Sunday, August 15, 2010

உறக்கம் கலைவோம்....

சுதந்திரம்   வந்து 63 வருடம் முடிந்து இன்று அறுபத்தி நாலில் அடியெடுத்து   வைக்கிறோம்.  சாதனைகள், உயரங்கள், உற்சாகமாய் வெளிச்சம் போட்டு காட்டி   பெருமித  முகங்கள், வாழ்த்துக்கள், நாளைய கனவுகள் பற்றி உரக்க பேசி  சந்தோஷப்   படுகிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது பார்ப்பதற்கும்,    கேட்பதற்கும்.


இந்த   இடத்தில் ஒரு பழைய சம்பவம். வருடம் 1923, சேரன்மாதேவியில் உள்ள  வா.வே.சு   அய்யர் அவர்களின் ஆசிரமம் அல்லது குருகுலம். இதற்கு பொருளுதவி  செய்து   வந்தது அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி காங்கிரஸ் அமைப்பு. தந்தை  பெரியார்   அப்போது அதில் செயலாளர். குருகுலத்தில் ஒரு பழக்கம் தீவிரமாக   கடைபிடிக்கப்  பட்டது. அவர் சார்ந்த சமூகத்தவருக்கு ஒரு பந்தியும்,   மற்றவர்களுக்கு ஒரு  பந்தியுமாய் உணவு வழங்கப் படும். இதை அறிந்த பெரியார்   கொதித்தெழுந்து  எதிர்த்தார். காந்தியடிகளின் காதுக்கும் கூட செய்தி  போனது,  ஒன்றும்  நடக்கவில்லை. வெறுத்துப் போன பெரியார் பதவியை தூக்கி  எறிந்து  விட்டு  வந்தார்.


87 வருடங்கள் ஓடிப் போய்  விட்டது. நமது  சிந்தனைகள் செயல்களில் கூட  பெரிய அளவில் மாற்றம்  வந்திருக்கிறது.அறுபத்தி  மூணு ஆண்டு சுதந்திரம்  நமக்கு தடையில்லாத பேச்சு  மற்றும் எழுத்து  சுதந்திரத்தை கொட்டிக்  கொடுத்திருப்பதனால் புதிய  சிந்தனைகளினால் எல்லா  துறைகளிலும் மிளிர்ந்து  கொண்டிருக்கிறோம்.  இப்படித்தானே எல்லா பக்கமும்  சொல்லிக்  கொண்டிருக்கின்றோம். ஆனால் சமூக நீதி  மற்றும் சாதிய உணர்வுகளில்...?


சமீபத்தில்  உயர்தரக் கல்வியை இலவசமாக வழங்கிவரும் அறக்கட்டளை  ஒன்றின் பள்ளி நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் வாய்ப்பு வந்தது. அந்த பள்ளியில்  சீருடையில் இருந்து,  புத்தகம்,  மதிய உணவு உட்பட  அனைத்தையும்  அறக் கட்டளை இலவசமாய்  வழங்குகிறது. 

பொருளாதார ரீதியில் பின் தங்கிய அந்த பகுதி மக்களுக்கு அதை எத்தனை பெரிய உதவி  என்பதை அறிந்து  மகிழ்ச்சி அடைந்தேன். ஆசிரியர்களும்  ஊழியர்களும்  குழந்தைகளை அக்கறையுடனும் கவனித்துகொண்டு முழுஈடுப்பாட்டுடன்  இருப்பதை  பார்த்து எனக்குள் திருப்தியும், நிம்மதியும் ஆன ஒரு  உணர்வும் ஏற்பட்டது. அந்த சூழலில் என் மனதிற்கு  உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிட்டியது  என்பது உண்மை.


மதியம்   குழந்தைகளோடு நானும் உணவருந்திக் கொண்டிருந்த போது சில குழந்தைகள்    மட்டும் தாங்கள் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்திருந்ததை கவனித்தேன். அத்தருணத்தில் அது எனக்குள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.  ஆனால் அந்த குழந்தைகளில் சிலர் பள்ளியில் தரப்படும் உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்பதையும் கவனித்தேன். இரண்டு நாட்களுக்கு பின்னர் தற்செயலாய் அந்த ஊர்காரர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்த மதிய உணவு பற்றி அவர் கூறியபோதுதான் வீட்டில் இருந்து உணவு கொண்டுவரும் செயலின் பிண்ணனி புரிந்தது.


