Tuesday, December 09, 2008

மனித உரிமை நாள் - பெனாசீர் கவுரவிக்கப் படுகிறார்

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப் பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த ஆண்டு முழுவதும் அது தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள், சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரைகள், மேலும் பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனித நாகரீகத்தின் பயனத்தில் இது ஒரு மைல்கல் எனலாம். அந்த பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை நடைமுறையாக்க இந்த மனித உரிமை நாள் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.


இந்த ஆண்டிற்கான கருப்பொருள் " கெளவுரவமும், நீதியும் நம் அனைவருக்கும் ". உலகமிருக்கும் நிலவரத்திற்கு மிக பொருத்தமான கருப்பொருள்.

இந்நாளில் மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரப்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் 6 பேரை (5 தனி நபர், ஒரு நிறுவணம்) ஐநா சபை தேர்வு செய்திருக்கிறது. இதில் இறந்த பிறகு கொடுக்கும் பாஸ்துமஸ் (Posthumous) பரிசிற்காக இரண்டு பேர் தேர்ந்தெடுத்தப் பட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தை நிலைநாட்ட ஏற்றுக் கொண்ட முயற்சியில் கொடூரமாக கொள்ளப்பட்ட பெனாசீர் பூட்டோ,
மற்றும் பிரேசில் நாட்டில் நிலபுலன்கள் இல்லாத பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடிய கன்னியாஸ்திரி சிஸ்டர். டோரதி ஸ்டாங்க் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. டோரதி ஸ்டாங்க் பல கொலை மிரட்டல்களுக்கு மத்தியுலும் தளராது தைரியமாக தான் ஏற்றுக் கொண்ட பணியை செய்து வந்தவர். இவர் கொல்லப்பட்ட போது நடந்த சம்பவத்தை கேட்டால், நாம் எல்லாம் எவ்வளவு சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என எண்ணத் தோன்றுகிறது. முன்று வருடங்களுக்கு முன்பு, அமேசான் காட்டுக்குள், அங்கு வாழும் பழங்குடியினருக்காக போராடிக் கொண்டிருந்த போது, இரண்டு பேர் துப்பாக்கியுடன் இவரை வழி மறித்தனர். அவர்கள் யாரால் எதற்காக அனுப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்த இந்த மூதாட்டி, அவர்களை அன்புடன் வரவேற்று, அமைதியாக 15 நிமிடங்கள் பேசி இருக்கிறார். அவரின் போராட்டத்திற்கு பின்னால் இருக்கும் நியாயத்தை விளக்கி இருக்கிறார். கையில் இருந்த ஒரு வரை படத்தை வைத்து பழங்குடியனருக்கு சொந்தமான நிலத்தை சுட்டி காட்டி இருக்கிறார். எந்த நியாயத்தையும் கேட்கிற மன நிலையில் வந்தவர்கள் இல்லை என்று தெரிந்ததும், கடைசியில் தன் கைப்பையில் இருந்த பைபிலை எடுத்து, " எனக்கு இருக்கும் ஒரே ஆயுதம் இது தான்" என்று கூறி ' "Blessed are the peacemakers, they shall be called children of God, Blessed are they who hunger and thirst for justice, for they shall be satisfied" என்ற வாசகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதே கொல்ல வந்தவர்கள் ஸ்டாங்கை 5 முறை சுட்டு விட்டு ஓடி விட்டனர். 79 வயதில் இப்படி ஒரு மன வலிமையா..ம்ம்ம்

இந்த பரிசை வாங்கப் போகும் மற்றவர்கள்...

ராம்சே க்ளார்க்: முதல்ல நம்ம ஹீரோ....:-))...யூ எஸ் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியவர். அமெரிக்க னித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலும் மரண தண்டனை முறை ஒழிக்கப்படுவதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவர், சதாம் மீதான வழக்கில் சதாமிற்கு ஆதரவாக வாதாடியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்தவர். உலகமயமாக்கல் என்பது சாதாரன மனிதனுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் ஊடுருவல் என்ற கருத்தை உடையவர். கொல்கத்தாவின் நந்திகிராமில் நடந்த கொடுமையின் போது அங்கு சென்று மக்களை நேரில் சந்தித்து நடந்ததை தெரிந்து கொண்டவர்.

