Wednesday, November 07, 2007

பிரபலமடைந்து வரும் எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகள்

சிப்லா கம்பெனியின் புதிய அறிமுகமான ' ஐ-பில்' - கருத்தடை மாத்திரை இளம்பெண்களிடம் அதிகமாக பிரபலம் அடைந்து வருகிறது. தில்லியில் உள்ள மருந்துகடைகளில் இந்த மாத்திரயை வாங்குபவர்களில் 20% சதவீதம் இளம்பெண்கள் தானாம். அதுவும் 16ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆகாத பெண்கள். இது நாள் வரையில் வெளிநாடுகளில் மட்டுமே இது போல 'எமர்ஜென்ஸி' மருந்துகள் உபயோகத்தில் இருந்தன. அதென்ன 'எமர்ஜென்ஸி' மருந்துகள்னு பார்க்குறீங்களா. அதாங்க உடலுறவுக்குப் பின் 72 மணி நேரத்துக்குள்ள இந்த மருந்து எடுத்துக்கோனும்.

இந்த மருந்துகள் எப்படி வேலை செய்கிறது
  1. உடலறுவுக்கு பின் ஓவரியில் இருந்து முதிர்ச்சி அடைந்த முட்டை வெளியே வராமல் தடுக்கிறது.

  2. ஒரு வெளியே வந்து விட்டால் அது ஆண் உயிரணுக்களை சேர விடாமல் தடுக்கிறது.

  3. முதிர்ச்சியடைந்த கரு முட்டைகள் கருப்பையின் உட்சுவர்களை ஒட்டாமல் பார்த்துக் கொள்கிறது.
சரி. திருமணம் ஆன தம்பதியருக்கு இது ஒரு சந்தோஷமான செய்தியா இருக்கலாம். ஆனால் திருமணமாகாத பெண்களுக்கு சில மனரீதியான பிரச்சனைகள் வரும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இந்த மருந்து சாப்பிடறதுனால வரும் பிரச்சனைகள் என்ன என்னன்னு இவங்களுக்கு தெரியாது. எப்படியோ அந்த நேரத்துல உதவுனா போதும்னு இளைய சமுதாயம் இந்த வழியை தேர்ந்தெடுப்பது வேதனை அளிக்கிறது. முறையில்லாத கருக்கலைப்பினால் ஏற்படும் ஆபத்துகளை வெகுவாக குறைக்கலாம் என்பது சிப்லா கம்பெனியின் வாதம்.

இந்த மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே எல்லா மருந்துகடைகளிலுன் கிடைக்கும். ஒரு மாத்திரை ரூபாய் 75 ரூபாய்.

இந்த மாத்திரைகள் ஹார்மோன் மாத்திரைகளானதால், முறையில்லாத மாதவிடாய், அல்லது மாதவிடாய் வராமலே இருத்தல், குழந்தை பேறு பெறுவதில் தாமதம் போன்ற சிக்கல்கள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

முக்கியமான விஷயம், நம் நாட்டில் இன்னும் பலருக்கு கருத்தடை மாத்திரைகள் எந்த விதத்திலும் அவர்களை எச்ஐவி கிருமியிடமிருந்தோ
பால்வினை நோய்களிருந்தோ காப்பாற்றாது என்ற அடிப்படை உண்மை தெரியாது.

இதைப்பற்றி எந்த கருத்தையும் சொல்ல சிப்லா கம்பெனி தயாராக இல்லை.

இந்த மருந்தின் விற்பனையை பார்த்து மற்ற கம்பெனிகளும் இந்த ஆராய்ச்சியில இறங்க தயாராகிவிட்டார்கள்

மேலும் நவம்பர் மாதத்தின் மூனாவது வாரத்தில் சிப்லா கம்பெனி இன்னொரு மருந்தை அறிமுகப் படுத்தவுள்ளது. ' கிரசென்டா'' எந்த வித பக்க விளைவுகள் இல்லாமல் வருகிறதாம்.

இது போல எமர்ஜென்ஸி கருத்தடை மாத்திரைகளுக்கு அனுமதி அளித்து வரும் அரசு, இதைப் பற்றிய போதிய அறிவில்லாத நம் இளைய தலைமுறையை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது?....