ஒடுக்கப்பட்ட   சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும், மேல் ஜாதி என தங்களை  நினைத்துக்   கொள்வோரின் குழந்தைகளுக்கும் ஒரே தட்டில் உணவு  பரிமாறப்படுவதால், மேல்ஜாதி   பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான உணவினை  தனியே கொடுத்தனுப்புகின்றனர்   என்றார் அவர்.


 தீண்டாமை!, சொல்வதற்கே வெட்கமாய்த்தான்   இருக்கிறது. அறுபத்தி நாலு ஆண்டு  சுதந்திரத்திற்குப் பின்னரும் நகர்புறம்   தாண்டிய அந்த பகுதி மக்களின்  எண்ணங்களும் பார்வையும் என்னவோ இன்னமும்   அபப்டியே தான் இருக்கின்றன. எத்தனை  பெரியார்கள் வந்தென்ன?, போயென்ன?


 எட்டாக்கனியாக   இருக்கும் கல்வியை எளிதாக்க யாரோ ஒரு நற்சிந்தனையாளர்  தேவையின்   அடிப்படையில் மகத்தான சேவையினை செய்து வந்தால் அதிலும் நம் சாதிய  ஒடுக்கு முறை புத்தியை காட்டி பிரிவினையை உண்டு பண்ணும் நம் சமூகத்தை என்ன  வென்று   சொல்வது. சீரான சமூக பழக்கவழக்கங்களை  இலக்காக்கி மனிதனை மனிதனாக   மதிக்கும்  நாகரீகத்தை வளர்க்கும் ஒரே இடம் பள்ளி தான்.  மதிப்பீடுகளில்   சாதியும்  மதமும் வரக்கூடாது என்பதை வலியுறுத்தவும்  ஒழுக்கத்தையும்   சகிப்புத்தன்மையும் வளர்க்கவும் வகுப்பறையே ஏதுவான இடம். 


அக்குழந்தைகள்   கண்டிப்பாக தங்கள் பெற்றோர்களை காரணம் கேட்டிருப்பார்கள் எதற்காக  தாங்கள்   மட்டும் பள்ளியில் சாப்பிடக்கூடாது என கேட்காமல்  இருக்கப்போவதில்லை.   அப்பெற்றோர்களும் உண்மையான காரணத்தை பெருமிதத்துடன்  சொல்லாமல்   இருக்கப்போவதில்லை. இது எந்த வகையான ஒரு தாக்கத்தை, எண் ஓட்டத்தை அந்த  பிஞ்சின்   மனதில் ஏற்படுத்தும்?


குழந்தைகளுக்குள் எந்தவித   வேறுபாடுகளும் இல்லை. பள்ளியில் சாப்பிடும்  தட்டில் கூட தீண்டாமையை   கடைபிடிக்கும் இப்பெற்றோகளுக்கு அல்லவா கல்வி  தேவைப்படுகிறது. ஒருவரின்   இருப்பை கேவலப்படுத்தி சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கி என்னோடு சரிசமமாக உட்கார்ந்து   உணவருந்தும் தகுதி உணக்கில்லை என்பதை  முகத்தில் அறைந்து சொல்வது   அவனுக்குள் எப்பேர்பட்ட காயத்தை ஏற்படுத்தும்.  அந்த இடத்தில் நம்மை வைத்து   மனசாட்சியோடு சிந்தனை செய்தால் மட்டுமே அந்த வலி  புரியும். நிராகரிப்பின் வலியை   அனுபவித்தால் ஒழிய புரியாது.ம்ம்ம்ம்


மாணவர்கள் வீட்டில்   இருந்து கொண்டுவரும் உணவை சகமாணவர்களுடன் பகிர்ந்து ஒன்றாக  உண்ண   வேண்டும் என வலியுறுத்துவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.ஐந்தில் வளையாத உடல் மட்டும் அல்ல எண்ணங்களும் ஐம்பதில் வளையாது. விதை ஒன்று    போட்டால் செடி ஒன்று முளைக்காது. விதைகளை அனைத்துச்செல்லும் விருட்சங்களாக    வளர்ப்பது நம் கையில் தானிருக்கிறது.


