Saturday, October 27, 2007

மாமியார்(கள்) வாழ்க..வாழ்க

எப்பவுமே ரொம்ப விமர்சனத்துக்கு ஆளாகுற கதாபாத்திரங்கள் யாருன்னு யோசிச்சு பார்த்தா, மாமியார்கள் தான். இணையத்திலேயும் சரி, தொலைக்காட்சியிலேயும், திரைப்படங்கள்ளேயும், ஏன், நாலு பேர் சேர்ந்து பேசினா கூட நகைச்சுவைக்காகவும் கிண்டலுக்காகவும் மாமியார் மருமகள் சண்டைகள் தான் வரிசையில முதல்ல நிக்கும். தொலைக்காட்சிகள்ல காலங்காலத்துக்கு தீனி போடும் கதாபாத்திரங்கள் இவங்க ரெண்டு பேரும். சரி விஷயத்துக்கு போகலாம்.

இதுல யார் மேல தப்புன்னு நான் பேச வர்லீங்க. நமக்கு அந்த அனுபவமும் இல்லீங்க. இங்க இருக்குற மருமகன், மருமகள் எல்லாரும் என்னோட சேர்ந்து நம்ம மாமியார் நல்லா இருக்குனும்னு வேண்டிக்கலாம் வாங்க.

இன்னைக்கு மாமியார்கள் தினமாம்

இது என்ன ஃபேஷனான்னு கேட்க வேண்டாம். யாஹூ முகப்புல பார்த்தேன். அதுனால இந்த பதிவு. இங்க வலைப்பதியும் மாமியார்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். டிப்ஸ் குடுத்தா பிற்காலத்துல, பேர் சொல்லும் மாமியார்களா நாங்க இருப்போம்...:-))

எல்லாரும் நோய் நொடி இல்லாம, சந்தோஷமா, பல்லாண்டு பல்லாண்டு வாழ உங்கள் பிள்ளைகளின் பிரார்த்தனைகள்.

44 comments:

அபி அப்பா said...

காமடி பதிவு போட போறேன் காமடி பதிவு போட போறேன்னு சொன்னீங்களே இது தானா அம்மணி!!

அபி அப்பா said...

டிப்ஸ் வேணுமா? எங்க அம்மா அட்ரஸ் தரவா இல்ல போன் நம்பர் தரவா:-))

கோபிநாத் said...

\\இன்னைக்கு மாமியார்கள் தினமாம்\\\

நாளைக்கு மருமகள் தினமா..? ;)

கோபிநாத் said...

\அபி அப்பா said...
காமடி பதிவு போட போறேன் காமடி பதிவு போட போறேன்னு சொன்னீங்களே இது தானா அம்மணி!!\\

இந்த பதிவு நகைச்சுவை/நையாண்டி பகுதியில் இல்லையே! அப்புறம் எப்படி காமெடி பதிவுன்னு சொல்லிறிங்க..? ;))

மங்கை said...

என்ன ரெண்டு பேருக்கும் கிண்டலா இருக்கா.. மாமியார்கள வாழ்த்தரது காமெடியா...

கோபி!..சேர்க்கை சரியில்லை...

வாழ்த்துசொல்ல நாக்கு திரும்ப மாட்டேங்குதா...நல்ல பிள்ளைகள்பா

மருதமூரான். said...

////டிப்ஸ் வேணுமா? எங்க அம்மா அட்ரஸ் தரவா இல்ல போன் நம்பர் தரவா:////
என்னங்க புதுக்கதையெல்லாம் சொல்லுறிங்க. ஏதாவது விஷேசம் என்ட எங்களுக்கும் சொல்லுங்கோ….. அபி அப்பா……..

கண்மணி said...

வெல் செட் மங்கை.
கோபி சேர்க்கை சரியீல்லைதான்;)
ப்படி மனதார மாமியார்களை வாழ்த்தும் மனப்பாங்கு
பெண்களுக்கு மட்டுமே
பெண்களுக்கு மட்டுமே
பெண்களுக்கு மட்டுமே
பெண்களுக்கு மட்டுமே
உண்டு.
எங்க எந்த ஆணாவது தன் மனைவியின் தாயை [மாமியாரை] வாழ்த்தச் சொல்லுங்க பார்ப்போம்

[அப்பாடா ...நாரதா...வந்த வேலை நலமா முடிஞ்சிடுச்சி...இனி மங்கை பாடு]

மங்கை said...

