''அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்''
மருத்துவ துறையின் முன்னேற்றத்தாலும், ஆராய்ச்சியின் பயனாகவும், மனிதனின் ஆயுட்காலம் இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. முப்பது களில் 32 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் இன்று 64 ஆக உயர்ந்திருப்பது, இந்த நூற்றான்டின் ஒரு சாதனை. ஆனால் ஆயுட்காலம் அதிகரித்தால் மட்டும் போதுமா?
இந்த அவசர உலகத்தில, வேலை வாய்ப்பு, குழந்தைகளின் படிப்பு, வசதி வாய்ப்பு போன்ற காரணங்களால சொந்த ஊர விட்டு, அப்பா அம்மாவ விட்டு வேற ஒரு இடத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் நம்மில் பல பேருக்கு இருக்கு. புதிய சூழ்நிலையில நாம செய்யற சில compromises அவங்ககளால செய்ய முடியறது இல்லை.ஒரே ஊர்ல இருந்தாலும், குறைந்து கொண்டே இருக்கும் சகிப்புத்தன்மை இன்னிக்கு பல முதியோர் இல்லங்கள வளர்த்திருக்கு.
இங்க நான் ஒரு உண்மை சம்பவத்த சொல்றேன்..
ரவி, அவங்க வீட்ல ஒரே பிள்ளை. எங்களுக்கு தெரிந்து அவர் அவரோட அப்பாகிட்ட பேசினது இல்லை. அப்பாக்கு அளவுக்கு அதிகமான முன் கோபம். அம்மா ஒரு பள்ளியில் ஆசிரியை. நல்ல வசதியான குடும்பமானதால, அவங்க அம்மாக்கு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் இல்லை. ரவிய நல்லா கவனிச்சகனும்னு வேலைய ராஜினமா பண்ணீட்டு வீட்ல இருக்க ஆரம்பிசாங்க. ரவி படிப்ப முடிச்சுட்டு Oreital Insurance ல வேலைக்கு சேர்ந்தார். திருமணம் செய்துட்டு அப்பா அம்மாவோட நல்லா இருந்தார். சென்றமுறை கோவையில வேலை நிமித்தமா ஒரு முதியோர் இல்லத்துக்கு போக வேண்டி இருந்துச்சு. நல்ல வசதியானவங்க இருக்கும்,முதியோர் இல்லம். அங்க ரவியோட அம்மாவ பார்த்தேன். எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. "சரிபட்டு வரலை அதனால நானா ஒதுங்கிடேன்னு" சொன்னாங்க.. இங்க எனக்கு எந்த குறையும் இல்லைனும் சொன்னாங்க. இவங்களுக்கே இந்த நிலமைன்னா பேச்சு வார்த்தையே இல்லாம இருந்த அவங்க அப்பா எங்க இருக்கார்னு கேட்டேன்..அதற்கு அந்த தாய்,அவர் ரவி கூட தான் இருக்கார்னு சொன்னாங்க.. அவர் எல்லாத்தையும் சகிச்சுப்பார்.. என்னால முடியாது.. அதனால....இங்க வந்துடேன்னாங்க. என்னால நம்ப முடியலை..
