Wednesday, January 16, 2008

பிடித்த பதிவுகள்-கண்மணியின் அழைப்புக்காக

நான் எழுதறதும், அதை நீங்க படிச்சு கருத்து சொல்றதே பெரிய விஷயம்னு நினச்சுட்டு இருக்கேன்...ஒன்றரை வருஷமா எழுதினாலும் மொத்தமே 67 பதிவுகள் தான் எழுதியிருக்கேன்...

அதுல பிடித்த பதிவுகளை சொல்ல அழைப்பு விடுத்த கண்மணிக்கு நன்றி.

சில பதிவுகள் ரொம்ப ஆர்வமா,ஈடுபாட்டோட எழுதுவோம்..... அப்படி திருப்தி அளித்த (எனக்கு) பதிவுகள்


1) Growing Old... - எப்பவும் பெரியவங்க கூட இருக்கனும்னு நினைப்பேன்.. கூட்டுக்குடும்பம்...மாமியார்...அம்மா...நாத்தனார்..ம்ம்ம்... உறவுகள் விட்டு தூரமா..(மனசளவுல இல்லை) இருக்கறப்போ... இன்னும் நிறைய ஒட்டுதல் வருது....ஒரு நாள் அம்மாவும் மாமியாரும் அடுத்தடுத்து கூப்டு தங்கள் தனிமையை சொல்லாம சொல்ல...அன்னைக்கு முதியோர்கள் தினமும்...இந்த பதிவ எழுதினேன்...

2) திருநெல்வேலி குசும்பு - எப்பவும் சீரியஸா எழுதறதுனால, லைட்டான பதிவுகளே நமக்கு வராதான்னு தோனும். பதிவுல சொன்ன சம்பவத்தை அப்படியே எழுத ஆரம்பிக்க...நல்லா இருந்த மாதிரி இருந்துச்சு....முதல் முறையா லைட்டான பதிவு எழுதுனதால இந்தப் பதிவும் பிடிச்சுப் போச்சு

3) அப்பா.. - அப்பாகிட்ட தான் ரொம்ப நெருக்கமா உணர்ந்திருக்கிறேன்.. அவர் இவ்வளோ சீக்கிறமா என்னை விட்டு போவார்னு எதிர்பார்க்கலை... என்னோட இன்றைய வளர்ச்சியை பார்த்தா அவரின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.....அவர் எனக்கு குடுத்த படிப்பும், அனுபவமும், நல்ல விதத்துல உபயோகப்படறதே அவருக்கு நான் செய்யும் மரியாதை.. அவரைப்பற்றி எழுத வாய்ப்பு கிடச்சதுனால இந்த பதிவும் பிடிக்கும்.

பின்னூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி.

நான் அழைப்பவர்கள்...

மலர்வனம் லக்ஷ்மி

டாக்டரம்மா....

சின்ன அம்மனி

21 comments:

இரண்டாம் சொக்கன்...! said...

அப்ப கொஞ்சம் கூட ஆர்வமில்லாம, திருப்தியில்லாம, அக்கறையில்லாம 63 பதிவு எழுதியிருக்கீங்கன்னு அர்த்தமா?

என்ன கொடுமையிது சரவனா...?

ஹி..ஹி...ம்ம்ம்ம்

இரண்டாம் சொக்கன்...! said...

Sorry... 62 பதிவு...

மேக்ஸ் வீக்...ஹி..ஹி...

கண்மணி/kanmani said...

நன்றி மங்கை.ஆனா நீங்க ஜஸ்ட் பாஸ்தான்.ஏன்னா விதிப்படி ஏன் பிடிக்குதுனு காரணம் சொல்லனுமே

மங்கை said...

சொக்கரே.. நாலு வரி பதிவு எழுதனாலும் உங்க ட்ரேட் மார்க் கமெண்ட்...

சொக்கரே இந்த பதிவுகள்ல பிரம்ம ரிஷி பட்டம் இருக்கறது கூடுதல் சிறப்பு...

சரவனனா, சரவணனா

ஹூம்..தமிழும் வீக்

மங்கை said...

டீச்சரம்மா..நாம என்னைக்கு நல்ல மார்க் வாங்கி பாஸ் ஆகியிருக்கோம்.. படிக்கறப்பவே ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்னு தானே படிக்கிறோம்..
பாஸ் பண்ணி விட்டதுக்கு நன்றி கண்மணி

கண்மணி/kanmani said...
This comment has been removed by the author.
கண்மணி/kanmani said...

பரீட்சையில் எழுதவில்லைனாலும் அப்பால அசைன்மெண்ட் எழுதுவது இல்லையா?
சர்வேசன் லிஸ்ட்டுக்கு அனுப்ப வேண்டியதால் பிடித்த காரணமும்,நீங்க சிலரையும் [எத்தனை பேர் வேனும்னாலும்] அழைக்கவும்
மலர்வனம் லஷ்மி ,சின்ன அம்மனி,டாக்டர் டெல்பின் மை சாய்ஸ்....தென் ஆஸ் யூ விஷ்

Thekkikattan|தெகா said...

