Tuesday, September 15, 2009

இனி விருட்சங்களை மட்டுமே விதைப்போம்....


மனதை மிகவும் பாதித்த ஒரு சம்பவம், பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு...

ஒரு பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கும் அந்த பெண்மணி என்னை சந்திக்க விரும்பி அழைத்தார். அவரின் நம்பிக்கைக்கு உரித்தான ஒரு பெண் ஊழியருக்கு ஒரு செய்தியை நான் பக்குவமாய் எடுத்துச் சொல்ல உதவ வேண்டுமென கோரினார்.

அந்த பெண் எச்ஐவி வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்...

இருபதுகளின் நடுவில் இருக்கும் அந்த பெண், திருமணமாகி இரண்டே மாதத்தில் கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். சமீபத்தில் அவரின் வயதான மன நலம் குன்றிய தாயாருக்கு மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு எச்.ஐ.வி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவர, அதிர்ச்சியான நிர்வாகம் அவரது தாயாரின் மருத்துவ கோப்புகளை ஆராய்ந்த போது சமீபத்தில் மற்றொரு மருத்துவமனையில் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்திருப்பதும், அப்பொழுது சம்பந்தப்பட்ட பெண் அவர் தாயாருக்கு ரத்தம் கொடுத்திருப்பது தெரியவும், அந்த பெண்ணுக்கும் ரத்தம் பரிசோதிக்கப்பட அவரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

தகவல் அவரின் முதலாளிக்குப் போக, மனித நேயம் கொண்ட அந்த பெண் நிர்வாகி எக்காரணம் கொண்டும் தனது நம்பிக்கையான ஊழியர் மனதளவில் பின்னடைந்துவிடக் கூடாது என்கிற அக்கறையினால் அந்த பெண்ணுக்கு விவரம் கூறி உதவ என்னை அழைத்திருக்கிறார். அவரும் நிர்வாகமும் அந்த பெண்ணுக்கு பின்னால் நிற்கிறார்கள் என்பதை நான் அவருக்கு புரியவைக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.

இதற்கு முன்னர் இத்தகைய பணிகளை பல முறை செய்திருந்தாலும், ஒருவரின் வாழ்க்கையை நிமிடத்தில் புரட்டிப் போடும் ஒரு செய்தியை சொல்வது சுலபமல்லவே... இம்மாதிரியான சந்தர்ப்பங்களை எதிர் கொள்வது, எத்தனை வருடங்களானாலும் கடினமான ஒன்றே. அன்றைக்கும் அப்படியே....

செய்தியின் அதிர்ச்சியில் நொறுங்கிப் போன அந்த பெண் வாய்விட்டு அழத்துவங்கினாள், அழுது ஓயட்டும் என பொறுமையுடன் காத்திருந்தேன். இரண்டுமாத திருமண பரிசுதான் இந்த பாதிப்புக்கு காரணமெனெ தெரிந்தது. அந்த பையனைத்தான் திருமணம் செய்ய வேண்டுமென இவளின் தாயார் ஒற்றைக் காலில் நின்று திருமணம் செய்வித்திருக்கிறார். உறவின் போது கணவனின் ஆணுறுப்பில் சீழ் வடியும் புண்கள் இருந்திருக்கிறது. அவன் விலைமாதர்களிடன் சென்றிருப்பதாகவும் கூறியிறுக்கிறான். உறவுக்கு விருப்பமில்லாவிட்டாலும், தன்னை சந்தேகப் படுவானோ என்கிற தயக்கத்தில் உறவுக்கு சம்மதித்திருக்கிறாள். இதை எப்படி வெளியே சொல்வது என்கிற பயம். இது நம் பெண்கள், படித்தவர்களானாலும் படிக்காதவர்களானாலும், முடிவெடுப்பதில் தயக்கமே காட்டுகிறார்கள். சிறு வயதில் இருந்து நம் பெண்கள் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு மன பக்குவதை இயற்கையாகவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ம்ம்ம்


விருப்பமில்லாத அல்லது பொறுத்தமில்லாத இந்த திருமண உறவு இரண்டே மாதத்தில் அறுந்து போனதில், தவறான முடிவெடுத்துவிட்ட குற்ற உணர்ச்சியில் மனதொடிந்த அந்த பெண்ணின் தாயார் மனநோயாளியானதுதான் மிச்சம். அந்த பெண்ணின் சகோதரர்கள் கடமை முடிந்தால் சரி என ஒதிஙகிக்கொண்டிருக்க வேண்டும். ஒரே ஒரு சகோதரியும் அவளின் கணவர் மட்டுமெ இந்த பெண்ணிற்கு ஆதரவு. இதுதான் தற்போதைய நிலமை.