மற்றொரு முக்கிய நபர் காங்கோ நாட்டை சேர்ந்த டாக்டர். டெனிஸ் முக்வெஜ். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களின் நலத்திற்காக ஒரு மருத்துவமனை நிறுவி தொண்டாற்றி வருபவர். இவரின் மருத்துவமனைக்கு இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் நாளொன்றிற்கு 10 பேர் வந்து போகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்து இலவசமாக சிகிச்சையும் அளித்து வருகிறார்.


ஜமாய்க்கா நாட்டில் மனித உரிமைக்காக போராடும் டாக்டர். கேரொலின் கோம்ஸ் க்கும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. இவர் Jamaicans for Justice என்ற அமைப்பின் மூலம் ஜமாய்க்கா நாட்டில் நடக்கும் மனித உரிமை அத்து மீறல்களுக்கு எதிராக அரும்பணியாற்றி வருகிறார்.


ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற நிறுவனமும் இந்த ஆண்டு கவுரவிக்கப் படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்நிறுவனம் உலகம் முழுதும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களை பதிவு செய்து, சில ஆக்கப்பூர்வமான பரிந்துறைகளை செய்து வருகிறது. மேலும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தை நிறுவ காரணமாக இருந்ததும் இந்நிறுவனம் தான்.

எல்லாம் சரி. உலக அளவில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை மறுப்பதிற்கில்லை என்றாலும் நாளுக்கு நாள் இந்த மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். வருடா வருடம் பெரிய அளவில், உலகம் முழுவதும் இந்த நாள் வெகு விமர்சையாக அனுசரிக்கப்படுவ தென்னமோ உண்மை. வாய் கிழிய பேசும் தலைவர்கள், அரசியல் ஆலோசகர்கள், சட்ட நிபுனர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என இந்நாளில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை சொல்பவர்கள் ஏராளம். ஆனால் இந்த கருத்து பரிமாற்றங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்தியாவைப் பொறுத்தவரை, (காவல் துறையை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்) ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சிறைக் காவலில் ஒவ்வொரு நாளும் நான்கு பேர் இறக்கின்றனர் என கூறியிருக்கிறது. ரவுடிகள் என்கெளவுன்ட்ரில் கொல்லப்படுவது சாதாரணமாகி வரும் இந்நாளில் அவர்களை உருவாக்குபவர்களை என்ன செய்ய முடிந்திருக்கிறது நம்மால். கொல்லப்பட்ட குற்றவாளிகள், ரவுடிகள், தாதாக்கள் என்ற காரணத்தால் அவர்களின் மரணமும், அவர்கள் கொல்லப்பட்ட விதமும் நம்முள்ளே எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் உண்மைதானே. இது போல செயல்பாடுகளில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வும், வீர பதக்கமும் கொடுத்து, மறுநாளே பெரிய வெற்றி விழாக்கள் கொண்டாடும் ஆட்சிகளையும் நாம் பார்த்துவிட்டோமே.

அதிகாரத்தை பயன் படுத்தி அவர்களை விசாரணையின்றி கொல்லுவது மற்றறொரு முக்கிய குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கை என்பது என் எண்ணம். திறைமறைவில் இருக்கும் சில பெரும்புள்ளிகளும் காவல் துறையும் சேர்ந்து அரங்கேற்றும் ஒரு நாடகம்.


இந்தச் சாவுகளில் எங்கே இருக்கிறது நீதியும் கெளரவுமும்.....ம்ம்ம்ம்

வாழ்க ஜனநாயகம்..!

26 comments:

சென்ஷி said...

