இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆச்சு.
நான் பணி புரிந்து வந்த கல்லூரியில, ஒரு திங்கள் காலையில எங்கள் துறையில ஜன்னல் எல்லாம் உடைஞ்சு, அலுவலகமே தலைகீழா இருந்துச்சு. ஆனா கதவு மட்டும் மூடினது மூடின படி இருக்கு. கணினி சி பி யூ பிரிஞ்சு கிடந்துச்சு. அதிர்ச்சியுடன் என்னன்னு போய் பார்த்தா 5 ஹார்ட் டிஸ்க் காணாம போயிடுச்சு. கணினியின் மற்ற பாகங்கள் எல்லாம் அப்படியே இருக்கு. ஜன்னல் கம்பிகளை உடைச்சு ஹார்ட் டிஸ்க் மட்டும் எடுத்துட்டு போயிட்டாங்க.
திருட வந்தவன் திருடினது மட்டுமல்லாமல், மேஜை மேல் இருக்கும் ஃபைல், பேப்பர் எல்லாம் பார்த்து இருக்கிறான். இங்க தான் திருடனின் நகைச்சுவை உணர்ச்சியை பாராட்டனும். திருடு போனது சனிக்கிழமை. வெள்ளிக்கிழமை, எங்கள் நிறுவனம் நடந்தி வரும் இலவச பெண் கல்வி திட்டத்திற்கு நன்கொடை அளித்தவர்களுக்கு அனுப்ப " தேங்ஸ் லெட்டர்" ஆங்கிலத்துல டைப் பண்ணி, துறைத்தலைவரின் கை எழுத்திற்காக மேஜை மேல் வச்சிறுந்தோம். அந்த லெட்டர்ல நன்கொடை அளித்தவர்கள் எந்த குழந்தைக்கு ஸ்பான்சர் பண்றாங்கன்னு விவரம் இருக்கும். கரன் மற்றும் கிரன் என்ற இரு ஏழை குழந்தைகளின் விவரம் அடங்கிய லெட்டர் மேலால இருந்துச்சு. அதில் அவர்களின் ஏழ்மை நிலவரத்தை படிச்சு தெரிஞ்சுட்டான். ஆங்கிலம் தெரிந்த திருடன். மேஜை டிராயரில் இருந்த லிப்ஸ்டிக்கை எடுத்து (லிப்ஸ்டிக் பற்றிய கேள்வி எல்லாம் கேட்க கூடாது சொல்லிட்டேன்) சுவற்றில் "கரன் அவுர் கிரன், கரீப் ச்சோர் " ( கரன் மற்றும் கிரன், ஏழைத் திருடர்கள்) னு கொட்டை எழுத்தில் எழுதி, ஒரு பெரிய ஸ்மைலியும் போட்டுட்டு போயிட்டாங்க. பக்கத்துல இருந்த ஃபிரிட்ஜ்ல இருந்து கூல் ட்ரிங்கஸ் எல்லாம் காலி பண்ணி, ரிலாக்ஸ்டா இருந்துட்டு போயிருக்காங்க.
எல்லா இடத்துலே இருக்குற மாதிரி இங்கேயும் நிறுவனத்து மேலே அன்பு, அக்கறை, பாசம், கோவம், நக்கல் எல்லாம் இருக்கு. அது இந்த மாதிரி நேரத்துல தானே பொங்கி வெளியே வரும். அதுலேயும் கரீப் சோர் மேட்டரை படிச்சதும் யாருக்கும் சிரிப்பை அடக்க முடியலை. ஹார்ட் டிஸ்க் போன சோகம் போயே போச். அப்படி ஒரு இளிப்பு.
துறைத் தலைவர் ரிடயர்ட் மேஜர் ஜெனரல்...கையில் விலை உயர்ந்த ஒரு வாக்கிங் ஸ்டிக்குடன் சினிமாவில் வரும் பணக்கார அப்பா மாதிரி எப்பவும் மிடுக்காக இருப்பார். விஷயம் கேள்விபட்டு, எல்லோரையும் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வர சொன்னார். ஹாலுக்குள்ள போறதுக்கே பயம். அவருக்கு முன்னாடி சிரிச்சுட்டா என்ன பண்ணன்னு பயம்.
கல்லூரியில ஒரு துப்பறியும் துறைனே ஒன்னு இருக்கு. அதுக்கு ஹுக்கும் சிங் என்பவர் தான் தலைவர். விஷயம் தெரிவிக்கப்பட்டு ஹுக்கும் சிங் வந்தார். முதல் சந்தேகம் எங்க மேலயாம். அதுனால எங்க கை ரேகை எல்லாம் எடுத்து எங்களை விசாரிச்சாங்க. அப்புறம் கை எழுத்து மேட்ச் பண்ணலாமுன்னு முடிவு பண்ணி எல்லார்த்தையும் ஹிந்தில கரன் அவுர் கிரன் கரீப் ச்சோர் னு எழுத சொன்னாங்க. அப்படியே எங்க பேரையும் ஹிந்தில எழுதுனமாம். நமக்கு தான் ஹிந்தி எழுத படிக்க தெரியாதே, அதுனால பந்தாவா கைய கட்டி பேசாம நின்னுட்டு இருந்தேன்.