இயலாமையின் உச்சத்தில் வாய்விட்டு அழும் அந்த பெண்ணிற்கு முன்னால் ஆத்திரம், ஆதங்கம் இத்தோடு இயலாமையுடன், உட்கார்ந்திருந்தேன். வாழ வேண்டிய வயதில் ஒரு பெண்ணின் வாழ்க்கை தகர்க்கப் பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம், தான் நினைத்த பையனை ஒற்றைக் காலில் நின்று திருமணம் செய்வித்த தாயா? , கணவணின் உடலுறுப்பில் நோய் தாக்கியிருப்பது தெரிந்தும் விருப்பமில்லாமல் ஆனால் சமூகத்துக்குப் பயந்து உறவுக்கு ஒத்துக்கொண்ட அந்த பெண்ணின் இயலாமையா? கூடப்பிறந்தவளுக்கு பிரச்சினையென்றதும், அவளை தாங்கும் சுமை தங்கள் தலையில் விழுமென சுதாரித்துக் கொண்டு நழுவிய உடன் பிறந்தாரா ?

அழுது ஓய்ந்த பின்னர், மெதுவாக அவளை தேற்றும் பணியினை ஆரம்பித்தேன், வாழ்க்கை குறித்த பார்வைகள் அல்லது வரையறைகளை நாம்தான் வகுத்துக் கொள்ள வேண்டுமேயொழிய மற்றவர்களின் கோணத்தில் வாழ்க்கையை வாழ்வதில் என்ன அர்த்தமிருக்கிறது என்பதை புரியவைக்க முயற்சித்தேன். இது எல்லாம் சொல்வது சுலபம் என்பதையும் நான் அறிவேன். நேற்று வரை வாழ்க்கை என்பது இது தான் என்ற கண்ணோட்டத்தில் வாழ்ந்து வந்த பெண்ணிடம் இந்த வசனங்களை பேசினால் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்லவே.

அவள் இருக்கும் சூழலில் தனக்கு உகந்த வாழ்க்கை இலக்குகளை வகுத்துக் கொள்வதன் அவசியத்தையும் அதன் அனுகூலங்களையும் பேசப் பேச சிறிது சிந்திக்க தொடங்கினாள்.

பாதிப்பின் எந்த கட்டத்திலிருக்கிறாள் என்பதை கண்டறிவதும், அதன் தொடர்ச்சியாய் எடுத்துக் கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளை விளக்கிய பின்னர், அவளின் நிர்வாகியும், நிர்வாகமும் அவளுக்கு துணையாய் நிற்பதையும் எடுத்துச் சொன்னேன்.

அவளுக்கு மறு திருமணத்திற்கு அவளது சகோதரி ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகவும், திருமணம் செய்யலாமா எனவும் கேட்டாள். உன் நிலமை அறிந்து உன்னை முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளும் ஒருவனை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என சொன்னேன்...எல்லாம் பேசி ஓரளவிற்கு நிஜங்களை ஜீரணிக்கும் மனபக்குவத்திற்கு வந்த பின் நாங்கள் விடைபெறும் தருணத்தில் அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை......

நான் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா ?

ஆவளுள் புதைந்திருக்கும் தாய்மை உணர்வை புரிந்து கொண்டேன். அதை அவளிடம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, குழந்தை பிறந்தால் வரும் பாதகங்களையும் எடுத்துச் சொன்னேன். அவளே சிந்தித்து முடிவெடுக்கட்டும் என்று விட்டு விட்டேன். ஆலோசனை என்றும் வழிகாட்டுதலாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய அவர்களுக்கு பதில் நாம் முடிவெடுக்க கூடாது. இது எதற்கென்றால் இது மாதிரியான மற்றொரு சந்தர்பத்தில் அவர்கள் முடிவெடுக்க தயங்கக் கூடாது.

