Friday, October 03, 2008

போஸ்ட்பார்டம் சைக்கோசிஸ் (Postpartum Psychosis)

என்னை அதிர வைத்த இரு சம்பவங்கள். அதன் விளைவு இந்த பதிவு; முதல் சம்பவம் நடந்து இருபது வருடங்களாகியிருந்தாலும் நேற்று நடந்ததைப் போன்ற தாக்கம். இரண்டாவது சம்பவம் கடந்த வாரம் கேள்விப்பட்டது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குழந்தை உருவாவது எத்தனை அற்புதமான தருணம் இல்லையா? (அந்த நிகழ்வினை நினைச்சுப் பார்த்தா அதிசயம் தான், அனுபவித்து உணர வேண்டிய அற்புத உணர்வு). பேறுகாலத்தில் இந்த சமயத்தில் ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் சிலருக்கு சில மருத்துவ காரணங்களினாலும் (estrogen and progesteron குறைவினால்) உளவியல் காரணங்களினாலும் அதுவே மிகப் பெரிய மன அழுத்ததை கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதும் உண்மை. இந்த மன அழுத்தம் சில பெண்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டி விடும் என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

'போஸ்ட்பார்டம் ஸைக்கோசிஸ்' (Postpartum Psychosis) என்று அழைக்கப்படும் இந்த வகையான மன அழுத்தம் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்?. பேறுகாலத்திற்குப் பின் சில பெண்களுக்கு சில பல காரணங்களினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இது இரண்டு வகைப்படும்.

ஒன்று சாதாரண மன உளைச்சலுடன் ( postpartum depression) கூடிய மன அழுத்தம். மற்றொன்று, இந்த சாதாரண மன உளைச்சல் அதிகமாகி, அதன் விளைவாக ஏற்படும் போஸ்ட்பார்டம் ஸைக்காசிஸ் என்கிற மன நோய். இந்நோய் மகப்பேற்றிற்குப் பின், ஆயிரம் பெண்களில் ஒரு பெண்ணிற்கு ஏற்படுகிறது. இந்த மன நோயால் பாதிக்கப்படும் பெண்களில் ஐந்து சதவீதம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தலாவது சம்பவம் நடந்தது 1989ல். எங்கள் வீட்டு கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலை பார்த்த பெண், கட்டிட மேஸ்திரியின் ஆசை வார்த்தையில் மயங்கி, கர்பமாகி பின் கருவை கலைத்து விட்டார். இது நடந்த சில நாட்களிலேயே அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடந்தது. கணவன் இந்தப் பெண்ணை தினக்கூலிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி விட, அது வரை அவள் பட்ட கஷ்டம் எல்லாம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சில நாட்களிலேயே கணவருக்கு இவரின் கடந்த கால வாழ்க்கை தெரிய வர, கர்பமாக இருந்தவள் மீது சந்தேகம் வந்து வயிற்றில் வளரும் குழந்தை தனது இல்லை என்று கூறி விட்டு அந்தப் பெண்ணை விட்டு விலகி விட்டார்.

குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், கணவனையும் எந்த விதத்திலும் சமாதானம் செய்ய முடியவில்லை என்ற கவலை எல்லாம் சேர்ந்து அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. குழந்தை பிறந்தவுடன் அவரால் குழந்தையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குழந்தையை கவனிக்காமல் வெறுக்கத் தொடங்கிவிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், உறவுக்காரர்களும் அவமானப் படுத்தும் படியாக பேச ஆரம்பித்தவுடன் மிகுந்த மன அழுத்திற்கு ஆளாகி 'போஸ்ட்பார்டம் சைக்காசிஸ்' என்ற மன நோயால் பாதிக்கப்பட்டார்.