1924 ல் குருகுலத்தில்   நடந்த அந்த பிரிவினைச் சார்ந்த செயலானது ஒரு குறிப்பிட்ட உயர்  சமூகத்தார் மற்ற    சமூகத்தார் அனைவரின் மீதும் ஏவிய ஒடுக்குமுறை. இன்றைக்கு பெரியார் மாதிரியான சமூக புரட்சியாளர்கள் மீட்டுத் தந்த சமூக நீதியின் நீட்சியாக மேலே வந்த பிற சமூகத்தினர் தனக்கும் கீழான சமூகத்தவன் என மற்ற சமூகத்தினர் மீது அதே வன்முறையினை  நிகழ்த்துகின்றனர். குப்பனும் சுப்பனுமாக வீரம் இழந்து மானம் இழந்து அடிமைப்பட்டு கிடந்தவர்கள் கொஞ்சம் வசதியும், வாய்ப்பும்  வந்தவுடன்  கடந்த காலத்தை மறந்து, சாதீய போதையில் சக மனிதனை மனிதனாக மதிக்க மறுக்கின்றனர்.
  
ஆளப்பிறந்தவர்கள்    என்று கூறிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து  நமக்கு பெரியார்  விடுதலை   வாங்கிக் கொடுத்துவிட்டார். இருப்பினும் அதே ஒடுக்குமுறை உணர்வு  அரசியல்,   கல்வி, பொருளாதாரத்தில் தங்களின் ஆட்சியே இருக்கவேண்டும் என்ற  சுயநல  உணர்வு அடுத்த தட்டு மக்களின் மனத்தில் ஆழமாகப்  பதிந்து விட்டது. 87  வருடங்களுக்கு   பின்னரும் நாம் இதே குறுகிய எண்ண வட்டத்தில் தான்  சுழன்றுகொண்டிருக்கிறோம். இதெல்லாம் பெரியார் மாதிரியான மகாத்மாவிற்கு நாம் இழைக்கும் துரோகம், இதற்காக அனைவருமே வெட்கப் பட வேண்டும்.

சாதீய  கட்டமைப்புகள்,பேதங்கள்,  தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என   சாதியத்தின் பெயரால்  மக்களைப்  பிரித்து ஒதுக்கும் கொடுமையை இன்னும்  எத்தனை நாட்களுக்கு சகித்துக்   கொண்டிருக்கப்போகிறோம்.விடுதலை கொண்டாட்டங்கள் என்பது நமது எண்ணம், செயல், சிந்தனைகளின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து பெருமையடைவதாக இருக்கவேண்டும். இந்த நாளிலாவது அதற்கான உறுதி மொழியினை ஏற்றிடுவோம். சக மனிதனை சாதியின் பெயரால் அவதூறு செய்வதை ஒழித்திடுவோம்

 பிற்சேர்க்கை - பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசிகொண்டிருந்த போது அவர், "அவ்வாறு தனியாக உணவு கொண்டு வருவதை நாங்கள் ஆதரிப்பது இல்லை. சிலர் உடல் நலம் இல்லாமல் இருக்கும்போது வீட்டில் இருந்து கொண்டுவருவார்கள். ஆனால் பெற்றோர் ஆசிரியர் சநதிப்பில் இந்தப் பிரச்சனை வராமல் இருப்பதில்லை. பள்ளியின் கொள்கைக்கும் கட்டுப்பாடிற்கும் கட்டுப்பட்டால் மட்டுமே குழந்தைகளை சேர்த்துக்கொள்வது' என்றார்

34 comments:

டுபாக்கூர் பதிவர் said...

நல்ல பதிவு, முகத்தில் அறைகிற உணர்வு.உணர்ந்து திருந்திட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்....

நாகை சிவா said...

இன்னும் இரட்டை டம்ளர் முறை உள்ளது தானே. இந்த இன/ஜாதி வேறுபாடு இந்தியாவில் மட்டும் இல்லை உலக அளவில் அனைத்து இடங்களில் பரவலாகவே உள்ளது. ஒரே நாளில் இதை மாற்றி விட முடியாது படிபடியாக தான் முடியது. அதற்கு முதல்படியாக நாம் மாற வேண்டும் நம் குழந்தைகளை அந்த எண்ணத்தில் விழாமல் வளர்க்க வேண்டும்.

