என் தோழி ஒருத்தியின் அம்மா, 60 அல்லது 65 வயது இருக்கும். படுத்த படுக்கையாய் இருப்பதால் ஒரு முறை வீட்டுக்கு வந்து விட்டு போன்னு சொன்னதுனால, தெரியாத இடம்னாலும் எப்படியோ தேடிக் கண்டு பிடிச்சுட்டு போய் சேர்ந்தேன். அம்மா பிறந்த குழந்தையைப் போல் படுக்கையில். என் தோழி பக்கத்துல போனதும் அவ கைய உறுதியா பிடிச்சுட்டு, 6 மாத குழந்தை போல அவளைப் பார்த்து கள்ளமில்லா சிரிப்பு. பேத்தி அருகில் போனதும் இவ யார்னு மிரள மிரள பார்த்து, என்னையும் ஒரு முறை திரும்பி பார்த்துட்டு, இன்னொரு பக்கம் உக்கார்த்துட்டு இருந்த தோழியின் அப்பாவைப் பார்த்து அதே குழந்தை சிரிப்பு. தன் மகளையும் கணவனையும் தவிர வேறு யாரும், எதுவும் அம்மாவின் நினைவில் இல்லை.
அல்சைமர்ஸ் (Alhziemer's disease) என்கிற மறதி நோயால் கடந்த ஒரு வருட காலமாக இவர் படுக்கையில். இந்த நோயைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மூளையின் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, மறதி அதிகமாகி, மொழி மறந்து, எந்த ஒரு புரிதலும் அற்ற ஒரு நிலை.
நாலு வரி சேர்ந்தாற் போல் பேச முடியாமல் பேசும் வார்த்தைகளிலும் ஒரு தெளிவில்லாமல் இருக்கும். எப்பொழுதும் எதையாவது தொலைத்துவிட்டு அது பற்றியே நினச்சுட்டு இருப்பாங்க. இது போல சின்ன சின்ன பிரச்சனைகளில் ஆரம்பிக்கறப்போ தான் நாம் கவனமா இருக்கனும். நம்ம கிட்ட மீண்டும், மீண்டும் ஒன்றையே சொல்லிட்டு இருக்கும் போது அதை பொறுமையா கேக்கனும். தொலைக்காத ஒன்றை தேடும் போது நம்ம கிட்டதான் கேப்பாங்க. ஒரு முறை இல்லை, நாலு அஞ்சு முறை கூட கேப்பாங்க. அப்ப தான் நாம பொருமையா பதில் சொல்லனும்.
ஆரம்பகால நிலை இப்படி என்றால், நோய் முற்றிய பின்,பாதிக்கப்பட்டவர்கள் படுத்த படுக்கையாகி, தான் வாழும் சுற்றுப் புற சூழ்நிலை புரியாமல், எல்லாவற்றிற்கும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். உணவு கூட சில சமயத்துல குழாய் மூலம் குடுக்க வேண்டியிருக்கும். மேலை நாடுகள்ல சிலர் ஒருவர் இது போல நிலைக்கு தள்ளப் பட்ட பின், மருத்துவர்களின் ஆலோசனையுடன் இந்த உணவுக் குழாய்களை அகற்றி விடுகிறார்களாம். தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் இருக்கும் ஒருவரை கஷ்டப் படுத்துவது சரியல்ல என்பது இவர்களது வாதம். நினைச்சும் பார்த்தா பயங்கரமா இருக்கு.... ம்ம்ம்
விசித்திரமான எண்ணங்கள், குணங்கள், செயல்கள்... இதையே ஒரு குழந்தையிடம் ரசிக்க முடிந்த மனிதனுக்கு, ஏன் வயசானவங்ககிட்ட ரசிக்க முடியறதில்லை?.எல்லாருக்கும் முதுமை என்பது இளமையைப் போன்ற உற்சாகம் நிறைந்த பருவம் இல்லை. ...ம்ம்ம்