ஆஹா..கண்ணின் மணியே

காதலிக்க நேரமில்லை படத்துல சொல்ற
மாதிரி ' வெல்செட் நிர்மல்' னு சொல்லி காமெடியாக்கிட்டியே தங்கமே

நாகை சிவா said...

குடும்பத்தில் இருக்குற ஒவ்வொருவருக்கும் ஒரு தினம் கொண்டாடுவங்க போல இருக்கே...

நம்ம ஊருக்கு எல்லாம் இது தேவையாங்க.....

இரண்டாம் சொக்கன்...! said...

எனக்கும் கூட மாமியார் கொடுமை இருக்கு....

ஹி..ஹி..அம்மாவும், ஹைகமாண்டும் நகமும் சதையுமா இருக்கறதால...

மாமியார் கொடுமையை நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்....

ஹி..ஹி...

வாழ்க மாமியார்கள்...அவிங்களும் நமக்கு ஒரு அம்மாதானே..!

பாலராஜன்கீதா said...

சில வீடுகளில் வருடம் முழுதும் தினமும் மாமியார்கள் தினம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா / தெரியாதா ?
:-)

மங்கை said...

சிவா வாழ்த்துறதுக்கும் வணங்குறதுக்கும் ஒரு வாய்ப்ப பயன்படுத்தீட்டேன் அவ்வளவுதான் தேவையா இல்லையான்னு தெரியலை.. ஆனா தப்பில்லைன்னு மட்டும் நின்னைக்குறேன்...:-))

மங்கை said...

//வாழ்க மாமியார்கள்...அவிங்களும் நமக்கு ஒரு அம்மாதானே..!//

இது....

ஒருத்தர் வாழ்த்து சொல்லிட்டார்பா..

நன்றி சொக்கரே

ரசிகன் said...

//மருமகன், மருமகள் எல்லாரும் என்னோட சேர்ந்து நம்ம மாமியார் நல்லா இருக்குனும்னு வேண்டிக்கலாம் வாங்க.//
//எங்க எந்த ஆணாவது தன் மனைவியின் தாயை [மாமியாரை] வாழ்த்தச் சொல்லுங்க பார்ப்போம்.//

சரிங்க...நானும் என்னோட வருங்கால மாமியார வாழ்த்த தயார்.ஆனாஅவிங்க..
மகளுக்கு சூப்பரா இல்லன்னாலும் , சாப்புடற அளவாவது சமைக்க கத்து தரனும்.
பூரிக்கட்டையால அடிக்கிறது மகாபாவமின்னு சொல்லித்தரனும்.
புடவைக்கடையில 15 நிமிஷத்துல புடவை எடுக்க கத்து தரனும்.
புகுந்தவீட்டுலயும் ஒரு அம்மா,அப்பா இருப்பாய்ங்கன்னு சொல்லித்தரணும்.
வரவுக்கு தகுந்த செலவு பிராக்டீஸ் கொடுக்கனும்.
சில சமயத்துல ஹஸ்பெண்டு(?)ம் ஒரு குழந்த மாதிரிதான், இன்னு அனுசரிச்சி போவச் சொல்லனும்.
சாப்பாடு போட டீவி சீரியல் விளம்பரம் வர, வரைக்கும் காத்திருத்தல் தப்புன்னு புரிய வைக்கனும்..
வேல முடிஞ்சி வந்து ஒய்வு எடுத்தா,வெட்டியா இருப்பதா நெனச்சு மிரட்டி வேல வாங்ககூடாது (நாங்களே பாத்து உதவுவோமில்ல...சுய கெளரவத்தோட..)
பக்கத்து வீட்டு ஆடம்பரத்தை பாத்து ,மாட்டிய அப்பாவியை பலி போட கூடாதுன்னு சொல்லிக்குடுக்கனும்.
இன்னும்..
அபி அப்பா: ரசிகா.. ஏம்பா..என்னாச்சிப்பா ..ஒனக்கு.. நிறுத்து.. நிறுத்து... அபி அம்மா வேற நா சொல்லித்தா நீ பேசரதா நெனைக்க ஆரம்பிச்சிடாய்ங்க... எதாயிருந்தாலும் நமக்குள்ளாரயே பேசி தீத்துக்கலாமே..