//இந்தியாவைப் பொறுத்தவரை, (காவல் துறையை மட்டும் இங்கு எடுத்துக் கொள்வோம்) ஆசிய மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சிறைக் காவலில் ஒவ்வொரு நாளும் நான்கு பேர் இறக்கின்றனர் என கூறியிருக்கிறது. ரவுடிகள் என்கெளவுன்ட்ரில் கொல்லப்படுவது சாதாரணமாகிக் கொண்டு வரும் இந்நாளில் அவர்களை உருவாக்குபவர்களை என்ன செய்ய முடிந்திருக்கிறது நம்மால். //

உண்மையில் ரவுடிகளையும் தாதாக்களையும் உருவாக்குபவர்கள் சட்டத்தை ஆளும் அதிகாரத்தில் அமர்ந்திருப்பதாலேயே எளிதாய் தப்பிக்க முடிகிறது. இவர்களில் எவரேனும் ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால் கூட சற்று நிம்மதியாய் இருந்திருக்கும்.

மற்றவர்களுக்கு அந்த பயமும் உறுத்தலும் பாடமாய் மாறியிருக்கும். :((

கவுரவிக்கப்படும் அத்தனை நபர்களுக்கான என் வாழ்த்துக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றேன்.

சிஸ்டர். டோரதி ஸ்டாங்க், பெனாசிர் பூட்டோ இருவரது கொடூர மரணத்திற்கு :((((

Thekkikattan|தெகா said...

சமீபத்தில் சி. என். என்ல Christiane Amanpour வழங்கிய Scream Bloody Murder நிகழ்சியிலிருந்து சில முக்கியமான இனப் படுகொலைகள் உலகளாவிய முறையில் எங்கெல்லாம் நடந்தேறியது, யூ. என் கவனத்திற்கு எப்பொழுது கொண்டு வந்து இந்த மனித உரிமை சட்டம் இயற்றப்பட்டது என்பதுவரை நிறைய விசயங்கள் தெரிய வந்தது. இருந்தாலும் அந்தம்மா எப்பொழுது இலங்கையை அந்த லிஸ்டில சேர்த்துக் கொள்ளப் போகிறது என்று தோணச் செய்தது.

நீங்கள் கூறிய படி இந்தியாவில் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசவே வேண்டியதில்லை... அந்தளவிற்கு இருக்கிறது நிலமை.

பயனுள்ள பதிவுங்க, நன்றி!

ராஜ நடராஜன் said...

தகவலுக்கு நன்றி.

கோபிநாத் said...

உங்க பதிவை பார்த்தா தான் இப்படிபட்ட விஷயங்கள் தெரியுது...நன்றி ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நடிக , நடிகையரை, அரசியல்வாதிகளை, எல்லாம் நல்லா தெரிஞ்சுக்க ஈஸியா முடியும்..இவங்களைப்போல ஆட்களைத்தான் அதிகம் பப்ளிசிட்டி செய்யனும்.. நன்றி

ஆயில்யன் said...

விருது பெறுபவர்கள் பற்றி நிறைய செய்திகள் தெரிந்துக்கொண்டேன் பதிவிட்டு பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!

மங்கை said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

தமிழ் அமுதன் said...

பள்ளி பாடநூல்களில் பாடமாக
ஏற்றப்பட வேண்டிய பதிவு!

தெரியாத பல தகவல்களை அறிய
தந்தமைக்கு நன்றி!

/// அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்தவர். உலகமயமாக்கல் என்பது சாதாரன மனிதனுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் ஊடுருவல் என்ற கருத்தை உடையவர்./// ''ராம்சே க்ளார்க்''

இவருக்கு விருது கிடைத்திருப்பது
மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது!


மேலும்! தற்போது தமிழகத்தில்
''மனித உரிமை அமைப்புகள்''
பல தோன்றி உள்ளன.காவல்துறை
உதவியுடன் ''கட்டபஞ்சாயத்து'' பேசி
நெறைய பணம் பார்த்து இதனை ஒரு
''தொழிலாக'' பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.

''வாழ்க ஜனநாயகம்''

நாகை சிவா said...