1906 ஆம் ஆண்டு, அலாய்ஸ் அல்சைமர் (Dr. Alois Alzheimer) என்ற மருத்துவரால் கண்டரியப்பட்டது. அகஸ்தா என்னும் 51 வயது பெண்மணிக்கு நியாபக மறதியும், தன் கணவன் மேல் சந்தேகமும் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே போய், பின்னர் படுத்த படுக்கையாகி நிமோனியா நோயால் இறந்து போனார். அவர் இறந்த பின், குடும்பத்தாரின் அனுமதியுடன் அவரின்
மூளையை பரிசோதனை செய்து பார்த்ததில், மூளையில் சில பகுதிகள் வழக்கத்துக்கு மாறாக சுறுங்கி இருந்ததைப் கண்டறிந்தார். மேலும் சில படிவுப்பொருட்களும், இறந்த செல்களும் இருப்பதையும் பார்த்தார். 1910ல் இது போல அறிகுறிகளுடன் தோன்றும் மூளைக் கோளாறுகளுக்கு இவருடைய பேரே வைக்கபட்டது
தோழி, அவள் அம்மாவைப் பார்த்துக்குறதுக்காக வேலையை விட்டுட்டு, ஹைதராபாத்தில தனியாக இருந்த அவங்கள இங்கே அழைச்சுட்டு வந்துட்டா. வீட்டுக்கு போனப்போ அவள் அப்பா சொன்னது, '' மகன் இல்லையே என்ற நினைப்பே எங்களை அனுக விடாத மருமகன், எங்களை குழந்தையை போல பார்த்துக்குற மகளும், பேத்தியும், சந்தோஷமா தான் இருக்கேன். ஆனா பார்க்க வர்ரவுங்க தான் சீக்கிரம் போய் சேர்ந்துட்டா பரவாயில்லைன்னு சொல்றப்போ நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு... சுத்தியும் இவளை பத்தின இத்தன எண்ணங்கள், அபிப்ராயங்கள் இருக்குறது தெரியாம, குழந்தையாட்டம் எப்பவும் இதே சிரிப்பு'' . அவர் அம்மாவின் கையை பிடிச்சுட்டு, நெற்றியை தடவிக் குடுக்க...மன நிறைவும், அதே சமையத்தில ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வுடனே நான் கிளம்பினேன்.ஹ்ம்ம்...
மூளையை பரிசோதனை செய்து பார்த்ததில், மூளையில் சில பகுதிகள் வழக்கத்துக்கு மாறாக சுறுங்கி இருந்ததைப் கண்டறிந்தார். மேலும் சில படிவுப்பொருட்களும், இறந்த செல்களும் இருப்பதையும் பார்த்தார். 1910ல் இது போல அறிகுறிகளுடன் தோன்றும் மூளைக் கோளாறுகளுக்கு இவருடைய பேரே வைக்கபட்டது
தோழி, அவள் அம்மாவைப் பார்த்துக்குறதுக்காக வேலையை விட்டுட்டு, ஹைதராபாத்தில தனியாக இருந்த அவங்கள இங்கே அழைச்சுட்டு வந்துட்டா. வீட்டுக்கு போனப்போ அவள் அப்பா சொன்னது, '' மகன் இல்லையே என்ற நினைப்பே எங்களை அனுக விடாத மருமகன், எங்களை குழந்தையை போல பார்த்துக்குற மகளும், பேத்தியும், சந்தோஷமா தான் இருக்கேன். ஆனா பார்க்க வர்ரவுங்க தான் சீக்கிரம் போய் சேர்ந்துட்டா பரவாயில்லைன்னு சொல்றப்போ நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு... சுத்தியும் இவளை பத்தின இத்தன எண்ணங்கள், அபிப்ராயங்கள் இருக்குறது தெரியாம, குழந்தையாட்டம் எப்பவும் இதே சிரிப்பு'' . அவர் அம்மாவின் கையை பிடிச்சுட்டு, நெற்றியை தடவிக் குடுக்க...மன நிறைவும், அதே சமையத்தில ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வுடனே நான் கிளம்பினேன்.ஹ்ம்ம்...
சாவின் விளிம்பில் இருப்பவரைப் பற்றிய ரவீந்திரநாத் தாகூரின் கவிதை ஒன்றில் இருந்து சில வரிகள்...