இப்புடி கடமையுல எதுவுமே சரியா செய்யாத மாமியார வாழ்த்தச் சொல்லும் அவிங்கள முதலில் நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்தறேன்...இது தீத்துட்டு பேச வேண்டிய விஷயம்.

அபி அப்பா: அது சரி ,நடக்கர கதையா இதெல்லாம்..இன்னும் ஒரு வாரம், எனக்கு " துபாய் சரவணபவன் "தான் படியளக்கனும் போல.

ஏம்பா சுரேசு .. இப்ப திருப்தியா?..
[ தன் ஹோம் மினிஸ்டடிடம் "நீ எதுக்குமே லாயக்கில்ல.."ன்னு திட்டு வாங்கி.. இப்ப ..எங்கிட்ட வந்து " மாமே ,எல்லாம் தப்பு, இந்த கல்யாணமே மாயை " ன்னெல்லாம் புலம்பி(அலும்பு பண்ணிக்) கொண்டிருக்கும் நண்பன் சுரேசுக்காக இந்த கேள்விகள்..].(எனக்கு தெரியாதா.. இன்னும் கொஞ்ச நேரத்துல ராஜி அக்கா..போன் செஞ்சி "சாரி"ன்னு கொஞ்சலா சொன்னா போதுமே.. 'நான் குடும்பஸ்தனாக்கும்"ன்னு ஒடிடுவானே..எத்த மொற பாத்திருக்கேன்.).

மங்கை said...

//பாலராஜன்கீதா said...
சில வீடுகளில் வருடம் முழுதும் தினமும் மாமியார்கள் தினம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா / தெரியாதா ?///

அதான் சொக்கனும் சொல்லிட்டார் பாருங்க... எங்க வீட்லேயும் அப்படித்தான்...

நீங்க சொல்ற கொண்டாட்டமும் அது தானே :-))

எப்படி இருந்தாலும் நாம வணங்குறது தப்பில்லை

மங்கை said...

ஐயா ரசிகரே

இத்தன கண்டிஷன் போட்டு இருக்கீங்க ரொம்ப சரிதான்..தப்பில்லை...ஆனா அதே மாதிரி அந்தப்பக்கமும் கண்டிஷன் வரும்..தயாரா இருங்க..

வாழ்த்து சொல்றது இவ்வளோ கஷ்டமா

சொக்கா உனக்கே வெளிச்சம்...

ramachandranusha(உஷா) said...

நன்றி மங்கை. என் மாமியாருக்கு பட்டுபுடைவை வாங்கி பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன் ( சொல்ல மறந்த மேட்டர்- பிரின்ஸ் ஜூவல்லரில நகை வாங்கினா, பட்டு புடைவை ப்ரீயாமே?)

மங்கை said...

தலைவியே

சேம் சைட் கோல் போட்ரீங்களே...யூ டூ உஷ்ஷ்ஷா

மங்களூர் சிவா said...

//
//மருமகன், மருமகள் எல்லாரும் என்னோட சேர்ந்து நம்ம மாமியார் நல்லா இருக்குனும்னு வேண்டிக்கலாம் வாங்க.//
//எங்க எந்த ஆணாவது தன் மனைவியின் தாயை [மாமியாரை] வாழ்த்தச் சொல்லுங்க பார்ப்போம்.//

சரிங்க...நானும் என்னோட வருங்கால மாமியார வாழ்த்த தயார்.ஆனாஅவிங்க..
மகளுக்கு சூப்பரா இல்லன்னாலும் , சாப்புடற அளவாவது சமைக்க கத்து தரனும்.
பூரிக்கட்டையால அடிக்கிறது மகாபாவமின்னு சொல்லித்தரனும்.
புடவைக்கடையில 15 நிமிஷத்துல புடவை எடுக்க கத்து தரனும்.
புகுந்தவீட்டுலயும் ஒரு அம்மா,அப்பா இருப்பாய்ங்கன்னு சொல்லித்தரணும்.
வரவுக்கு தகுந்த செலவு பிராக்டீஸ் கொடுக்கனும்.
சில சமயத்துல ஹஸ்பெண்டு(?)ம் ஒரு குழந்த மாதிரிதான், இன்னு அனுசரிச்சி போவச் சொல்லனும்.
சாப்பாடு போட டீவி சீரியல் விளம்பரம் வர, வரைக்கும் காத்திருத்தல் தப்புன்னு புரிய வைக்கனும்..
வேல முடிஞ்சி வந்து ஒய்வு எடுத்தா,வெட்டியா இருப்பதா நெனச்சு மிரட்டி வேல வாங்ககூடாது (நாங்களே பாத்து உதவுவோமில்ல...சுய கெளரவத்தோட..)
பக்கத்து வீட்டு ஆடம்பரத்தை பாத்து ,மாட்டிய அப்பாவியை பலி போட கூடாதுன்னு சொல்லிக்குடுக்கனும்.
//
ரிப்பீட்டேய்

