என் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.
Dr. Zubair என்பவர் ஜாமியா பல்கலைகழகத்துல பேராசிரியர். கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள்ல அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அவரோட ஜீமெயில் அக்கவுன்ட்ல இருந்து எனக்கு வந்த ஈமெயில்.
தான் ஆப்ரிக்காவுல இருப்பதாகவும், அவசரத்துல புறப்படும் போது சொல்ல முடியலைனும் எழுதி இருந்தது. மேலும், தன் பாஸ்போர்ட், பணம், பேக் முதலியன திருடு போய்விட்டதாகவும், செலவுக்கு காசு இல்லை அதனால் உடனே $2600 அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தது. நானும் எல்லாம் செக் பண்ணி பார்த்தேன். அதே ஈமெயில் ஐடி, கீழ அவர் எழுதற மாதிரியே அவரோட அலுவலக முகவரி எல்லாம் சரியா இருந்துச்சு.
அதுவும் HIV/AIDS கருத்தரங்குன்னும் எனக்காக சில புத்தங்கள் கிடைச்சதுன்னும் எழுதியிருந்துச்சு. எனக்கு அத படிச்ச பின்ன, நிஜமாவே எங்காவது மாட்டி இருப்பாரோன்னு இருந்துச்சு. ஏன்னா இவரும் அடிக்கடி வெளிநாடு செல்பவர் தான்.
ஜாமியாவுல அவரின் துறையில இருக்கும் மற்ற பேராசிரியர்களை கேட்கலாம்னா வெள்ளி விடுமுறையானதால கல்லூரியில யாரும் இல்லை. சரி அவரோட கைப்பேசிக்கே போன் பண்ணலாம்னு பண்ணேன், அதுவோ switched off.
மீண்டும் அந்த மின்னஞ்சலை படிச்சு பார்த்தேன்.. மேல மட்டும் எப்பவும் அவர் எழுதற மாதிரி இல்லை. எப்பவும் என் பெயரை மட்டுமே அவர் எழுதுவது வழக்கம். ஆனா இந்த மெயில்ல ' ஹலோ' அப்படீன்னு போட்டிருந்தது. அப்புறம் தான் இது அவர் அனுப்பலைன்னு நினைக்க தோனுச்சு. அந்த ஈமெயில் பாருங்க
Hello,
I am sorry I din't email you about my traveling to Africa for a program on HIV/AIDS that is taking place in three major countries in Africa. Ghana, SouthAfrica and Nigeria. In fact I have collected a lots of materials for you, which would be very useful to you.
It as been a very sad news and bad moment for me, thepresent condition that I found myself is very hard for me to explain.I am really stranded in Nigeria because I forgot my little bag in a Taxi where mymoney and passport documents were kept on my way to a Hotel that am staying,I have no more money left with me.
I am now owning a hotel bill of $1400and they wanted me to pay the bills soon else they will have to seize mybag and hand me over to the Hotel Management,please I need some help fromyou urgently to help me back home,and I need you to help me with the hotelbill and i will also need $1200 to feed and help myself back home so pleasecan you help me with a sum of $2600 ? to sort out this problems here
I needthis help so much and on time because i am in a terrible and tightsituation here,please understand how urgent i need your help.I am sending you this e-mail from the city of lagos.
I will appreciate what so ever you can afford to send me for now and I promise to pay back yourmoney as soon as i return home, you need to transfer the money throughWestern Union
Regards
Dr Zubair
........................................................................
Professor, Department of Social Work,
Jamia Millia Islamia [CentralUniversity],
New Delhi-110025
அப்புறம் மீண்டும் இன்னைக்கு அவர கூப்டேன். எதுக்கும் கேட்கலாம்னு. எடுத்த உடனே எங்க இருக்கீங்கன்னு கேட்டேன். அவர் '' என்ன?.. உங்களுக்கும் அந்த ஈமெயில் வந்துருச்சா, நான் எங்கேயும் போகலை, நான் நல்லா இருக்கேன். பணம் ஒன்னும் அனுப்பிடலையே'' ன்னு கேட்டார்.