எப்படியாவது ரவியவும் அவங்க அப்பாவையும் பார்கனும்னு அங்க போனேன்..ரவிய பார்த்து, எண்ணண்னா இது அம்மா அங்க இருகாங்க..நல்லாவா இருக்குன்னு கேட்டேன்... வாம்மா தாயே! நீ தான் பாக்கி, இத கேக்குறதுக்குதான் டெல்லியிலிருந்து வந்தியான்னு சலிச்சுட்டு..அம்மா கிட்டே எத்தனையோ சொல்லி பார்த்தேன்.. கேக்கலை னார்.. அவங்க அப்பாவ பார்க்க பயந்திட்டே அவர் அறைக்கு போனேன்.. அவர் சொன்னது தான் இன்னும் என் மசைல அப்பிடியே இருக்கு.. சின்ன வயசில அவனுக்கு அப்பாவா இருந்து நான் ஒன்னும் செய்யலை.. இப்ப பேரக் குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல தாத்தாவா இருக்க ஆசை படறேன்... சில சங்கடங்கள் இருந்தாலும் அது எல்லாம் நான் பெரிசு பண்ண விரும்பலைன்னார்.. அறியா வயசில என்னை அவன் சகிச்சுட்டான்...இந்த வயசில நான் அனுசரிச்சு போகலைன்னா,நான் இருந்து பிரயோஜனம் இல்லைன்னார்.. நல்ல மருமக, துரு துருன்னு பேரக்குழந்த்தைகள்..இது எல்லாத்தையும் விடவா நம்ம கோவமும் பிடிவாதமும் முக்கியம்?..ஆனா சாந்தாக்கு (ரவியின் அம்மா) நாம இத்தன பண்ணோம் நம்ம பேச்சு கேக்கமாடேங்கறான்னு ஒரு கோவம்... எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை.. அவ நிம்மதியா இருக்கா.. இருக்கட்டும்னு சொன்னார்.. 15 வருடத்திற்கு முன்ன இவர் கிட்ட நாங்க எல்லாம் பேச கூட பயந்துப்போம்.. அவரா இவர்னு ஆச்சிரியமா இருந்துச்சு... இப்பவும் ரவியும் அப்பாவும் அவ்வளவா பேசிக்கிறது இல்லை..ஆனா இரண்டு பேருக்கும் பாசம், பரிவு, மரியாதை இருகுங்கிறத உண்ர்ந்தேன்
ரவி, அவங்க அம்மா, இரண்டு பேர் கிட்டேயும் சகிப்புத்தன்மை இல்லை... பிள்ளைகள் பெரியவர்களான பின் வீட்டு பொறுப்ப அவங்ககிட்ட கொடுக்க சில பெற்றோருக்கு மனசு வருவதில்லை.. பிள்ளைகள், நில புலன்,வீட்டு பொறுப்பு என்று, எல்லாத்து மேலேயும் ஒரு possessiviness.
பிள்ளைகளும் ஒரு முடிவு எடுக்கும்போது மரியாதைக்காகவாவது பெரியவர்களை கேட்கவேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் முடிந்த அளவு நேரம் ஒதுக்கி பேசிக்கொண்டிருந்தால் அவர்களும் தாங்கள் தனிமை படுத்தப்பட்டதாக நினைக்க மாட்டார்கள்
இது எல்லாம் இன்னைக்கு எதுக்குன்னு கேக்கறீங்களா
முதியோர்கள் தினம்
Age does not protect some one from love,
but love to some extent protects us from age
44 comments:
பதிவு நல்லா இருக்குங்க மங்கை. ஆனா தமிழ்மணத்தில் சிவகுமாரின் சல்தா ஹையும் இதுவும் வரிசலா பார்த்ததும் என்னடா எல்லாரும் இப்படி வயசாகிட்ட மாதிரி பதிவா போடறாங்களேன்னு தோணிச்சு :)
பொன்ஸ்....
பதிவு நல்லா இருக்குங்க மங்கை..
முதல் முதலா வந்து இருகீங்க..நன்றி பொன்ஸ்..
மங்கை
நீங்கள் அவர்கள் மேல் வைத்து இருக்கும் மரியாதை...ஹ்ம்ம்ம்.. இந்த உணர்வுதான் முக்கியம் சதயம் அவர்களே
//மனதை பிசைகிற,பாரமாய் உணர்கிற தருணமிது//
sorry..என்ன சொல்வது என்று தெரியவில்லை..நம்மில் பல பேருக்கு இதே நிலமை தான்.. ஒன்றும் செய்ய முடியாமல் தான் இருக்கிறோம்..