32 comments:

துளசி கோபால் said...

morning after pill என்ற பெயரில் இங்கேயும் கிடைக்குது. இது வாங்கிக்க ப்ரிஸ்க்ரிப்ஷன்
வேணா(மா)ம்

தநாம said...

So far The IEC on Family Planning Centred around "Propaganda" and not "education"
Women were advised to "lock the stable before the horse escapes"
Whatever be the mode, it was advised to follow that BEFORE sex.

Other than that, in my personal opinion promoting this "E-Pill" will go against promotion of ALL other forms of Contraception like PS, LS, IUCD, Condoms, OCP...

The main thrust of contraception was driving home the message that "plan before you perform :) " ie PRE COITAL

E-Pill is "building the dam after floods" ie POST COITAL

So any IEC Activity at promoting this E-Pill or any Post Coital methods of sterilisation is first going to affect the adherence of Pre Coital sterilisation... This should be borne in mind and the mode and speed of IEC / ACtion be decided keeping this point in mind

I am not talking about a Executive of ICICI Bank or Program Manager in TCS who will understand the actual concept of E-Pill...... but as far as the rural India is concerned, this promotion of Post Coital Contraception has to be done very carefully

In another angle, E-Pill can protect against only conception while condoms can protect against both contraception and conception

So the IEC should be targeted at people who do not use any contraception (eg married couple who want to space the children) and it should be borne in mind that you do not make some one who is using condoms to switch over and use E-Pill

குசும்பன் said...

"அதுவும் 16ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட திருமணம் ஆகாத பெண்கள்."

மிகவும் கசப்பான செய்தி:(

// நம் இளைய தலைமுறையை பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது?....//

இதுவரை பக்கவிளைவுகளையும், மற்ற நாடுகளில் தடை செய்யபட்ட மருந்துகளையும் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அனுமதி அளித்து மக்களை சோதனை சாலை எலிகளாக நடத்திவரும் அரசுக்கு என்ன அது பற்றி என்ன கவலை வரபோகிறது நீங்க வேற:(

delphine said...

மங்கை நல்ல ஒரு பதிவு. நீங்க சொல்கிற மாதிரி இது ரொம்ப தீவிரமா இளம் சமுதாயத்தினரிடம் பரவிக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்திற்கு ஒரு REMEDY தேவை.. அதுதான் அவர்களின் முக்கிய நோக்கம். அதன் பின் விளைவுகள் பற்றி ...(who cares?) இதுதான் இன்றைய நிலமை.
நான் consultation- kku செல்லும் ஒரு BPO-ல் ஒரு software engineer என்னிடம் இந்த மாத்திரை பற்றி கேட்டான். ஒரு prescription வேண்டும் என்ற போது எனக்கு medicine பெயர் தெரியாது என்றேன். ரொம்ப கேவலமாக என்னை பார்த்து ஒரு சிரிப்பு! old lady என்று சொல்லிவிட்டு கோபமாக நாற்காலியை நகர்த்திவிட்டு சென்று விட்டான். அதிசயித்தேன். கொஞ்ச நேரத்தில் அவன் Girl friend வந்தாள். மாத்திரை கேட்டாள். இந்த ஒரு தடவை மட்டும் கொடுங்கள் என்றாள் .. (சரியாக அவர்கள் இருவரும் 15 வது நாள் உறவு கொண்டிருக்கிறார்கள்.) அவன் இன்னும் 15 நாட்களில் அமெரிக்கா செல்வதாகவும், அவள் கர்ப்பமுற்றால் என்ன செய்வது, என்னிடம் அப்படி ஒரு அழுகை.....
நான் இதுமாதிரி பிரச்னைகளை BPO -க்களில் எதிர் கொள்கிறேன். Sex education-ன் அவசியம் பள்ளிகூடத்தில் மட்டுமல்ல, நாம் வேலை செய்யும் கம்பெனிகளிலும் தேவை எனப்தில் நான் ரொம்ப உறுதியா இருக்கிறேன்.

delphine said...
This comment has been removed by the author.
delphine said...

On second thought,
i feel this is much better than going for an abortion.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி.. என்ன ஒரு கவனம். :)))
வேணா(மா)ம்

தநாம said...

//On second thought,
i feel this is much better than going for an abortion.//

Better than abortion, but inferior to Condoms.... What is your opinion doctor

delphine said...