பெண் தன் குடும்ப மற்றும் சமுதாயத்திற்காக தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக்கொள்கிறாள். சில நிர்பந்தங்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன. இது போன்ற நிர்பந்தகளுக்கு பணியாமல், மற்றவர்களிடம் கலந்தாலோசித்து பயப்படாமல் ஒரு தீர்வை காணவேண்டும். இந்த மன உறுதியை சிறு வயதிலிருந்தே பெண்களுக்குள் வளர்த்த வேண்டும்.

37 comments:

செல்வநாயகி said...

:((

டவுசர் பாண்டி... said...

சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான்.

வந்ததுக்கு கருத்து சொல்லீட்டேன். வர்ட்டா

Thekkikattan|தெகா said...
This comment has been removed by the author.
சென்ஷி said...

மீண்டும் மனதைப் பாதித்த பதிவு உங்களிடமிருந்து :-(

திருமணத்திற்கு முன்பான கட்டாய இருபாலர் மருத்துவ பரிசோதனையின் மூலம் நோய்ப் பரவாமையை பெருமளவிலும் குறைக்க முடியும். ஆனால் சிகிச்சைப் பற்றிய செய்திகளை நம் சமூகத்தில் மூன்றாம் பார்வையில் கூட ஏற்கத் துணியாத நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறோம் என்பது வருத்தமான விசயம்.

எய்ட்ஸ் பரிசோதனை என்பதே கொடுமையானது என்பது போன்ற பேச்சுக்களிலிருந்து தவறி இதை எல்லா ஊர்களிலும் இலவசமாக கொண்டு வர முயல வேண்டும்.

மக்களின் நலனை முன்னிறுத்தாத மனதில் வைக்காத அரசின் காதுகளில் இது போன்ற நிகழ்வுகளை செய்திகளாக்கி கொடுக்கும்பொழுதும் அவர்கள் நோய்க்குறி தாக்கியவர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்று அழித்து எழுதுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

சமூக நல மையங்கள், சேவை நிறுவனங்கள், ஊடகத்தொடர்புகள் மூலம் இன்னும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வும், பாலுறவு தொடர்பான சந்தேக நிவர்த்தி செய்தல்களும் முக்கியம் என்பது மீண்டும் மீண்டும் சொல்ல மட்டும்தான் முடிகிறது.

அந்தப் பெண்ணின் வாழ்வு நிம்மதியாக கழிய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

[என்னால் முடிந்த ஒன்று இதுமாத்திரம்தான் :-( ]

நாகை சிவா said...

:( தொடர்கதைக்கு என்று தான் முடிவு வருமோ!

சென்ஷி said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

படிக்கவே கஷ்டமா இருக்குங்க. என்ன சொல்லுறது? பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மனத் தைரியத்தைக் கொடுங்க... ஆமா, புரியல மறுமணமின்னா எப்படி ...? பிறக்கும் குழந்தைக்கு என்னாகும்?

ஆயில்யன் said...

பல வரிகளில் ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை பெற்ற பெண்ணின் பரிதாப நிலைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நினைத்து மனம் கலங்கியது!

ஆரூரன் விசுவநாதன் said...

இது இன்று நான் அறிந்த இரண்டாவது சம்பவம்.

முதலாவது: திருமணமான பெண் முதலிரவில், கணவன் ஆண்மையற்றவன் என்பதை அறிந்து பெற்றோருக்கும் சொல்லாமல், அவனை சரிபடுத்தவும் முடியாமல் பித்து பிடித்து முடங்கி கிடக்கிறாள் என்று யாரோ ஒரு பெண்ணைப் பற்றி நண்பர் ஒருவர் கூறினார்.


காலை தினசரிகளில் வந்த செய்தி
திருமணத்திற்கு முன் இருவருக்கும் ஆண்மை,ஹெச் ஐ வி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்

திருமதி மனோராமா தெரிவித்தார்

விரைவில் சட்டங்கள் வந்தால் சரி

சினேகிதி said...
This comment has been removed by the author.
சினேகிதி said...

inruthan ungalai patri ninathen kanakaalam neengal eluthavilai endu...anal ipadi oru pathivai vasika kastama iruku. mudinthal enai snegethy@gmail.com thodarbu kollungal.

16/9/09 2:03 AM

காட்டாறு said...

