Saturday, September 23, 2006

எல்லாரும் படிக்கனும்னா,...

ஒரு பள்ளியில் ஆசிரியருக்காக குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்
கடந்த சில ஆண்டுகளில் நம் நாடு கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றங்களை கண்டிறிருக்கிறது. இதில் முக்கியமான முன்னேற்றம் என்று சொன்னால், தொடக்கப் பள்ளியில் சேர்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது தான். 6-14 வயதுடைய சுமார் 200 மில்லியன் குழந்தைகளில் 80% குழந்தைகள் ஏதாவது ஒரு கல்வி முறையில் (விதிமுறையான-formal அல்லது முறைசாரா-non-formal education) சேர்ந்து படித்து வருகிறார்கள்.

அனால் ஒரு முழுமையான கல்வி தொழில்நுட்ப கொள்கை இல்லாத காரணத்தால், இன்று கல்வியின் தரம் வேண்டிய அளவு உயரவும் இல்லை, முழுமையாக கடைநிலை மக்களை போய் சேரவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்த புதிய தொழில் நுட்பங்களின் அவசியத்தையும் நாம் இன்னும் முழுமையாக உணரவில்லை. இதன் காரணமாக அரசு மேற்கொள்ளும் பல் வேறு திட்டங்கள் பயனில்லாமல் போகிறது.

குழந்தைகளின் சேர்க்கை தொடக்க கல்வியில் அதிகரித்திருந்தாலும், இவர்களில் 52% பேருக்கு, 8 ஆம் வகுப்பிற்கு பின்னர் படிப்பை ஏதாவது ஒரு காரணத்தினால் தொடரமுடியாமல் போகிறது. மீதம் இருக்கும் 48% குழந்தைகளின் attendance rate சராசரியாக 75% தான். அரசின் கணக்கெடுப்புப்படி 5ஆம் வகுப்பு வரை தேறும் மாணவர்களில் 28% பேர் தான் பாடங்களில் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். மற்றவர்களின் கல்வி தரம் கவலை அளிக்ககூடியதாகவே இருக்கிறது. தொண்டு நிறுவணம் ஒன்று மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சியின் மூலம் 7-14 வயதிற்கு உற்பட்ட மாணவர்களில் 35% பேருக்கு பாடத்தில் ஒரு சாதாரண பத்தியை கூட படிக்க முடிவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இத்தனை நிதி ஒதுக்கீடு செய்து, திடங்கள் வகுத்து, அதில் இத்தனை பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று மார் தட்டி என்ன பயன்.

நம் கல்வியின் தரம் திருப்தியாய் இல்லாததற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வகுப்பில் அளவுக்கு அதிகமான மாணவர்களும் ஆசிரியர் பற்றாக்குறையும் முக்கியமான காரணங்கள்.நம் நாட்டின் சராசரி ஆசிரியர் மாணவன் விகிதம் 40:1 ஆக இருந்தாலும், பீஹார் போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் 84:1 ஆகவே இருக்கிறது. பள்ளிகளுக்கு குழந்தைகள் வந்தாலும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவருகிறது சில பள்ளிகள்.14% தொடக்க பள்ளிகளும் 3% உயர் தொடக்க பள்ளிகளும் ஒரே ஒரு ஆசிரியிராலேயே நிர்வகித்து நடத்தப்பட்டு வருகிறது.சராசரியாக 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமே பல பள்ளிகள் இயங்கி வருகிறது.இதிலிருந்து அங்கு பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்.
இதில் இன்னொரு வேடிக்கை. உலக வங்கியும், ஹார்வர்ட் பல்கலைகழகமும் சேர்ந்து நடத்திய ஒரு ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, 3700 ( அரசு மற்றும் தனியார் பள்ளிகள்) பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி சென்று சோதனை செய்த போது, 20ல் இருந்து 25 சதவீத ஆசிரியர்கள்களே பள்ளியில் இருந்திருக்கிறார்கள். அப்படியே பள்ளிக்கு வந்தாலும், வந்தவர்களில் 20% பேர் பாடம் எடுப்பதில்லையாம்.இதை எல்லாம் அதிகாரிகள் கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.

அடிப்படை வசதிகளான குடி தண்ணீர், கழிப்பறைகள் போன்றவை சில பள்ளிகளுக்கு இன்னும் ஒரு கணவாகவே இருந்து வருகிறது. 16% பள்ளிகளில் குடி தண்ணீர் வசதி கூட இல்லாமல் இயங்கி வருகிறது. 51% கழிப்பறைகள் இல்லாமல் இருக்கின்றன. மற்றொரு உண்மை 7% பள்ளிகள் கரும்பலகை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல.

