Thursday, September 09, 2010

பயணம், அனுபவம், உணர்வு

கடலூர் மாவட்டம் மடவபள்ளி கிராமம், நகரத்து நாகரீக பாதிப்புகள் ஏதுவும் இல்லாத அழகிய கடற்கரை கிராமம். ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தில் சின்னாபின்னமான கிராமங்களில் ஒன்று. பெரிதான அடிப்படை வசதிகள் எட்டிப் பார்க்காத இந்த கிராமத்தில், கல்வி அறக் கட்டளை ஒன்று முற்றிலும் இலவசமான அதே நேரத்தில் தரமான கல்வியினை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறது.


இந்த பள்ளியின் செயல்பாடுகளை ஆய்ந்து மேம்படுத்தும் பணி தொடர்பாக கடந்த இரு தினங்களாய் இங்கே முகாமிட்டிருக்கிறேன்.பள்ளியில் இருந்து 5 நிமிடம் நடந்தால், ஒரு பக்கம் முந்திரி தோப்பும், மறுபக்கம் கடலும், கண்ணைக் கவரும் இயற்கைப் பேரழகு திரும்பிய பக்கம் எல்லாம் கொட்டிக் கிடக்கிறது.

வழக்கம் போல காலையில், குழந்தைகளின் பிஞ்சுக் குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பள்ளி துவங்கியது. எப்பொழுது கேட்டாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை ரசித்து பாடி மனம் லேசாவதை அனுபவிப்பேன். ஆனால் ஏனோ இன்று தமிழ்த்தாய் வாழ்த்தின் போதும் கொடிப்பாட்டின் போதும் அந்த குழந்தைகளின் குரல் மனதை பிசைந்தது. ஆழிப்பேரலையின் கோர தாண்டவமும்,அப்பாவிகளின் கதறலும்,வேதனையுமான காட்சிகளே கண் முன்னால் வந்து போனது.


மாலையில் தனியே கடற்கரையில் நிறைய நேரம் உட்கார்ந்திருந்தேன்.. அங்கே என்னைத் தவிர வேறு யாரும் தென்படவில்லை... எனக்கே எனக்கான இடமாக தெரிந்தது.....அலைகளில் காலை வைத்து கட்டுமரத்தில் உட்கார்ந்து இருந்தேன்....அமைதியாக கரையை வந்து தொட்டுப் போகும் இந்த அலைகளா பொங்கி வந்தது? இந்தக்கடலா அழிவைத்தந்தது?...

இந்த அனுபவம் தந்த உணர்வுகளைப் பற்றி நிறைய சொல்லவேண்டும், எழுத வேண்டும் என்று தோணுகிறது....இந்த பயணம் முடிந்த பின்னால் அதை முயற்சிக்கிறேன்...ம்ம்ம்ம்ம்


27 comments:

கவிதா | Kavitha said...

சீருடை வித்தியாசமா இருக்கே?! குழந்தைகள் அழகு...

கிழக்கு கடற்கரை சாலையில் எந்த கடற்கரை பகுதிக்கு செல்ல நேர்ந்தாலும் எனக்கும் இப்படி தான் தோன்றும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான கடல் தான் கொந்தளிச்சது. இப்ப அடங்கி அதே கொந்தளிப்பை
மறைச்சி வச்சிட்டு நல்ல பிள்ளையா நிக்குது. மங்கை ஜாலியா குட்டீஸ் கூட இருந்துருக்கீங்க போல. அந்த குழந்தைகள்
கைகுவிச்சு கண் மூடிநிக்கிற
கும்பிடற அழகே அழகா இருக்கே..

கோபிநாத் said...

\\ழுத வேண்டும் என்று தோணுகிறது....இந்த பயணம் முடிந்த பின்னால் அதை முயற்சிக்கிறேன்...ம்ம்ம்ம்ம்\\

முடியும்...கண்டிப்பாக எழுதுங்கள்.;)

தமிழ் அமுதன் said...

கவிதை போல இருக்கின்றது பதிவு..!

Thekkikattan|தெகா said...

Enjoy, mangai! :)

தோழி said...

உங்களுடன் கூடவே இருந்ததைப் போல ஒரு உணர்வினை தருகிறது பதிவு.!

தோழி said...

உங்களுடன் கூடவே இருந்ததைப் போல ஒரு உணர்வினை தருகிறது பதிவு!

Chitra said...

அலைகளில் காலை வைத்து கட்டுமரத்தில் உட்கார்ந்து இருந்தேன்....அமைதியாக கரையை வந்து தொட்டுப் போகும் இந்த அலைகளா பொங்கி வந்தது? இந்தக்கடலா அழிவைத்தந்தது?...


.....மென்மையான உணர்வில், ஒரு கருத்து புயல் ஒளிந்து இருக்கிறதே!

Chitra said...

Followers widget????

Prabha said...

மென்மையான உணர்வுகளையும், ஆழ்மனது எண்ணங்களையும் வெளிப்படுத்தும் மற்றொரு அழகான பதிவு மங்கை....

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அழகான பதிவுங்க.....வாழ்த்துக்கள்.

Vijiskitchen said...

டைட்டில்லே அழகா இருக்கு மங்கை.
வாங்க இங்கேயும் வந்து அணுபவத்தை சொலுங்க.
குட்டிஸ் அழகு.

சென்ஷி said...

ம்ம்ம்... கவிதையா எழுதாம பதிவா எழுதுற வரைக்கும் ஓக்கேதான் :))

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.

சென்ஷி said...

@ சித்ரா - :))))

//

.....மென்மையான உணர்வில், ஒரு கருத்து புயல் ஒளிந்து இருக்கிறதே!//


***

கருத்துப்புயல் மங்கை அக்கா.. வாழ்க..! வாழ்க.. !!

