கணவன் மூலமாக எச்ஐவி நோய்க்கு ஆளாகும் ஒரு பெண், கணவனின் வீட்டாரால் வீட்டை விட்டு துரத்தப்படுகிறாள். குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் அந்தப் பெண் கட்டிட வேலை செய்து குழந்தையை காப்பாற்றுகிறாள். மேலும் அவளுடன் கூலி வேலை செய்யும் பெண்களுக்கு எச்ஐவி பற்றி எடுத்து கூறி, கர்ப்பமாக இருக்கும் பெண்கள், கண்டிப்பாக எச்ஐவி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கூறுகிறாள்.
விழிப்புணர்வு கூட்டங்களில் போட்டு காட்டவேண்டிய படமானதால் பெரும்பாலும் எச்ஐவி பற்றிய அடிப்படைத் தகவல்கள், பாதிக்கப்பட்டவர்கள் படும் கஷடங்கள் போன்றவை எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றது.
முப்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்ல எடுத்த படம். நான் எதிர் பார்த்த அளவிற்கு வரலைன்னாலும், படத்திற்கான குறிக்கோள் நிறைவேறியாச்சு.
நாமும் ஏதோ செய்திருக்கோம்னு ஒரு திருப்தி.
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட அம்பாவாக நடித்த சாகரீக்கா- நிறைவான நடிப்பு
தம்லியாக நடித்த கீதா, அசத்தீட்டார்
தான் கர்ப்பமாக இருப்பதை கணவனிடம் சொல்லும் அம்பா
அடிக்கடி நோய்வாய்ப்படும் கணவனாக நடித்த ஜீத்து.
டாக்கடராக நடித்த சந்தீப் ஆர்யா
வில்லி மாமியார்.. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய பெண் வராததால், மேக்அப் வுமன் பிரியா, மாமியாராக ஒரே காட்சியில் வந்தாலும் அசல் வில்லி தோற்றும் போகனும். அப்படி ஒரு லுக்கு.
வீட்டை விட்டு விரட்டப்பட்ட அம்பா, தெருவில் குழந்தையுடன்
டாக்டரம்மாவாக நடித்த ரிது ஆர்யா
உண்மையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் பத்மாவதி
பகவதி
நல்ல படியாக குழந்தையை பெற்றெடுத்த சந்தோஷதத்தை அம்பாவிடம் பகிர்ந்து கொள்ளும் தம்லி.
43 comments:
எங்கள் கற்பனைக்கு எட்டாத மங்கை அவர்களே வாழ்த்துக்கள்!!!!!!
நான் தான் ரொம்ப பெருமை படரேன்!!!
//முப்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்ல எடுத்த படம். //
"முப்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்ல நான் இயக்கிய படம்"
இப்படித்தானே எழுதனும்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...இந்த அம்மாவுக்கு தமிழ் சொல்லி தர்றதுக்குள்ள எனக்கு தமிழ் மறந்துடும் போல...
ஹி..ஹி...
மங்கை,
பலநாட்களாக உங்களுக்கு எழுத நினைத்தும் பின் மறந்தும் போனதுண்டு. நீங்கள் ஈடுபட்டுள்ள துறையும், அதற்கான உங்கள் அர்ப்பணிப்பும் எனக்குள் நெகிழ்வையும், பல மாற்றங்களையும் ஏற்படுத்தியதுண்டு. உங்களின் பணிகளுக்கான அங்கீகாரமாகப் பாராட்டுக்கள் கிடைத்தமை பற்றிக் காட்டாறு எழுதியிருந்தார் என நினைக்கிறேன்.
அந்தப் பாராட்டுக்கள் உங்களை மேலும் தீவிரச் சமூக விழிப்புணர்வுப் பணியில் தொடரவைக்கும் என்றே நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
மனமார்ந்த பாராட்டுகள் அக்கா ;))
\\\ இரண்டாம் சொக்கன்...! said...
//முப்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்ல எடுத்த படம். //
"முப்பதாயிரம் ரூபாய் பட்ஜெட்ல நான் இயக்கிய படம்"\\
சூப்பராக சொன்னிங்க சொக்கன் ;))
மிக அருமையான பதிவு
மங்கை - காட்டாறு அவங்களோட பதிவு பாத்தேன். உங்களோட களப்பணிக்கும் அர்ப்பணிப்பு உணர்வுக்கும் மேலும் மேலும் அங்கீகாரங்கள் கிடைக்கணும்.
