இன்று மதியம் எங்கள் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சொன்ன சேதியை கேட்ட பின்னால் சிறிது நேரம் எங்களால் ஒன்றும் பேச முடியவில்லை.
தில்லியில் நடக்காத குற்றங்கள் இல்லை, இதை விட பாதுகாப்ப இல்லாத ஒரு இடம் இருக்க முடியாது என்பதற்கு இதை விட ஒரு உதாரணம் வேண்டியது இல்லை. மனிதர்கள் இதை விட தரம் கெட்டு போக முடியுமா?
இந்த இரண்டு மாணவர்களும் நேற்று ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு திறும்பிக்கொண்டிருந்த போது ரோட்டோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணை ஒருவன் பலாத்காரம் செய்துகொண்டிருந்திருக்கின்றான். ஒரு மரத்தினடியில்..லைட் வெளிச்சத்தில், இந்த கொடுமை நடந்திருக்கிறது. பைக்கில் சென்று கொண்டிருந்த இந்த மாணவர்கள் ஒரு பெண்ணின் அவலக் குரல் கேட்கவே வாகனத்தை நிறுத்தி பார்த்திருக்கிறார்கள். சிறு வயதானதால் அருகில் செல்ல பயந்து கொண்டு தூரத்தில இருந்து அவனை திட்டி விரட்ட பார்க்க அவன் எதையும் காதில் வாங்காமல் முன்னேரிக் கொண்டிருந்திருக்கின்றான்.
ஆடை அலங்கோலமாக இருக்கவே மாணவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையாம். பின்னர் இரண்டு போலீஸ்காரர்கள் வருவது தெரியவே அவர்களை அழைத்து விஷயத்தை சொல்ல, அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர். பின்னர் அருகில் இருக்கும் ஒரு குடியிறுப்பு பகுதியில் ட்யூட்டியில் இருந்த செக்யூரிட்டி ஆட்களுடனும், மற்ற ஜனங்களுடனும் வந்து அவனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
குற்றவாளியை அடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள் சாட்சி கை எழுத்து மட்டும் போட மறுத்து விட்டனராம். ஆனால் இந்த இரண்டு மாணவர்களும் நாங்கள் போடுகிறோம் என்று கூறி அவர்கள் கையாலேயே எழுதி கொடுத்துவிட்டு, இன்று காலை கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவரிடம் விஷயத்தை கூற, இவர்களுக்கு பயம். ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று. ஆனால் மாணவர்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை. நாங்க குடுத்த புகாரை திறும்ப வாங்க மாட்டோம் என்று உறுதியாக கூறி விட்டார்கள்.
அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமையை மருத்துவர்களின் சான்றிதழ்களுடன் இன்று எல்லா ஊடகங்களுக்கும் தெரிவித்து விட்டனர். மேலும், அந்த பெண்மணி இன்னும் காவல் நிலையத்தில் இருப்பதால் அதற்கும் ஆட்சேபனை தெரிவித்து மகளிர் ஆணையத்திடம் முறையிட வேண்டும் என்று எங்களிடம் வந்தார்கள். மகளிர் ஆணையத்திடம் சொல்லியாகி விட்டது.
இதோடு நிக்காமல் இந்த மாணவர்கள் இந்த வாரத்திற்குள் அனைத்து மாணவர்களையும் ஒரு பாதயாத்திரைக்கு தயார் படுத்தி வருகின்றனர். அவர்கள் முகத்தில் நேற்று பார்த்த காட்சியின் அதிர்ச்சி இன்னும் இருந்தது.
மாணவர்கள் சம்பவத்தை விவரிக்கும் போது, அந்தப் பெண் கத்தியது கூட வலியானாலே ஒழிய அவளுக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கின்றது என்று தெரியவில்லை. காவல் நிலையத்திலும் தனக்கு நேர்ந்த கொடுமையின் தீவிரத்தை உணராமல் தான் இருந்து இருக்கிறாள்.