நாகை சிவா said...

இன்னும் இரட்டை டம்ளர் முறை உள்ளது தானே. இந்த இன/ஜாதி வேறுபாடு இந்தியாவில் மட்டும் இல்லை உலக அளவில் அனைத்து இடங்களில் பரவலாகவே உள்ளது. ஒரே நாளில் இதை மாற்றி விட முடியாது படிபடியாக தான் முடியது. அதற்கு முதல்படியாக நாம் மாற வேண்டும் நம் குழந்தைகளை அந்த எண்ணத்தில் விழாமல் வளர்க்க வேண்டும்.

Santhosh said...

நல்ல பதிவு மங்கை. முன்னாடி பார்த்ததைவிட இப்ப நிலைமை முன்னேறி இருக்கு சீக்கிரமா நிலைமை மாறும் என்று நம்புவோம். சுதந்திர தின வாழ்த்துக்கள்..

கவிதா | Kavitha said...

மங்கைஜி, கிராமங்களில் தான் இன்னும் இது நடைமுறையில் இருப்பதாக தெரிகிறது. நகரங்களில் அப்படி இல்லை, நிறையவே மாற்றம் இருக்கிறது.... கிராமங்களில் தான் மாறவேண்டும், அது சற்றே கடினமான விஷயம்.. மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டம்ளர், தட்டு போன்றவை தனியாக கொடுத்தனுப்பவது என்பது சுத்தம் காரணமாகவும் இருக்கலாம். அலுவலங்களில் சிலர் அப்படி செய்வதை பார்த்து கேட்டும் இருக்கிறேன். சுத்தத்தை தான் காரணமாக சொன்னார்கள்.

தோழி said...

சிந்திக்க வைக்கிற பதிவு!, இனிய சுதந்திர தின வாழ்த்துகக்ள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உணர்ந்து திருந்திட வேண்டியது காலத்தின் கட்டாயம்.//
வழிமொழிகிறேன்.

கோபிநாத் said...

மனமார்ந்த சுகந்திர தின வாழ்த்துக்கள் ;)

நல்ல கருத்துள்ள பதிவு.!

யாரோ ஒருவன் said...

விசயம் இருந்தா மட்டும் போதாது .. இப்ப பல புதியவர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் எழுத்தையும் உங்களின் எழுத்தையும் ஒப்பிட்டு பாருங்க மேடம்..

அப்புறம் கவிதை எழுத முயற்சிக்கலாம்..

கோமதி அரசு said...

நல்ல பதிவு மங்கை.

வாழ்த்துக்கள்!

Thekkikattan|தெகா said...

எழுத்து படிக்கும் பொழுதே சும்மா ஜெட் வேகத்தில அழுத்தமா சொல்ல வந்த விசயங்களை முகத்தில் அறைந்து கொண்டே எடுத்து செல்கிறது.

//ஒருவரின் இருப்பை கேவலப்படுத்தி சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கி என்னோடு சரிசமமாக உட்கார்ந்து உணவருந்தும் தகுதி உணக்கில்லை என்பதை முகத்தில் அறைந்து சொல்வது அவனுக்குள் எப்பேர்பட்ட காயத்தை ஏற்படுத்தும். //

இது எப்படின்னா மங்கை மனித உருவில் எருமைத் தோலை உடுத்தி வந்திருக்கும் முரட்டுச் ஜீவன்கள், எப்படி அந்த அளவிற்கெல்லாம் சென்று சிந்திக்க முடியும். Sensuous being only can put themselves in other shoes and act...

இல்லன்னா, சால்ஜாப்பு ஏதாவது சொல்லிகிட்டு திரிய வேண்டியதுதான்.

Thekkikattan|தெகா said...

//யாரோ ஒருவன் said...
விசயம் இருந்தா மட்டும் போதாது .. இப்ப பல புதியவர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் எழுத்தையும் உங்களின் எழுத்தையும் ஒப்பிட்டு பாருங்க மேடம்..

அப்புறம் கவிதை எழுத முயற்சிக்கலாம்.//

இப்போ என்ன பிரச்சினை இங்கே ... இருந்தாலும் இதை ஒரு சேவையா நினைச்சே செய்றீங்களே, அடுத்தவங்களுங்கு நெகடிவ் எனர்ஜி கொடுக்கிறதிலே உங்க மாதிரி ஆட்களுக்கு எனர்ஜி திரும்பக் கிடைக்கும் போல... நல்லா இருந்தா சரித்தான்.