//நாமும் ஏதோ செய்திருக்கோம்னு ஒரு திருப்தி.// கொஞ்சம் பொறாமையாக் கூட இருக்குங்க உங்க மேல. ;)
யாரும் அணுகத் தயங்கும் துறையில் உங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். நன்றி.
ரொம்ப தான் படம் காட்டறீகளே
அப்படி என்ன அன்னை தெரசா தரத்துக்கு நீங்க உயர்ந்து நிக்கறீங்கன்னு தெரியலை...
சொக்கா..! தலையால தண்ணி குடிச்சாலும் இந்த அம்மா கிட்ட தரமான தமிழ் எதிர்பார்க்க முடியாது...
இந்த லட்சனத்துல இந்த அம்மா பேர்ல இன்னொருத்தர் வந்துட்டாங்கன்னு அவங்க பேர மாத்திக்கனுமாம்...
ஓசியில கம்ப்யூட்டர் கிடைச்சுட்டா போதுமே..ஆபீஸ்ல வேலை வெட்டி பார்க்காம பதிவு எழுத வந்துற வேண்டியது..
பிரச்சார படமாக இருந்தாலும், இது போன்ற கதைகளில் நடிக்க நடிகர்கள் வருவது கடினம், அவர்களுக்கும் சொல்லி புரிய வைத்து , படம் எடுத்தது பாராட்டுக்குறியது.
விவேக் சொல்லும் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் போல ஹிட் ஆகட்டும் படம் :-))
30000 ஆயிரம் என்று சொன்னாலும் ஸ்டில்களைப்பார்த்தால் படம் நல்லா தயாரிப்பு நேர்த்தியுடன் வந்திருப்பது போல தெரிகிறது. ஒளிப்பதிவாளர் திறமையாக கையாண்டு இருக்கிறார் என நினைக்கிறேன்.நீங்களும் நிறைய உழைத்து ,சிரமப்பட்டு இருக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது.
இந்த படத்தை தியேட்டர்ல மெயின் பிக்சர் போடுறதுக்கு முன்ன காட்டுவாங்களா?
மிக அருமையாக இருக்கு ஸ்டில்ஸ், வவ்வால் அவர்கள் சொல்வது போல் படத்தில் அதிக தெளிவு மற்றும் கடின உழைப்பு தெரியுது. அருமை!
மங்கை,
அட உண்மையிலேயே உங்க தயாரிப்பில் வந்த குறும்படமா இது? சொல்லவே இல்லையேங்க. இருந்தாலும், அநியாயத்துக்கு நீங்க தன்னடக்கமா இருக்கீங்க... பார்த்துக்கோங்க.
வவ்ஸ், சொன்னது போலவே அந்த ஸ்டில் படங்களைப் பார்க்கும் பொழுதே தெரிகிறது, உழைப்பிற்கான சிரத்தையும் அதற்கான தரமும்.
எப்படியாவது இதனை யூட்யுப்ல் ஏத்தியாகணும். இந்த குறும்படம் என்ன மொழியில் எடுக்கப்பட்டது முதலிள்? இதற்கு உப தலைப்பு ஆங்கிலமும் உண்டு என்பதனைப் போல இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் முகவுரை நன்றாகவே, விரிவாக எழுதியிருக்கலாம். சும்மா, வெக்கப் படமா செய்த கடின வேலையை பிரகடனப்படுத்தி சொல்லுங்க மங்கை.
தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும் எல்லாப் புகழும் உங்களின் கடின உழைப்பிற்கே என்று விட்டு விட்டுச் சொன்றுவிடலாம்.
இப்பவே அந்த குறும்படத்தை பார்த்தாகணும்... சீக்கிரமா அப்லோட் பண்ணுங்க.
வாழ்த்துக்கள், மங்கை!
Hats Off Mangai!
Keep up!
நானும் உங்களைப் போலவே ஒரு பதிவன் என்ற முறையில் உங்கள் உழைப்பில், ஆற்றலில் எனக்கும் ஒரு பெருமிதம் வருகிறது.
பணி தொடர வாழ்த்துக்கள்.
எல்லோரும் சொன்னதுபோல் அருமையான படைப்பை நாங்கள் காண வழிசெய்யுங்கள்.
//Manasukkaaran said...
ரொம்ப தான் படம் காட்டறீகளே
அப்படி என்ன அன்னை தெரசா தரத்துக்கு நீங்க உயர்ந்து நிக்கறீங்கன்னு தெரியலை...
சொக்கா..! தலையால தண்ணி குடிச்சாலும் இந்த அம்மா கிட்ட தரமான தமிழ் எதிர்பார்க்க முடியாது...