சராசரியாக இந்தியா முழுவதும் நடக்கும் குற்றங்களைப் போல் இரண்டு மடங்கு குற்றங்கள் தில்லியில் மட்டும் நடக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரம் என்றால் அது தில்லியாகத்தான் இருக்க வேண்டும்.
இதை விட கேவலமாக ஒரு மனிதன் நடந்து கொள்ள முடியுமா. பணமும் அதிகாரமும் தில்லியை இன்று எந்த அளவிற்கு ஒரு நரகமாக ஆக்கியிருக்கிறது என்பதற்கு இங்கு தினமும் நடக்கும் குற்றங்களே சாட்சி.
இதை விட கேவலமாக ஒரு மனிதன் நடந்து கொள்ள முடியுமா. பணமும் அதிகாரமும் தில்லியை இன்று எந்த அளவிற்கு ஒரு நரகமாக ஆக்கியிருக்கிறது என்பதற்கு இங்கு தினமும் நடக்கும் குற்றங்களே சாட்சி.
மனிதர்களைக் குறித்த நம்பிக்கை அருகிக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் இந்த மாணவர்களின் உறுதியும் எண்ணமும் ஆறுதல் அளிக்கிறது.
22 comments:
ஹைய்....நெம்ப நாளைக்கப்புறம் பதிவு போட்ருக்கீங்க போல...
இருங்க படிச்சிட்டு வர்றேன்...ஹி..ஹி..
ம்ம்ம்ம்...
ஒரே ஃபீலிங்ஸ் ஆய்டுச்ச்சி....
உடனே எல்லாரும் செக்ஸ் கல்வியின் அவசியத்தை பத்தி பேசிட்டு இதை மறந்துடுவாங்க....
அந்த இரு மாணவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்....
ம்ம்ம்ம்ம்
மங்கை
ஐந்தறிவு இல்லாத மிருகத்திடம் சுகம் தேடுபவனை விட இவன் மகா கேவலமானவன்.
எங்கள் பகுதியிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
என்ன கொடுமை! அந்த இரண்டு மாணவர்களுக்கும் என் பாராட்டுதல்களை சொல்லிடுங்க, கொஞ்ச நேரம் செயலிழந்து போனேன்:-(
மங்கை,
டெல்லியில் மாலை ஆறு மணிக்குமேல் ஒரு வெள்ளைப்பெண்ணுடன் ஒரு இந்திய ஆண் சாதாரணமாக சாலைகளில் நடந்து செல்ல முடியாது என்றே நினைக்கிறேன். மற்றவர்கள் என்னமோ நினைத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுப்பதனை கண் கூடாகப்பார்த்திருக்கிறேன்...
வட இந்தியா இந்த விசயத்தில் கொஞ்சம் முரட்டுத்தனமாகத்தான் நடந்து கொள்கிறது. 'லோன்லி ப்ளானட்' என்ற சுற்றுல கையேடு இதனை மேற்கோல் காட்டி எழுதியிருப்பதனை காணலாம். கொடுமைங்க இதெல்லாம்...
ஹ்ம்ம்..செக்ஸ் கல்விதான் தேவையில்லாததுன்னு முடிவு பண்ணி ban பண்ணிட்டாங்களே...பேசி பேசியே கலத்தை தள்ளறது தான் நம்ம மக்களுக்கு கையாலானது
கண்மணி, அபி அப்பா...மிருகங்களை இவர்களுடன் இவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது மிருகங்களை அவமானப் படுத்துவது போல....
தெகா...வெள்ளைகாரப் பெண்கள் மட்டும் இல்ல தெகா...எந்த பெண்ணும் நிமம்தியா போக முடியாத நிலை..இப்ப எல்லாம் கடைக்கு கூட தனியாக போறது இல்லை....
அந்த மாணவர்கள் இருவருக்கும் பாராட்டுதலைத் தெரிவியுங்கள்!