மங்கை,
அந்த பெண் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதும், தனக்கு நேர்ந்திருப்பதின் வீரியத்தை அறியவில்லை என்பதும் அவருடைய கேள்விகளில் இருந்து புரிகிறது. அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் தேவை என்பதை வலியுறுத்துங்கள். அதிர்ச்சியில் இருக்கும் போது உள்ள ரியாக்ஷன் கொண்டு அவர் எப்படி இந்த செய்தியை கிரககித்து கொண்டார் என்பது சொல்ல இயலாது. அவருக்கு தற்போதைய தேவை எய்ட்ஸ் பற்றிய கல்வி என்பது என் கருத்து. அவருக்கு மட்டுமல்ல. அவரை சுற்றியுள்ளோருக்கும். அதாவது அவரின் குடும்பத்தினருக்கும் தேவை.

அவர் திருமணம் செய்வதும், குழந்தை பெறுவதும் பின்னாளைய கதை. தற்போது அவரின் இம்யூன் வலுவடையவும், தன் உடல், உள வலுப்படுத்துவதும் முக்கியம் என்பதை வலியுறுத்துங்கள்.

Anonymous said...

:((

மங்கை , நீங்க அடிக்கடி ஏன் எழுதவதில்லை என்று யோசிப்பேன். ஆனால் ஒரு பதிவு போட்டாலும் பல நாள் மனதில் நிற்கும் பதிவாக போடுகிறீர்கள். அந்தப்பெண்ணுக்கு இன்னும் கவுன்சிலிங் தேவை என்று நினைக்கிறேன். மறுபடி பேசுங்கள்.

அபி அப்பா said...

அட ஆண்டவா!!! எல்லோரும் நல்லா இருக்கட்டும்;-(((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(
தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள் என நம்புகிறேன்..
அந்த பெண்ணின் நலனுக்காக வேண்டுகிறேன்..

ஈரோடு கதிர் said...

//ஆலோசனை என்றும் வழிகாட்டுதலாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய அவர்களுக்கு பதில் நாம் முடிவெடுக்க கூடாது.//

பக்குவமான சிந்தனை...

நேற்றுதான் தொலைக்காட்சியில் பார்த்தேன் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் வீட்டை விட்டு துரத்திய கணவனுக்காக அவன் வீடு எதிரே... சத்யாகிரக போராட்டம் செய்யும் கோபிகா என்ற பெண்ணை

மனதில் வலியோடு தங்கும் பதிவு....

☀நான் ஆதவன்☀ said...

:(

சந்தனமுல்லை said...

:((

மங்கை said...

செல்வநாயகி நன்றி..

//டவுசர் பாண்டி... said...

சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான்..//

திடீர்னு நம்ம கிட்ட ஒருத்தர் வந்து நம் வாழ்நாள் இனி சிறிது காலம் தான் னு சொன்னா, அதை ஏத்துக்கறது கஷ்டம் இல்லையா... போகப்போக சரி ஆகலாம்..

*இயற்கை ராஜி* said...

:-((

மங்கை said...

சென்ஷி

திருமணத்திற்கு முன்பு எச் ஐவி பரிசோதனை ஓரளவிற்கு இநோய் பரவாமல் தடுக்கும்..ஆனால் அது தீர்வல்ல...அதுல பல நுட்ப சிக்கல்கள் இருக்கு.. இது எல்லா ஊர்களிலேயும் இலவசம் தான் சென்ஷி...நம் பெயர் மற்றும் மற்ற விவரங்கல் ரகசியமாக வைக்கப் படும்.. இது எல்லா ஊர்களிலும் இருக்கு...

அரசுக்கும், சட்ட வல்லுனர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அனைவருக்கும் இது தெரியும்...பல திட்டங்கள், ஆய்வுகள் எல்லாம் பெரிய மாற்றங்களை செய்துட்டு தான் இருக்கு..மறுப்பதிற்கில்லை... ஆனால் ஆரம்பகால கல்வி எத்தனை முக்கியமோ அதே போல இந்த விழிப்புணர்வும் தேவை என்பதை ஒத்துக் கொள்ளமாட்டாங்க..அதான் பிரச்சனை...ஹ்ம்ம்

மங்கை said...

