Wednesday, January 10, 2007

டாக்கிங்...டாக்கிங்...டாக்கிங்


என் அருமை நண்பிகளே, பெண்கள் ரொம்ம்ம்ம்ம்ம்பபபபப பேசறதா பலர் பலகாலமா சொல்லீட்டே தான் இருக்காங்க. இந்த அதிகமா பேசற பழக்கத்த ஒரு பெண் ஆராய்ச்சி செய்து நிரூபிச்சு இருக்காங்க...

சரி விஷயத்துக்கு வரேன்.....சில சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு இந்த ஆராய்ச்சியில...

ஆண்கள விட பெண்கள் மூன்று மடங்கு அதிகமா பேசறாங்களாம். ஆண்கள் 7000 வார்த்தைகள் ஒரு நாளைக்கு பேசினா, பெண்கள் 20,000 வார்த்தைகள் பேசறாங்களாம்...(அது சரி....ஒரு விஷயத்த ஒரு தடவ சொன்னா புரிறதில்லை..) இன்னொன்னு, ஆண்களை விட பெண்கள் வேகமாகவும் பேசறதா அந்த ஆராய்ச்சி சொல்லுது.......... இதற்கான காரணத்தையும் அவங்க சொல்லி இருக்காங்க...

ஆண்களின் உடம்பில் சுரக்கும் testosterone ஹார்மோன்கள், அவங்க மூளையில வார்த்தை பரிமாற்றத்தையும் நினைவாற்றலையும் கட்டுபடுத்தற முக்கியமான ஒரு பகுதியை சுருங்கச் செய்துடுதாம். இதுனால ஆண்கள் ரொம்ப நேரம் பேசினா சோர்ந்து போயிடறாங்களாம்.. பெண்களால ஆண்கள் அளவுக்கு வேகமா நடக்க முடியாம போற மாதிரி....பேச்சு திறமையில ஆண்களால பெண்களோட paceக்கு ஈடு கொடுக்க முடியறதில்லையாம்.. இந்த காரணத்தினால அவங்க பெண்கள் அளவிற்கு உணர்சிகளை வெளிக்காட்ட முடியறதில்லைனு அந்த பெண்மணி சொல்லியிருக்காங்க.. அதே சமயத்தில பெண்களுக்கு இப்படி communicate பண்றதுக்கான செல்கள் மூளையில அதிகமா இருக்காம்...

இத்தனை காரணத்த சொல்லிட்டு இந்த ஆராய்ச்சியாளர் ஒரு சிக்ஸர் அடிச்சிருக்கார்.... பெண்கள் அதிகமா, அவங்க திருப்திக்கு பேசும் போது, அவங்க உடம்பில சுரக்கும் ஒரு வித அமிலத்துனால, ஹெராயின் சாப்பிட்டவுங்க அடையும் உச்ச கட்ட போதை நிலைய போல ஒரு நிலைய அடையறாங்களாம்... ஹம்ம்ம்ம்...இது கொஞ்சம் ஓவரா இல்ல..?

"Female Mind" - இது தான் அந்த புத்தகத்தின் பெயர்....இன்னொரு விஷயம்....

மற்றவர்கள், முன் வைக்கும் வாதங்களை கேட்கும் திறனை கட்டுப்படுத்தும் பகுதியையும் இந்த testosterone ஹார்மோன்கள் சுருங்கச் செய்துடுதாம்.. இதனால நியாயமான (பெண்களின்..?) வாதங்களை கூட அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லையாம். இது எல்லாம் நான் சொல்லலை....அந்த ஆராய்ச்சியாளர் தான் சொல்லி இருக்காங்க...

So carry on Girls......

(ச்ச்ச்சும்மா சுவாரஸ்யமா இருந்துச்சுன்னு பதிர்ந்துகிட்டேன்.... அவ்வளவே...)

23 comments:

ரவி said...

எனக்கு ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு !!!

Anonymous said...

//அது சரி....ஒரு விஷயத்த ஒரு தடவ சொன்னா புரிறதில்லை.. //

அதான... பேசறவங்க, கேக்கறவங்க ரெண்டுபேருமே அப்படி இருந்தா பேசிகிட்டே இருக்க வேண்டியதுதான்!

பி. கு: பெண்கள் ஆண்களை விட பெண்கள் கிட்டதான் அதிகம் லேசுவாங்களாம் ;)

//ஆண்கள் ரொம்ப நேரம் பேசினா சோர்ந்து போயிடறாங்களாம்.. //
இன்னொரு மேட்டர சொல்லாம விட்டுட்டாங்க. பெண்கள் பேசறத கொஞ்ச நேரம் கேட்டாலே ரொம்ப சோர்ந்து போயிடறாங்க ஆண்கள்!

:))))))

மங்கை said...

என்ன ரவி புரிஞ்சுட்டீங்க...

//இன்னொரு மேட்டர சொல்லாம விட்டுட்டாங்க. பெண்கள் பேசறத கொஞ்ச நேரம் கேட்டாலே ரொம்ப சோர்ந்து போயிடறாங்க ஆண்கள்///

அருள் குமார்

இது சூப்பர்..:-)))))

Anonymous said...

அருள் இந்தப் பக்கத்தை புக் மார்க்கிட்டேன்.. உங்களுக்குத் திருமணமான பின்னாடி உங்க அம்மணிகிட்ட மொதல்ல கொடுக்கிறது இந்த லிங்க் தான் ;)

மங்கை said...

வாங்க பொன்ஸ்...:-)))

Anonymous said...

