Monday, February 18, 2008

ஆலோலம் பாடும் பச்சைக் கிளிகள்..

படம்: பிராப்தம்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி

நாயகனுக்கும் நாயகிக்கும் நட்பும் இல்லாத காதலும் இல்லாமல், ஒருவரின் மேல் ஒருவருக்கு மரியாதை. நாயகி பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஓடக்காரனான நாயகன் பேச்சு வழக்கில் சொல்லித்தரும் பாட்டு.

நடிகர் திலத்திற்கும் நடிகையர் திலத்திற்குமே உண்டான பிசிரில்லாத நடிப்புடன் கூடிய பாடல் .
எனக்கு பிடித்த வரிகள்....

//தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக //
//பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில் பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக //

பாடலைக் கேட்டால், நாமும் ஓடத்தில் போவதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் கவிதை வரிகளும் இசையும்.

டி.எம்.எஸ்:ம்ம்ம் ஹம் சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து,
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
டி.எம்.எஸ்:ம்ஹம், காற்று இல்லே காத்து
சுசீலா :தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள் நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
சுசீலா :அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
டி.எம்.எஸ் & சுசீலா: சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:செவ்வாழைத் தோட்டமும், தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சுசீலா :தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
டி.எம்.எஸ் & சுசீலா: ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு.
எம்.எஸ்: ஓஓஓஓஓஓ
சுசீலா : ஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்:பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
சுசீலா : பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில் சங்கீதம் கேட்பதும் நமக்காக
டி.எம்.எஸ் & சுசீலா:சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு.
எம்.எஸ்:நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
டி.எம்.எஸ் & சுசீலா:சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும், பூவாச்சும் வருமென்று, மீனாட்சி சொன்னதும் நமக்காக மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பார்த்தும்

16 comments:

காட்டாறு said...

ஆலோலம் --- மறந்து போன ஒரு வார்த்தை. ஓடத்துல போனதுல நிறைவா இருக்குது. :-)

மங்கை said...

டாக்டரம்மா..ஆடியோ கிடைக்கலை.. நானும் தேடிப் பார்த்துட்டேன்.. ஒரு இடத்துல இருக்கு ஆனா அதை எம்பெட் செய்ய முடியலை...

வாங்க காட்டாறு...இதை வச்சு ஒரு கவிதை எழுதுங்க..:-))

பாச மலர் / Paasa Malar said...

நல்ல பாட்டு மங்கை..காத்து இல்லை காற்று என்று சரிபண்ணுவார்களே..ரசிக்கும் விஷயம்..

Radha Sriram said...

மங்கை ரேடியோஸ்பதில http://radiospathy.blogspot.com/2008/02/blog-post_15.html என்னோடா விருப்ப பாட்டா இந்த பாட்ட கேட்ருந்தேன்.கானா ப்ரபா போட்ருந்தாரு இப்ப தேடத்தான் பொறுமையில்ல..:)இந்த பாட்டு ஹிந்திலயும் ரொம்ப நல்ல இருக்கும்.லதாவும் முகேஷும் பாடியிருப்பாங்க.(சாவனுக்கா மஹீனா.......நூத்தன் சுனீல் தத் நடிச்சிருப்பாங்க)

கோபிநாத் said...

நல்ல வரிகள்...அந்த சூழ்நிலையை அழகாக சொல்லியிருக்கிங்க ;))

அப்புறம் இங்கு நேயர் விருப்ப பாடல்கள் உண்டா?? ;)))

இரண்டாம் சொக்கன்...! said...

பாட்டோட ஆடியோ எங்கே...எங்கே...எங்கே?

இராம்/Raam said...

//டாக்டரம்மா..ஆடியோ கிடைக்கலை.. நானும் தேடிப் பார்த்துட்டேன்.. ஒரு இடத்துல இருக்கு ஆனா அதை எம்பெட் செய்ய முடியலை.//


மேம்,

தேன்கிண்ணத்திலே போட்டுருவோம்... :)) நீங்க மேடமின்னு கூப்பிடக்கூடாதுன்னு சொன்னதுனாலே மேம்'ன்னுதான் சொல்லியிருக்கேன்... :))

கண்மணி/kanmani said...