தநாம said...
//On second thought,
i feel this is much better than going for an abortion.//

Better than abortion, but inferior to Condoms.... What is your opinion doctor///

There is nothing inferior or superior in pills and condoms. everything has its own side effects. Condoms are definitely better than pills... they are good in all the ways and always /// (provided the condom is an intact one.)

மங்கை said...

துளசி இங்கேயும் ப்ரிஸ்க்ரிப்ஷன் தேவையில்லையாம்

மங்கை said...

TNMSC...
(Tamil Nadu Medical Services Corporation?)

சந்தோஷம் அரசு துறையில் இருந்து பின்னூட்டியதுக்கு...

அரசே இந்த எமெர்ஜென்ஸி மருந்துகளை இலவசமாக குடுக்கிறது... இந்த மருந்துகள் உபயோகப்பதும் அதிகமாகியிறுப்பதும் உண்மை... நீங்கள் சொன்ன propoganda எந்த அடிப்படைய அறிவையும் தராத போது..இளைய சமுதாயத்தை வழி நடத்த என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது....

ஒரு பக்கம் வாழ்க்கை கல்வியை (Life Skills Education or Sex education) தடை செய்கிறது அரசு..இன்னொரு பக்கம் இதைப் போல எமர்ஜென்ஸி மருந்துகளை இலவசமாக வினியோகித்து வருகிறது...

Teen pregnancy பெருகி வரும் இந்நாட்களில் கருத்தடை வழிகளை பிரச்சாரம் செய்வது மட்டுமே நோக்கமாக இருக்க முடியாதே...

(Solution Exchange ல் இந்த கலந்துறையாடல் நடந்து கொண்டிருக்கிறது)

மங்கை said...

நன்றி டாக்டரம்மா...

நீங்கள் சொல்வது உண்மை தான்... உயர் பதிவில் இருப்பவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இருப்பது போல் தெரியவில்லை...

நன்றி குசும்பன்...அக்கறையில்லாத அரசின் கொள்கைகள்

இரண்டாம் சொக்கன்...! said...

இதில் கவலைப்பட ஏதுமில்லை...

அபார்ஷன், காப்பர்-டி...வகையறாக்களுக்கு இது நல்ல மாற்றாகவே தோன்றுகிறது.

நம்ம டாக்டர் சொல்றது மாதிரி...ஆணுறை எளிய அதே நேரத்தில் பிரச்சினையில்லாத தீர்வு.

இத்தகைய கலாச்சார விளைவுகளைப் பார்த்து மனம் புண்படுவதை விட என்னுடைய கலாச்சாரமும், பண்பாடும் என்னளவில் சரியாக இருக்கிறதே என சந்தோஷப்பட்டுக்கொள்வதுதான் இப்போதைக்கு குறைந்தபட்ச ஆறுதலாக நினைக்கிறேன்.

Unknown said...

நானும் வாங்கியிருக்கிறேன். அனாசின், விக்ஸ் போல இதுவும் ஒரு பொதுப்படையான தேவை. காண்டம் பயன்படுத்துவதற்கு எப்படி பரிந்துரை தேவை இல்லையோ அதைப்போலவே இதுவும்.ஹார்மோன் மாத்திரைகள் உடல்நலத்திற்கு கேடு என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் கர்பத்தைக் காட்டிலும் இது மிகவும் வசதியானதே. பல பெண்களுக்கு காண்டம் அலர்ஜியை தருகிறது. அவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கக் கூடிய ஒன்று.


கல்யாணம் ஆனவர்களுக்கு வசதி, திருமணம் ஆகாதவர்களுக்கு மனரீதியான பிரச்சனை?? மங்கை முரணாக உள்ளது. 16 வயது பெண் பயன்படுதினாலும் எதிர்பார்த்த பலன் இருக்கிறதா என்பதே மாத்திரையின் நோக்கம். காமமும், கருவுறுதலும் திருமணத்தை அடிப்படையாக கொண்ட ஒன்றன்று. சமுதாய மாற்றங்களை நீங்கள் எந்த பெயர் வைத்தாவது அழைத்துக் கொள்ளுங்கள், மருத்துவத்தின் நோக்கம் மானிட வசதி.