'ஏன் நீ எழுதலையா' னு கேட்டார் துறைத்தலைவர்.
'சார் எனக்கு ஹிந்தி எழுத தெரியாது' னு சொன்னேன்.
அதுக்கு ஹுக்கும் சிங், "கரெக்ட்!!!.. சுவற்றில எழுதின கை எழுத்து கூட எழுத படிக்க தெரியாதவன் எழுதின மாதிரி தான் இருக்கு. அதுனால பேட்டி ( ஹிந்தி பேட்டி..அதாவது மகளே- இது வேற) நீ தான் கண்டிப்பா எழுதனும்" னார். இன்டர்போல்ல இருக்க வேண்டியவுங்க இப்படி இங்க வந்து மாட்டிட்டாங்களேன்னு நொந்துட்டு எரிச்சலுடன் சிரிப்பையும் அடக்க முடியாமல் உட்கார்ந்தேன்.
துனை துறைத் தலைவர், "பரவாயில்லைம்மா, உனக்கு ஹிந்தி தெரியாட்டி அதை ஆங்கிலத்துல எழுது" ன்னு ரொம்பபப புத்திசாலித்தனமா சொன்னார். மீண்டும் மீண்டும் சிரிப்பு. மறுபடியும் எல்லாரும் பலமா சிரிச்சுட்டாங்க. ஏன்யா கையெழுத்து மேட்ச் பண்றதுக்கு தானே எழுத சொல்றீங்க, அப்புறம் அதை நான் ஆங்கிலத்துல எழுதி என்ன ஆக போகுதுன்னேன். ஓ அப்படி வேற ஒன்னு இருக்கோ... சரி அப்போ உனக்கு எப்படி வருதோ அப்படி எழுது ன்னு சொன்னார்.
நான் என் பேரை தமிழ்ல எழுதி கொடுத்தேன். :-).. what is this rubbish னு கத்தல்... எனக்கு வந்ததே கோபம்.. சார் திருடனை பிடிக்க வக்கில்லை..நாங்க தான் ஜன்னலை உடச்சிட்டு வந்து எடுக்கறமா...does it make any sense? னு எல்லாரும் பிடிச்சிட்டோம்.
அலுவலக நண்பன் ஒருவன் ஹுக்கும் சிங் தோள்ல கைபோட்டு அந்தப் பக்கம் கூப்டுட்டு போய் 'சார் இப்படி செய்தா என்ன, லிப்ஸ்டிக்ல தானே எழுதி இருக்கு யாரோட லிப்ஸ்டிக்குன்னு பார்த்துடலாமே' னு சொல்ல அவர் பாவம் 'ஐயா தம்பிகளா கொஞ்சம் எல்லாரும் போங்க' னு அழ ஆரம்பிச்சுட்டார்.
இன்னொருத்தன் சார் இந்த துப்பறியும் துறைக்கு ஏதாவது வேலை கொடுக்கனும்னு இந்த மாதிரி நீங்களே செய்துட்டீங்களான்னு துறைத் தலைவரை கேட்க, அவருக்கு டென்ஷன் ஆயிடுச்சு. சேர்மன்க்கு என்ன பதில் சொல்றதுன்னு அவருக்கு கவலை. "எல்லாரும் வீட்டுக்கு போங்க...leave me alone." அப்புறம் என்ன...கரன் அண்ட் கிரன் புண்ணியத்துல ஒரு நாள் ஜாலியா ஊர் சுத்தீட்டு வீட்டுக்கு போனோம்.
அதுக்கு அப்புறம் 8 எல் சி டி காணாம போச்சு. ஆனா நம்ம இன்டெர்போல் ஹுக்கும் சிங் மூச்சு விடலை. எங்களைப் பார்த்தாலே தலைய தொங்கப் போட்டுட்டு போயிடுவார்.