ஏன்னா அவரோட பணி புரியும் பெண் ஒருவர் பணம் அனுப்பலாம்னு நினச்சுட்டு இருந்தப்போ கரெக்டா இவர் கூப்டு விஷயத்தை சொல்லிட்டாராம். இதுல முக்கியமான விஷயம் இவரோட ஈமெயில் லிஸ்ட்ல இருக்கும் பெண்களுக்கு தான் அதிகமா இந்த மின்னஞ்சல் வந்து இருக்கு.
இதே செய்தி NDTV லயும் வந்துச்சு. மும்பையில இதே மாதிரி வந்த ஈமெயில்னால ஒருவர் 6 லட்ச ரூபாய் நண்பருக்காக அனுப்பிட்டாராம்.
நண்பர்களே, இப்ப இது அதிகமா நடக்கறதா செய்திகள் வருது. ஹாக் செய்த ஈமெயில் ஐடியில இருந்து பழைய மெயில் எல்லாம் படிச்சு அதுல இருக்குற செய்திகளுக்கு தொடர்பு இருக்கும் செய்திகள் எழுதி நம்பிக்கை வர வைப்பது தான் இவங்க கையாளும் யுத்தி.
தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க எல்லாருக்கும் சொல்லி வைங்க மக்களே. முக்கியமா வெளிநாடுகள்ல இருக்கும் நண்பர்கள் கவனமா இருங்க.
18 comments:
நல்ல தகவல்.
தொழில் நுட்பம் வளர வளர மோசடிகளும் அதற்கேற்ப வள்ர்ந்து வருகிறது. நாம்தான் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
நன்றி
இது போல ரொம்ப காலமா நடக்குதுங்க....
கொஞ்ச நாளைக்கு முன்னால என் பெயரிலே எனக்கே ஒரு மெயில் வந்துச்சு... யாரோ நம்ம பசங்க விளையாடுங்க என்று கண்டுக்கல....
இது போன்ற விசயங்களை தொலைப்பேசியில் பேசி சரியா என்று தெரிந்து கொண்டு மேற்கொண்டு தொடர்வது சரியா இருக்கும்
ஆமாங்க இது போல் பல வருடமாக நடந்து வருகிறது. எச்சரிக்கையாக இருப்பது மிக மிக முக்கியம்.
உண்மைதான் மங்கை. யாஹூலயும் பேர் போட்டு என்னவெல்லாமொ உதவி கேட்டு வருது.
முதல்ல் ஏமாந்தேன். இப்போது கண்ணைமூடிட்டு டெலிட் செய்துடறேன்.
பத்திரமா இருங்க.
எப்படி எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க.. என்னோட அதிகம் யூஸ் பண்ணற யாஹூ ஐடிக்கு யூஸ் ஆகாத ஐடி எல்லாம் க்ளியர் செய்யனும்.. உங்க ஐடியை பத்திய யூஸர் நேம் பாஸ்வேர்டு மற்று டீட்டெயில் எங்களுக்கு அனுப்புங்க அப்டேட் செய்யனுமில்லாட்டி டெலிட் ஆக்டும் ன்னு கேட்டு ஒரு மெயில் யாஹூலருந்தே வந்ததா வந்துச்சுப்பா எனக்கு... அது என்ன பாஸ்வேர்டு மறந்தாக்கூட அதே பாஸ்வேர்டை நம்மை டைப் பண்ண சொல்லாதவங்க இப்ப மட்டும் அதை கேட்டு மெயில் பன்ணுவாங்களான்னு சந்தேகமாகிடுச்சு..
நம்ப குசும்பன் தான் அக்கா அதெல்லாம் பொய் ன்னு சொன்னவுடன் டெலிட் செய்தேன்.. குடுத்திருந்தா என் பேருல என்ன எழுதி இருப்பாங்களோ....
