Monday, June 15, 2009

ஹானர் கில்லிங்-கெளரவக் கொலைகள்


ஐக்கிய நாடுகள் சபைகளின் ஆய்வுகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 5000 பெண்கள், கெளரவக் கொலைகள் என்ற பெயரில் உறவினர்களால் கொல்லப் பட்டு வருகிறார்கள். இது போன்ற கொலைகள் இஸ்லாமிய நாடுகளில் தான் நடத்தப் பட்டு வருவதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வட இந்திய கிராமங்களில் இன்றும் இது நடந்து கொண்டு தானிருக்கிறது.

பரம்பரையாக கட்டி காத்து வரும் மானத்திற்கு, மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தினால் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'கெளரவக் கொலையை' செய்து அந்த 'கலங்கத்தை' சரி செய்ய இது போல செயல்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆணை ஒரு பெண் திருமணம் செய்துவிட்டாலோ, அல்லது ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டாலோ அந்தப் பெண் உறவினர்களாலேயே கொலை செய்யப்படுவது தான் 'ஹானர் கில்லிங்'.தாங்கள் சேர்ந்த இனத்திற்கு அவமானத்தை உண்டு பண்ணிய பெண்ணை கொல்வது அவளுக்கும், இனத்திற்கும் கெளரவம் என்பது இவர்கள் வாதம்.

இது போல மனித உரிமை அத்து மீறல்கள், ஜாதி மத கோட்பாடுகளை காரணம் காட்டி இன்றும் வட இந்திய கிராமங்களில் வெகுசாதாரணமாக நடந்து வருகிறது. நம் சமூகம் தொடர்ந்து பரிணமித்து வந்தாலும் இன்றும் காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களை தக்க வைத்துக்கொண்டு, கெளரவத்தை கலாச்சாரத்தை நிலை நாட்டுகிறோம் பேர்வழி என காட்டு மிராண்டிதனமாக நடந்து கொள்கிறார்கள்.

இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களே. இது போன்ற ஜாதி வெறி பிடித்த கலாச்சார காவலர்கள் சிலரின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் இருக்குமெனில் அவள் வாழ இந்த சமூகம் அவளுக்கு உரிமை அளிக்கிறது. அப்படி அவள் நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில் அவளைக் கொலை செய்ய இந்த சமூகத்திற்கு அதிகாரம் உண்டு போன்ற ஒரு எண்ணத்தை இந்தக் கொலைகள் நம்முள்ளே எற்படுத்துகிறது.

இவர்கள் பார்வையில் இப்படி ' முறை தவறிய' பெண்ணிற்கு, தண்டனையாக அவளை அந்த கிராமத்து 'பெரியவர்கள்' வன்புணர்வதும் உண்டு. அதுவும் அங்கீகாரத்துடன். பல பெண்ணுரிமை போராளிகள் கேட்டுக்கொண்டும் இதுவரை அதனைத் தடுக்கும் சட்டம் வரவில்லை.

இதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்பட்டாலும், சம்பந்தப் பட்ட ஆணும் பல சமயங்களில் தண்டனையிலிருந்து தப்ப முடிவதில்லை. நோய்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில் காதலித்த ஆணும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கில், ஹரியானா, உத்திரபிரதேசம், பஞ்சாப், பீஹார் போன்ற மாநிலங்கலில் இது போன்ற கொலைகள் நடந்து வருகிறது. பீஹார் மாநிலத்தில் பகல்பூர் கிராமம் தான் இதில் முன்னோடி. இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மாவட்டமான பகல்பூரில் எல்லாவிதமான மனித உரிமை அத்துமீறல்களும் சாதாரணமாக நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு என்ற பேச்சுக்கே இடமில்லாத ஒரு மாவட்டம்.

சமீபத்தில், கூலித்தொழிலாளியான ரத்தன் மண்டலுக்கும், கஞ்சன்குமாரி என்ற 18 வயது பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கஞ்சன் குமாரி பணக்காரப் பெண். அந்தக் கிராமத்தின் இரு வேறு கோஷ்டியை சேர்ந்த இவர்கள் ஊரை விட்டு ஓடி விட்டதால் பெண் வீட்டார், பையனின் குடும்பத்தை சேர்ந்த 8 பேரின் தலையை வெட்டி ஆற்றில் வீசி விட்டனர். இதில் காதலித்தவர்கள் தப்பித்துவிட்டார்கள்.