நன்றி நாகை சிவா

தெகா..
மறுமணம் என்பது நிறைய நடந்துட்டு தான் இருக்கு...பாதிக்கப்பட்ட பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்தவர்களும் இருக்கத்தான் செய்யறாங்க... குழந்தைக்கு இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கான மருந்தை குழந்தை பிறப்பின் போது குழந்தைக்கு கொடுத்தால் குழந்தையை காப்பாற்றலாம்.. இருந்தாலும் இவர்களுக்கு பின் குழந்தையை பார்த்துக் கொள்வதற்கும் பொறுப்பை எடுத்துக் கொள்வற்கும் நம்பிக்கையானவர்கள் இருக்கிறார்களா என்பதை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

மற்றொன்று தாய்பாலில் எச்ஐவி பரவும் வாய்ப்புகள் நிறையவே இருக்கு.. அதனால் அதையும் மனதில் கொள்ளவேண்டும்...

மங்கை said...

ஆயில்யன்..ஆரூரன் விசுவநாதன்.. ரவி..நன்றி..

சினேகிதி...நன்றி..

மங்கை said...

காட்டாறு..

குழந்தை பிறப்பை பற்றி கூறிய பின்னரும் அந்தப் பெண்ணுக்கு ஒரு நம்பிக்கை...தனக்கு அப்படி இருக்காது என்று...
பாதிக்கப்பட்டவர்கள் denial, bargaining, guilt, anger, and acceptance என்னும் ஐந்து நிலைகளை கடந்து வருவர். இந்தப் பெண்ணும் இதற்கு விதிவிலக்கில்லை...

மீண்டும் தொடர்பு கொண்ட போது அந்தப் பெண் பிரார்த்தனையில் சில நாட்கள் இருக்கப் போவதாக சொன்னதால், அமைதி ஆகட்டும் என்று இருக்கிறேன்..அந்த பெண் நிர்வாகி அவளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்..

உங்கள் கருத்துக்கு நன்றி

கோமதி அரசு said...

மங்கை வாங்க வாங்க,
வெகு நாட்கள்

ஆனாதே உங்களை பார்த்து நலமா?


அந்த பெண்ணிற்கு முதலில் மனபலம்,
வேண்டும்,வாழும் காலம் வரை.

அந்த பெண் உடல் நலம் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

மங்கை said...

சின்ன அம்மனி, அபி அப்பா, லக்ஷ்மி..நான் ஆதவன்..சந்தனமுல்லை

நன்றி..

மங்கை said...

கோமதி அரசு said...மங்கை வாங்க வாங்க,வெகு நாட்கள்..ஆனாதே உங்களை பார்த்து நலமா?

அம்மா எப்படி இருக்கீங்க?..நான் நலம்...நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

அதிரச் செய்தது :(((

Unknown said...

சொல்ல வார்த்தையே இல்லை :(

Raji said...

:(.....mangai...I dont know what to say.

தமிழ் அமுதன் said...

உப்பை தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்!

தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கனும்!!

இப்படி எல்லாம் சொல்லி வச்சு இருக்காங்க..!

சரி ...! இங்க உப்ப திங்குறவன் ஒருத்தன் ...தண்ணி குடிக்குறது இன்னொரு ஆளு ..!

தப்பு பண்ணுறவன் ஒருத்தன் தண்டனை பெற்றது வேற ஆளு ..!

இது என்ன நீதி ...!

கோபிநாத் said...

;(

மங்கை said...

அமிர்தவர்ஷினி அம்மா..kumar..Raji ..ஜீவன்..கோபிநாத்..நன்றி

Chandravathanaa said...

முதலுறவின் போதே அந்தப் பெண் விலகியிருக்க வேண்டும்.
வீணாகி விட்டதே அவள் வாழ்வு.

தமிழ் அஞ்சல் said...

// நிர்பந்தகளுக்கு பணியாமல், மற்றவர்களிடம் கலந்தாலோசித்து பயப்படாமல் ஒரு தீர்வை காணவேண்டும். இந்த மன உறுதியை சிறு வயதிலிருந்தே பெண்களுக்குள் வளர்த்த வேண்டும்.//

)))))):!

Unknown said...

அதிர்ச்சியான பதிவு... மிகவும் வருத்தமாக இருக்கிறது...

Unknown said...

மங்கை அம்மா , தங்களுடைய பதிவு என்னை நிலைகுலைய செய்தது. oru அப்பாவி பெண் இதற்கு காவு ஆகா வேண்டுமா ? கட்டாயம் ஒவ்வரு ஆண் மற்றும் பெண் இருவரும் திருமணத்திறுகு முன் ஹெச் .ஐ .வி டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் கட்டாயம் எனது திருமணத்தில் இதை நான் நடைமுறை படுத்துவேன் என்று உறுதி எடுத்து கொள்கிறேன் .