நான் எல்லா பதிவுகளுமே படிச்சிருக்கேன்பா. ஆனா, ஏதாவது டொனேஷன் கேட்டு பதிந்திருஞ்சா அத்தப் பதிவ ஸ்கிப் பண்ணிறுவேன்... ஏன்னா, சும்மா எல்லாம் நாங்க ப்ராமிஸ் பண்றதில்லைன்னு ஒரு ரூல்ஸ் வைச்சிருக்கோமாக்கும் :).

Ayyanar Viswanath said...

மங்கை உங்களின் அப்பா பதிவு எனக்கும் பிடித்த ஒன்று..

செல்வம் said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.குறிப்பாக அப்பா பற்றிய பதிவு நன்றாக இருந்தது.

மங்கை said...

கண்மணி..

படிக்காட்டியும் டீச்சர் சொல்றத கேக்குற பிள்ளைக நாங்க...

அழைச்சுட்டேன்பா..நன்றி கண்மணி...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

growing old ரொம்ப நல்ல தேர்வு தான்.. ம்.. ஆடிக்கொருதரம் அம்மாசைக்கொருதரம்ன்னு எழுதினாலும் விசயத்தோட தந்துக்கிட்டு இருந்தீங்க நடுவில் கொஞ்சம் எழுதாம இருந்தவங்களை இந்த டேக் திருப்பி இழுத்துட்டு வருது நல்லவிசயம்..
அம்மா அடிக்கடி இப்படி நல்ல விசயங்களை தந்துகிட்டே இருக்கும் படி கேட்டுக்கிறேன்..

மங்கை said...

தெகா

எல்லாப் பதிவுகளும் படிச்சிருக்கீங்களா.. நிஜமாவா..பரவாயில்லையே..

நன்றி அய்யனார், செல்வம் மிக்க நன்றி

லக்ஷ்மி...டீச்சர் ஐடியாவே அது தான்னு நினைக்குறேன்..:-))

காட்டாறு said...

இரண்டாவது படிச்ச ஞாபகம் இல்லை. மங்கை. இதோ இப்போ படிச்சிட்டு வர்றேன்.

எனக்கு உங்களோட நட்சத்திர பதிவுல வாழை இலையில் சாப்பிடுவது பத்தி எழுதினது ரொம்ப பிடிக்கும். சாப்பாட்டு ராமின்னு சொன்னாலும் சரிதான். ;-)

Anonymous said...

அழைப்புக்கு நன்றி மங்கை. சீக்கிரமே போடறேன். ஆனாலும் நீங்க எக்கச்சக்கமா பதிவு போட்டீங்க. இது பிடிக்கும் அது பிடிக்கும்னு போடலாம்.நான் அப்படியா??

கண்மணி/kanmani said...

பதிவு பிடிச்ச காரணம் எழுதியதும் அதன் கனம் இன்னும் கூடிப் போச்சு.நன்றி மங்கை.

கோபிநாத் said...

திருநெல்வேலி குசும்பு - பதிவு மட்டும் இப்ப தான் படிச்சேன் சூப்பர் கும்மி போல அதுல ;))

அப்பா பதிவு எனக்கும் பிடித்த பதிவு ;)

cheena (சீனா) said...

தங்களுக்குப் பிடித்த மூன்று பதிவுகளையும் படித்து ரசித்து அங்கேயே மறு மொழியும் போட்டு விட்டென். அனைத்தும் அருமையான பதிவுகள். தேர்வுகள் நன்றாக இருக்கின்றன ( மீதம் 60 பதிவுகளையும் படிக்காமலேயே )

மங்கை said...

லட்சுமி, காட்டாறு, கண்மணி, சின்ன அம்மணி..(நான் ரொம்பபப எழுதியிருக்கனா...அது சரி)..கோபி, தருமி ஐயா..சீனா

மறுமொழி இட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...

பாச மலர் / Paasa Malar said...

//Growing Old... - எப்பவும் பெரியவங்க கூட இருக்கனும்னு நினைப்பேன்.. கூட்டுக்குடும்பம்...மாமியார்...அம்மா...நாத்தனார்..ம்ம்ம்... உறவுகள் விட்டு தூரமா..(மனசளவுல இல்லை) இருக்கறப்போ... இன்னும் நிறைய ஒட்டுதல் வருது....ஒரு நாள் அம்மாவும் மாமியாரும் அடுத்தடுத்து கூப்டு தங்கள் தனிமையை சொல்லாம சொல்ல...//

முற்றிலும் உண்மை..sailing in the same boat.

அபி அப்பா said...

மங்கை பாட்டி! நான் அந்த நட்சத்திர பதிவின் போதூ ஆபீஸில் இருந்தேன்! அதனால தங்கிலீசில் போட்டேன்! இப்போ சொல்ல்கிறேன் என் கருத்தை!

ரொம்ப அருமைங்க! அபி கூட பின்னானில் இப்படி பதிவு போடுவா இல்ல???