''வீணாய் என்னைத் தேடிக்காண வந்தவர்
அனைவரும் திரும்பிச் சென்றனர் சினத்துடன்!
ஆயினும் நானோ
இறுதியாய் என்னை அவன் கைவசம்
ஒப்படைக்கப் பொறுத்திருக்கிறேன்,
அவனது அன்பு வரவேற்புக்கு!''
22 comments:
உண்மை தான்.. மங்கை..
சில இடங்களில் அப்படியும் பேசும் உறவுகளே பாத்துருக்கேன்.. அப்பாடா
அவருக்கும் கஷ்டம் தானே .. எதோ அழைச்சுக்கிட்டா தேவலைன்னு .. பேசுவாங்க..
மறதின்னவுடனே பயமா போச்சு .. எனக்கு.. இஷ்டத்துக்கு எல்லாத்தையும் மறந்துட்டு முழிக்கற ஆளு நான்.
ஆமா டாக்டரம்மா....
அக்கறையுடன் இருக்கும் மகன்களும், மகள்களும் கிடைப்பது அதிர்ஷடம் தான் டாக்டரம்மா..ம்ம்ம்
லட்சுமி..
மறதிய பத்தி என் கிட்ட சொல்லாதீங்க உங்களுக்கு சீனியர் நான் இருக்கேன்.. கவலைப்படாதீங்க..
நமக்கு நாமே திட்டம்,
ஒரு ஹோம் கட்டீறலாம்...எதுக்கு அடுத்தவங்களுக்கு தொல்லை..:-))
தன்மத்ரா கிற மலையாளப் படம் பார்த்தப்பதான், அல்சைமர்ஸ் நோயின் தீவிரம் தெரிந்தது.
ம்ம்ம்.... இத படித்தவுடன் மனசுல ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு....
நோயும் முதுமையும் கை கோர்த்தால், பார்த்துக் கொள்ளுபவர்களுக்குத் தான் சிரமம்.
எனக்குத் தெரிந்து ஒரு தாய், செரிப்ரல் பால்சியோடு பெற்ற மகனை அவனுடைய 25வயது வரைக் கவனித்துக்கொண்டாள்.
நாம் இளமையில் வலுவுடன் இருக்கும் போது, பொறுமையும் கருணையும் இருந்தால் நமக்கு மூத்தவரைக் கவனிப்பது அவ்வளவு துன்பமாக இராது.
ரொம்பன்னு இல்லாட்டாலும் நிறையப் புண்ணியம் பண்ணிய தாய்.
மகளும், மருமகனும், கணவரும் எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க பாருங்க.
தோழிக்கு இப்ப அல்ஸைமர் ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆகுது.
குடும்பம் படும் கவலையைப் பார்க்கும்போது கண்ணுலே ரத்தம் வருதுப்பா.
நன்றி தென்றல்...ம்ம் இதெ போலத்தான் அந்த வீட்ல இருந்தப்போ இருந்தது..
வல்லிம்மா..
சரியா சொன்னீங்க.. குறையுடன் பிறக்கும் குழந்தைகளை உண்மையான அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் பெற்றவர்களை விட முதியவர்களை பார்த்துகொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு தான் வல்லிம்மா
துளசி
கொடுமை தாங்க...வீட்ல பெரியவங்க ஒருத்தங்க இப்படி இருந்தா..ஹ்ம்ம்..
மங்கைக்கும், முத்துலட்சுமிக்கும் இந்த
தொடுப்புஉதவலாம்.
//மாயாவி...! said...
மங்கைக்கும், முத்துலட்சுமிக்கும் இந்த
தொடுப்புஉதவலாம்.///
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல
இருந்தாலும் ரொம்ப நன்றி.. சாக்கிறதையா இருக்கோம்..மறதி தான் ஆல் ரெடி ஸ்டார்ட் ஆயிடிச்சே.
குடுத்து வச்சவங்க. இப்படிப்பாத்துக்குற மகனும் மகளும் எத்தனை பேருக்கு கிடைக்கும்.