அது வரையில் இதுஒரு பயன் மிகுந்த மாத்திரை, குறைவான அளவுகளில் பயன்படுத்தினால். எப்போதாவது என்ற அடிபப்டையிலே இந்த மாத்திரைகள் தாயாரிக்கப்படுகின்றன. தினம் ஒன்று என்ற தொல்லைகள் ஒழிந்து ஒன்றோடு முடிகிறதல்லவா??

//முக்கியமான விஷயம், நம் நாட்டில் இன்னும் பலருக்கு கருத்தடை மாத்திரைகள் எந்த விதத்திலும் அவர்களை எச்ஐவி கிருமியிடமிருந்தோ பால்வினை நோய்களிருந்தோ காப்பாற்றாது என்ற அடிப்படை உண்மை தெரியாது.// காமெடி பண்ணாதீங்க, எய்ட்ஸை தவிர்க்க யாரும் கருத்தடை மாத்திரைகளை நாடுவதில்லை என் நினக்கிறேன். இ-பில்- அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு சட்ட ரீதியான தேவை.

கருத்தடை மாத்திரை குறித்த விழிப்புணர்வு இருக்கையில், எய்ட்ஸ் குறித்த விவரங்களும் தெரிந்திருக்கும். மேலும் அதற்கு சிப்லா எந்த வகையிலிம் காரணம் அல்ல மங்கை. கருத்தடை மாத்திரை எய்ட்ஸை தடுக்காது என மக்களுக்கு தெரியவில்லை என்றால் சிப்லா அதற்கு பொறுப்பா??

இளைய தலைமுறையின் அறிவு முந்தைய தலைமுறையைக்காட்டிலும் பலமடங்கு மேம்பட்ட நிலையிலேயெ உள்ளது. அதனால் தான அவர்கள் மாத்திரைகளை உபயோகிக்கிறார்கள்.

மங்கை said...

//நம்ம டாக்டர் சொல்றது மாதிரி...ஆணுறை எளிய அதே நேரத்தில் பிரச்சினையில்லாத தீர்வு.//

இதைத்தான் நானும் சொல்றேன்...
இந்த மாத்திரை உபயோகத்தில் வந்துவிட்டதே என்கிற கவலை எனக்கில்லை இதைப்பற்றிய அறிவையும் கூடவே வளர்க்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்

மங்கை said...

//காமெடி பண்ணாதீங்க, எய்ட்ஸை தவிர்க்க யாரும் கருத்தடை மாத்திரைகளை நாடுவதில்லை என் நினக்கிறேன். இ-பில்- அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு சட்ட ரீதியான தேவை. ///

காமெடி பண்ணவில்லை....எத்தனை பேர் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் எச்ஐவியிலுருந்து தங்களை காத்துக்கொள்ளலாம் என்று நினைத்துகொண்டிருக்கிறார்கள்.. இந்த துறையில் இருப்பதால் கிராமங்களில் நடத்திய சில சின்ன சின்ன சர்வேக்களில் தெரிந்தவை... பொதுமைப் படுத்தவில்லை..

சிப்லாவை நான் ஏன் குறை வேண்டும்..அரசு இதைப்பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன் அவ்வளவு தான்...

நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்..மண்ணிக்கவும்

மங்கை said...

padma aravindh said...

These pills came up as a boon for rape victims to prevent any pregnancy and we still use it as such for those victims. Any day, oral contraceptives, morning after pill, pill that stops period (women prefer this to get one period per year to suit their schedules, in old days before festivals women used to take alternative herbs to postpone menstrual period). These medications are just started and no one knows the long term effects of these. There is a vaccine that is being developed and is being tested to make women permanently sterile and there are controversies on how this will used to irradiate one race. This is a very important topic that needs a detailed and in depth discussion on its many dimensions.

As Dr. Delphin says my personal opinion is to avoid all this and use condoms. These there are women condoms available as well.

மங்கை said...

//கல்யாணம் ஆனவர்களுக்கு வசதி, திருமணம் ஆகாதவர்களுக்கு மனரீதியான பிரச்சனை?? ///

மனரீதியான பிரச்சனை...என்று நான் இதை உபயோகித்த திருமணம் ஆகாத பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள். fortis மருத்துவமனையில் ஒரு மருத்துவர் அவரிடம் வந்த பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை.. அது குற்ற உணர்வால் ஏற்பட்டிருக்கலாம்...