இந்தக் கொலைகளை சட்டத்தால் கூட தண்டிக்க முடிவதில்லை. பெரும்பாலும் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, இந்தக் கொலைகள் தற்கொலைகளாக காட்டப் பட்டு வருகிறது. இதை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகளுக்குள்ளும் அதே வெறி இருப்பதால், இந்தக் கொலைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. சிலர் வெளியே வந்து தைரியமாக தாங்கள் இந்தக் காரணத்திற்காகத்தான் இதை செய்தோம் என்று சரண் அடைந்திருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளின் உதவியுடன் வெகு சுலபமாக குறைந்தபட்ச தண்டனையுடனோ, அல்லது அதுவும் இல்லாமலோ தப்பித்து விடுகிறார்கள். இந்தக் கொலைகளைத் தடுக்க இதுவரை எந்த சட்டத்தையும் உருவாக்க முடியவில்லை.

ஜூலை 2006 ல் நடந்த ஒரு வழக்கில், உச்ச நீதி மன்றம் இது போன்ற கெளரவக் கொலைகள் கண்டனத்துக்கு உரியவை என்றும் நாடு முழுதும் இருக்கும் காவல் துறை அதிகாரிகள், இது போன்ற கொலைகள் தெரிய வந்தால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியது. ஆனால் இது எந்த வித பாதிப்பையும் இது வரை ஏற்படுத்த வில்லை என்பது தான் உண்மை.

மதத்தையும் கலாச்சாரத்தையும் காரணம் காட்டி பெண்களை கெளரவக் கொலைகள் என்ற பெயரில் தண்டிப்பது காட்டுமிராண்டித்தனம். கலாச்சாரம் என்பதை இருக்கமான ஒரு கட்டமைப்பாகக் கொள்ளாமல், அதையே கொஞ்சம் தளர்த்திக் கொண்டு சகிப்புத்தன்மை, சகோரத்துவம் போன்ற நன்னெறிகளை வளர்க்க பயன்படுத்தவேண்டும். கலப்புத்திருமணங்கள் இதற்கு வழி வகுக்கும். காலத்திற்கு ஏற்ப, தேவைகளுக்கு ஏற்ப கலாச்சார மாற்றங்கள் நிகழத்தான் செய்யும். மற்றவரின் சுதந்திரத்தில் குறுக்கிடாத வரை, தன் எல்லையை நிர்ணயித்து போகும் வரை அது தவறில்லை.

எந்த ஒரு கலாச்சாரத்திற்கும் ஒரு பெண்ணை அவள் நடத்தையை முன்னிருத்தி தண்டிக்கும் உரிமை இல்லை.கலாச்சாரத்தையும் மதத்தையும் நலிந்தவருக்கெதிரான குற்றங்கள் புரிய எவ்வாறு பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த கெளரவக் கொலைகளே எடுத்துக் காட்டு.

இந்த கொலைகளினூடாக, இந்த உலகில் பிறந்த ஒரு மனிதனின் வாழ்வுரிமை மறுக்கப்படுவதாகிறது. தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. வன்முறைக்கு எதிரான சட்டம் எதுவும் இவர்கள் துணைக்கு வருவதில்லை. வன்முறைக்கு எதிரான சட்டத்திலுருந்து இவர்களை தப்பிக்க வைக்கும் வரை, கலாச்சாரத்தையும் மதக்கோட்பாடுகளையும் காரணம் காட்டி நடத்தப்படும் வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கும்.

22 comments:

அபி அப்பா said...

அய்யோ கொடுமையே:-((

அமிர்தவர்ஷினி அம்மா said...

எந்த ஒரு கலாச்சாரத்திற்கும் ஒரு பெண்ணை அவள் நடத்தையை முன்னிருத்தி தண்டிக்கும் உரிமை இல்லை.கலாச்சாரத்தையும் மதத்தையும் நலிந்தவருக்கெதிரான குற்றங்கள் புரிய எவ்வாறு பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த கெளரவக் கொலைகளே எடுத்துக் காட்டு.

பெரும்பாலும் இதுபோன்ற கொலைகள் / கொடுமைகள், சக பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படுவது வேதனை தரும் விஷயம். :((

காட்டாறு said...

இதுக்கு நாம் (மக்கள் சக்தி) என்ன செய்யலாம் மங்கை? இதற்கென சட்டங்கள் உண்டாக்கலாம்; விழிப்புணர்ச்சி கொண்டு வர வேறு என்ன வழிகள் இருக்கின்றன என ஒரு பதிவு எழுதுங்களேன்.

Thekkikattan|தெகா said...