மனிதம் இன்னும் வற்றிவிடவில்லை!
மாணவர்களின் செயல் பாராட்டுக்குரியது. என் வாழ்த்துக்கள். அவர்களின் தைரியம் வெல்லட்டும்.
கொடுமையாக இருக்கிறது!
ஐயோ! இவனுங்களுக்கு மரண தண்டனை ஒண்ணுதான் சரியான தண்டனை
ரொம்பவே வருந்தத்தக்க வேதனையளிக்கக் கூடிய விஷயம் தான். காட்டுமிராண்டியைத் தண்டிக்கக் காவலர்களும் தவறியது அதை விட கொடுமை. ஆயினும் எதிர்ப்புகளை மீறி மனிதத்தன்மையை நிலைநாட்டிய அம்மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
துணிந்து செயல்பட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
டெல்லி தொடர்ந்து குற்றவாளிகளின் கூடாரமாக மாறி வருகிறது :(
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி
மாணவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
ஆயினும் இதைவிட மேலான செயல் ஒன்று அவர்கள் செய்திருக்கலாம்;கையில் கிடைத்த ஏதொ ஒன்றை எடுத்து அந்த மிருகத்தின் தலையில் போட்டு அங்கேயே கொன்றிருக்கலாம்.பின்னர் சமூகத்தில் நேரப் போகும் பல குற்றச் செயல்களை அது தடுக்கும்.
விவரணம் இல்லாத டெல்ல்லியின் பல இறப்புகளோடு அதுவும் ஒன்றாக இருக்கட்டுமே..
நான் அச் சூழ்நிலையில் இருந்திருந்தால் அதை செய்திருப்பேன் என்றே தோன்றுகிறது.
காவல் துறையில் மாணவர்கள் அளித்த புகாரினால் என்ன நடந்துவிடும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பல முன்னேறிய நாடுகளில் குற்றச் செயல்கள் தடுக்கப் பட்டிருப்பது கடுமையான தண்டணைகளில் விளைவாலேயே...சவூதி அரேபியா உள்பட !
அரசின் கரங்கள் அதை செய்யத் தவறும் போது சட்டத்தின் பார்வை படாத தர்மத்தின் நிழலில் இவ்வகை தண்டனைகள் பொது மக்களால் நிறைவேற்றப்படவேண்டும்!
மனித ஒழுக்கத்திற்கு ஏதாவது ஒரு பயம் இருக்க வேண்டும். அது கடவுள், சமுதாயம், சட்டம், தண்டனை என்று ஏதாவது ஒரு வடிவத்தில் இருக்க வேண்டும். காவலர்களே கண்டு கொள்ளவில்லை என்று கூறியிருந்தீர்கள். அவர்களுக்கும் எதற்கும் பயமில்லை. மேலைத்தேசங்களில் இந்த குற்றம் புரிந்த காட்டு மிராண்டியை விட காவலர்களே தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
அந்த மாணவர்களின் நடவடிக்கை ஆச்சர்யமான, வாழ்த்த வேண்டிய விஷயம்
நம்பிக்கை அளிக்கும் மாணவ சமுதாயத்துக்கு வாழ்த்துக்கள்.
கடமையை செய்ய தவறியே காவலர்களுக்கு கடமையான கண்டங்கள்...
அந்த இரு மாணவர்களுக்கும்
மனதார்ந்த நன்றி
அந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!!
Rediffல் வந்த செய்தியைப் பார்த்தீங்களா?
Best city to live in Delhi beats Mumbai
Hats off to those students.. Hats off to young India. When people are not willing to take the case forward , they have th guts to do so. God bless them.
Test match parthukkondu 5 naatkalai virayam seyyda engal generation waste aagi poi vittom..20*20 vilayadum indha generation ukku vaazhthukkal..indha maadiri kodoora seyalgalai niruthhuvadarku niraya dhairiyam vendum..adhu ungalakku niraya irukkiradhu...Vaazhga
CU
Post a Comment