பெற்றோரின் பாசத்தை/ வாழ்க்கையை, வழிகாட்டியாக கொண்டு வாழும் உங்களை போல உள்ளவர்களை பார்த்தால் மனதிற்கு நிறைவாக உள்ளது
// அநேகமாய் இங்கே வலையுலகில் உங்கள் பதிவுகளை கிண்டல் செய்கிற ஒரே ஆசாமி நாண்தான். இந்தமுறை...ம்ம்ம்ம்...நல்லபதிவு மங்கை.....ஒரே ஃபீலிங்ஸாயிடுச்சி....ஹி..ஹி//
காலையில வந்த ஒரு போன்கால் தான் அதே ஃபீலிங்ஸோட இந்த பதிவ எழுத என்ன தூண்டுச்சு
ஹ்ம்ம்ம்..வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம்
பாராட்டுக்கு நன்றி சதயம்..
மங்கை
மங்கை,
நான் ஒரு முறை இது சம்பந்தமா ஒரு பதிவு போட்டிருந்தேன். ஆனால் நீங்கள் என் கோணத்திலிருந்து மற்றொரு முறையில் அதே பிரட்சினையை அணுகியிருக்கிறீர்கள். நன்று.
இந்த Possessiveness எல்லா அம்மாக்களிடமும் இருப்பது தவிர்க்க முடியாததது என்றே நினைக்கிறேன். எல்லோருக்கும் அந்த மனப்பாங்கு விட்டுக்கொடுத்துப் போதல், இன்னுமொரு பெண் வந்தவுடனேயே என்பது கொஞ்சம் கடினம்தான். ஏனெனில் அது போன்ற எதிர்பார்ப்பில் தன்னை வைத்துக்கொள்ளததும் ஒரு காரணமாக இருக்கலாம். கஷ்டம்தான்.
இதனைப் பொருத்து இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். ரவியின் அப்பாவிற்கு பிரட்சினை ஒன்றும் கிடையாது. ஏனெனில் அவரின் அந்த guilty உணர்வே தனது கடைசிகாலத்தில் அவர் தன் வாயலே ஒத்துக்கொண்டது போல அந்த Realizationயை கொண்டு வந்தது எனலாம். ஆனால், அம்மாவின் நிலையோ வேறு. பாவம்.
சரி என்னுடைய பதிவின் சுட்டி முதுமை ஒரு சாபக்கேடா...?
நல்ல பதிவு.
நன்றி
தெகா
உங்க பதிவ படிச்சேன்..ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க
பெற்றோர் நம் நலனுக்கு குறுக்கே வரமாட்டார்கள்... ஆனால் அருகில் இருக்க வேண்டிய சமயங்களில் நாம் அங்கு இருக்க முடிவதில்லை... இது தான் நம் மனதிற்கு பாரமாய் இருக்கிறது..
//அவர்களுக்கென்று கனவு இருந்திருக்காதா//
நீங்கள் சொன்னது போல் எல்லா பெற்றொருக்கும் இந்த கணவு இருக்கத்தான் செய்யும்..
//நம் குழந்தை நாம் எப்படி இச் சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதனை role model-ஆக நம்மை வைத்துதானே பார்த்துக் கற்று கொள்கிறது//
இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் போது தெகா அவர்களே..
ரவியின் அம்மா முதியோர் இல்லத்தில போய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை... நல்ல மருமகள்.. இப்போது மனம் திருந்தி பாசத்துடன் இருக்கும் கணவன்..
ஹ்ம்ம் அவர் மனதில் என்ன தான் இருக்கோ தெரியவில்லை..
மங்கை
மங்மை அது எப்படிங்க சுட்டி கொடுத்த உடனேயே போயி படிச்சுட்டு ஒரு அருமையான பின்னூட்டமும் கொடுத்திடுறீங்க.
என்ன பண்ணறது அடுத்தவர் கனவுகளின் விலையில் நம்முடைய கனவுகள் நனவாகின்றன. எதார்த்தாம் அது தானே மங்கை?
இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாம் நமது பெற்றோர்கள் விசயத்தில் கருணையுடன் நடந்து கொள்ளலாமென்று எனக்குப் படுகிறது, அவர்கள் நம்முடன் வாழும் காலத்திலேயே... அவர்கள் இறந்த பிறகு அவர்கள் இப்படி, அப்படி என்று பேசுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இன்று, நன்று அதுதான் நம்ம பாலிசி :-)
//ரவியின் அம்மா முதியோர் இல்லத்தில போய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை...//
அதுதான் அம்மா... எந்த பாசம் பெரிசு :-)) A Tug of War, it is happening from time imemmorial, I guess!!
//Sivabalan said...
நல்ல பதிவு//
நன்றி சிவபாலன் அவர்களே
மங்கை
எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு என்று எழுதியிருக்கிறார் கவியரசர். எல்லாருக்கும் அது பொருந்தும் போல. கொஞ்சம் சகிப்புத்தன்மை இருந்தாலே நல்லபடியாக ஒன்றாக இருக்கலாம். பிரிவு என்பது கூட வேறு வழியே இல்லை என்ற நிலையில் மட்டுமே வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
தெகா
நீங்க சொன்னது தான் உண்மை.. சில excuses சொல்லீட்டு காலத்த கடத்தீட்டு இருக்கோம்.. நம்ம ஊர்ல, நாம வளர்ந்த இடத்தில கிடைக்கிற ஒரு relaxation, மனநிறைவு புது இடத்தில இருக்கிறதில்லை...
சில பேருக்கு சொந்தபந்தம், பெற்றோர், இவர்களை விட்டு தள்ளி இருப்பது தான் நிம்மதியை தருது.. மனக்கசப்பிற்கு காரணம் யாராய் இருந்தாலும் பல சமயங்களில ஒன்னும் செய்ய முடியாம தான் போகுது..
//அவர்கள் இறந்த பிறகு அவர்கள் இப்படி, அப்படி என்று பேசுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது//
சரியா சொன்னீங்க..
இதுல பிரயோஜனமும் இல்லை.. அந்த பாசம் உண்மையாகவும் இருக்க முடியாது..
கவுண்டமணி படத்தில சொன்ன மாதிரி.. உயிரோட இருக்கப்போ பச்ச தண்ணி கூட கொடுக்கிறதில்லை.. செத்த பின்ன வடை பாயஸம் செஞ்சு சாப்பிடறது தான் இன்னைக்கு பல இடங்களில நடக்குது..
நன்றி தெகா..
இன்னைக்கு எல்லாருக்கும் ஒரே ஃபீலிங்ஸ்
இது போல பகிர்ந்துக்கிறது மனசுக்கு இதமா இருக்கு...
தீபாவளிக்கு கோவைக்கு போலாம்னு டிக்கெட்டும் எடுத்தாச்சு
ஹி ஹி ஹி இன்னைக்கு காலையில இருந்து அந்த டிக்கட்ட பல தடவை எடுத்து எடுத்து பார்த்திட்டேன்.. அந்த டிக்கெட் எடுத்ததலிருந்தே count down start ஆயிறுச்சு..
ராகவன்...
//கொஞ்சம் சகிப்புத்தன்மை இருந்தாலே நல்லபடியாக ஒன்றாக இருக்கலாம்//
உண்மை ராகவன்...இத தான் எதிர்பார்கிறோம்..
பிரிவுக்கான காரணத்த கூட நம்ம வசதிக்கு மாத்திக்கிறோம்... என்ன பண்ண, எல்லாரையும் அனுசரிச்சு போக வேண்டி இருக்கு... ஹ்ம்ம்ம்
நல்ல பதிவு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை, ஒவ்வொரு எண்ணம். அதிலும் இந்த வயசு இருக்கே.........
இளவயசு .. சொன்ன பேச்சைக் கேக்'காது'
நல்ல பதிவு மங்கை.