// இ-பில்- அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு சட்ட ரீதியான தேவை. ///

இது எனக்கு தெரியாது... தெரியப்படுத்தியதற்கு நன்றி

நாகை சிவா said...

I second Padma Arvind

பெண்கள் காண்டம் இந்தியாவில் அந்த அளவு பரவலாக இல்லை என்று நினைக்குறேன்.

மங்கை said...

it interferes with the biological process, there’s guilt and no information sharing,” says Adolescent Psychiatrist, Dr Amit Sen.

மங்கை said...

பத்மா, சிவா நன்றி

பெண்களுக்கான காண்டம் இப்ப அறிமுகப் படுத்தியிருக்காங்க..ஆனா அதை உபயோகப்படுத்தும் முறை இன்னும் நம் பெண்களுக்கு கடினமான ஒன்னா தெரியுது..வரவேற்கத்தகக்து

Unknown said...

சிவா,

சும்மா இருய்யா, அப்புறம் ஈயம் பித்தளை பார்ட்டிகள் சண்டைக்கு வந்துடுவாங்க. நாங்க ஏன் உறை போடனும் அவன போடச்சொல்லு அப்படின்னு கெளம்பிடுவாங்க. கருதரிப்பதை கட்டுப்படுத்த பலவழிகள் இருக்கிறது. அதில் ஒன்று இந்த இன்ஸ்ட்டன்ட் மாத்திரைகள். பசங்களுக்கு அந்த மாதிரி மாத்திரை வந்து உடலுறவுக்கு முன்னாடி போட்டா, உயிரனுவின் வீரியம் குறைந்துவிடும் வகையில் எதும் வந்தால் பெண்களின் இந்த கருத்தடை பிரயத்தனங்களில் நாமும் பங்கேற்கலாம். உறை என்பது எந்தவிதம் நோக்கினும் செயற்கை இழை. அதன் வாசமும் வழுவழுப்பும் பானகத்துரும்பு. எனவே என் ஓட்டு மாத்திரைகளுக்கே.

Thekkikattan|தெகா said...

பாத்தீங்களா கொஞ்சம் கொஞ்சமா நாங்க எப்படி உள்ளே கடை விரிக்கிறோமின்னு :)). இன்னும் பொறுத்திருந்து பாருங்க.

இந்த கலாச்சார காவலர்கள் எல்லாம் எங்கே போயிட்டாங்க. அவங்க வெளியே சொல்லிக்கிட்டுத் திரியறமாதிரி நம்மூர் இருந்தா, ஏனுங்க உலகத்தில இரண்டாவது இடத்தில "எய்ட்ஸ்"ல இருக்கோம்.

எதுக்குத்தான் ப்ரஸ்க்ரிஸ்ப்சன் இருக்கு. நேத்து ibubrufen 800mg வாங்கிருத்துக்கு இங்க என்னா ஒரு பில்டப் டாக்டரும் சரி எடுத்துக் கொடுக்கிற பார்மஸிஸ்டும் சரி...

delphine said...

My concern is...
Why go for such "emergency" pills? if you have already planned for the "accident",
why not talk with your partner? Precautions!
Why bother a lady with taking some harmful tablets after an unprotected relationship?
and we need to know whether we could use it indiscriminately?
அனாசின், விக்ஸ் போல இதுவும் ஒரு பொதுப்படையான தேவை///
why do you compare this with vicks and anacin Sir?
அது மாத்திரமல்ல.. அதுதான் மாத்திரை இருக்கிறதே என்கிற மெத்தனமும் கூடவே தொத்திக்கொள்ளும்.. unprotected relationship .... that is what i am against....
a sexual relationship is complete when it is safe for both the partners. i know the pill is gonna rock the market..
now there are two MAIN things that are involved in a sexual relationship ...Pregnany and sexually transmitted diseases. I pill can probably help in not becoming pregnancy, definitely not in preventing the STDs.
And is CIPLA really targeting on the husband and wife?

our young people are obviously very frivolous and mostly thaey act on sheer impulse.
We are all hippocrates.. we keep on discussing such matters, but we fail to educate our children about all these things.

A condom is an ideal one.. .. more so-- THE BEST.

மங்கை said...

//Pregnany and sexually transmitted diseases. I pill can probably help in not becoming pregnancy, definitely not in preventing the STDs.
And is CIPLA really targeting on the husband and wife?///


This is what i meant...thanks dr

மங்கை said...