என் வருங்கால மாமியார் எங்கிருந்தாலும் வாழ்க!!

மங்களூர் சிவா said...

//
ramachandranusha(உஷா) said...
நன்றி மங்கை. என் மாமியாருக்கு பட்டுபுடைவை வாங்கி பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன் ( சொல்ல மறந்த மேட்டர்- பிரின்ஸ் ஜூவல்லரில நகை வாங்கினா, பட்டு புடைவை ப்ரீயாமே?)
//
உஷாக்கா,
நடத்துங்க நடத்துங்க வேற என்னத்த சொல்ல.

பாவம் உங்க மறுபாதி.

முத்துலெட்சுமி said...

மாமியாருக்கு வாழ்த்தா சொல்லிட்டா போச்சு :) நமக்குன்னு எல்லா வேலையும் செய்ய ஒருத்தரை இப்படி பெத்து வளர்த்து நம்மக்கிட்ட விட்டுட்டு இருக்காங்களே அதுக்காக சொல்லனும் இல்ல.. வாழ்த்துக்கள்... போன் பண்ணி சொல்லிடறேன்.

(ரசிகன் மற்றும் மங்களூர் சிவா.. காலாகாலாமா போற வீட்டுல என்னை இல்ல கேப்பாங்கன்னு சமைக்கவும் இன்ன பிற நீங்க கேட்டதெல்லாம் சொல்லிக்குடுத்து தாங்க அனுப்பினாங்க.. இப்ப அந்த பக்கமும் சொல்லித்தர வேண்டிய காலமா போச்சு.. தனிக்குடித்தனமா போச்சு பாத்தீங்களா அதுனால நீயும் சமைக்கக்கத்துக்கோடா ஒழுங்கா அப்பப்ப ஹெல்ப் பண்னனும் மருமகளுக்கு.. கடைக்கு போய் கறிகாய் வாங்க.. குடும்பத்தை பொறுப்பா நடத்த சின்ன பிள்ளையய தூக்க வைக்க எல்லாம் கத்துக்கோ நாளைக்கு மருமக வந்து என்ன வளர்த்தா உங்க அம்மான்னு கேட்டுறக்கூடாது டா ன்னு.... ஸோ அய்யாக்களே டிரெயினிங் எடுத்துக்கோங்க.. பாவம் இந்த காலத்துல பிறந்துட்டீங்க்ளே கொஞ்சம் முன்னாடி பிறந்து இருக்கலாம் இல்ல.. :)))) ]

ramachandranusha(உஷா) said...

ஆமாண்டாபா மங்களூர் சிவா, கேட்டதும் பர்சுல இருந்து ஒரு இருபத்தி அஞ்சாயிரம்/ ஐம்பதாயிரம் ரூபாய் ( இதுக்கு கம்மியா இருந்தா, பட்டு கொடுக்க கடைக்காரன் கேனையனா என்ன?) எடுத்துக் கொடுத்துடுவாங்க பாரூ
எங்க மறுபாதி! ஏதோ ஜோக்குன்னு விட் டடித்து எங்களை நாங்களே தேற்றிக் கொள்கிறோம், சரி தானே மங்கை.?
கண்ணைத் துடைத்துக் கொண்டு,
உஷா

//நமக்குன்னு எல்லா வேலையும் செய்ய ஒருத்தரை இப்படி பெத்து வளர்த்து நம்மக்கிட்ட விட்டுட்டு இருக்காங்களே அதுக்காக சொல்லனும் இல்ல.. // :-)))

மங்கை said...