துளசி, வைசா
//இத்தகையோருக்கென்று இயங்கும் சில தொண்டு நிறுவனங்கள் வாரத்தில் ஒரு நாளேனும் இந்நிலையிலுள்ளோரை ஒரு இடத்துக்குக் கூட்டி வந்து சில மணிநேரமேனும் அவர்கள் ஒருவரோடொருவர் பேசி மகிழ்ந்து இருக்க வழி செய்கிறார்கள். அவசர உலகில் வயதானவர்கள் நிலை இப்படிப் போகிறது//
கேக்கவே கஷ்டமா இருக்கு...
நன்றி
நிறைய அனுபவம் இருக்கு போல உங்களுக்கு...
பெற்றவங்க அன்பும் ஆதரவும் வேனும்னு நினைக்கறவங்க அருகில இருக்க முடியறதில்லை.. அருகில இருக்கவங்களுக்கு அவங்க பாசம் கண்ணுக்கு தெரியமாட்டேங்குது.
ஹ்ஹ்ம்ம்ம்...
மனசுக்கு கஷ்டமா இருக்கு மங்கை
சதயம் சொன்னது தான் நானும் சொல்றேன்... நினச்சா மனச பிசையுது
நல்ல பதிவு...எல்லாருக்கும் ஃபில்ங்ஸ் வரவச்சிடீங்க
சுரேஷ்
.//..ஹி..ஹி..இத்தனை வயசாயும் எனக்கு சுத்தமாய் பொறுப்பில்லையாம்...ஹி..ஹி...சந்தோஷமாய் கேட்டுக் கொண்டிருக்கிறேன்...//
சதயம் அவர்களே...
இன்னும் நீங்க TCE ல தான படிச்சுட்டு இருக்கீங்க..ஹி ஹி ஹி.
//இந்த நிமிடத்தில் அவர்களோடு மகிழ்ச்சியாக இருக்க முனைவதே புத்திசாலித்தனமாய் தோணுகிறது//
அந்த குடுப்பினை கூட சிலருக்கு இல்லை.ஹ்ம்ம்ம்ம்..:-((
மங்கை
ரொம்ப நல்ல பதிவு மங்கை.
ரொம்ப நன்றி விடாது கருப்பு அவர்களே...
மங்கை
மங்கை தெ.கா சொல்வது போல் நானும் இப்போது வருந்துகிறேன். என்ன பயன்.பெண்களுக்கு என்று சில வரைமுறை இருக்கிறது.
மரபு மீறி என் அம்மாவும் இங்கே வர முYஅற்சிக்கவில்லை. நானும் அம்மா இங்கெ வா என்று கூப்பிடவில்லை.
வாய் கிழியப் பேசும் சில விஷயங்களில்
அம்மா வருவதே இல்லை.
மற்ற முதியோரிடம் காட்டும் பரிவு , வாய் வார்த்தை அவர்களிடம் காட்டி இருப்பேனா என்பது சந்தேகம். இத்தனைக்கும் பாசமான குடும்பம் தான் எங்களது
நன்றி மங்கை ஒரு நல்ல பதிவுக்கு,.
//என்ன பயன்.பெண்களுக்கு என்று சில வரைமுறை இருக்கிறது//
ஹம்ம்ம்ம்,, உண்மை.. பெண்களுக்கு இது ஒரு மனச்சுமை...
நன்றி வல்லி..
மிக அருமையான பதிவு. இது போன்ற விசயங்களைத் தொடர்ந்து செய்யுங்கள்.
//Kuppusamy Chellamuthu said...
மிக அருமையான பதிவு. இது போன்ற விசயங்களைத் தொடர்ந்து செய்யுங்கள்//
நன்றி குப்புசாமி அவர்களே
பதிவில் வரும் பெயர் கற்பனைதானே...