எல்லா மூன்றாம் தர உலக நாடுகளிலும் நடந்திட்டேதான் வருது போலவே காலம் தோரும். இருந்தாலும் நம்ம தென் இந்தியாவைப் பொருட்டு எதுவுமே சொல்லப் படவில்லையே உங்க கட்டுரையில? அப்படின்னா, நம்ம மக்கள் "கெளரவக் கொலைகள்" நடத்துவதில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

நான் நினைக்கிறேன் இங்கும் அக் கதைகள் நடக்கிறது, ஆனா, வெளியில வருவதில்லை போல. இன்னொரு நூதமான கொலையும் நடத்திர்ராங்க, இங்கே அது மனதளவில உறவை அறுத்துகிட்டு, கடைசி வரைக்கும் காதலித்து மணந்தவங்களை சேர்த்துக்கிறதே இல்ல கிரமப் புரங்களில்...

இதன் வீச்சம் அறிய இன்னமும் நம்மூர் சினிமாக்கள் காதல் கதைகளை மையமாக வைச்சு கும்மியடிப்பதனைக் கொண்டே அறியலாமின்னு நினைக்கிறேன்.

மங்கை said...

பின்னூட்டிய நண்பர்களுக்கு நன்றி

அமி.அம்மா..சரி தான்..பெண்களும் சலைத்தவர்கள் அல்ல..

காட்டாறு..

விழிப்புணர்வு பல காலமா பல தலைவர்கள் செய்துட்டு தான் இருக்காங்க.. ஆனா நம்ம மக்களுக்கு தான் மண்டையில ஏறலை.. சின்ன வயசில் இருந்து இந்த சகிப்புத்தன்மை வீட்லயும், பள்ளிக் கூடத்துலேயும் ஊட்டனும்.. அப்பதான் அடுத்த தலைமுறையாவது இது போன்ற வன்முரையில் ஈடுபடாமல் இருக்கும்

மங்கை said...

//இருந்தாலும் நம்ம தென் இந்தியாவைப் பொருட்டு எதுவுமே சொல்லப் படவில்லையே உங்க கட்டுரையில? //

தெகா...எல்லா ஊர்லேயும் நடக்குது தான் ஆனா வட இந்தியாவில் அதிகம்.. நம்ம ஊர்ல இந்த அளவிற்கு மோசம் இல்லை...அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கலாம்...இங்க நடக்கிற மாதிரி 8 பேர் தலைய வெட்டி ஆத்துல வீச்சிட்டு தைரியமா ஊர்ல உலா வர்ரதில்லை...பொட்டு பொட்டு னு துப்பாக்கி எடுத்து சுட்டுட்டு டீ வீக்கு பேட்டி குடுப்பதில்லை...:-)

thevanmayam said...

கொடுமைதான்! உங்கள் பதிவு சமூக அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளது!
நானும் இதை எழுதி, யூத் விகடனிலும் வந்துள்ளது:http://abidheva.blogspot.com/2009/03/honour-killing.html

தேவா.

ஜீவன் said...

கடந்த வருடம் செய்தி தாளில் வந்த செய்தி!

வீட்டை விட்டு ஓடிவந்து குடும்பம் நடத்தி கொண்டிருந்த ஒரு தம்பதியை ஒருவருடத்திற்கு பின்னர் தேடி கண்டு பிடித்து இருவரையும் வெட்டி கொன்றனர்!
அந்த பெண்ணின் குடும்பத்தினர்.இது திருச்சியில் நடந்த சம்பவம்.

கலப்பு திருமணங்களால் ஜாதி ஒழியும்,சமத்துவம் மலரும் என்றெல்லாம் சொல்ல பட்டாலும்! நிஜத்தில் நடுத்தர நகரங்களிலும்,கிராம புறங்களிலும் இது போன்ற காதல் சம்பவங்களால் ஜாதி சண்டைதான் வருகிறது!

எந்த ஜாதியாக இருந்தாலும் அந்த ஊரில் யார் மெஜாரிடியாக இருக்கிறார்களோ அவர்கள் வைத்ததே சட்டமாகி விடுகிறது! காதல் விவகாரங்களில் பாதிக்க படுவது
மைனாரிடி சாதியினர்தான் ! அதோடு அவர்கள் குடும்பத்தினர் ,உறவினர்கள் எல்லோரும் பாதிக்க படுகிறார்கள்!

நம்ம ஊரு பசங்களுக்கு விவரம் நல்லா புரியுது! எங்க லவ் பண்ணினா வேலைக்கு ஆகும்? எங்க விவகாரம் ஆகும்னு! அதனால நல்ல உசாரா பார்த்து லவ் பண்ணுறாங்க!