மங்கை said...

கவிதா...ஆமா வித்தியாசமான சீருடை தான்...எல்லாமே கொஞ்சம் வித்தியாசமான நடைமுறைதான்...:) நன்றி

ம்ம்ம் உண்மை தான் லட்சுமி... ஒன்னுமே தெரியாத மாதிரி கடல் விளையாண்டுட்டு இருக்கு...நன்றி...

நன்றி கோபி...அமுதன்...தெகா...தோழி..

மங்கை said...

முதல் வருகை தந்த சித்ரா... நித்திலம்... விஜி..நன்றி..:)

சித்ரா புயல் எல்லாம் இல்லை... படிச்சிட்டு சிரிக்க போறாங்க..:)

பார்த்தீங்களா சென்ஷி ரெண்டாவதா சொல்லீட்டு போறார்..:)

பிரபா...நன்றி..உங்களை அறிமுகப் படுத்திக்களாமே...

துளசி கோபால் said...

அருமை மங்கை.

போன வருசம் புதுப்பட்டினம் கிராமத்துக்கு இதே போல் சுநாமிக்குப்பிறகு ஆதரவில்லாமப்போன குழந்தைகளுக்காகக் கட்டப்பட்டப் பள்ளிக்கூடம் போய்வந்தேன்.

http://thulasidhalam.blogspot.com/2009/10/blog-post_26.html

மனசுக்கு நிறைவா இருக்குது இன்னும் மனிதம் இருப்பதை நினைச்சு.

ரசிகன் said...

//இந்த அனுபவம் தந்த உணர்வுகளைப் பற்றி நிறைய சொல்லவேண்டும், எழுத வேண்டும் என்று தோணுகிறது//

காத்திருக்கிறோம். கலக்குங்க:)

கோவை2தில்லி said...

சீருடையுடன் குழந்தைகள் அழகாக இருக்கின்றன. அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதே அழகு.

Ram said...

http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/09/blog-post_13.html

http://konjamvettipechu.blogspot.com/2010/09/blog-post_12.html

http://sirumuyarchi.blogspot.com/2010/09/blog-post_14.html

Just see the comments in these blogs and comments in your blog... those blogs are lively, the number of comments and readers a particular blog gets say the quality of that blog... in that way you have only lost your regular readers over the period of time.. dont u accept that? your posts are dry and lifeless...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யே யாருப்பா ராம் நீங்க ? என்ன வேணும் உங்களுக்கு.. ? என்னத்துக்கு என் பதிவு லிங்க் இங்க குடுத்து என் தோழியவே டீஸ் செய்யறீங்க..? ப்ரபைல் இல்லாத நீங்க லைஃப் பத்தி பேசறீங்க சிரிப்பா வருது..

பதிவில் வரும் பின்னூட்டம் அண்ட் தரம் பத்தி எல்லாம் ஆராய்ச்சி செய்தீங்களா.. பிஹெச்டி வாங்கினீங்களா..?

ஆமா உங்களுக்கு இவங்க மேல கோவமா இல்ல எங்க மேல கோவமா ?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரீடர்ஸ் நிறைய வச்சிக்கிட்டு என்ன பண்ரது ராம்.. புரியலயே..

உண்மையில் உங்க ப்ரச்சனை என்ன அதை மட்டும் சொல்லுங்க

சென்ஷி said...

@ ராம்..

தெய்வத்திண்டே தெய்வமே.. அல்லது பொறம்போக்கே..

உனக்குப் பிடிக்கவில்லையென்றால் எட்டிப்பார்க்காமல் ஓடு. இங்கு உன் அரைகுறை அறிவுரையை எதிர்பார்த்து யாரும் காத்திருக்கவில்லை.

அன்புடன்

சென்ஷி

Dharshi said...

விரைவில் திரு.ராம் அவர்கள் உயிர்ப்புடன் பதிவுகள் எழுதுவது எப்படி என்று தனி பதிவு தொடங்குவார்.

போடாங்ங்ங்....

வந்துட்டானுங்க....:-p

டுபாக்கூர் பதிவர் said...

மங்கை அவர்களின் ‘உறக்கம் கலைவோம்’ என்ற பதிவில் குறிப்பிட்டிருந்த நிஜத்தின் சூடுதாங்காமல் குறிப்பிட்ட இந்த நபர் இம்மாதிரியான பின்னூட்டங்களின் மூலம் மங்கையை மனோ ரீதியாக அவமதிப்பதாய் நினைத்துக் கொண்டு இம்மாதிரியான பின்னூட்டங்களை தொடர்ந்து இடுகிறார் என நினைக்கிறேன்.

பதிவர் மங்கை இம்மாதிரியான மலிவான அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.அவரின் மன உறுதியும், செயல் வேகமும், சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டோருக்காக தொடரும் அவரது சேவை இம்மாதிரியான முகம் காட்ட தைரியமில்லாத கோழைகளுக்கு தெரிந்திட வாய்ப்பில்லை.

எனவே இவர்களை புறக்கணிப்பதே நல்லது....அந்த அனானி நண்பருக்கு பொழுது போகவில்லை எனில் எனது பதிவுக்கு வந்து விளையாடலாம்...காத்திருக்கிறேன், ”வாங்க பாஸூ அங்க விளையாடுவோம்”.

Thekkikattan|தெகா said...

are you still around? can't believe this fellow spending his whole day just looking around ways to make his own life become colorless, lifeless and miserable...

//Just see the comments in these blogs and comments in your blog... those blogs are lively,//

oh! going around taking classes as to how to write blogs... you dumbo head do me a favor open up your own blog and write what you want to say there, will ya?

மங்கை said...

அனைவருக்கும் நன்றி