:))))
என்னோட பெயரை வெச்சி காமெடி கீமடி பண்ணல்லியே :)))
பேசாம வயதான ஆயாக்களை முடிச்சிடுறது நல்லது :)))
ஆயாவை கொல்வது எப்படி ?
மங்கை
நல்ல பதிவு.
அனுசரணை என்பது இரண்டு பக்கமிருந்தும் வரவேண்டியது.
வயதில் கூடி விட்டோம் என்பதற்காக பிள்ளைகள் எம்மை அனுசரிக்க வேண்டும் என்று மட்டும் எதிர் பார்க்காமல், நாமும் அவர்களை அனுசரித்தால் எத்தனையோ பிரச்சனைகள் இல்லாது போய் விடும்.
நல்ல பதிவு மங்கை. சென்னை போன்ற நகரங்கள், பிளாட் குடியிருப்பில் பொழுதுக்கும் அழுது புலம்பும் டீவி தொடர்களுக்கு
முன்னால் உட்கார்ந்துக் கொண்டு மனமும் உடலும் பேதலித்துப் போகின்றன அவர்களுக்கு.
மங்கை, இதில் நான் கவனித்த இன்னொரு விஷயம்- நீங்க சொன்னதேதான் - பல வீடுகளில் ஆண்கள் அதாவது மாமனார்கள் குடும்பத்துடன் அனுசரித்துப் போகிறார்கள். பாலிடிக்ஸ் செய்வது மாமியார்கள்தான்.
///பேசாம வயதான ஆயாக்களை முடிச்சிடுறது நல்லது :)))
ஆயாவை கொல்வது எப்படி ? //
இப்படி எல்லாம் பப்ளிசிட்டி தேடனுமா?
இருந்தாலும் ரொம்ப ஓவர்..
உங்களை எல்லாம்...ம்ம்ம்ம்
//நல்ல பதிவு.
அனுசரணை என்பது இரண்டு பக்கமிருந்தும் வரவேண்டியது//
நன்றி சந்திரவதனா..
உண்மை தான்.. ஆனால் பெரியவர்களிடம் நாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப்போனால் தப்பில்லை என்று நினைக்கிறேன்.
ஹ்ம்ம்ம்
ramachandranusha
நன்றி ... மொழி தெரியாத ஊரில் இதை விட கஷ்டம்...நமக்கே பிடிக்காம இருக்கு... காலில் சக்கரத்த கட்டீட்டு ஓடீட்டு இருக்குற மகன், மகள், மருமகள் கிட்ட ஒன்னும் சொல்லவும் முடியாம தவிக்கும் இவங்க நிலமை!!!..ம்ம்ம்ம் கஷ்டமா இருக்கு
மங்கை
அருமையான பதிவு மங்கை...
சில நேரத்தில ஒன்னும் செய்ய முடியாம குற்ற உணர்வு தான் மேலோங்கி இருக்கு.. ஆனா குற்ற உணர்வு இருக்குன்னு சொல்லி என்ன பயன்..
எதிர்பார்ப்புகளுடனும், ஏக்கங்களுடனும் இருக்கும் உள்ளங்கள் வயதான காலத்தில் ஒதுக்கபடலைத் தங்குவதில்லை.
ரவியின் தந்தைக்கு குற்ற உணர்வை விட கழிவிரக்கமே அதிகம் என நினைக்கிறேன்.
இல்லாவிடில், வயதான காலத்தில், இதுவரை கூட இருந்து அனுசரித்த மனையாள் முதியோரில்லத்தில் தனியே வாட, தான் மட்டும் இங்கே பாசம் அது இது என்று ஜல்லியடித்துக் கொண்டு, கடமையை மறந்திருப்பாரா?
எனக்கு அவர் மீது கோபம்தான்.
பிள்ளை பேரன்களை விடுங்கள்.
கட்டிய கணவனையும் விட்டு செல்லும் அளவுக்கு அந்தத் தாய் முடிவெடுக்க எவ்வளவு தூரம் மனக்கஷ்டப் பட்டிருப்பார்? இப்போதும் என்னவெல்லாம் பட்டுக் கொண்டிருப்பார்?