இந்த ''விழிப்புணர்வு'' வட இந்தியாவில கம்மியா இருக்கு! அதான் மாட்டிகிறாங்க!

மங்கை said...

நன்றி தேவா..உங்க பதிவையும் படிக்கிறேன் நன்றி...


அமுதன்

அந்த ஜாதி சண்டை தான் எதுக்குன்னு கேட்குறோம்...அதுக்கு தான் சகிப்புத்தன்மை வேனும்னு சொல்றது.. நான் பெருசா நீ பெருசா ன்னி சண்டை போடறதுக்கு இது ஒரு சாக்கு..

யட்சன்... said...

உள்ளேன் ஆத்தா !

பதிவை படிச்சிட்டு அப்பாலிக்கா பின்னூட்டறேன்....இப்ப கொஞ்சம் பிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸி

:)

சுபா said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

எந்த ஒரு கலாச்சாரத்திற்கும் ஒரு பெண்ணை அவள் நடத்தையை முன்னிருத்தி தண்டிக்கும் உரிமை இல்லை.கலாச்சாரத்தையும் மதத்தையும் நலிந்தவருக்கெதிரான குற்றங்கள் புரிய எவ்வாறு பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு இந்த கெளரவக் கொலைகளே எடுத்துக் காட்டு.

பெரும்பாலும் இதுபோன்ற கொலைகள் / கொடுமைகள், சக பெண்களால் பெண்களுக்கு இழைக்கப்படுவது வேதனை தரும் விஷயம். :((//

Vazhimozhigiren.

vignathkumar said...

madem do u have awerness about tamil open male domination ? there are lots of non tamil womens are very freely speaking against their society male domination, they are boldly using their boby and mind for expressing their talents.there are lots of non tamil womens are attaning and getting fame in medias cinema,tv serials,modeling etc in india level . in tamil nadu situvation tamil women are not allowed to wear their disered dress. tamil medias magazeens avalvigudan, sneekethi etc are arguing as tamil women body and mind are slave to a man, or belong to a man.
in tamil cinema and tv serials there are lots of eve teasing dialoug is deleverd to tamil women which is oppose to women democratic and equal rigths. eg film{sivakasi}which hero vijay speak to asien.
in tamil medias cinema ,tv serials non tamil womens are grandly invited and they comen earn,enjoy ,get good fame.
if we take tamil magazeens there are lots of male domination supportive psychartis doctors like{dr shalinee, dr narayana redy etc}articles are published which is oppose to women democrasy,equality, and self confidence. many tamil womens do not have awerness about this.
there is a wed called {blank noise.com} u ples go through that and karuthu.com u click women in that and read u will find many points.

பாச மலர் said...

வக்கிரம் என்பதில் இதுவும் ஒரு வகை...அந்த ரீதியான உணர்வுகள் இருக்கும் வரை இவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நல்ல தலைப்பு மங்கை..

vignathkumar said...

first of all madem i request u to creat awerness about eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality.
second about male domination psychatist doctors{dr shalinee, narayana redt, etc} articles in tamil magazeens and weekly bookswhich is oppose to women democrasy,equality, and self confident.
creat awerness about blank nise assocation which says male domination is the reason for eve teasing not dress.

vignathkumar said...

tamil womens are not awer of {blank noise} u can go therougth blank noise.com also

செந்தழல் ரவி said...

என்ன நீங்க, கலக்கலான எழுத்து நடை கைவந்துருச்சு. அருமையா எழுதுறீங்க..

அவந்திகா மேடம் நலமா.....

denis said...

tamil women shoul be more awer of male domination. tamil womens are forsed to carry and bare the burden of thuppatha in colleges and other places this should be first condumed. innocent women victumes and dress are blamed and dominent male escapes

denis said...

tamil women shoul be more awer of male domination. tamil womens are forsed to carry and bare the burden of thuppatha in colleges and other places this should be first condumed. innocent women victumes and dress are blamed and dominent male escapes

denis said...

tamil women shoul be more awer of male domination. tamil womens are forsed to carry and bare the burden of thuppatha in colleges and other places this should be first condumed. innocent women victumes and dress are blamed and dominent male escapes

-தியா- said...

நல்ல பகிர்வுக்கு நன்றி
-தியா-

http://www.theyaa.blogspot.com

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

திருப்பூர் மணி Tirupur mani said...

see may 1 /2007(innikku oru visaesamaana naal comments)