கணவரின் அன்போ பிறந்த வீட்டின் போதுமான ஆதரவோ இல்லை. வீட்டில் உள்ளவர்களோ இவளுக்கு பேய் பிடித்து விட்டது, சூனியம் வைத்து விட்டார்கள் என்று கூறி மாயாஜால வித்தைகள் தான் செய்தார்களே ஒழிய அவருக்கு கொடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சையை கொடுக்கவில்லை. மன நோய் தீவிரமாகி, ஆறு மாதம் கழித்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்ற வாரம் நடந்த மற்றொரு சம்பவம். உறவுக்காரப் பெண் ஒருவர் சொந்த மாமனையே திருமணம் செய்து கொண்டார். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்ததும், பெற்றோர்கள் உட்பட பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். முன்னோர்களில் பெரும்பாலானோர் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொண்டதால், பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறி தடுத்துப் பார்த்தார்கள், ஆனால் முடியவில்லை.

முதல் குழந்தை ஆரோக்கியமாகவே பிறந்தது. நான்கு மாதத்திற்கு முன்னர் அவருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை அரோக்கியமாக இல்லை. குழந்தையின் உடலில் பல கோளாறுகள். உறவில் திருமணம் செய்து கொண்டது (Inbreeding) குழந்தையின் உடல் நிலைக்கு ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவர்கள் கூறியதும் இந்தப் பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

வீட்டில் இருந்தவர்கள் அதே தாயத்தும், மந்திரிப்பதும் என இருந்திருக்கிறார்களே தவிர ஒரு மனநல நிபுனரிடம் ஆலோசனை கேட்கவில்லை. மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப் பட வேண்டிய நிலையிலும், நோயின் தீவிரம் தெரியவில்லை. சரியான ஆலோசனை இல்லாமல், மன உளைச்சலை பகிர்ந்து கொள்ளாமல், திரும்ப திரும்ப ஒரே எண்ணங்களை மனதில் வளர்த்து, சென்ற வாரம் அந்த பெண், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததும் ஆடிப்போய் விட்டேன். தில்லியில் இருந்து ஒரு வருடம் முன்பு தான் கோவைக்கு இடம் மாறினார்.

இந்நோய்க்கு ஆராய்ச்சியாளர்கள் கூறும் சில காரணங்கள்:
1)முதன்மை காரணம் பேறு காலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம்.
2)குழந்தைப் பிறப்பிற்கு பின் பெண்களுக்கு தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படும் மன அழுத்தம்.
3) தான் தாயாக இருக்க தகுதியானவரா என்ற பயம்.
4) குழந்தை பிறந்த பின் ஏற்படும் செலவுகளை நினைத்து பயம்.
5) குழந்தையை பார்த்துக் கொள்வதினால் ஏற்படும் சலிப்பு, உடல் சோர்வு.

இந்த நோயினால் பாதிக்கப் பட்ட பெண்கள் பலர் மேலே கூறிய எண்ணங்களை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகிறது.

கர்ப்பிணி / பிரசவித்த பெண்களின் மன அழுத்தம் என்பது இன்றும் உணரப்படாத ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வு படித்தவர்களிடையே கூட மிகக் குறைவு தான். கர்பகாலத்தில் சாதாரண மன அழுத்தம் 16%ல் இருந்து 20% பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பிருந்தாலும் அதற்கு தேவையான ஆலோசனை வழங்கப் படுவதில்லை. பெண்களும் தங்களுக்குள் ஏற்படும் மன உளைச்சலை பகிர்ந்து கொள்வதில்லை.

மன நல நிபுணரை ஆலோசனைக்காக அணுகுவது என்பது இன்றும் நம்மிடையே ஒரு வித தயக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தின் பார்வை என்கிற போலியான கட்டமைப்புக்காய் தாங்களே தங்களின் மீது தேவையற்ற சுய தடைகளை விதித்துக் கொண்டு அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் சரியான தீர்வுகாணாமல், பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும் மூட நம்பிக்கைகளை கட்டி அழுது கொண்டு இருக்கிறோம். இந்த கொடுமையை எங்கே போய் சொல்லி அழுவது.....