இந்த லட்சனத்துல இந்த அம்மா பேர்ல இன்னொருத்தர் வந்துட்டாங்கன்னு அவங்க பேர மாத்திக்கனுமாம்...
ஓசியில கம்ப்யூட்டர் கிடைச்சுட்டா போதுமே..ஆபீஸ்ல வேலை வெட்டி பார்க்காம பதிவு எழுத வந்துற வேண்டியது..//
எங்கேர்ந்துய்யா இப்படில்லாம் கெளம்பி வர்றீங்க...
அக்காவுக்கு கண்திருஷ்டி நிறையவே விழுந்திருக்கும். பரிகாரமா ஒரு பின்னூட்டம்..
நல்லாயிருங்கடே...
அக்கா... வாழ்த்துக்கள் லிஸ்ட்ல இந்த தம்பியும் சேர்ந்துக்குறேன்.. :))))
//வவ்வால் said...
பிரச்சார படமாக இருந்தாலும், இது போன்ற கதைகளில் நடிக்க நடிகர்கள் வருவது கடினம், அவர்களுக்கும் சொல்லி புரிய வைத்து , படம் எடுத்தது பாராட்டுக்குறியது.//
கரெக்டா சொன்னீங்க வவ்வால் :)) தேங்க்ஸ் ஃபார் யுவர் கமெண்ட் :))))
எத்தனை அருமையான முயற்சி. வாழ்த்துக்கள் மங்கை!! பிபிசி டாக்குமெந்தரி ஒண்ணு பாத்தேன். அதில பல லாரி ஒட்டும் ஆண்கள் பொதுமகளிரிடம் உறவு வைத்துக்கொள்வதை பெருமையாக நினைக்கிறோம் என்று சொன்னதைப்பார்த்து அதிர்ந்துவிட்டேன். எய்ட்ஸ் வரும் வாய்ப்பு இருக்கே பரவாயில்லையா ன்னு பேட்டியாளர் கேக்க நான் ஆம்பளை, இதெல்லாம் பரவாயில்லை அப்படின்னு சொன்னார் அந்த லாரி ஓட்டுபவர். அது இந்தியால காட்டினாங்களான்னு தெரியலை.
இந்த மாதிரி உங்க முயற்சிகள் தேவைப்பட்டவங்களுக்கு பயனளிக்க பிரார்த்திக்கிறேன்.
வாழ்த்துக்கள் மங்கை !!
உங்கள் உழைப்பிற்க்கும், அர்ப்பணிப்பிற்க்கும் வாழ்த்துக்கள்!
அபி அப்பா நன்றி..
சொக்கரே இதுக்கே சலிச்சுட்டா எப்படி.. இப்பத்தான் என்ன ஒருத்தர் அரைவேக்காட்டு பதிவர்னு ஒத்துட்டு இருக்கார்...இன்னும் பாக்கி இருக்கு
செல்வநாயகி..நன்றிங்க..
கோபி, இக்பால் நன்றி...
லக்ஷ்மி நன்றி பொறாமை படற அளவுக்கு நான் ஒன்னு செய்துடலைப்பா.. நீங்க எல்லாம் எழுதறது பார்த்து தான் நான் பொறாமை படறேன்..:-))
மலைநாடன் ரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க..மிக்க நன்றி
மனசுக்காரன்..
ரொம்ப நல்ல மனசுய்யா உங்களுக்கு..இப்படியே மெயின்டெயின் பண்ணுங்க..
ஐயா நான் யாரையும் பெயரை மாத்த சொல்லலை..நான் எழுதரதே ஆடிக்கொன்னு அமாவாசைகொன்னு..
டாக்டரம்மா....எல்லாம் உங்க வாழ்த்துதன்..நன்றி
வவ்வால்..ரொம்ப சிரத்தையோட செய்தேன்...ஆர்த்தோடு ஈடுப்பட்டேன்
நன்றி குசும்பன்
தெகா...எட்டு பதிவுல சொல்லி இருந்தேனே...நீங்க பார்க்கலை..
வாழ்த்துக்கு நன்றி
தருமி ஐயா
ஒரு உண்மைய சொல்ல விரும்பறேன்.. ஒவ்வொரு தடவையும் உங்க வாழ்த்தை பார்க்கும் போது அப்பா கிட்ட பேசுற மாதிரி எனக்கு ஒரு உணர்வு..மிக்க நன்றி
சென்ஷி நன்றிப்பா..