இது போல வசதியின்மை காரணிகளாக இருந்தாலும் போதிய பயிற்சி பெறாத ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் அடிக்க கையில் குச்சியுடன் திரியும் ஆசிரியர்களை நாம் பார்கிறோம்.32% ஆசிரியர்கள் போதிய பயிற்சி இல்லாமலே ஆசிரியர் பணிக்கு வருகிறார்கள். அடிப்படை பயிற்சி இல்லாத இவர்களிடம் தரமான கற்பித்தலை எவ்வாறு நாம் எதிர்பார்க்கமுடியும்?. உண்மையில் நல்ல திறமையும் ஆர்வமும் உள்ள பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரேமாதிரியான, விறுவிறுப்பில்லாத கற்பித்தல் மாணவர்களை படிப்பில் ஆர்வமில்லாமல் செய்துவிடுகிறது.செயற்திறனும் பயனும் உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களிடையே ஆர்வத்தை உண்டுபண்ணலாம்
கல்வித்துறை நிர்வாகத்தில் நிலவும் பொறுபற்ற தன்மை,அலட்சியம் ஆகியவை மாறவேண்டும். தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், தகுதியும் ஆர்வமும் மிக்க இளைஞர்களை கொண்டு திட்டங்கள் வகுத்து செயல்பட்டால் இந்தியாவின் கல்வித்தறம் உலக அளவில் முதன்மை பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

21 comments:

மங்கை said...

// It's not a good community .. that city is goodனு ஓடறோமில்ல.. என்னுடைய ஆசிரியர்களும் அப்படித்தான் நினைத்திருப்பார்களோ?//

நீங்க சொல்றதுலேயும் நியாயம் இருக்கு.
ஆனா கிராமத்தில படிச்ச திறமை மிக்க இளைஞர்கள் வாய்புக்காக காத்துட்டுதான் இருக்காங்க. ஆனா இப்ப ஆசிரியர் பணியில இருக்கிறவங்க கூட வேலையை சரிவர செய்றதில்லை..

கிராமத்துல மட்டும் இந்த பிரச்சனை இல்ல,, city ல கூட ஆசிரியர் பற்றாக்குறை தான்.. அதுவும் குறிப்பிட்ட சில பாடங்களுக்கு.. இது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டுக்குமே பொருந்தும்..

நன்றி

மங்கை

ரவி said...

ரொம்ப தெளிவா எழுத ஆரம்பிச்சுட்டீங்க...

நிறைய ரிவ்யூ செய்தீங்களா ???

:)))

சர்வ சிக்ஷா அபியான் விளம்பரத்தில் வரும் ஸ்கூஸ் செலேஹே பாட்டு ரொம்ப பிடிக்கும்...

ஒரு வேளை இவ்ளோ புள்ளைங்க படிக்க வந்ததுக்கு அந்த விளம்பரம் காரணமா இருக்குமோ ?

இல்லை ரெண்டு முட்டையா ?

மங்கை said...

// ரொம்ப தெளிவா எழுத ஆரம்பிச்சுட்டீங்க...//

பாத்தீங்களா ரவி, மனசுல இருந்தது வெளியே வந்துருச்சு.. அப்ப இத்தன நாள் எதோ உளரீட்டு இருந்தனா.. போனா போகுதுன்னு பின்னூட்டீட்டு இருந்திருக்கீங்க??? :-}}

ஹ்ம்ம்ம்ம்.. சரி சரி...

Anonymous said...

அப்படி எல்லாம் கிடையாதுங்க...

கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதிகமா இருக்கும்...ஆங்கில வார்த்தைகள் கலந்திருக்கும்...

இப்போ ஏதோ டெக் ரைட்டரை வைத்து எழுதியமாதிரி இருக்கு..இதுலயும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு...

ஆனா எழுத்துப்பிழை வந்துதான் சுட்டிக்காட்டனும்..

ரவி said...

வணக்கம் மங்கை.

டெல்லியில் நீங்க பன்னீர் குருமா செய்த விஷயம் வந்தது. உங்க மகள் நல்லாருக்காங்களா ? உங்கள் பதிவு எல்லாம் படித்தேன்.நல்ல Improvement.சொல்லிக்கொடுங்க.

மங்கை said...

சுமா நல்லா சொன்னீங்க போங்க
நான் சொல்லிக் கொடுக்கவா.. பலமா சொல்லீறாதீங்க.. ரெண்டு பேரையும் அடிக்க வந்துருவாங்க..

உங்க office ல தான எல்லா சங்கமும் இயங்கி வருது... ஹி ஹி.. அங்க முயற்சி செய்ங்க சுமா

மங்கை

மங்கை said...

ரவி

எழுத்துப் பிழை எல்லாம் கூப்பிடாதீங்க
அவர் ஓடியே போயிடுவார்

siva gnanamji(#18100882083107547329) said...

கல்வித்துறையில புரட்சி பண்ணிட்டாங்க...ஆமாங்க
ஆசிரியர்கள் மாணவர்களுக்காக காத்திருந்த காலம்போச்சு;
ஆசிரியர்களுக்காக மாணவர்கள் காத்திருக்கும் காலமாச்சு.
செலவுக்குறைப்பு எனும் பெயரில்
காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கும்
இந்தப் பாவிகளை எந்தத் தலைமுறை
தண்டிக்கும்?

கோவி.கண்ணன் [GK] said...