இதைப்படிக்கும் உங்களில் சிலரேனும் உங்களின் தங்கையோ, தமக்கையோ, தாரமோ இல்லை ஏன் உங்களின் சுற்றத்தில் ஒரு சக பெண்ணுக்கு இத்தகைய ஒரு நிலை வருமாயின் அங்கே தேவைப்படும் விழிப்புணர்வினை உருவாக்கிட உதவுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோளும், இந்த பதிவின் நோக்கமும்.

டாக்டரம்மாவுக்கு ஒரு வேண்டுகோள் - நான் சொல்லி இருக்கிற தகவல்கள் எந்த காலத்துலயோ பாடத்துல படிச்சது.... ஏதாவது தப்பு இருந்தாலோ, சொல்ல வேண்டிய முக்கியமான விஷயங்கள் விட்டுப் போயிருந்தாலோ நீங்க சொல்லுங்க டாக்டரம்மா... நீங்க இன்னும் தெளிவா சொல்லலாம்..
மேலும் படிக்க...

31 comments:

யட்சன்... said...

”டாக்டர். மங்கை”

பெரிய பெரிய மேட்டரெல்லாம் எழுதறீங்க, வாழ்த்துகள் மேடம்.

-யட்சன்

தமிழ் பிரியன் said...

அதனால் தான் கர்ப்பிணி பெண்ணுக்கு கணவன், மற்றும் உறவினர்களில் கனிவான ஆதரவு அவசியம் என்று சொல்கின்றார்கள் போல

ஆயில்யன் said...

//. சமூகத்தின் பார்வை என்கிற போலியான கட்டமைப்புக்காய் தாங்களே தங்களின் மீது தேவையற்ற சுய தடைகளை விதித்துக் கொண்டு அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் சரியான தீர்வுகாணாமல்//

சரிதான்!

பிற்காலத்தில் ஏற்படபோகும் பெரும் இழப்புகளுக்கு சமூகம் ஒன்றும் பெரிதாய் இழப்பீடு வழங்கிட முன்வராது என்பதையும், இது போன்ற சமூகத்திற்காய் தம் சொந்த உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை மறைப்பவர்கள் உணரவேண்டும்!

Thekkikattan|தெகா said...

எழுதியதை ஒரு வழியா போட்டாச்சா, சந்தோஷம்.

//பெண்களும் தங்களுக்குள் ஏற்படும் மன உளைச்சலை பகிர்ந்து கொள்வதில்லை.
//

இது அதி முக்கியமானது, அப்படி அடிப்படை புரிந்துணர்வு, விழிப்புணர்வின்மையால் கணவன், மனைவிக்கிடையே அந்த காலங்களில் வீண் பிரச்சினைகள் தலை தூக்கும்... அதுவும் எரியும் நெருப்பில் நெய் ஊற்றுவது போல, அதுக்கு மேல நம் சமூகத்தில இந்த மாமியார்கள், நார்த்தானர்கள் என்று சமாளிக்க வேறு வேண்டும். சோ, ப்ரச்சினை பூதமாகிவிடும்.

நல்ல பதிவு!! ஏற்கெனவே இரண்டு பதிவுகள் வந்திருக்கே, அதுக்கும் லிங்க் கொடுத்தால் மேலும் விசயங்களை அறிந்து கொள்ள விரும்புவர்களுக்கு உதவியாக இருக்கும் (பதிவர் செல்வநாயகியும், ஜெஸிலாவும் எழுதியது என்று ஞாபகம் :-).

தங்கராசா ஜீவராஜ் said...

///மன நல நிபுணரை ஆலோசனைக்காக அணுகுவது என்பது இன்றும் நம்மிடையே ஒரு வித தயக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது.///

நம்பிக்கை இருக்கிறது இது போன்ற முயற்சிகள் வரும்நாளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

மங்கை said...

//”டாக்டர். மங்கை”//

Yatchan..
Univeristy ethavathu nadathareengalo...pattam kuduthutteenga....Nanni....nanni

மங்கை said...

TamilPriyan, Aayilyan Nandri

Maraippavargalin pangu inga kuraivu aayilyan... veetla irukkravanga thaan muyarchi edukkanum...hmmm

மங்கை said...