மங்காத்தா!ஏனாத்தா?இப்படி பாட்டு பொட்டிப் பக்கம் திரும்பிட்டீங்க.....
ரொம்ப ஃபிரீயோ?ம்ம்ம்நடத்துங்க

மங்கை said...

ஆமா மலர் நல்லா இருக்கும்

ராதா ஹிந்தியிலும் இருக்கு... ஹிந்தியில நூதன் அற்புதமா செய்திருப்பாங்க

நேயர் விருப்பமா...அத என்னை விட அழகா குடுக்க ஆள் இருக்காங்களே..இருந்தாலும் சந்தோஷமா குடுக்க ட்ரை பண்றேன்..

மங்கை said...

சொக்கரே..
விடியோ ஆடியோ கிடைக்கலை
நம்ம அறிவுக்கு எட்டுன வரைக்கும் தேடிப்பார்த்துட்டேன்.. உங்களுக்கு கிடச்சா சொல்லுங்க..

மங்கை said...

இராமு..இராமு..

'மேம்' அதைவிட இருக்கே..
பாட்டு தேன் கிண்ணத்துல போடுங்க

கண்மணி...பாட்டு எப்பவும் கேக்குறது தன்..அது தான் நமக்கு துனை:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட என்ன மங்கை அதான் படத்தோட முழுப்ப்ளேயர் கிடைச்சதே ..அப்படியே போட்டிருக்கலாமே நீங்க.. இத்தனாவது பாட்டு இதுல ன்னு நான் பாருங்க அப்படித்தான் போட்டுட்டேன் ... மாசிலா நிலவே..
நல்ல பாட்டுப்பா.. ஆமா என்னமோ வேற பாட்டு இல்ல போடரதா சொல்லிட்டிருந்தீங்க.. கோபி கூட கும்மிக்கு ஆள் கூட்டிட்டுவரதா சொன்னாப்லயே

மங்கை said...

கயலு...கும்மில என்னை மாட்டி விடறதுல ரெம்பபபப ஆசையா இருக்கீங்க போல...ஆனாலும் அந்த பாட்ட போடறது போடறதுதான்..

C.N.Raj said...

Mangai,

paattu super.
vera ethaavathu oru ilayaraaja melody paattu onnu podunga.

C.N.Raj.

sury siva said...

//ராதா ஹிந்தியிலும் இருக்கு... ஹிந்தியில நூதன் அற்புதமா செய்திருப்பாங்க

நேயர் விருப்பமா...அத என்னை விட அழகா குடுக்க ஆள் இருக்காங்களே..இருந்தாலும் சந்தோஷமா குடுக்க ட்ரை பண்றேன்
சொக்கரே..
விடியோ ஆடியோ கிடைக்கலை
நம்ம அறிவுக்கு எட்டுன வரைக்கும் தேடிப்பார்த்துட்டேன்.. உங்களுக்கு கிடச்சா சொல்லுங்க..//

இதோ கண்டுபிடித்துவிட்டேன்."ஸாவன் கா மஹீனா பவன் கரேன் ஷோர்..." சுனில் தத், நூதன் நடித்த படம் ஆசை ஆசையாய் நான் 1970ல் பார்த்த படம். இன்றைக்கும் காதுகளிலொலிக்கிறது.
இதை விரும்பிக்கேட்டிருக்கும் நேயர்கள்

மங்கை,பாசமலர், ராதா ஸ்றீராம், கோபி நாத்,கண்மணி, இராம்,மற்றும் அவர்கள் தோழ்ர்கள்,தோழியர்களுக்காகவும், லிங்க் தருகிறேன்.

http://www.youtube.com/watch?v=aSqwfhYAoxs


ம‌கிழ‌வும்.

சுப்புர‌த்தின‌ம்.
த‌ஞ்சை.

http://sachboloyaar.blogspot.com
http://anewworldeveryday.blogspot.com
http://arthamullaValaipathivugal.blogspot.com

மங்கை said...

ராஜ் நன்றி

முதல் வருகைக்கு நன்றி சூரி அவர்களே
ஆம் நூதனின் மென்மையான நடிப்பு அற்புதம்...ஹிந்தியிலேயும் ச்சோர். சோர் னு சொல்றது நல்லா இருக்கும்