///கல்வித்துறை நிர்வாகத்தில் நிலவும் பொறுபற்ற தன்மை,அலட்சியம் ஆகியவை மாறவேண்டும். தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், தகுதியும் ஆர்வமும் மிக்க இளைஞர்களை கொண்டு திட்டங்கள் வகுத்து செயல்பட்டால் இந்தியாவின் கல்வித்தறம் உலக அளவில் முதன்மை பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. //

மங்கை,

கலாம் போன்ற சிறந்த குடியரசு தலைவர்கள் கிடைத்தும், நம் நாட்டின் கல்வித்தரம் இன்னும் குறைந்தே இருப்பது வருத்தம் அளிக்கிறது

மங்கை said...

சிவகாம்ஜி, GK, நன்றி..

//செலவுக்குறைப்பு எனும் பெயரில்
காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கும்
இந்தப் பாவிகளை எந்தத் தலைமுறை
தண்டிக்கும்//

உண்மை தான்... என்ன தான் இருக்கோ அவங்க திட்டத்துல தெரியலை..

மங்கை said...

///புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு....எதுக்கும் இன்னோருவாட்டி படிச்சுட்டு வந்து சொல்றேன்...ஹி..ஹி...//

இதுக்கு நேரடியா சொல்லி இருக்கலாம் சொல்ல வந்த விஷயத்த..இதுக்கு தான் காலைல இருந்து ஆள் இல்லைன்னு பார்த்தேன்...ஹ்ம்ம்ம்ம்ம்

தகவல் தொழில் நுட்பம் உதவியால சில மாறுதல்கள் பண்ணலாம்னு சொல்ல வந்தேன்.. ஆனா..ஹம்ம்ம்.. சரியா சொல்லலைனு இப்ப தான் தெரியுது..ரெண்டு பதிவா போடலாம்னு இருந்தேன்..

மங்கை

Anonymous said...

மங்கை மேடம்

இப்ப எல்லாம் கொஞ்சம் improvement தெரியுது.. தப்பா நினைக்காதீங்க.. எப்படி எழுதினாலும்.. தமிழ் தமிழ் தான்.. எழுதனும்னு ஆர்வம் இருக்கு பாருங்க அது தான் முக்கியம்...நல்ல சிந்தனையோட்டம் இருக்கு உங்க கிட்ட..தொடர்ந்து எழுதுங்க..

G.Ragavan said...

ம்ம்ம்....உண்மைதான்...இந்தியா நகரங்களிலே மட்டும் வளர்கிறது. ஆகையால் சிற்றூர்கள் சீந்தாவூர்களாகவே இருக்கின்றன. அதனால்தான் இந்த நிலை.

கறுப்பி said...

மங்கை

நல்லா எழுதியிருக்கிறீங்கள். நன்றி

Chellamuthu Kuppusamy said...

I think you already said you worked for women selfhelp group. Good work மங்கை !!

மங்கை said...

Ragavan

//ம்ம்ம்....உண்மைதான்...இந்தியா நகரங்களிலே மட்டும் வளர்கிறது. ஆகையால் சிற்றூர்கள் சீந்தாவூர்களாகவே இருக்கின்றன. அதனால்தான் இந்த நிலை.

நன்றி...

ஆனா ராகவன்...நகரங்களிலேயும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்யுது.
ஆசிரியிர்கள் வேலை நேரத்தில சைட் பிஸினஸ் பன்றது ரொம்ப சாதாரணம்.
கிராமத்துல அடிப்படை வசதியும் இல்லை ஆசிரியிரும் இல்லை

மங்கை

மங்கை said...

கறுப்பி

நன்றி....

மங்கை said...

//I think you already said you worked for women selfhelp group. Good work மங்கை !!//

ஆமாம்.. எச்ஐவியால பாதிக்கப்பட்ட பெண்களின் சுய உதவிக்குழு

நன்றி குப்புசாமி அவர்களே

மங்கை

E said...

பூங்கா இதழில் உங்க பதிவு இடம் பெற்றிருக்கு.. வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்க..

வெள்ளை

செல்வநாயகி said...

மங்கை, நானும் குப்புசாமியின் பதிவில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய இடுகையொன்றில்தான் உங்களின் பின்னூட்டத்தை முதன்முதல் பார்த்தேன். "இந்தமாதிரியான விழிப்புணர்வுப் பதிவுகளும் அதில் களப்பணியாற்றியவர்களும் கருத்துப் பகிர்வதும் தமிழ்மணத்தில் பார்க்க மகிழ்ச்சி" என்று அங்கு பின்னூட்டியதாக நினைவு.



///நல்ல சிந்தனையோட்டம் இருக்கு உங்க கிட்ட..///
உங்களின் பல பதிவுகளையும் படித்தபிறகு நானும் இதையே வழிமொழிகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

மங்கை said...

செல்வநாயகி...

பாராட்டியதிற்கு ரொம்ப நன்றி செல்வநாயகி அவர்களே

அன்புடன்

மங்கை