ரவியின் அப்பாவுக்கு மன்னிப்பே கிடையாது.
சுயநலவாதி.
மன்னிக்கவும் எனது திறந்த கருத்துகளுக்கு.
[சொல்ல விட்டுப் போனது!]
செயலில் இருந்த போது பிள்ளையைக் கவனிக்கவில்லை.
வயதான காலத்தில் மனைவியைக் கவனிக்கவில்லை.
தான், தன் சுகம், அதற்கு ஒரு போர்வை!
அப்போது கண்டிப்பு, வேலை; இப்போது பாசம், கழிவிரக்கம் என்ற ஜல்லி!
எனக்கு இன்னும் ஆத்திரம் அடங்க வில்லை!
Sorry.
அய்யோ SK Sir.. Coooool Down
Sorry எல்லாம் எதுக்கு?...
நீங்க நாலாவது ஆள், அவர் மேல கோவப்படறது....
//தான், தன் சுகம், அதற்கு ஒரு போர்வை//
இது தான் உண்மை...
ஆனால்.. அந்த அம்மா அங்க போய் இருக்கிறத்துக்கு என்ன காரணம்னு தெரியலை... எனக்கு தெரிஞ்சு, ரவியும், ரவியின் மனைவியும் பிரச்சனைக் செய்யக்கூடியவர்கள் இல்லை
ஆனா கண்டிப்பா எதோ இருக்கு..
நன்றி SK அவர்களே
மங்கை
பதிவு அருமை..............
இது குறித்து என் கருத்துக்கள் இங்கே:
http://reallogic.org/thenthuli/?p=196#comment-581
http://reallogic.org/thenthuli/?p=44
நல்லதொரு பதிவு மங்கை இன்று தான் வாசிக்கக்கிடைத்தது
வாங்க பிரபா...நன்றி
நல்ல பதிவு மங்கை. நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு சப்ஜெக்ட். சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொண்டோமானால் பிரச்சனைகளே அற்றுப்போகும்.
கலை அரசன்
சகிப்புதன்மை குறைந்தது தான் இன்றைக்கு பல பிரச்சனைக்களுக்கு காரணம்
நன்றி கலை அரசன்
மங்கை, சகிப்புத்தன்மை இருக்கு,.
சிலசமயம் பெண் வீட்டில் அது நிறையப் பயன்படுகிறது.
பையன் வீடு என்னும் போது,
இங்கேயும் நாம பொறுத்துகிட்டுப் போகணுமா அப்படிங்கற நினைப்புதான். நல்ல பதிவு மங்கை.
//இங்கேயும் நாம பொறுத்துகிட்டுப் போகணுமா அப்படிங்கற நினைப்புதான். நல்ல பதிவு மங்கை//
ஆமா வல்லியம்மா...ஹ்ம்ம்ம் இங்க தான் பிரச்சனை வருது...நன்றி
புரிதல் தான் முக்கியம். அது மிஸ் ஆச்சின்னா... வாழ்க்கை சந்தோஷமானதாக இருக்காது மங்கை.
காட்டாறு
வாழ்க்கை, புரிதல் இல்லாதப்ப தான பாரமா ஆகுது கண்ணம்மா .. ஹ்ம்ம்ம்
மங்கை,
இது பற்றிய என் பதிவையும் பாருங்களேன்.
நல்லதொரு பதிவு. வல்லிசிம்ஹன் கூறியதைப் போல் - மகன் வீடென்னும் போது எதிர் பார்ர்ப்புகள் கூடுகின்றன. மகள் வீடென்றால் எல்லாவற்றிற்கும் சரி என்று போகிறது. உரிமைப் பிரச்னை. என்ன செய்வது. விட்டுக் கொடுக்கும் மனப் பாவம் இரு தலைமுறைக்குமெ குறைந்து விட்டது.
Post a Comment