24 comments:
ஹூக்கும் சிங்-குங்கற பேருக்கேத்தா மாதிரியே நடந்திருக்காரு போலருக்குது. மனுசனோட பொறுப்புணர்ச்சியை புரிஞ்சுக்காம இப்படியாக்கா நக்கல் அடிக்குறது. இதுக்காகவே விஜயகாந்தை உங்க ஆபிசுக்கு துப்பறிய அனுப்ப சொல்றேன். :))
//(லிப்ஸ்டிக் பற்றிய கேள்வி எல்லாம் கேட்க கூடாது சொல்லிட்டேன்)//
சரிக்கா நான் கேள்வி ஏதும் கேட்கலை :)
//
நான் என் பேரை தமிழ்ல எழுதி கொடுத்தேன். :-)//
உண்மையிலேயே இதுதான் செம்ம காமெடியா இருக்குது :))
பாவம் அந்த துப்பறியும் சிங்-கம். இப்படி கலாய்ச்சிட்டீங்களேக்கா :))
ha..ha..haaaa
//'சார் இப்படி செய்தா என்ன, லிப்ஸ்டிக்ல தானே எழுதி இருக்கு யாரோட லிப்ஸ்டிக்குன்னு பார்த்துடலாமே'//
சூப்பர் ஐடியா.. அனேகமா அவர் ஸ்காட்லேண்ட் யார்ட்ல டிரெய்னிங் எடுத்தவர் போலருக்குது :)
//அதுக்கு அப்புறம் 8 எல் சி டி காணாம போச்சு. //
அதுக்கு ஏதும் துப்பு கிடைச்சதா??
Some persons use lipstick as marker when marker is not available. So i understand why
lipstick was found there.
சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.:)
ஆஹா சென்ஷி...:-))
அந்த ஹுக்கும் சிங் பெயருக்காகவே அவர் நக்கல் அடிக்கபடுவார்... அந்த காமெடி ஒரு தனி ட்ராக் போடலாம்..
எல்சிடி பற்றி ஒரு துப்பும் கிடைக்கலை...
அத்தன செக்யூரிட்டிய தாண்டி வந்து எடுத்துட்டு போய் இருக்கான்...அவனை பாராட்டனும்....:-)
இயற்கை...நன்றி
//i criticize periyar said...//
இது என்னாங்க இது..:-)).இருந்தாலும் வந்ததுக்கு நன்றிங்கோவ்
நன்றி மணிநரேன்
அரசியல்ல இதெல்லாம் சகஜம்க்கா
நன்றி சுரேஷ்..:-)
HA HA HA..
THAT'S FUNNY...KEEP SHARING SUCH INCIDENTS..:-)))))))))))))
சூப்பரப்பு..
சிரிப்ப அடக்கமுடியலைபா..கன்னாபின்னானு சிரிச்சுட்டேன்..
:))))
புதுசா வீட்டுக்கு எல்.சி.டி. டிவி வாங்கினேன் என்று சொன்னீங்களே... அதுக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா?
சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ;)
;-)))))
நன்றி சுரேஷ்
சிவா...காணாம போனது எல் சி டி ப்ரொஜக்டர்...பேசாம நீங்களும் ஹூக்கும் சிங் ஜூனியரா சேர்ந்துக்கோங்க
பொருத்தமா இருக்கும்..:-))))
நன்றி கோபி
இது என்ன விதமான திருட்டு? அதுக்கு அங்க வேலை பார்க்கிறவங்கள கூப்பிட்டு இப்படி அவமான படுத்தியிருக்காங்க, இத எப்படி ரசிச்சிருக்க முடியும்?
எப்படியோ ஒரு ஆள் திரும்ப பிடிச்சு ஊக்கையோ... ஹூக்கையோ கடிச்சு வைச்ச வரைக்கும் சரிதான்.
இருந்தாலும், திருட வந்தவருக்கு ரொம்பவே நகைச்சுவை உணர்வுதான் இல்ல, அந்தப் பகுதி நகைப்பை கொண்டு வந்தது.
''சிங்'' குங்கல வைச்சு நெறைய ஜோக் எழுதுறாங்களே? ஏன்னு இதுவரை யோசிச்சதே
இல்ல இப்போதான் புரியுது!!;) நம்ம ஹூக்கும் சிங்க ''வடிவேலு'' கெட் அப்ல நெனைச்சு பார்த்தா?;;) நல்ல காமடியாத்தான் இருக்கு....
தெகா...
அதுல கிடைச்ச சில தடயங்கள் அப்படி இருந்தனால...அதுவும் இல்லாம சில கம்ப்யூட்டர் லேப் டெக்னீஷியன்ஸ் மேல சந்தேகம் இருந்தது...அவங்கள மட்டும் விசாரிக்க முடியாதுன்னு..எல்லாரையும் விசாரிச்சாங்க...
நன்றி அமுதன்
உங்களுக்கு ஒட்டு போட்டுட்டேன் ... மிக அருமை...வாழ்த்துக்கள் மங்கை...
காமெடிய காமெடியா எழுதுறதுக்கு ஒரு திறமை வேணும் போல இருக்கே
நல்ல எழுதுறீங்க
வாழ்த்துக்கள்
// பேரரசன் said...
உங்களுக்கு ஒட்டு போட்டுட்டேன் ... மிக அருமை...வாழ்த்துக்கள் மங்கை...//
மிக்க நன்றி பேரரசன்..
//NESAMITHRAN said...
காமெடிய காமெடியா எழுதுறதுக்கு ஒரு திறமை வேணும் போல இருக்கே
நல்ல எழுதுறீங்க வாழ்த்துக்கள்
:-))) நன்றி
Post a Comment