Tuesday, January 30, 2007

நீங்களும் சாப்பிடுங்க...


மன இருக்கம் அகல இதோ ஒரு நகைச்சுவை அனுபவம்...

சென்ற வாரம் சோனிபட்ல 40 அங்கன்வாடி பணியாளர்களுக்கு நடந்த பயிற்சி முகாம்ல, ஒரு பெண்மணி மட்டும் ஒரு மணிக்கொருதரம் எழுந்து எழுந்து வெளியே போய்ட்டு இருந்தாங்க. அனுமதி கேட்டுட்டு தான் போகனும்ங்குற ஒரு விதி இருக்கிறதுனால, நான்காவது முறை போறப்போ நான், என்ன பிரச்சனை உடம்பு ஏதாவது சரியில்லையான்னு கேட்டேன். ஒன்னும் இல்ல இப்ப வந்தர்ரேன்னு சொல்லீட்டு போய்ட்டாங்க...மதியம் அதே மாதிரி..இந்த தடவை இன்னொரு பெண்ணும் சேர்ந்து போக, சக பயிற்சியாளர்கள் கிட்ட சொன்னேன், இது என்ன கிளாசுல நடுவுல இத்தன தடவை எழுந்து போறாங்க , மத்தவங்க கவனமும் கெடுதுன்னு சொன்னேன். எனக்கு இது கண்டிப்பா கண்டுபிடிச்சே ஆகனும்னு சொல்ல, அதுக்கு அவங்க சரி போய் பார்த்துட்டுவான்னு சொன்னாங்க. அந்த பெண்கள் போனப்புறம், ஒரு நிமடம் கழிச்சு போய்ப்பார்த்தா, ரெண்டு பேரும் முதுகு மட்டும் தெரிஞ்சது...ஒரு மரத்தடியில உக்கார்ந்துட்டு இருந்தாங்க..நான் வருவதை பார்த்துட்டு ஒரு பெண் திரும்பி..வாங்க மேடம்..உங்களுக்கு வேணுமான்னு கேட்க, சரி எதோ பசிக்கு சாப்பிடறாங்க போல, குடுங்கன்னு கேட்டேன்...அப்படி என்னதான் சாப்பிடறாங்கன்னு பார்க்க ஆர்வம் எனக்கு...ஹி..ஹி..அப்புறம் வச்சாங்க பாருங்க என் கையில...என்ன தெரியுமா பீடி.... அடப்பாவிங்களா..இதுக்குத்தான் வந்தீங்களான்னு அத வீசி எரிஞ்சுட்டு பேசாம வந்துட்டேன்... ஒரு வேளை எனக்கும் அந்த பழக்கம் இருக்கும் போலன்னு நினச்சுட்டாங்க....:-)))).....

கூட வந்த பயிற்சாளர்கள கேட்டா, அவங்க ஸ்மோக் பன்ணதான் போறாங்கன்னு தெரியாதா?..கேட்டுருந்தா சொல்லியிருப்போம்லனு சொல்லி என்ன வச்சு காமடி பண்ணிட்டாங்க.....

அன்னைக்கு பூரா சர்ப்ரைஸ்..சர்ப்ரைஸ்

21 comments:

Anonymous said...

என்னது ஒரு மணிக்கொரு பீடியா! சூப்பரு. நல்ல வேளை...கையில ஒரு கண்ணாடி டம்ளரைக் குடுக்காம இருந்தாங்களேன்னு சந்தோசப்படுங்க.

அதென்ன ஆங்கன்வாடி?

Unknown said...

வடநாட்டு லேடீஸ் வெறும் பீடிதானா ? எங்க ஆயாவே சுருட்டு ஸ்மோக்கர்...:)))))))))))

Anonymous said...

அதென்ன ஆங்கன்வாடி? ???

மற்றபடிக்கு :))))

சென்ஷி

மங்கை said...

Ragavan..

நம்ம கிரமாத்தில எல்லாம் ICDS திட்ட பணி நடக்குதில்ல அது தான்.. integrated child development scheme.. சத்துணவு கூடம்னு சொல்லுவாங்க... இவங்க மூலமா தான் அரசின் நிறைய திட்டங்களின் கடைநிலை மக்களை சென்று அடையுது..

வாங்க ரவி...:-)0).. உங்க ஆயா மட்டும் இல்ல...வேணாம்.. அத நான் இங்க சொல்ல மாட்டேன்...

Anonymous said...

நல்ல சிரிப்பு!

