Saturday, April 11, 2009

பெண்மையின் மென்மை கண்டு கலைஞனாகினான்..

உயர்ந்த மனிதன் படத்தில் வரும் 'நாளை இந்த வேளை பார்த்து...' பாடலுக்கு தான் பி. சுசீலா அவர்களுக்கு முதல் முதலில் தேசிய விருது கிடைத்தது (தமிழில்).
பாடும் வரிகளுக்கு உணர்ச்சியூட்டி நம்மை அந்த பாடலின் சூழ்நிலைக்கே கொண்டு சென்றுவிடுவார்.

சுசீலாம்மாவை சொல்லீட்டு இந்த பாட்டுக்கு ஒயிலாக நடனம் ஆடிய வாணிஸ்ரீ யை சொல்லைன்னா எப்படி...கருப்பு வெள்ளை படத்திலும் அழகோ அழகாக....

பாடலை கேட்டு ரசியுங்கள்.




பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய் ?

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா..
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு.. ஆ...
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்
கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்..
கலைஞனாகினான்..( நாளை )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்..
மயக்கம் கொண்டதேன்..( நாளை )

10 comments:

யட்சன்... said...

மீ த ஃபர்ஸ்ட்...

யட்சன்... said...

மீ த செகண்ட் :)

யட்சன்... said...

அண்ட்....மீ த தேர்ட்...ஹி..ஹி...

யட்சன்... said...

என்ன பதிவுன்னு இனிமேலதான் படிக்கனும்...படிச்சிட்டு வர்றேன்...ஹி..ஹி..

கவிதா | Kavitha said...

வாணிஸ்ரீ பற்றி நீங்க எழுதுவது இது இரண்டாவது முறை என்று நினைவு சரியா... :) அவ்வபோது இப்படிப்பட்ட பதிவுகள் உங்களின் இசை ஆர்வத்தை காட்டுகிறது.. :)

Thekkikattan|தெகா said...

நடத்துங்க... நடத்துங்க!! பாடலுக்கு நன்றி.

மங்கை said...

:-) நன்றி.. அனைவருக்கும்

லதானந்த் said...

நல்ல அருமையான ரசனை. வாழ்த்துக்கள்.
லதானந்த்
www.lathananthpakkam.blogspot.com

சென்ஷி said...

:)

எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பகிர்விற்கு நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. :)