ராதா சின்ன அம்மணி, பாரி.அரசு நன்றி
வாழ்த்துகள் மங்கை!!!
முடிந்தால் படத்தினை வலையேற்றவும்.
நன்றி.
உங்கள் நல்ல மனம் வாழ்க! அருமையானதொரு முயற்சி. wish you good luck in all your endeavors.
touched. honoured too.
இன்னுமா ரிடையர் ஆகலை...
இன்னும் விரிவாக எழுதுங்கள்.. அந்த வீட்டு உரிமையாளர் ஏயிட்ஸ் படம் எடுக்க இடம் கொடுக்க மறுத்ததலிருந்து நீங்கள் அந்த படத்தில் அவரையே நடிக்கவைத்த கதைபற்றி கண்டிப்பாக எழுதுங்கள்.
இயக்குனர் மங்கை...
இனிமே இப்டிக்கா கூப்டலாமா...?
இந்த படம் ஆஸ்கார் விருதுக்க்கு போவுமா...ஹி..ஹி..
அடுத்த படம் எப்போ?
அருட்பெருங்கோ, இளவரசன் நன்றி..
லட்சுமி எழுதறேன்... நன்றி..பகிர்ந்துக்க நிறைய இருக்கு
சொக்கரே..நீங்க எல்லாம் நாமினேட் பண்ணாதான் உண்டு..ஆஸ்கர் போக
சீக்கிரம் வலையேற்றுங்க. நாங்களும் பார்க்கட்டும். மனமார்ந்த பாராட்டுகள் மங்கை.
இக்குறும்படத்தின் சிறப்பு எங்களுக்கு புரிந்தாலும், இது போல் படம் எடுப்பதில் உள்ள சிக்கல்கள், முத்துலெட்சுமி சொன்னது போல உங்களுக்கு நேர்ந்த இடையூறு பற்றியும் எழுதுங்க.. தொடரா எழுதுங்க மங்கை.
இன்னும் நிறைய விழிப்புணர்வு படங்கள் தொடரட்டும், வாழ்த்துகள் மங்கை. இன்னும் கொஞ்சம் விரிவா எழுதலாமே.
காட்டாறு, ஜெஸிலா நன்றி
குறும்படம் எடுத்துல என்னோட அனுபவத்தை எழுதறேன்..
வாழ்த்துக்கள்!
ஒரு குறும்படம் இயக்குவதின் சிரமம் அதற்கு கிடைக்கும் பாராட்டில் கரைந்துவிடும்.
சிரமம் கண்டிப்பாக கரைந்திருக்கும் என்று நம்புகிறேன்.
உங்கள் அர்ப்பணிப்பு எம் குல குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டும்..! ஏன் எங்களுக்கும்தான்.!
பிரமிட் சாய்மீராவிடம் கேட்டுப்பாருங்களேன். தமிழுக்கு வர வாய்ப்பிருக்கிறது. ஒற்றை ரீல் இயக்கத்துக்கும்... (உங்களுக்கு தெரிந்திருந்தாலும்.,ஒரு ஆர்வத்தில்...மன்னிக்கவும்)
மீண்டும்...வாழ்த்துக்கள்! வாழ்த்துங்கள்!
மிகவும் மகிழ்வாக, நிறைவாக இருக்கிறது. இது போன்ற படங்கள் மூலம் விழிப்புணர்வு ஊட்டுவது, கையேடுகள் தருவதைவிட இன்னமும் மிக ஆணித்தரமாக பதிய வைப்பதால். நன்றி. காட்டாறுவின் பதிவின் மூலம் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றியும் அறிந்து கொண்டேன்.
வாஆஆஆஆஆஆஆஆஆஅழ்த்துக்கள் மங்கை.
முயற்சித்து யாரிடமாவது ஆலோசனை உதவி பெற்று யூ டியூப்ல ஏத்தி பதிவிடவும்.
சிரிப்பாக இருக்கிறது மங்கை!
நான் ஏதோ விளையாட்டாக நம் சக பெண் பதிவர்கள் பற்றி எழுதி பட்டம் குடுத்தால் அதைக் கூட இந்த [நல்ல??] மனசுக்காரங்களால் ஏத்துக்க முடியலை.
இது என்ன ஹார்வேர்ட் யூனிவர்சிடி பட்டமா?
அடக் கடவுளே
வாழ்த்துக்கள்.
வெறும் முப்பதாயிரத்தில் எடுத்த படமா? மிக அற்புதம்.
Hearty congrats Manggai. I am amazed at your zeal for doing things that make a real difference in this world.
Post a Comment