சென்ஷி said...

சரியான நேரத்தில் இந்திய சுதந்திரத்தின் இன்னொரு முகம் காட்டுகின்ற பதிவு.. படித்தவர்கள் இப்போதெல்லாம் சாதி பார்ப்பதில்லை என்ற சொல்லின் பின்னால் கிராமங்களின் நிலை :((

டுபாக்கூர் பதிவர் said...

//யாரோ ஒருவன் said...
விசயம் இருந்தா மட்டும் போதாது .. இப்ப பல புதியவர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் எழுத்தையும் உங்களின் எழுத்தையும் ஒப்பிட்டு பாருங்க மேடம்..

அப்புறம் கவிதை எழுத //

உங்கள் பின்னூட்டத்தை கவிதை பதிவின் பின்னூட்டத்தில் இட்டிருந்தால் இதை விமர்சனமாய் எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்பே இல்லாமல் இந்த பதிவில் பின்னூட்டம் இடுவதன் மூலம் பதிவின் நோக்கத்தை திசை திருப்பவே இதை செய்திருக்கிறீர்கள் என நம்ப தோன்றுகிறது.

பதிவின் கருத்துக்களை ஜீரணிக்க முடியவில்லையோ!

சென்ஷி said...

// மனமார்ந்த சுகந்திர தின வாழ்த்துக்கள் ;)

நல்ல கருத்துள்ள பதிவு.!

15/8/10 8:39 PM
Anonymous யாரோ ஒருவன் said...

விசயம் இருந்தா மட்டும் போதாது .. இப்ப பல புதியவர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் எழுத்தையும் உங்களின் எழுத்தையும் ஒப்பிட்டு பாருங்க மேடம்..

அப்புறம் கவிதை எழுத முயற்சிக்கலாம்..//

அன்பரே, பதிவர் மங்கையின் எத்தனைப் பதிவுகளை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்.. (சாரு மாதிரி இருக்கோ!?)

இதோ, கவிதை மற்றும் பதிவுலக பிதாமகரே வந்து சொல்லிட்டாரே.. சிறப்பான பதிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லி.. நண்பரே.. நீங்களே தயை கூர்ந்து எது சிறந்த பதிவு என்று ஒப்பிட்டுக்கொள்ளவும் பதிவு உரல் தரவும்..

எங்கெங்கு காணினும் நாட்டாமைகளடா?

கல்வெட்டு said...

.
//க‌விதா...

டம்ளர், தட்டு போன்றவை தனியாக கொடுத்தனுப்பவது என்பது சுத்தம் காரணமாகவும் இருக்கலாம். அலுவலங்களில் சிலர் அப்படி செய்வதை பார்த்து கேட்டும் இருக்கிறேன். சுத்தத்தை தான் காரணமாக சொன்னார்கள். //

காலம் காலமாக தீண்டாமை சுத்தம் என்ற புனிதப்பசுவின் வேடத்தில்தான் இருந்து வருகிறது. சுத்தம் (பசு)என்ற பெயரில் மறைந்து வரும் தீண்டாமை(புலி)யைவிட , பல்லைக் காட்டிக்கொண்டு வரும் கிராமத்து இரட்டை டம்ளர் பிரச்சனைகள் மேல். ஏன் என்றால் இங்கே சொல்ளிவிட்டுச் செய்கிறார்கள். எதிரி யார் என்று தெளிவாகத் தெரியும். சுத்தத்தில் மறைந்து தீண்டாமையில் அது தெரியாது. ஊமை அடி மாதிரி.

இன்னும் படித்த (என்னத்தப் படிச்சாய்ங்களோ) மக்கள் அவர்களின் சாதிய அடையளமாக சில நூல்களை திரித்து உடம்பில் போட்டுக் கொள்கிறார்கள். அதை தெரிந்தே வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் குழந்தைக்கும் செய்கிறார்கள். "ஏன் மற்றவர்கள் போடவில்லை?" என்று குழந்தை கேட்டால் என்ன பதில் சொல்கிறார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம்.