//அதிகாரத்தை பயன் படுத்தி அவர்களை விசாரணையின்றி கொல்லுவது மற்றறொரு முக்கிய குற்றவாளியை தப்பிக்க வைப்பதற்கான ஒரு நடவடிக்கை என்பது என் எண்ணம். திறைமறைவில் இருக்கும் சில பெரும்புள்ளிகளும் காவல் துறையும் சேர்ந்து அரங்கேற்றும் ஒரு நாடகம்.//

நியாயமான பேச்சு...

மனித உரிமை நாள் வாழ்த்துக்கள். மனித நேயம் எங்கும் பரவட்டும்.

ஆனாலும் பாருங்க எனக்கு எப்பவுமே இந்த மனித உரிமை துறையில் இருப்பவர்களிடன் முரண்பாடு தான். அதை இன்று விவாதிக்க விரும்பம் இல்லை. :))

ஆனால் அவர்கள் செய்யும் பணி கண்டிப்பாக கரம் பற்றி வாழ்த்த வேண்டிய பணி தான் :)

நாகை சிவா said...

//தற்போது தமிழகத்தில்
''மனித உரிமை அமைப்புகள்''
பல தோன்றி உள்ளன.காவல்துறை
உதவியுடன் ''கட்டபஞ்சாயத்து'' பேசி
நெறைய பணம் பார்த்து இதனை ஒரு
''தொழிலாக'' பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.//

சத்தியமான உண்மை. மனித உரிமையாளர்களை அழைத்து வந்து போராட்டாம் நடத்துவேன், போஸ்டர் ஒட்டுவேன் என்று ஒரு கூட்டம் பணம் பறிக்க கிளம்பி உள்ளது என்பது சத்தியமான உண்மை.

ஆதவன் said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget - ல் இதை பயன்படுத்துக
வழி --> Add a Gadget --> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

மங்கை said...

\\பல தோன்றி உள்ளன.காவல்துறை
உதவியுடன் ''கட்டபஞ்சாயத்து'' பேசி
நெறைய பணம் பார்த்து இதனை ஒரு
''தொழிலாக'' பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.\\\

என்னத்தை சொல்ல.. மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்... நன்றி ஜீவன்

மங்கை said...

நன்றி சிவா

மங்கை said...

// எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்//

வாழ்த்துக்கள்....கண்டிப்பாக

Poornima Saravana kumar said...

நல்லதொரு பதிவு..

Poornima Saravana kumar said...

உங்கள் பதிவப் படித்து தான் இதெல்லாம் தெரிந்து கொண்டேன்.. பகிந்து கொண்டமைக்கு ரொம்ப நன்றீங்க..

Poornima Saravana kumar said...

//இந்நாளில் மனித உரிமைகளுக்காக பாடுபடுபவர்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரப்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டும் 6 பேரை (5 தனி நபர், ஒரு நிறுவணம்) ஐநா சபை தேர்வு செய்திருக்கிறது
//

இவர்களை நினைக்கயில் பெருமையாக இருக்கிறது..
மனித நேயம் இன்னும் சாகவில்லை.. ஆனாலும் அதை வளர்ப்பது நம் கையில் தான் இருக்கிறது..

சிம்பா said...

நடிகைகள் ஓடிப்போனாங்க, நடிகர்கள் கட்சி ஆரம்பிச்சாங்க போன்ற செய்திகளை வழங்கும் ஊடகங்கள் இவ்வகையான மதிப்பு மிக்கி செய்திகளை வழங்குவது இல்லை..

மங்கை அக்கா அனைத்தும் அருமையான தகவல்.. ஆனா இவ்வகையான மனிதர்களின் போராட்டம், தனிப்பட்ட ஒருவரின் போராட்டமாகவே கருதப்படுகிறது..

நம்ம நாட்டு மேத்தா பட்கர் இதில் அடக்கமா என்று எனக்கு தெரியவில்லை.. அவர்களுக்காக நாம் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் அவர்களை பற்றிய செய்திகளை படிப்பதன் மூலம் சிறிதளவு மனிதநேயமாவது வளரட்டும்....