மங்களூர் சிவா...

எல்லாத்துக்கும் ரீப்பீட்டு தானா..:-))))

சரி வாழ்த்து சொல்லிட்டீங்க,சந்தோஷம்.

லட்சுமி சொன்ன குறிப்பகளும் குறிச்சு வச்சுக்கோங்க...அப்ப தான் வர்ர தங்கச்சியும் மாமியார வாழ்த்துவாங்க:-))

மங்கை said...

//நமக்குன்னு எல்லா வேலையும் செய்ய ஒருத்தரை இப்படி பெத்து வளர்த்து நம்மக்கிட்ட விட்டுட்டு இருக்காங்களே அதுக்காக சொல்லனும் இல்ல.. வாழ்த்துக்கள்///

ஆஹா...தாயே...ஹ்ம்ம் எப்படியோ வாழ்த்துங்க...

நல்ல குறிப்புகள் சிவா (ரெண்டு சிவாவும்) கோபி... நோட் பண்ணி வச்சுக்கோங்கப்பா

மங்கை said...

உஷா...

கணக்கெல்லாம் கரீட்டா சொல்றீங்கோ
ட்ரை பண்ணீங்களோ..

எப்படியோ பட்டுப்புடவைய மாமியார்க்கு குடுக்கனும்னு நினைக்குற மனசு யாருக்கு வரும்...

மருமகள் உஷாவும் வாழ்க..:-)))

ரசிகன் said...

// என் மாமியாருக்கு பட்டுபுடைவை வாங்கி பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன் ( சொல்ல மறந்த மேட்டர்- பிரின்ஸ் ஜூவல்லரில நகை வாங்கினா, பட்டு புடைவை ப்ரீயாமே?)//

உஷா அக்கா.. அப்பிடி போடுங்க அறுவாள...ஹிஹி...
சூப்பர்..நீங்க எங்க சைடு..

ரசிகன் said...

// ரிப்பீட்டேய்//
சிவா.., ஆதரவுக்கு நன்றி மாமே..
// என் வருங்கால மாமியார் எங்கிருந்தாலும் வாழ்க!!//

டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்..
(மங்கை அக்காவும் சந்தோஷப்பட்டுக்கட்டுமே..)..

delphine said...

Thank you. Mangkai.

கோபிநாத் said...

\\கண்மணி said...
வெல் செட் மங்கை.
கோபி சேர்க்கை சரியீல்லைதான்;)
ப்படி மனதார மாமியார்களை வாழ்த்தும் மனப்பாங்கு
பெண்களுக்கு மட்டுமே
பெண்களுக்கு மட்டுமே
பெண்களுக்கு மட்டுமே
பெண்களுக்கு மட்டுமே
உண்டு.
எங்க எந்த ஆணாவது தன் மனைவியின் தாயை [மாமியாரை] வாழ்த்தச் சொல்லுங்க பார்ப்போம்

[அப்பாடா ...நாரதா...வந்த வேலை நலமா முடிஞ்சிடுச்சி...இனி மங்கை பாடு]\\\

சாரி நான் சின்ன பையன் அபி அப்பா தான் பதில் சொல்ல வேண்டும் :))

\\மங்கை said...
//நமக்குன்னு எல்லா வேலையும் செய்ய ஒருத்தரை இப்படி பெத்து வளர்த்து நம்மக்கிட்ட விட்டுட்டு இருக்காங்களே அதுக்காக சொல்லனும் இல்ல.. வாழ்த்துக்கள்///

ஆஹா...தாயே...ஹ்ம்ம் எப்படியோ வாழ்த்துங்க...

நல்ல குறிப்புகள் சிவா (ரெண்டு சிவாவும்) கோபி... நோட் பண்ணி வச்சுக்கோங்கப்பா\\\

காலத்தின் கட்டயாம் :))

பெருசு said...

மாமியார்கள் வாழ்க வாழ்க

தங்கமணியை தாரை வார்த்துக்கொடுத்த மாமியார்(கள்)
வாழ்க வாழ்க.

FBI,CBI விட அதிக info கையாளும்
மாமியார்கள் வாழ்க வாழ்க.

நாளைய மாமியார்களான இன்றைய
தங்கம்ணிகள் வாழ்க வாழ்க.