பகிர்ந்தமைக்கு நன்றி மங்கை!

Anonymous said...

:)))))) மங்கை ஆசை ஆசையா கொடுத்திருக்காங்க, இப்படி தூக்கித் தூர போட்டுட்டீங்களே!! :)))

மங்கை said...

சென்ஷி
உங்க கேள்விக்கு பதில் மேலே.. நன்றி

நன்றி மாசிலா...

பொன்ஸ்

ட்ரை பண்ணலாங்கரீங்களா.. அடுத்த முறை வாய்ப்பு கிடச்சா விடறதில்ல
:-)))))....

Anonymous said...

மங்கை,

Ha Ha Ha ..

நல்ல ஜோக்..

உண்மையின் நீங்க பாவம்..

Anonymous said...

தம்மடிக்கும் தாய்க்குலங்களை எள்ளி நகையாடும் இப்பதிவினை கண்டிக்கிறேன்.

இது குறித்து தம்மடிக்கும் தாய்க்குல சங்கத்தில் தங்கள் மீது புகார் கொடுக்க உரிய நடவடிக்கைகளை துவக்கியுள்ளேன்

அன்பன்
தம்மடிக்காத பங்காளி

மங்கை said...

ஹி ஹி...துவக்குங்க துவக்குங்க

பார்த்து சாமியோவ்...சங்கத்து தாய்க்குலங்கள் எல்லாம் சேர்ந்து தம்மடிக்காத பங்காளியின் தவத்த கலச்சிட போறாங்க..:-)))

துளசி கோபால் said...

'பீடி' ன்னு எழுதுறதையே மகா கேவலமா நினைக்கும் ஒருத்தர் நம்ம குடும்பத்துலே இருக்காங்க:-)

ஆனா சிகெரெட்டைவிட பீடி பரவாயில்லைன்னு இங்கே ஒரு நண்பர் ஆராய்ச்சி செஞ்சு சொன்னார். அவருக்காக இந்தியாவிலெ இருந்து 'பீடி' வாங்கி வந்தோம் முன்னொரு காலத்தில்:-)


அடுத்தமுறை ச்சான்ஸ் கிடைச்சால் வுட்டுறாதீங்க :-))))

துளசி கோபால் said...

ஆங்......... சொல்ல வுட்டுப்போச்சு.
பிஜித்தீவில் ஹிந்துஸ்தானிகள் குடும்பங்களில் பழைய ஜெனெரேஷன்
பாட்டிகள் 'பால்மால்' சிகெரெட் ஊதுவதைப் பார்த்து வா பொளந்து நின்னுருக்கேன்:-)

Anonymous said...

//அன்னைக்கு பூரா சர்ப்ரைஸ்..சர்ப்ரைஸ் //

இன்னும் ஏதாவது இருக்கா?!!
:))

Anonymous said...

ஹிஹிஹி... :)))))நல்ல நகைச்சுவை.


/*மன இருக்கம் அகல */

இறுக்கம் or இருக்கம்?

மங்கை said...

SK...//இன்னும் இருக்கா//..:-)))

வாங்க வெற்றி... நம்ம பதிவுல உங்களுக்கு வேலை நிறைய இருக்கும்
:-)))..
( நீங்க தமிழ் மறக்காம இருந்தா சரி..)

மங்கை said...

நன்றி சிவா..துளசி

மங்கை said...

சோதனை

பங்காளி... said...

என்ன ஆச்சு பின்னூட்டம் பூரா அங்கங்க ஜிலேபிய பிச்சி பிச்சி போட்டு வச்சிருக்கீங்க...ஹி..ஹி..

பார்த்து சுகர் வந்துடபோவுது.

மங்கை said...

ஹ்ம்ம்ம்...கிண்டல்???...
என்ன பண்ண...நம்ம எடிட்டர் ஒழுங்கா வேலை பார்க்க மாட்டேங்குறார்...

சினேகிதி said...

Sinthanathi inaipu kuduthu irukirar ungada intha pathivuku
(http://valai.blogspirit.com/archive/2007/02/20/smoking.html)
appo neenga sapidu parkalaya??? :-)

engada appavavum surutu kudikirva munthi.
nalla padam podu irukirar :-)

மங்கை said...

வாங்க சிநேகிதி

நன்றி..நீங்க சொல்லி தான் பார்தேன்...
இப்படி விளம்பரம் கிடைச்சா தான் உண்டு நமக்கு...:-)))...