நன்றி தெகா...

இங்க எங்க கல்லூரியில் இப்ப கவுன்ஸிலிங்க் டெஸ்க் ஆரம்பிச்சுருக்கேன்...இதில் பெரும்பாலான பெண்கள் சேஃப் செக்ஸ்கான நாட்கள் என்ன, எனக்கு இப்பரி ஆகிவிட்டது என்ன பண்ணுவது என்று கேட்டு மடல் இடுகிறார்கள்...

இவர்களுக்கு எல்லாம் தெரியும், அவர்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை, அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று நாம் கை கழுவி விட்டு போக முடியாது...

Unknown said...

கலாச்சார விளைவுகள் ஒருபக்கம் இருக்க, இந்த மாத்திரைகள் சாப்பிடுவதால் சாப்பிடுபவரின் உடலுக்கு என்னென்ன கேடுகள் வரும் என்பது, புதிர்தான்.

வரிசையாக பல மாத்திரைகள் பின்விளைவுகள் காரணமாக உற்பத்தி நிறுத்தப் படுவது ஒரு பக்கம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்போதைக்கு, பக்கவிளைவுகள் இல்லை என்று சொன்னாலும், நீண்டகால விளைவுகள் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளைப் போல் குழப்பம் தருபவைதான்.

உடலியல் கல்வி - இப்போதைய சூழலில் மிக அவசியமான ஒன்று.

ஊடகத் தணிக்கை - முன்னதை விடவும் மிக அவசியம்.

எல்லாம் தெரிகிறது ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை இப்போதைய இளம் வயதினருக்கு :(

பாரி.அரசு said...

இந்த பதிவு கருத்தடை மாத்திரைகளை பற்றி இருந்தாலும், இதன் அடிப்படையை தொடாமல் பேசுவது இயலாது என்பதால்! தொடர்பிருக்கோ இல்லையோ... சில செய்திகளை சொல்லிவிட்டு போயிடலாம்...

(1) உடலறவுக்கான வேட்கை என்பது உடல் இயங்கியலின் மிக முக்கியமான நிகழ்வு. இதை மறுப்பது என்பதும், உடலை செயற்கையாக கட்டுப்படுத்துவது என்பதும்... உளவியல் பிரச்சினைகளை உருவாக்கும். (மனச்சிதைவு, மனஅழுத்தம்.... இன்ன பிற)...

இதன் காரணமாகவே மனநோய்ப்பிரிவில் பாலியல்ப்பிரிவும் மிக முக்கியமானதாக இருக்கிறது. அதற்க்கு உதாராணம் மனநோயாளிகளில் மிகப்பெரும்பான்மையானோர் பாலியல் காரணமாகவே பாதிப்படைந்துள்ளனர் இந்தியாவில். (ஆதாரம் : சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கலந்துரையாடல்).

உலகில் மிகக்கொடூரமான சங்கிலித்தொடர் கொலைகளில் பெரும்பாலானவை பாலியல் மனநோயாளிகளால் செய்யப்பட்டவை.

ஆக உடலின் பாலியல் தேவைகளை மறுப்பது என்பது உளவியல் பாதிப்படைந்தோரை அதிகரிக்கச்செய்யும் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். (கலாச்சாரம்(பண்பாடு) என்பதெல்லாம் பிறகு பேசுவோம் முதலில் ஆரோக்கியமான மனிதன் தேவை.) உளவியல் பாதிப்படைந்த மனிதர்களை உருவாக்கிவிட்டு பண்பாடு பேசி என்ன பயன்?

மனிதச்சமூகம் தொடர்ந்து சிந்திந்தன் மூலம் கண்டறிந்த உடல் ஓடுக்க இயந்திரம்(நன்றி : ஜமாலன்) தான் திருமணம் என்கிற அமைப்பு. இதன் மூலமாக நமது உடலின் தேவையை நிறைவுச்செய்கிறோம்.