மங்கை said...

நன்றி பூர்ணிமா..

சிம்பா...இது போன்ற செய்திகளை நம் ஊடகங்கள் எடுத்து வருவதில்லை என்பதை நினைத்தால் மிகுந்த வருத்தம் அளிக்கிறது...இந்த விஷ்யங்களை நல்ல முறையில் பிகிர்ந்து கொள்ள ஏன் ஊடங்கள் விருப்பம் காட்டுவதில்லை என்பது எனக்கு புரியவில்லை...

நன்றி அருன்

Unknown said...

மிகவும் நல்லதொரு பதிவு மங்கை

ராஜ நடராஜன் said...

நம்ம ஊட்டுப்பக்கம் வந்தேங்களேன்னு மீண்டும் ஒரு முறை உங்கள் பதிவுக்கு வந்தேனுங்க.

1.பெனாசீர் இருந்த காலத்திலேயே இன்னும் கொஞ்சம் பாகிஸ்தான் ஜனநாயகத்துக்கு வேரூன்றியிருக்கலாம்.

ராம்சே கிளார்க் சதாமுக்கு வாதாடியும் கேஸ் தோற்றுப் போனது.

butterfly Surya said...

மனித உரிமையா..??? கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலைதான் இந்தியா முழுவதும். சமீபத்தில் ஆந்திராவில் கல்லூரி பெண்கள் மீது ஆசிட் வீசியது தொடர்பாக அரசியல் நிர்பந்ததால் 3 மாணவர்களை காவல் துறை என்கவுண்டர் பெயரால் சுட்டு தள்ளியுள்ளது.. அவர்கள் செய்தது படுபாதமான செய்லே ஆனால் காவல்துறை ஒரு வரை முறையே இல்லாமல் இவ்வாறு செய்வது வீரச்செயல்லா.??

ஆந்திராவில் மட்டுமா ஜெ ஆட்சியில் நடக்காத மனித உரிமைகளா. கொல்வதும் அடக்குமுறையும் மட்டுமல்ல, நடு இரவில் பெண் ஆசிரியர்கள் கைது, எதிர் கட்சி தலைவர் கைது, சந்திரலேகா மீது ஆசிட். என்று அடுக்கி கொணடே போகலாம்.

தூக்கு தண்டனைக்கு எதிராக Amnesty International போன்றவை எவ்வள்வோ குரல் கொடுத்தும் மனித உரிமை மீறல் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இது போன்ற பெருமக்களின் போராட்டதாலும் சட்டங்கள் அனைவருக்கும் சமமனாலும் மட்டுமே உலகில் அமைதி ஏற்படும்.

எப்போதெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அப்போதெல்லாம் பயங்கரவாதம் தலை எடுக்கிறது.. (பாபர் மசூதி இடிப்பு & குஜராத் இனக்கலவரங்கள்)

பதிவுகளிலும் குழுமங்களிலும் மொக்கை பதிவும் ஜொள்ளு லொள்ளும் அரட்டையும் பரஸ்பர பாராட்டும் நிறைந்த பிளாக் உலகில்

மிகச் சிறந்த பயனுள்ள தகவல்களை திரட்டி பதிவை இட்ட மங்கையே...

நீவிர் வாழ்க..

வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

அனைவருக்கும் வாழ்த்துகள்..பதிவிட்ட மங்கைக்கும்தான்..

vignathkumar said...

when speaking about human rights.
we can avoid women rights.
tamil womens should be awer of eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women equality rights and democrasy.not only that male domination psychartist views which is often published in tamil magazeens. their views are oppose to women democrasy and equality and self confidnce too

sakthi said...

மேடம் நான் கோவை மாவட்டம் என் பெயர் சக்தி ,நண்பர் சிம்பா அருண் உங்கள் தளம் அறிமுகம் செய்தார்.மிக பயனுள்ள எழுத்துக்கள் மேடம் ,,,,
நன்றி
கோவை சக்தி

மங்கை said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி..

கோவை சக்தி நன்றி..:-)