நூல் போன்ற சம்பிரதாயங்கள் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடத்திலும் சாதியப் பாசப்பிணைப்பு உண்டு. ஏன் என்றால் இன்னும் சாதிப் பெயரில்தான் கிந்து (படித்த வெங்காயங்கள்) பேப்பாரில் பெண் /ஆண் தேடுகிறார்கள். பெற்றோர்கள் தீண்டாமை சொல்லி வளர்க்கவில்லை என்றால் உண்மையில் மகிழ்ச்சியே. ஆனால் அதிக சதவீதம் அப்படி இல்லை என்பதே உண்மை. நகரத்திலும் இது நீக்கமற உண்டு ஆனால் வேறு வேறு வடிவங்களில்.


:‍((((


*****

மங்கை,

//இதெல்லாம் பெரியார் மாதிரியான மகாத்மாவிற்கு நாம் இழைக்கும் துரோகம், இதற்காக அனைவருமே வெட்கப் பட வேண்டும்.//

யார் வெட்கப்படுகிறார்கள் வலைப்பதிவுகளிலேயே சாதியின் பெயரை பயன்படுத்திக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.


*****

//யாரோ ஒருவன்
விசயம் இருந்தா மட்டும் போதாது .. இப்ப பல புதியவர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் எழுத்தையும் உங்களின் எழுத்தையும் ஒப்பிட்டு பாருங்க மேடம்..

அப்புறம் கவிதை எழுத முயற்சிக்கலாம்.
//

என்னங்க இது?

இங்க என்ன எழுதி புத்தகம் போடும் முயற்சியா நடக்கிறது?

என்னத்த ஒப்பிடுறது. கோமாளிகள் எழுதும் காலரசனையுடைய அதி நவீன மயக்கும் சினிமா விமர்சன எழுத்துக்களும் அல்லது கூமுட்டைக் கதை கவிதகளுடனா?

நிசம் எனபது இரத்தமும் சதையுமாக கோரமாக இருக்கும். அல்லது இயற்கை போல அழகாய இருக்கும். வலிந்து பவுடர் போடத் தேவை இல்லை. வியாபாரிக்குத்தான் அலங்காரங்கள் தேவை செய்திகளுக்கு அல்ல.

‌பிரச்சனையப் பேசலாம்.

:-(((

***

அவனேதான் said...

வந்துட்டாங்க..வந்துட்டாங்க... ஒரு பொண்ணு பதிவுல ஒரு கருத்து சொல்ல விடமாட்டாங்க... பெண்ணியக் காவலர்கள்... அப்படி மத்தவங்க எழுதாத விஷயத்தை இந்த அம்மா என்ன பெருசா எழுதிட்டாங்க.. என்னமோ இந்த அம்மா நேர்ல எல்லாத்தையும் பார்த்தமாதிரி...

இதுல பெரியார் மகாத்மாவாம்...

Anonymous said...

அப்ப மாகாத்மாவ என்னையா சொலுவாங்க...

மகாத்மாங்குற பேர் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமா போச்சு.....

டுபாக்கூர் பதிவர் said...

எங்களை மாதிரி குப்பனுக்கும், சுப்பனுக்கும் பெரியார் மகாத்மாதான். இதை பெருமையாகவே சொல்கிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

நல்ல பதிவு.

வாழ்த்துகள்

Anonymous said...

சம்பந்தப்பட்ட பதிவரின் பதிலைக்காணோம்...பதிவை எடுத்தடலாம்னு யோசனையோ

மங்கை said...

அனானி ஐயா

பதிவை நீக்கும் எண்ணம் அறவே இல்லை..தேவையும் இல்லை...இந்த பதிவு அனானி நண்பர்களுக்கு தந்த வலி அல்லது நெருடலே இந்த பதிவின் நிதர்சனத்தை பறைசாற்றுகிறது...

நண்பர்கள் குடுத்த பதில் போதுமானது..

மங்கை said...

கருத்து சொன்ன நண்பர்களுகு நன்றி

கவிதா சந்தோஷ்

ஒரு சம்பவம் நடந்தாலும் அது வருத்ததுக்கு உரியதே...கவிதா நகர்புறங்கள்ல இல்லாமல் இல்லை.. ரொம்பவே இருக்குது..

யாரோ ஒருவன் said...