இப்போதைய கேள்வி மிகுந்த போராட்டமாகி போன வர்க்க கட்டமைப்பு சமூகத்தில் (ஓருவன் தன்னால் சுயமாக வாழ இயலும் என்று உணர்வதற்க்கே(கல்வி, வேலைவாய்ப்பு.. இன்னபிற)) திருமணம் என்பதை சிந்திக்க 30 வயதாகி விடுகிற நிலையில், குறைந்தபட்சம் 15 வயதில் தொடங்குகிற உடலின் தேவையை 15 ஆண்டுகள் செயற்க்கையாக கட்டுப்படுத்துவது என்பது, எவ்வளவு உளவியல் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதை விளக்கம் கொடுக்க தேவையில்லை என்றே எண்ணுகிறேன்.

இங்கே மிகக்கொடுமையானது இந்திய சமூக அமைப்பு ஆண்களுக்கு சாதகமானதாக அவனுக்கு தேவை எழுகிற போது பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் பெண்ணை நாடிச்செல்ல அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், "ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற தத்துவத்தையும்" பொதுப்புத்தியாக வைத்திருக்கிறது.
இங்கே பெண் என்பவள் விளிம்பு நிலைக்கு நகர்த்தப்பட்டு, அவளுடைய உடலின் தேவைகள் மறுக்கப்படுகிறது. திருமணம் வரை உடலை கட்டுப்படுத்த சமூக ஓழுக்கம் என்கிற இயந்திரம் மிகக்கடுமையாக இயங்குகிறது.

நான் மேலே சொன்ன எல்லாச்செய்திகளும் வலைப்பதிவுலகில் இருக்கிற படித்த, சிந்திக்கிற அனைவருக்கும் தெரிந்த உண்மைகள் தான்.

போராட்டம் மிகுந்த வர்க்க சமூகத்தில், இளைய சமூகம் தன்னுடைய உடலின் தேவையை நிறைவு காதல் (அ) ஆண்-பெண் நட்பு என்பதன் ஊடாக தீர்வை நோக்கி நகர்கிறது. அப்படி நகரும் சமூகத்தின் உடனடி தேவை பாலியல் கல்வி. உடலின் இயக்கத்தை உணர்தல்.

மருத்தவர் டெல்பின் குறிப்பிட்டது போல் (எனக்கு தேவை என்பது முடிவான பின்பு ஏன் உன் இணையுடன் பேசி எப்பொழுது உறவுக்கொள்வது என்பதை முடிவு செய்ய முடியவில்லை? என்பது.) மிக முக்கியமான. முதலில் பெண், ஆண் இருவருக்கும் உடலின் பாலியல் பற்றிய அறிவு இருந்தால் மட்டுமே உரையாடல் என்பது சாத்தியம். ஆனால் நிகழ்வில் அறிவிற்க்கு பதிலாக உணர்ச்சி என்பதே வெற்றிக்கொள்கிறது.

கலாச்சாரம் (அ) பண்பாடு என்று பேசுகிறீர்களா! உங்களிடம் இருக்கிற ஆயுதம் திருமணம் என்பதே அதை பயன்படுத்தி உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். (உடலை செயற்கையாக வருத்தாதீர்கள், அப்படி செய்தால் நீங்கள் பலப்பேருடன் உடலறவுக்கு தயராகவோ (அ) மனநோயாளி ஆகவோ தயாராகி வருகிறீர்கள் என்பதை தயவுச்செய்து உணருங்கள்).

மாற்றாக உங்கள் சமூகத்தில் பாலியல் கல்வியை போதித்து, பாதுகாப்பான வாழ்க்கைமுறைக்கு தயார் செய்யுங்கள்.

நன்றி

Compassion Unlimitted said...

Romba mukkiyamana vishayam idhu..konja naal munnadi ennudaya nanban theru theru vai chennaiyil alaindan indha marundhirkaaga..ippo dan puriyudu andha marundhoda magatthuvam..emergency pirachhinai endru appo puriyaliye
tc
cu

Compassion Unlimitted said...

Enna aachu..romba naala update kaanom
TC
CU

சுரேகா.. said...

ஆமாங்க..ஆமாம்.

உங்க ஆதங்கம் நியாயமானதுங்க..
ஆனா இதெல்லாம் நகரப் பெண்களுக்க்குத்தான்..

கிராமமெல்லாம்..
எள்ளுக்கரைசல்
பப்பாளி ஜுஸ்
அன்னாசி தோலுன்னு போயிட்டுருக்கு...

தினேஷ் said...

சமுதாய பொறுப்பு உள்ள நல்ல பதிவு…

தினேஷ்