Monday, March 22, 2010

Catch them young..?????

மேல் நிலை பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை பாலியல் அறிவினை கற்பிக்க முயற்சிகள் நடந்ததும் அப்போது வந்த எதிர்ப்புகளும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.

உளவியல் மட்டும் சமூகவியலாளர்கள் நீண்ட விவாதம் மற்றும் அராய்ச்சிக்குப் பின்னரே இந்த வளர் இளம் பருவ கல்விக்கான தேவையின் அவசியத்தை உறுதி செய்து செயல்படுத்த முடிவெடுத்தனர்.
நமது குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகளும் அதை அவர்கள் எதிர்கொள்ளும் வழியினையும் ஒரு பயிற்சி வகுப்பாக தொகுத்து இறுதி செய்தனர். இது முழுக்க நமது கலாச்சாரம் சமுதாய பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மனதில் கொண்டே திட்டமிடப்பட்டது.

மேற்கூறிய வளர் இளம் பருவ கல்வி என்பது அந்த பருவத்திற்கே உரிய உடல் கூறு, பொதுவான ஆரோக்கியம் பாலுணர்வு சிந்தனைகள், உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள், தவறான பழக்கங்கள், செயல்கள்,தீர்மானங்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், நோய்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதன் தொடர்ச்சியாக பதின்ம பருவத்தில் உடலுறவும், கர்ப்பம் தரித்தலும் ஆபத்தான ஒன்று என்பதை இந்த கல்வி எடுத்து கூறுகிறது. இத்தனை விசாலமான பார்வையுடன் திட்டமிட்ட போதும், வழக்கம் போல நம் கலாச்சார காவலர்கள் அலறி அடித்து ஓடு வந்து அதை முழுமையாக நிறைவேற்ற விடாமல் வெற்றிகரமாக நிறுத்தி விட்டனர்.

சரி இது இப்படி இருக்க நான் சமீபத்தில் படித்த ஒரு தெய்தி, இது டூ மச், த்ரீமச்னு நினைக்கத் தோன்றியது. மேற்கூறிய விழிப்புணர்வு கல்வியி்ல் ஆணுறை பற்றிய குறிப்பும் இடம் பெறுகிறது. மறுக்கவில்லை. ஆனால் இப்ப இந்த பதிவில் சொல்ல வந்த விஷயம் என்னன்னா சுவிட்சர்லாந்தில், காண்டம் தயாரிக்கும்
நிறுவனம் ஒன்று, உலகில் முதன்முறையாக 12 வயது சிறுவர்கள் பயன்படுத்தும் அளவில் சிறிய காண்டங்களைத் அறிமுகப் படுத்தியிருக்கிறது.

நான் 15 ஆண்டு காலமாக ஊர் ஊராக சென்று ஆணுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவள் தான். இருந்தாலும் இந்த செய்தியை படித்தவுடன் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, ஒரே அடியாக இது தேவையில்லாத ஒன்று என்று ஒதுக்கவும் முடியவில்லை.

இதற்கு அந்த நிறுவனம் கொடுக்கும் விளக்கம், "சிறுவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணர்வதில்லை. அதன் விளைவுகள் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் உடல் உறவு வைத்துக் கொள்ளும் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆனால், அது அவர்கள் பிரச்சனை என்று நினைக்கிறார்கள்".


இங்கிலாந்தில் 12 லிருந்து 14 வயது சிறுவர்கள் இப்போது உடலுறவில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது, இதனால் டீன் ஏஜ் கர்ப்பமும், முறையற்ற கருக்கலைப்பும் அதிகரித்துள்ளது. இந்த காரணங்களை முன் நிறுத்தி சிறிய அளவிலான காண்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் டீன் கர்ப்பம், பாலியல் நோய்கள் போன்றவை அதிகரித்து உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.
இந்த நிலவரத்தை மனதில் கொண்டு அந்த அரசு சி-கார்ட் என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வைத்து தானியங்கி காண்டம் இயந்திரங்களில் காண்டங்களை எடுத்துக் கொள்ளலாம். மத அமைப்புகள் இதை பலமாக எதிர்த்து வருகின்றன.


ஆராய்ச்சி முடிவுகள் ஏற்படுத்தும் தேவைகளினால் அரசும் மற்ற நிறுவனங்களும் மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அடிப்படை ஒழுக்கம் வாழ்க்கை குறித்த பொறுப்புணர்ச்சியும், சரியான கண்ணோட்டமும் இளைஞர்களுக்குள் வளர செய்வதே இந்த பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் என்பது என் கருத்து.