மனசுக்கு என்னவோ போலிருக்குது மங்கை. ஏன் இப்படியெல்லாம்? ம்ம்ம்...
//சின்ன அம்மிணி said...
குடுத்து வச்சவங்க.
//
அந்த அம்மா குடுத்து வச்சவங்கன்னும் சொல்ல முடியலைங்க...அவங்களுக்கு தான் அவங்களை சுற்றி நடப்பது ஒன்னுமே தெரியாதே. :(
//எல்லாருக்கும் முதுமை என்பது இளமையைப் போன்ற உற்சாகம் நிறைந்த பருவம் இல்லை. ...ம்ம்ம்//
உண்மை தாங்க... நாம் ஒரு நாள் அது போல் ஆவோம் என்பது மனதில் இருந்தால் மாற வாய்ப்பு இருக்குமோ?
"தான் வாழும் சுற்றுப் புற சூழ்நிலை புரியாமல் "-
துன்பத்தை உணரும் போது தான் வேதனையை தருகிறது...
கண்,காது இல்லாதவருக்கு எல்லா இசையும் ஒன்று போல..
வேதனையை உணரும் திறன் இல்லாதவருக்கு எதுவும்
துன்பம் தராது.[அவர்கள் குழந்தைகள்/யோகிகள் போல]. என்பது என் கருத்து.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நான் அதுக்குதான் சொன்னேன் ஆரம்பம் முதலே! நான் ஆரம்பிக்கும் முதியோர் இல்லத்துக்கு வாங்க வாங்க சந்தோஷமா சேவை செய்வோம்ன்னு! முத்து லெஷ்மி கூட ஒரு அவுட்லைன் குடுத்து பதிவு போட்டுட்டாங்க, வாங்க ஜமாய்ப்போம்!!!
இது உறுதிங்க யார் வந்தாலும் வாராட்டியும் நான் ஆரம்பிக்க போறேன், முடிஞ்சா வந்து சேர்ந்துகோங்க!!!
மங்கை, இப்பத்தான் அனுராதா பதிவு படிச்சிட்டு வரேன். இப்படி எல்லாம் அவஸ்தைப்படாம, பிறருக்கு தொந்தரவும் தராம "பட்" ன்னு போய் சேர்ந்திடணும்.நெனச்சிப் பார்த்தா பயமா இருக்கு.
மங்கை,
முதல் முறை வருகை இங்கே. CompassionUnlimited blog ல் இருந்து தாவிக் குதித்து வந்தனன் நான்.
நல்ல ஒரு உருக்கமான பதிவுங்க. உபயோகமான தகவலுக்கும் நன்றிங்க.
இதப்படிக்கும் போது எனக்கு என் நண்பன் ஒருவன் அனுப்பிய forward mail ஞாபகத்துக்கு வருது. பெத்தவங்களும் வயசானதுக்கு அப்புறம் குழந்தைங்க தான்னு சொல்றது.
விரிவாச் சொன்னா ரொம்ப நீண்டு போயிரும்..
அல்சைமர்ஸ் (Alhziemer's disease).my first encounter with this was with my grand ma s sister..chinna patti.She was in chennai and we used to come down from north for summer holidays.She was always fond of me .One such holiday when I came down,i went to her and asked her how she was.A blank stare and she said ddnt know who I was.It hit me like a thunderbolt.I can never explain that moment.
I sincerely hope the science discovers a medicine for that and other such diseases.
Sorry u too had to face a similar situation
TC
Cu
Brought tears in my eyes.Even though I haven't come across such person,I can imagine the situation.God bless the family.
உடன்பிறப்பு மங்கைக்கு,
உங்களை மறக்க இயலுமா? தமிழ்மணத்தில் பெண்ணுக்கான முக்கிய குரல். பெண் முன்னேற்ரத்திற்கு உதாரணம். ஆணி அதிகம் இருப்பதால் அதிகம் தமிழ்மணம் பக்கம் வர முடிவதில்லை. வேலை முடிந்தவுடன், மறுபடியும் நம் கூட்டத்துடன் ஐக்கியம் ஆகிவிடுவேன். அதுவரை வாழ்த்துக்களுடன்்!!
Post a Comment