Theka...

Maruthuvam saarndha vishyangalnaa podallaama vendaamannu oru bayam... :-)

Dr amma ellaam irukkumbothu..naama athiigaprasangi thanama podunumaannu irundhuchu..

sari dr ammavea pachai kodi kaamichuttaangannu thairyithathula pottaachu...:-)..

மங்கை said...

தங்கராசா ஜீவராஜ் said...

//நம்பிக்கை இருக்கிறது இது போன்ற முயற்சிகள் வரும்நாளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.///

Nandri..appidi nadandhaal sandhosham..

சென்ஷி said...

ரொம்ப நல்ல பதிவு அக்கா. ஆனா என்ன கமெண்டு போடறதுண்ணே தெரியல :(

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
ரொம்ப நல்ல பதிவு அக்கா. ஆனா என்ன கமெண்டு போடறதுண்ணே தெரியல :(
\\

ரீப்பிட்டே ;)

சென்ஷி said...

//இதைப்படிக்கும் உங்களில் சிலரேனும் உங்களின் தங்கையோ, தமக்கையோ, தாரமோ இல்லை ஏன் உங்களின் சுற்றத்தில் ஒரு சக பெண்ணுக்கு இத்தகைய ஒரு நிலை வருமாயின் அங்கே தேவைப்படும் விழிப்புணர்வினை உருவாக்கிட உதவுங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோளும், இந்த பதிவின் நோக்கமும். //

கண்டிப்பாக அக்கா..

(உருப்படியா ஒரு பின்னூட்டம் போட்டாச்சு :) )

மங்கை said...

Gopi / Senshi

thambigala..

ungalluku thaan indha pathivu thevai

andha naal varrathukku romba naal aagathu..sila months thaan

ungalukkaaha thaan indha pathivea
ellaam mudichavungalukku..

Gopi...ennaa oru vivaram... senshi ippidi oru pinnoottam podatumean kaathuttu irundhu repeat potteengalaakkum....

irundhaalum super comment..:-))..

padichuttu vaai vittu sirichutean

சென்ஷி said...

பார்த்தீங்களாக்கா. நல்ல பதிவுல எங்களுக்கு கமெண்டு போட வர்றதில்லன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க. நாங்க என்ன செய்ய :(

எங்களுக்கு மேல இருக்கற எந்த கமெண்டுக்கும் ரிப்பீட்டே போட முடியாத கஷ்டமான சூழல்லதான் நாங்க உண்மைய சொல்ல வேண்டியதாயிடுச்சு.. இருந்தாலும் இது எங்களைப்போன்றவர்களுக்கு மிகத்தேவையான முக்கிய பதிவு என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இதற்கு முன்பு எங்களால் பின்னூட்டம்போட இயலாமல் போன உங்களின் பதிவு இதுதான்..

http://manggai.blogspot.com/2007/08/couvade-syndrome.html

பாபு said...

மிக நல்ல ஒரு பதிவு.வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ம்.. மிக சோகமான விசயம்..

மங்கை said...

Nandri latchumi and Babu..

Compassion Unlimitted said...

sogangalai ethirpadharku mana vaimai,aangalai vida pengalukku adhigam ena nambugiren.
mudhal kadayil,illai illai badhippil, pen tharkolai seyydadhu varutthirkku ullaakiyadhu...
ennudaya post pakkam varugai tharungal..coincidence aaga irukkiradhu..aanaal...
migha mukkiyamaana karutthugalai koori irukkireergal
tc
cu

மங்கை said...

Nandri CU...

Ellap pengalum ella samayathilum appidi iruppathu illai..

aanaal ithu tahvirkka koodiyahtu thaan..

Compassion Unlimitted said...

sariyaaga sonneergal
tc
cu

AMIRDHAVARSHINI AMMA said...

குழந்தயோடு தற்கொலை என்பது யோசிக்கவே கஷ்டமாக உள்ளது.

மிகவும் பயனுள்ள பதிவு.

மங்கை said...