20 comments:

கவிதா | Kavitha said...

//நான் 15 ஆண்டு காலமாக ஊர் ஊராக சென்று ஆணுறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவள் தான். இருந்தாலும் இந்த செய்தியை படித்தவுடன் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை//


ம்ம்ம்ம்...!! :( எனக்கும்..!! :(

அன்புடன் மலிக்கா said...

விழிப்புணர்வு நல்லதொரு இடுகை மங்கை..

டவுசர் பாண்டி... said...

இதெல்லாம் அரசாங்கத்தால் மட்டுமே சாதிக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும் தன் பொறுப்புணர்ந்து அடுத்த தலைமுறையின் நலத்தினை கருத்தில் கொண்டு செய்ய வேண்டியது.

சென்ஷி said...

:(

மங்கை said...

கவிதா..மலிக்கா.நன்றி

மங்கை said...

டவுசர் பாண்டி...

நன்றி...அதான் இந்த பதிவின் நோக்கம்

மங்கை said...

நன்றி சென்ஷி

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை மங்கை.

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

நல்ல ஒரு பதிவு ..!
இப்படியெல்லாம் நமது நாட்டிலும் வந்துவிடுமோ என்ற கவலையும்
வருகிறது...!

மங்கை said...

நன்றி ராமலக்ஷ்மி

அமுதன்...நம்ம நாட்டுல இந்த பிரச்சனை இல்லைனு சொல்ல முடியாது... ம்ம்ம்

காட்டாறு said...

I agree with what you had said... a permanent solution. I am totally with you on that. However, in the interim ... Instead of blaming on the circumstances and bringing a life into this world without knowing the consequences, it is good to be proactive. Just because something is available, does not mean that it is a bad symptom.

Thekkikattan|தெகா said...

மங்கை,

ம்ம்ம் இது கொஞ்சம் சிக்கலான விசயம் மாதிரி தெரிஞ்சாலும்... இந்த வார்த்தையை நான் பாவிச்சே ஆகணும் ...பரிணாமம்... கொஞ்ச கொஞ்சமா மனிதர்களாகிய நம்ம இனத்தை அடுத்த நகர்விற்கு நம்ம ஆயுத்தம் செய்யுது போல! இதில நம்ம பயன்படுத்துற இந்த உரங்கள், வேதிப் பொருட்கள் உணவில எல்லாம் கலந்து உடலியல் ரீதியாக சில மாற்றங்களை நாமே துரிதப் படுத்தி விட்டுக்கிறோம்னாலும், இந்த ஊடகங்களின் பங்கும் இந்த ப்ரீ டீன்லயே பழுத்து விடுவதற்கான கூறுகளை விதைத்து விடுகிறது என்பதனை மறுப்பதற்கில்லை.

எனவே, மாறி வரும் உலகியல் நிகழ்வுகளுக்கென நாமும் நம் மனதை தயார் செய்து கொள்வது ரொம்ப முக்கியம் போல! however, i feel bad for the kids who are getting shorter and shorter span of childhood innocense left for them to enjoy...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

however, i feel bad for the kids who are getting shorter and shorter span of childhood innocense left for them to enjoy..//


ஆமாப்பா மங்கை.. கிடைக்குதுங்கரதுக்காக.. பொறுப்பு உணர்த்தப்படாத குழந்தைகளா வளரும் போது எவ்வளவு கெடுதி அது.. ;(

மங்கை said...

//Instead of blaming on the circumstances and bringing a life into this world without knowing the consequences, it is good to be proactive. Just because something is available, does not mean that it is a bad symptom//

ஆமாம்...அதான் சொன்னேன்... இன்றைய நிலமைக்கு தேவைன்னு தான் இதை அறிமுகப்படுத்தி இருக்காங்க...அப்போ இன்றைய நிலைமையை யோசிக்கவும்...ம்ம்ம்

மங்கை said...

//i feel bad for the kids who are getting shorter and shorter span of childhood innocense left for them to enjoy...///

்ம்ம் அதான் தெகா..வருத்தமே...

மங்கை said...

நன்றி லட்சுமி...அந்த கவலை தான்... தாங்கள் செய்யறது சரிங்குற ஒரு கண்ணோட்டத்துல வளர்ராங்க ம்ம்ம்

செல்வநாயகி said...

நல்ல இடுகை மங்கை.

அண்ணாமலையான் said...

மிக சிறப்பான விஷயம்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in