//அருள் இந்தப் பக்கத்தை புக் மார்க்கிட்டேன்.. உங்களுக்குத் திருமணமான பின்னாடி உங்க அம்மணிகிட்ட மொதல்ல கொடுக்கிறது இந்த லிங்க் தான் ;)
//

பொன்ஸ், நாங்கல்லாம் எப்படி சமாளிக்கறதுன்னு முதல்ல யோசிச்சிட்டுதான் மேட்டரையே வெளிய சொல்வோம் ;)

ம்... பொண்ணுபாத்ததும் மொதல்ல உங்கள பத்தி கொஞ்சம் சொல்லிவைக்கணும்!

கோவி.கண்ணன் [GK] said...

கருத்து சொல்லனுமா ?

நான் வரலை விளையாட்டுக்கு !

ஜூட் :)

மங்கை said...

கோவி..

//நான் வரலை விளையாட்டுக்கு //

அதான் சொல்லாம சொல்லீட்டு போயிட்டீங்களே..:-)))

Sivabalan said...

மங்கை,

நல்ல பதிவு!!

பார்லிமென்டில் 33% வேணும் என்று சொல்லுகிறார்கள்.. இதைப் படிக்கும் போது 66% தரலாம் போல... ஏன்னா கேள்வி கேட்கவே காசு கேட்ட்கிறார்கள் ஆண்கள்.. Ha Ha Ha..

Anonymous said...

ஏனுங்க...இந்த மௌனவிரதம்...மௌனவிரம்னு ஒன்னு சொல்றாங்களே....அத பத்தி ஒரு பதிவு போட்டு...Carry on Girls னு அட்வைஸ் பண்ணீங்கன்னா.... அப்பாவி ஆண்குலம் உங்களுக்கு வாழ்நாள்பூரா நன்றிக்கடன் படும்....

யோசிங்க தாயே...ஹி...ஹி...

மங்கை said...

சிவா
உங்களுக்கு தான் புரிஞ்சு இருக்கு.:-)))

பங்காளி சார்...

ஹ்ம்ம்ம்...அப்பாவி ஆண்குலம்?

என்ன எல்லாம் ஆராய்ச்சு பண்ணுது இந்த அப்பாவி ஆண்குலம்?...

பாலராஜன்கீதா said...

பிப்ரவரி மாதம் மட்டும் கொஞ்சமாகப் பேசுவார்களாம் (ஏனெனில் அந்த மாதத்திற்கு 28/29 நாட்கள்தானாம்)

Anonymous said...

//பங்காளி சார்...//


இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....ஹி...ஹி...

மங்கை said...

பாலராஜன்கீதா

வருகைக்கு நன்றி

Anonymous said...

மங்கை,

தெளிய வைத்தமைக்கு நன்றிங்க!!! :)

மங்கை said...

பங்காளி... said...
//பங்காளி சார்...//இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...ஹி...//

சரி சரி..இப்ப கெட்டப்புக்கு தகுந்த மாதிரி...மொ.. பா....:-)))))

Anonymous said...

//ஆண்கள விட பெண்கள் மூன்று மடங்கு அதிகமா பேசறாங்களாம்.//

இதையவே நாங்க சொன்னா ஊடுகட்டி அடிக்க வாறீக!!! என்ன பண்ணும் ஆண்குலம்??;)))) ஆண்கள் எல்லாம் action kings பொண்ணுங்க எல்லாம் chatting queens ன்னு சொல்றீங்க சரியா ?? :))))

மங்கை said...

அருட்பெருங்கோ , ஜொ ப வருகைக்கு நன்றி

Anonymous said...

Madam avarkalea...

Delhila irukkura penkalkku ethavathu special aaa research irukaanu paarungulean...
illainnaa naaan pannalaamnu irukean
oru moonu naalu peculiar specimens irukku...:-))))..athula pannalaamnu irukean...
enna solreenga

மங்கை said...

வெள்ளை

நாளைக்கு கல்லூரிக்குள்ள வரனுமா வேண்டாமா...அத யோசன பண்ணு
அப்புறம் நம்ம ஜொ பா சொல்றமாதிரி
தான் ஆகப்போகுது..இத மனசுல வச்சுக்க ராசா...

Hariharan # 03985177737685368452 said...

//பெண்கள் அதிகமா, அவங்க திருப்திக்கு பேசும் போது, அவங்க உடம்பில சுரக்கும் ஒரு வித அமிலத்துனால, ஹெராயின் சாப்பிட்டவுங்க அடையும் உச்ச கட்ட போதை நிலைய போல ஒரு நிலைய அடையறாங்களாம்... //

ஆப்கானிஸ்தான் ஹெராயின் புரொடெக்ஷனில் உலக நம்பர் 1ன்னு இதுவரை நினைச்சிருந்தேன். அது தப்புன்னு இப்போ புரியுதுங்க!

வீட்டுக்கு வீடு ஹெராயின் நம்நாட்டுல தினசை ஹோம் புரொடக்ஷனா உற்பத்தியாகுதே!

மங்கை said...

நன்றி ஹரிஹரன்...

Anonymous said...

Mrs. Mangai...
Inthaanga..ithu padichu nalla siringa...aana..Madam..antha pinootam vishyatha antha specimens kitta mattum solleeraatheenga
Nimmathiyaa velai panna mudiyathungoov..

A husband read an article to his wife about how many words women use a day... 30,000 to a man's 15,000.

The wife replied, "The reason has to be because we have to repeat everything to men...

The husband then turned to his wife and asked, "What?"

Ippo Ok vaangkaaa???..ini naaan nimmathiyaa college kku varalaam illeengkaa???