//சென்ஷி said...எது சிறந்த பதிவு என்று ஒப்பிட்டுக்கொள்ளவும் பதிவு உரல் தரவும்.. //

1) kuzhanthainila.blogspot.com
2) siththarkal.blogspot.com
3) pudugaithendral.blogspot.com
4) pettagam.blogspot.com
5) sirumuyarchi.blogspot.com
6) kaattchi.blogspot.com

சும்மா இதெல்லாம் சேம்பிள் தான்.. இன்னும் நிறைய இருக்கு

இந்தப் பதிவுகளைப் படிச்சு தெரிஞ்சுக்குங்க சாமிகளா.. பேருக்கு எழுதக்கூடாது.. அதற்குத் தேவையான உழைப்பு வேண்டும்..

மேலே சொன்ன விஷயம் பொதுவா எல்லா இடத்துலேயும் நடப்பதில்லை..
பொதுமை படுத்தி பேசி பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

சென்ஷி said...

அன்பின் யாரோ ஒருவன்,

உங்களின் அறிவுத்திறமைத் தெரியாமல் பேசிவிட்டேனென்று நினைக்கிறேன். இப்பொழுதே நீங்கள் இணைப்பு தந்திருக்கிற எல்லாப் பதிவுகளையும் வாசித்துவிடுகிறேன்.

மற்றபடி நல்ல பதிவுகள் குறித்த உங்கள் கண்ணோட்டங்களும் ஜாதிகள் இல்லையென்கிற உங்கள் எண்ணத்தையும் பத்திரமாய் கல்வெட்டிலாவது செதுக்கி வைத்துவிடுங்கள். பின்னால் வரும் தலைமுறையினர் உங்கள் கருத்துக்களைக் கண்டு உத்வேகம் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நேராக களத்தில் இறங்கி செயல்பட்டும் உதவியும் வருகின்ற ஒருவரைப் பார்த்து நீங்கள் சொல்வது
விதண்டாவாதமாகத்தெரிகிறது ,
யாரோஒருவன். ...

Unknown said...

அன்புள்ள யாரோ ஒருவன்,
நீங்கள் குறிப்பிட்ட "சிறந்த பதிவுகளை" படிக்க நேர்ந்தது அந்த பதிவுகளில் அப்படி என்ன சிறப்பு என்று என்னால் ஊகிக்க முடியவில்லை, சரி அதை விட்டு விடுவோம்...மங்கையின் பதிவில் என்ன குறை என்றும் தெரியவில்லை? ஒரு பதிவில் (அல்லது எந்த ஒரு எழுத்திலும்) இரண்டு பகுதிகள் உண்டு ஒன்று நடை (style or form) மற்றொன்று கருத்து (content. அல்லது ஏ.பி. நாகராஜன் மொழியில் சொன்னால் "சொற்சுவை/ பொருட்சுவை". இவையிரண்டில் மேற்குறிப்பிட்ட பதிவில் எதில் குறை என்று தெரியவில்லை. நடையில் என்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ள பதிவுகள் எவ்வாறு சிறந்தவை என்று தெரியவில்லை...பொருளில் என்றால் மங்கையின் பதிவில் என்ன குறை என்று நீங்கள்தான் விளக்க வேண்டும்.

- ஸ்ரீரவி

காட்டாறு said...

இப்படி நச் நச்-ன்னு சொல்ல உங்களை விட்டா யாரு இருக்காங்க மங்கை. உங்கள் சேவையை தொடருங்க. வரும் சந்ததி மாறும் என நம்புவோம்.

காட்டாறு said...

இப்போ தான் பதில்கள் வாசிச்சேன்.

//யாரோ ஒருவன் said...
விசயம் இருந்தா மட்டும் போதாது .. இப்ப பல புதியவர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் எழுத்தையும் உங்களின் எழுத்தையும் ஒப்பிட்டு பாருங்க மேடம்..

