Monday, March 08, 2010

விருட்சங்களுக்கு வாழ்த்துக்கள்



குஜராத் மாநிலம் பாவ்நகர் ரயில்நிலையத்தில் மற்ற எந்த இடத்திலும் காண இயலாத ஒரு காட்சியை காணலாம். பொதுவாக லக்கேஜ்களை தூக்க ஆண்கள் தான் சிவப்பு நிற சட்டை அணிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பாவ்நகர் ரயில்நிலையத்தில் லக்கேஜ்களை தூக்க சிவப்பு நிற ஆடையில் பெண்களை பார்க்கலாம். சுமார் முப்பது பெண்கள் இங்கு கூலி வேலை பார்க்கிறார்கள். சிலர் தலைமுறை தலைமுறையாக இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.


ஒரு நூற்றாண்டிற்கு முன்பு இந்த பகுதியை ஆண்டு வந்த ராஜா மஹாரானா கிருஷ்ன பிரதாப் சிங், பெண் போர்ட்டர்களை நியமித்து பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். அது இப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியும் போது, அந்த அரசனையும் பெண்களையும் வாழ்த்த தோன்றுகிறது.


முன்னோர்கள் போட்ட நம்பிக்கை என்ற விதை இன்று விருட்சமாக பெண்களான எங்களுக்குள் வளர்ந்து நிற்கிறது
.

பெண்களின் உழைப்பிற்கும் உணர்வுகளுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுப்போம்.

உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

11 comments:

தமிழ் அமுதன் said...

///உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.//

harveena said...

madam,, a nice one,,, super pick,, an untouched subject,,, happy womens day to all

டவுசர் பாண்டி... said...

மகளிர் தின வாழ்த்துக்கள்....

இது நூறாவது வருசமாமே! :)

Thekkikattan|தெகா said...

உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.//

உழைக்கும் பெண்களுக்கு நல்லா அழுத்தி சொல்லுங்க, இந்தத் தருணத்தில ஏன்னா இன்றைய காலச் சூழ்நிலையை அப்படித்தான் பண்ணிடுச்சு. என்னுடைய வாழ்த்துக்களையும் இந்தாங்க பிடிங்க, இது போன்ற மக்களிடத்தில சேர்த்திடுங்க. உங்கள விட்டா இது போன்ற விசயங்களை யாரு இங்க கொண்டு வந்து சேர்க்கிறது. அடிக்கடி கொண்டுவாங்க!!

மங்கை said...

வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி

கோபிநாத் said...

மகளிர் தின வாழ்த்துக்கள் :-)

கல்வெட்டு said...

Hira Jaikrishna, the oldest porter at the station at 70...."I am not sure if we will be here much longer,”

http://timesofindia.indiatimes.com/india/End-of-the-line-for-Gujarats-women-coolies/articleshow/5156476.cms

:-(((

**

ஹுஸைனம்மா said...

ஆச்சர்யம்!! நம்மூரின் பெண்சித்தாட்கள் நினைவுக்கு வருகிறார்கள்!!

கோமதி அரசு said...

//உழைக்கும் பெண்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்ளும்//

நானும் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெகா சொன்னமாதிரி உழைக்கும் மகளிர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

மங்கை said...

நன்றி...கல்வெட்டு, ஹுஸைனம்மா.. கோமதிம்மா..:).. மனமார்ந்த நன்றி

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் பதிவுக்கு வந்தாலே வித்தியாசமான ஏதாவது ஒரு செய்தி இருக்கும்..இதுவும் அப்படித்தான்....