Amirthavarshini Ammaa

unga pathivula solli irukkura maathiri....
//சொல்ல மொழியில்லை
மழலையின் பேரின்பத்தை//.. hmm aaana indha pengalukku athuvea...mm enna solla

muthal varugaikku nandri A A

சுரேகா.. said...

கண்டிப்பா கவனிக்கவேண்டிய விஷயம்..!

நீங்கள் கூறியிருக்கும் காரணங்களும்
மிகச்சரியானவை!

குழந்தை பாலினமும், தாயை
மனம் பிறழ வைக்கிறது என்று
கேள்விப்பட்டேன். ( ஒரு மனநல மருத்துவரிடம்
உரையாடும்போது)

இன்றுவரை கிராமப்புற பெண்களால்
பெண்குழந்தைகளை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை
என்பது கசப்பான உண்மை.!
அதுவும் கூட மனப்பிறழ்வுக்கு காரணமாகிறது..

நல்ல ,உபயோகமான பதிவுங்க!

மங்கை said...

Surekha..


Athuvum oru kaarnamaka irukkalaam...

karuthukku nandri

புருனோ Bruno said...

//குழந்தை பாலினமும், தாயை
மனம் பிறழ வைக்கிறது என்று
கேள்விப்பட்டேன். ( ஒரு மனநல மருத்துவரிடம் உரையாடும்போது)//

உண்மை. பிற காரணங்கள் ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது
//1)முதன்மை காரணம் பேறு காலத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றம்.2)குழந்தைப் பிறப்பிற்கு பின் பெண்களுக்கு தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படும் மன அழுத்தம்.
3) தான் தாயாக இருக்க தகுதியானவரா என்ற பயம். 4) குழந்தை பிறந்த பின் ஏற்படும் செலவுகளை நினைத்து பயம்.5) குழந்தையை பார்த்துக் கொள்வதினால் ஏற்படும் சலிப்பு, உடல் சோர்வு.//

இதில் பாரதத்தில் முதன்மை காரணம் வேறு.

பேறு காலத்திற்கு தாய் வீட்டிற்கு வந்த பின், மீண்டும் மாமியார் வீட்டிற்கு செல்ல வேண்டுமே என்ற கவலை முக்கியம்

--

கணவனுடன் தனியாக வசிக்கும், பிரசவம் வரை கணவனுடன் இருக்கும் பெண்களுக்கு மிக குறைந்த அளவிலேயே பேறுகாலத்திற்கு-பின்-மனச்சோர்வு வருகிறது.

siva sinnapodi said...

http://sivasinnapodi1955.blogspot.com

மங்கை said...

Dr.Bruno

Nandri...mukkiyamana kaaranthai solitteenga....

மங்கை said...

//siva sinnapodi said...
http://sivasinnapodi1955.blogspot.com///

Nandri

செல்வநாயகி said...

மங்கை,

நீங்கள் தொடர்ந்து இங்கே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதும், வழமையான விழிப்புணர்வை வேண்டிநிற்கும் விடயங்களை உங்கள் பாணியில் சொல்லிக்கொண்டேயிருக்கிறீர்கள் என்பதும் நிறைவாய் இருக்கிறது. நன்றி இந்தப் பதிவுக்கு.

இனியவள் புனிதா said...

மிகவும் பயனுள்ள பதிவு...
என் தோழிக்குக் கருத்தரித்த முதல் இரண்டு மாதத்திலேயே கலைந்துவிட்டது...
இதற்கு அவளுடைய குடும்பத்தினரின் பொறுப்பற்றத் தன்மையும் ஒரு காரணம்...
எப்பொழுதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாள் என்று அவளுடைய சகோதரிகளும் தாயும் திட்டிக் கொண்டே இருப்பார்கள்... இப்படி இன்னும் பல... :-(

மங்கை said...

மிக்க நன்றி செல்வா..நீங்க எல்லாம் எழுதினா இன்னும் நல்லா இருக்குமே..
:-)

கருத்துக்கு நன்றி புனிதா