பாலராஜன்கீதா said...

// என் மாமியாருக்கு பட்டுபுடைவை வாங்கி பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன் ( சொல்ல மறந்த மேட்டர்- பிரின்ஸ் ஜூவல்லரில நகை வாங்கினா, பட்டு புடைவை ப்ரீயாமே?) //

உஷா நீங்கள் உண்மையிலே க்ரேட். மாமியாருக்கு நகைகள் கூட வாங்கித் தருகிறீர்களே !
;-)

சின்ன அம்மிணி said...

//எங்க எந்த ஆணாவது தன் மனைவியின் தாயை [மாமியாரை] வாழ்த்தச் சொல்லுங்க பார்ப்போம்\\

ரங்கமணி தப்பிச்சுட்டாரு. எங்களுக்கு கல்யாணமாகும்போதே, எங்கம்மா காலமாயிட்டாங்க.

ஆனா நான் சொல்லறேம்ப்பா எங்க மாமியாருக்கு வாழ்த்து.
நானும் உஷா பாணியில ஒரு பட்டுப்புடவை வாங்கலாம்னு இருக்கேன்

வல்லிசிம்ஹன் said...

வாழ்க மங்கை,
வாழ்க உஷா
வாழ்க முத்துலட்சுமி
ஏன்னு கேட்டா இவங்க எல்லாம் வருங்கால மாமியார்கள்:)))
(வாழ்க டெல்ஃபின்,வாழ்க துளசி,)வாழ்க வல்லி,வாழ்க கீதா. இவங்க இப்போ வலையில இயங்குகிற
இக்கால மாமியார்கள் :)))
.நன்றிம்மா மங்கை.

நமக்காக ஒரு உழைக்கிற பிள்ளையையும் கொடுத்து,கூடவே இருந்து காப்பாத்தின மாமியார்களையும் வணங்குகிறேன்.
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே.:)))

Compassion Unlimitted said...

Maamiyaar illamal maru maghal vaazha mudiyuma..Saapatukku oorgai maadiri..(idhula yaar oorgai nu mattum kekkadeenga !)
TC
CU

மங்களூர் சிவா said...

@முத்துலட்சுமியக்கா
//
(ரசிகன் மற்றும் மங்களூர் சிவா.. காலாகாலாமா போற வீட்டுல என்னை இல்ல கேப்பாங்கன்னு சமைக்கவும் இன்ன பிற நீங்க கேட்டதெல்லாம் சொல்லிக்குடுத்து தாங்க அனுப்பினாங்க.. இப்ப அந்த பக்கமும் சொல்லித்தர வேண்டிய காலமா போச்சு.. தனிக்குடித்தனமா போச்சு பாத்தீங்களா அதுனால நீயும் சமைக்கக்கத்துக்கோடா ஒழுங்கா அப்பப்ப ஹெல்ப் பண்னனும் மருமகளுக்கு.. கடைக்கு போய் கறிகாய் வாங்க.. குடும்பத்தை பொறுப்பா நடத்த சின்ன பிள்ளையய தூக்க வைக்க எல்லாம் கத்துக்கோ நாளைக்கு மருமக வந்து என்ன வளர்த்தா உங்க அம்மான்னு கேட்டுறக்கூடாது டா ன்னு.... ஸோ அய்யாக்களே டிரெயினிங் எடுத்துக்கோங்க.. பாவம் இந்த காலத்துல பிறந்துட்டீங்க்ளே கொஞ்சம் முன்னாடி பிறந்து இருக்கலாம் இல்ல.. :)))) ]
//
இது அறிவுரையா, பயமுறுத்தலா???

ஏற்கனவே ஹரிஹரன் சார் பெண்ணடிமைத்தனம் made easy to understand
னு ஒரு பதிவு போட்டு கல்யாணம் பன்னித்தான் ஆகனுமான்னு யோசிக்க வெச்சார்.