மங்கை,
நைஜீரியாவில் எப்படியானாலும் பணம் கிடைத்தால் போதுமென இப்படிப்பட்ட மோசடி செயல்களில் ஈடுபடும் பேர்வழிகள் அதிகமென நைஜீரிய நண்பர் கடந்த மாத சந்திப்பில் கூறியது உங்களது பதிவை பார்த்ததும் நினைவு வருகிறது.
ஒரு முறை பிறரது கடன் அட்டைகளை பயன்படுத்தி தென்னாப்பிரிக்க விமான நிறுவனத்திடமிருந்து வகைதொகையில்லாமல் பயணச்சீட்டுகளை வாங்கி பிறரிடம் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் நைஜீரியர்களது செயல் தான். நூதமான முறைகளில் பணம் பார்ப்பதில் கைதேர்ந்தவர்கள். நைஜீரிய அரசு இவர்களது செயலால் இப்போது விழித்துக்கொள்ள ஆரம்பித்திருப்பதன் விளைவு விமானநிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கென சேவைகள் துவங்கியுள்ளதாம்.
நல்லவர்கள் அந்த நாட்டில் அதிகம் இருந்தாலும், இம்மாதிரி செயல்கள் விரைவாக பாதிக்கிறது.
அட இப்பிடியும் நடக்குதா..?...
எப்பிடியெல்லாம் உக்காந்து யோசிக்கிராய்ங்க....உஷாரா இருக்க சொல்லே உருவிக்கினு போயிராய்ங்க..நா வேர "சூது வாது (அப்பிடின்னாக்கா.. என்னங்க?..)அறியாத புள்ள..-ன்னு எங்க வீட்டுல சொல்றாய்ங்களா..அத்தேன் பயமாயிருக்கு..
நல்ல விழிப்புணர்ச்சி பதிவு...வாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றி, மங்கை!
தகவலுக்கு நன்றி, மங்கை!
கரெக்டா ஆள் பார்த்துத்தான் அனுப்பறாய்ங்க...
ஹி....ஹி...
சரி. அவருக்கு எடுத்து வெச்ச பணத்தை எனக்கு அனுப்புங்க. நானும் வேணா ஈமெயில் அனுப்புறேன். :)))
நன்றி மங்கை. ஜாக்கிரதையா இருந்துக்கறோம். நல்லவேளை நீங்க ஏமாறலை
அனைவருக்கும் நன்றி..
//இரண்டாம் சொக்கன்...! said...
கரெக்டா ஆள் பார்த்துத்தான் அனுப்பறாய்ங்க...ஹி....ஹி...//
//இலவசக்கொத்தனார் said...
சரி. அவருக்கு எடுத்து வெச்ச பணத்தை எனக்கு அனுப்புங்க. நானும் வேணா ஈமெயில் அனுப்புறேன்.:))//
ரெண்டு பேரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல.... நான் எத்த
'வெவரமா' (இப்படித்தான் எங்க ஊர்ல சொல்லுவாங்க) போன் பண்ணி கேட்டு உறுதி செய்துட்டு..இங்க பதிவா போட்டிருக்கேன்... :-))
thanks Mangai, i have forwarded your blog content to my circle.
Sahridhayan.
சரி எடுத்து வச்சது எதுக்கு வேஸ்ட்டா ஆகனும் எனக்கு அனுப்புங்க, விவரமா எனக்கு போன் பண்ணி கேட்டுகோங்க...எப்படியோ அனுப்பினா சரி:-))
"ஈமெயில் மோசடி.."
இந்த பதிவை கருவாக கொண்டு ஒரு மினி சிறுகதை
நுதன திருட்டா இருக்கே..
தகவலுக்கு நன்றி...
மங்கை..நெகிழ்வும் அக்கறையும் உங்களிடம்..
pls visit my site and see my short films
www.rightfeelproductions.in
Post a Comment