Saturday, February 09, 2008

கலைந்திடும் கனவுகள்

இசைஞானியையும், கவி அரசரையும் இனைத்த பாடல்.

கண்ணதாசனைத் தவிற வேறு யாரால் இந்த வரிகளை எழுத முடியும்

படம்: தியாகம்
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர் : ஜானகி


வசந்த கால கோலங்கள்

வானில் விழுந்த கோடுகள்

கலைந்திடும்

கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்(வசந்த)


அலையில் ஆடும் காகிதம்

அதிலும் என்ன காவியம்

நிலையில்லாத மனிதர்கள்

அவர்க்குள் என்ன உறவுகள்

உள்ளம்

என்றும்

ஒன்று

அதில் இரண்டும் உண்டல்லவா

கலைந்திடும்

கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)தேரில் ஏறும் முன்னரே

தேவன் உள்ளம் தெரிந்தது

நல்ல வேளை திருவுளம்

நடக்கவில்லை திருமணம்

நன்றி நன்றி தேவா

உன்னை மறக்க முடியுமா

கலைந்திடும் கனவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள் (வசந்த)

22 comments:

PAISAPOWER said...

என்ன திடீர்னு தத்துவமெல்லாம்....

நல்ல பாட்டு....

காதலர் தினமெல்லாம் வருது...குளிர குளிர காதல்பாட்டு போடுவீங்களா, அத விட்டுட்டு...இப்படி தத்துவ முத்தா இருக்கீங்களே...

ஹி...ஹி...

Anonymous said...

ஓடிப்போன பதிவு போட்டீங்க. அதோட விளைவா இந்த தத்துவமெல்லாம்.

தென்றல் said...

/இசைஞானியையும், கவி அரசரையும் இனைத்த பாடல். /

அப்படியா..!!

அருமையான பாடல்.
இந்தப்படத்தில இன்னொரு (தத்துவ)பாடலும் நல்லா இருக்கும்..

துளசி கோபால் said...

??????????????

அபி அப்பா said...

எனக்குகொஞ்சமும் பிடிக்காது இந்த பாட்டு!ஸாரி மங்கை!!!

delphine said...

என்ன மாமி..
நன்னாதானே இருக்கீங்க?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எனக்குப் பிடித்த பாடலும் கூட...

அன்புடன்,
ஜோதிபாரதி.

காட்டாறு said...

நல்லாயிருக்கியா தாயீ? ஜுரம் ஏதும் இல்லையே? ஓடிபோன கதை எழுதியதும் இந்தப் பாடல் வந்தது கொஞ்சம் வில்லங்கமா தான் இருக்குது?

மங்கை said...

சொக்கரே நான் எல்லாம் தத்துவம் சொன்னா என்னாவறது...

இது சும்மா சும்மா

சின்ன அம்மணி..காட்டாறு..டாக்டரம்மா..
நானே சொ.செ.சூ வச்சுட்டனே

இந்த பதிவின் பின் கதைய சொல்றேன் கேளுங்க...

நீங்க எல்லாம் பாட்டா போடறீங்களே, அது எப்படின்னு இம்புட்டு நாள் இல்லாத மூளைய போட்டு கசக்கி பிழிஞ்சு பார்த்ததுல..பொடுசு எல்லாம் என்னத்த இத்தன நாள் தமிழ்மணத்துல இருக்கேன்னு ஒரே கிண்டல்.. நான் வேனா சொல்லித்தரவான்னு வேற..

அதுக்காக இன்னைக்கு எப்படியாவது இத கண்டுபிடிச்சு போடோமுன்னு ஒரு வெறி தானுங்க

கண்டுபிடிச்ச அப்புறம் .ச்சே ச்சே ச்சே.இவ்வ்வ்வ்ளோஒ தானான்னு... நம்ம அழகு அப்பதான் தெரிஞ்சது...

கரீட்டா ஜெயா டீவில ஒரு அம்மா இந்த பாட்ட பாடீட்டு இருந்தாங்களா..சரி நல்ல பாட்டு அதவே முதல்ல போடுவோமுன்னு தான்..போட்டேன்..

அம்மணிகளா வேற ஒன்னும் இல்ல தாயீ..ஜூரத்துல வந்த வெறி தான்..
:-)))

அடுத்து நம்ம படமான தில்லானா மோகனாம்பாள் பாட்டு போட்டு தாக்கப் போறேன்..கேட்ட பாட்டு தானேன்னு யாரும் வராம இருக்காதீங்கோவ்..வந்துருங்க ஆமா..