அது தெளியறதுக்குள்ள நீங்கல்லாம் ஆரம்பிச்சிட்டீங்க

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

@உஷாக்கா
//
ஆமாண்டாபா மங்களூர் சிவா, கேட்டதும் பர்சுல இருந்து ஒரு இருபத்தி அஞ்சாயிரம்/ ஐம்பதாயிரம் ரூபாய் ( இதுக்கு கம்மியா இருந்தா, பட்டு கொடுக்க கடைக்காரன் கேனையனா என்ன?) எடுத்துக் கொடுத்துடுவாங்க பாரூ
எங்க மறுபாதி!
//
மாமியார்கள் தின பட்ஜட் 25,000 - 50,000 மா
எனக்கு தலையே சுத்துதே....
இந்த ஒரு வருசம் கொண்டாடிக்கங்க.

அடுத்த வருசத்துல இருந்து இந்த மாமியார்கள் தினத்தை கன்னாபின்னாவென கண்டித்து புறக்கனிக்கிறேன்.

@மங்கை
//
மங்களூர் சிவா...

எல்லாத்துக்கும் ரீப்பீட்டு தானா..:-))))
//
நான் பேச நினைத்ததெல்லாம் ரசிகன் பேசிட்டார் அதனால ரிப்பீட் போட வேண்டியதா போச்சு.

delphine said...

மங்கை .. இந்த மங்களூர் சிவாவின் "options" பார்த்தீங்களா? பூரிக்கட்டை, புடவை..டீ.வி... பாவம் இவருக்கு எந்த அப்பாவி வர போகுதோ!

பிரியமுடன் பிரித்தி said...

என்னுடைய வருங்கால ,(இன்னொரு)அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

மங்கை said...

Delphine, கோபி, வல்லிம்மா, சின்ன அம்மனி, பெருசு, பிரீத்தி, CU - நன்றி

பெருசு! உங்களுக்கு ஸ்பெஷல் நன்றிங்கோவ்... இல்லேண்ணா ஊட்ல அம்மணி சாமியாடீறுமில்ல..:-))

பாரி.அரசு said...

இன்றைய மருமகள், நாளை மாமியார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :))

பாரி.அரசு said...

// என் மாமியாருக்கு பட்டுபுடைவை வாங்கி பரிசளிக்கலாம் என்று இருக்கிறேன் ( சொல்ல மறந்த மேட்டர்- பிரின்ஸ் ஜூவல்லரில நகை வாங்கினா, பட்டு புடைவை ப்ரீயாமே?) //

உஷாயக்கா என்ன சொல்ல வருகிறீர்கள் தங்க நகை வாங்கும்போது வருகிற இலவசம் போல கல்யாண சந்தையில வாங்கப்பட்ட மாப்பிள்ளைக்கூட வந்த இலவசம் மாமியார் என்கிறீர்களா :-))

ஓரு பெண்ணே இன்னொரு பெண்ணை இலவசம் என்பதா! :-))

எங்கே போயின பெண்களின் (ஈயப்) போர்வாள்கள்?

(அப்பாடா மங்கை பதிவிலேயும் யாராவது அடித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் :-))

துளசி கோபால் said...

மாமியார்கூட சேர்ந்து வாழ்ந்த அனுபவம் இல்லை. அதுக்கு அவுங்க கொடுத்து வைக்கலை(-:

நானும் சீக்கிரம் மாமியாராகும் வாய்ப்பு வரப்போறதாலே 'ட்ரெயினிங்' எங்கெ எப்படி எடுத்துக்கணுமுன்னும் தெரியலை. நம்ம வீட்டுலே சன் டிவி, மூன் டிவி எல்லாம் இல்லைங்க.

அதுக்காக மாமியாரை வாழ்த்தாம இருக்கலாமா?

அவுங்க நல்லா இருக்கட்டும். எங்கிருந்தாலும் வாழ்க......

ramachandranusha(உஷா) said...

மங்கை, உங்க மெயில் ஐடி தாங்க. ஒரு விஷயம் சொல்லணும்.

ரசிகன் said...

மங்கை அக்கா...
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

பாரதிய நவீன இளவரசன் said...

//இன்னைக்கு மாமியார்கள் தினமாம்//

ஓவ்.. அப்படி ஒண்ணு இருக்கா? அப்படின்னா, மருமகள் தினமும் இருக்கணுமே? நக்கலில்லை, நெசமாத்தான் கேக்குறேன்.

நீங்கள் தேர்வு செய்த அந்தப் படம் பதிவிற்குப் பொருத்தமாக இருக்கிறதுங்க.

நல்ல பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்.