை உணர்ச்சிய நினச்சா... புல்லரிக்கதுப்பா...

கடல் said...

உங்கள் தளத்தை நமது திரட்டியில் இணைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்
மகளிர் கடல்

Savithri Raghupathy said...

Excellent contents in this blog...unfortunate that this is not updated for a long time...we invite you to write in our site...please oblige and start writing again....whatever may be reasons...these awareness should continue..please consider