காட்டாறு said...

//அடுத்து நம்ம படமான தில்லானா மோகனாம்பாள் பாட்டு போட்டு தாக்கப் போறேன்..கேட்ட பாட்டு தானேன்னு யாரும் வராம இருக்காதீங்கோவ்..வந்துருங்க ஆமா..
//
தில்லானாவா... க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் ஜூட்

கண்மணி/kanmani said...

நடுவுல கொஞ்ச நாள் நான் இல்லையா அதேன் ஒன்னும் பிரியல...ஏன் ஆத்தா சோகம்...டென்ஷன்...மச்சானோட லடாயீ???;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லப்பாட்டு மங்கை.. நடத்துங்க நடத்துங்க..
எதோ நீங்களும் மொக்கைப்பதிவு பாட்டுபதிவு ன்னு எல்லாமே எனக்கும் வரும்ன்னு நிரூபிக்கிறீங்க.. அடுத்து என்ன புகைப்படப்போட்டியில் கலந்துக்குங்க அத ஏன் விட்டுவைக்கிறீங்க..

அபி அப்பா said...

எனக்கு மட்டும் பதில் சொல்லாத மங்கை வாழ்க பல்லாண்டு:-))

மங்கை said...

அபி அப்பா

ஒவ்வொன்னா வர்ரதுக்குள்ள அவசரப் படறீங்களே..:-))

அது சரி. சாரி எதுக்கு...எல்லார்க்கும் புடிக்கனும்னு கட்டாயமா என்ன...

மங்கை said...

கண்மணி..அம்மாக்களுக்கு தானே ரென்ஷன்...:-))

ஏனுங்க கயல்விழி

நீங்க பாட்டுக்கு பேர மாத்தி மாத்தி வச்சுட்டு இருக்கீங்க..சொல்லாம கொள்ளாம..

ஆமா புகைப்படம்னா என்னாது?..
போட்டோவ ''கையில புடிக்கறத'' தவிர வேற ஒன்னும் தெரியாதுங்கோவ்.

என்ன இருந்தாலும் உங்க
''முயற்சிகளுக்கு'' பக்கத்துல நான் எங்க...ஏதோ ஒன்ன தெரிஞ்சுட்ட குஷியில போட்ட பதிவு...

இனிமே கயலு கயலுன்னு கூப்பிடவா..

அபி அப்பா said...

:-)))
வேலைய கொடுத்து செய்யுடான்னு சொன்னா நான் பாட்டுக்கு வேலைய செய்யாம பாட்டுக்கு பதில் போட்டுகிட்டு இருக்கேனே! என்னை என்ன பண்ணலாம்!!

அபி அப்பா said...

:-)))
வேலைய கொடுத்து செய்யுடான்னு சொன்னா நான் பாட்டுக்கு வேலைய செய்யாம பாட்டுக்கு பதில் போட்டுகிட்டு இருக்கேனே! என்னை என்ன பண்ணலாம்!!

மங்களூர் சிவா said...

எச்சூஸ்மீ மே ஐ கம் இன்சைட்

கோபிநாத் said...

ஏன்...ஏன்..இப்படி எல்லாம் அப்புறம் நானும் சென்ஷியும் சேர்ந்து இந்த சோகம் தாங்க முடியமால் ஒரு 200 அடிப்போம்..;))

மங்களூர் சிவா said...

கோபி மே ஐ ஹெல்ப் யூ?

கோபிநாத் said...

\\ காட்டாறு said...
//அடுத்து நம்ம படமான தில்லானா மோகனாம்பாள் பாட்டு போட்டு தாக்கப் போறேன்..கேட்ட பாட்டு தானேன்னு யாரும் வராம இருக்காதீங்கோவ்..வந்துருங்க ஆமா..
//
தில்லானாவா... க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் ஜூட்\\

யக்கோவ்...இருங்க நானும் வரேன்..;))

தென்றல் said...

///அடுத்து நம்ம படமான தில்லானா மோகனாம்பாள் பாட்டு போட்டு தாக்கப் போறேன்..கேட்ட பாட்டு தானேன்னு யாரும் வராம இருக்காதீங்கோவ்..வந்துருங்க ஆமா..
//
தில்லானாவா... க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் ஜூட்
///

வாவ்... சீக்கிரம் போடுங்க... எத்தனை முறைனாலும் பாட்டை(படமும்) பார்க்கலாமே...

[நீங்க எந்த பாட்டு போடுவீங்கனும் எனக்கு தெரியும்..!!]