அப்புறம் கவிதை எழுத முயற்சிக்கலாம்
//

அண்ணா.. இப்போ என்ன சொல்ல வாறீங்க? எங்க அக்கா எழுதியது உங்களுக்கு கவிதை எழுதியது போல இருக்குதா? இல்ல இந்த பதிவும் வேண்டாம்; நீங்க கவிதையும் எழுத வேண்டாமின்னு சொல்ல வாறீங்களா?என்னவாயிருந்தாலும் உங்களுக்கு ஒரு கேள்வி... நீங்களே விசயம் இருக்குன்னு சொன்னதால... எப்படி எழுதுனா என்ன? மக்களை போயி சேர்ந்ததா என்பது தானே நோக்கமாய் இருக்கனும். அவங்க நடை உங்களுக்கு பிடிக்கலைன்னா அதுக்கு அவங்க பொறுப்பாளி ஆக முடியுமா? சொல்லுங்க. கருத்து இருக்கா? மக்களைப் போய் சேருதான்னு கவனிங்க அண்ணே.

அவனைப் போல இவனைப் போலன்னு இப்படி நீங்க இங்கே பேசினா... உங்கள் சந்ததியை வளர்க்கும் முறையும் இப்படித் தானே அமையும். வருங்கால சந்ததிக்கு தவறான பாடமல்லவா இது. யோசிங்க.

தமிழ் அமுதன் said...

சில பகுத்தறிவு இயக்கங்களில் இருப்பவர்களே தீண்டாமை செயலில் ஈடுபடுகிறார்கள்..!

தமிழ் அமுதன் said...

இந்த பதிவை நீங்கள் எழுதிய நாள் ஆகஸ்ட்டு 15...!


இன்று ஆகஸ்ட்டு ...21

இன்றைய தொலைகாட்சி செய்தி..!

நெல்லை மாவட்டத்தில் இரட்டை டம்ளர் முறை வைத்து டீக்கடை நடத்திய மூன்று பேர் கைது...!

தருமி said...

சாதி உடன் பிறந்தே உருக்கிக் கொல்லும் நோய். இளைஞர்கள் பலரும் இந்த நோய் நம்மை விட்டு நீங்கிவிடும் என்னும்போது சிறு மகிழ்ச்சி.

Unknown said...

hahha,,,

வந்துட்டாங்க..வந்துட்டாங்க... ஒரு பொண்ணு பதிவுல ஒரு கருத்து சொல்ல விடமாட்டாங்க... பெண்ணியக் காவலர்கள்... அப்படி மத்தவங்க எழுதாத விஷயத்தை இந்த அம்மா என்ன பெருசா எழுதிட்டாங்க.. என்னமோ இந்த அம்மா நேர்ல எல்லாத்தையும் பார்த்தமாதிரி...

இதுல பெரியார் மகாத்மாவாம்...

17/8/10 9:21 AM
Anonymous Anonymous said...

அப்ப மாகாத்மாவ என்னையா சொலுவாங்க...

மகாத்மாங்குற பேர் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமா போச்சு.....

17/8/10 9:51 AM

guess many persons around ths sites, tasted the essence of real facts, and poor anony, dont have the maturity, to accept the facts, and his/her way of black backing name itself says,, he/she dnt want luminosity,, :P

veluchathuku vangayaa,, nanga katrom,, negalum mahatma nu,, and for ur kind info,, if u go and search for mahatma tday,, sorry its like searchg for oxygen n air haha,,
reality ya accept pana manasu venum,,

ppl used to get popular by pointing out the gafe hahaha,, nega than nakirarooo? :P

unga kovam yarmela sirr?

MAHATMA,, if u kw the characterization and sharpness of this word,, pls let all of us know from u,,,

first of all,, read t as a treatise,, dont perceive as a male r a female writer,,

nengalam enna? vairamuthuku relationaa illa kanadasan ku pakathu vidaa?

kavidha na ena nu theriyumaa sirr?

being cant able to capitulate, ll make things worst,, anything for that matter,,,

yaroo, yarapathi pesarthuu,, ketka yarum illa nu ninachitengaloo? inga oru lady ku yarum support panala sir,, oru character oda writings aa understand panitu than support panrom,,


anony ayyaa avargale,,
inga tamil la type pana mudiyala,, athan english la poten,, adanala nan tamizhku edirium illa,, :-(

Unknown said...

Hi,I recently came across your blog and I have enjoyed reading.Nice blog. I thought I would share my views which may help others.I turned 41 and i have Erectile Dysfunction problem. After reading that INVIGO can cure ED,tried it. I have seen the difference. Its giving very good results and is a permanent solution. I will keep visiting this blog very often.we can reach INVIGO at WWW.invigo.in.