Tuesday, August 28, 2007

உணர்வுகள் அற்ற நம் மக்கள்


NDTV மற்றும் Times Now சானலில் பார்த்த ஒரு செய்தியினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியாமல் இதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதை யார், எப்படி படம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை.

மக்கள் சிலரின் மிருகத்தன்மையும், சக மனிதனின் பாதுக்காப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர் இரண்டு பேர் ஏவிய மனித உரிமை மீரலின் கொடுமையையும் படம் பிடித்து வேற காண்பித்தார்கள்.

காலையில் கையில் உணவை வைத்து கொண்டே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த செய்தியை பார்த்த பின் என்னால் உணவருந்த முடியவில்லை. எழுந்து விட்டேன். பீஹாரில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துவிட்டு ஓட பார்த்தவனை பிடித்து உதைத்த காட்சியை கல் மணம் கொண்டவர்கள் கூட பார்க்க முடியாது.

அவர் கை பின்னால் கட்டப்பட்டிருந்தது, சுத்தியும் நின்று கொண்டிருந்தவர்கள் காலாலேயே அவரின் முகத்தில் உதைத்து சித்தரவதைப் படுத்தி, ஓட விட்டு பெல்ட்டால் உதைத்து, ஹ்ம்ம்ம்...என்னால் பார்க்க முடியவில்லை.

இதை எல்லாம் கேள்விப்பட்டு அங்கு வந்த காவல் தெய்வங்கள், கடமை உணர்வோடு தண்டனை கொடுக்க தயாரானார்கள். ஒரு பைக்கில் அந்த ஆளின் காலை கட்டி இழுத்து செல்ல...பின்னால் அந்த ஊர் மக்கள் அவரை உதைத்துக் கொண்டே செல்கிறார்கள்.

இதற்கும் பறித்த சங்கிலி மீட்கப்பட்டு விட்டது. இதற்கு பிறகும் அவருக்கு இவ்வளவு கொடுமை. மனித உரிமை மீறல் என்ற ஒன்று நம் காவல் தெய்வங்களுக்கு தெரியுமா என்பது சந்தேகமே.

இப்பொழுது அவர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த பணி நீக்கம் என்ன பெரிதாக செய்துவிடப் போகிறது.

இதுவே நம்ம சன்ஜய் தத் சிறைய விட்டு வெளியே வந்தப்ப வெட்கம் கெட்டுப் போய் அவரை அனைத்து, கை கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொண்டார்கள் இதே காவல் தெய்வங்கள்.

இவர்களை திட்டக் கூட நா கூசுகிறது.

31 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்களுக்கு எப்படி சாதாரணமக்களிடமிருந்து வேறுபடுகிறார்கள் என்பதற்கு வகுப்பு எடுக்கவேண்டுமென்று நினைக்கீறேன்.

காக்கிசட்டையில் இருக்கும் போது அதிகம் செண்டிமெண்டோ அதிகம் கோப உணர்ச்சியோ காட்டாமல் நியாயமாக நடந்துகொள்ள வேண்டுமென்று தெரிவதில்லை..

டி.அருள் எழிலன் said...

இம்மாதிரி நிகழ்வுகள் சிலதை சமீப காலங்களில் அதிகமாக பார்க்க முடிகிறது.ஆனால் இதை ஒரு பத்திகையாளர் வெளிக்கொண்டு வருவதை அருவருப்பான விஷயமாக என்னால் பார்க்க முடியவில்லை.மாறாக நல்ல விஷயம் அருவருப்பான்வைகள் சமூகத்தில் நடக்கும் போது நாம் மட்டும் அதிலிருந்து தப்பிக்க நினைப்பது..சரியல்ல...

சமீபத்தில் நாகர்கோவிலி பிக்பாக்கெட் அடித்த ஒருவரை இது போல பிடித்து கட்டிவைத்து போலீசிடம் ஒப்படைத்தார்கள்.மின் கம்பங்களில் கட்டிவைக்கப்படுகிற திருடர்கள்.சமீப காலங்களில் பாலியல் தொழிளாளர்கள் திருநங்கைகள் மீதான தாக்குதல்கள் எல்லாம் அதிகரித்து வருகின்றன்.கேடு கெட்ட இந்த சமூக அமைப்பில் இருந்து மக்கள் ஆபத்தான ஒரு விஷயத்தை கற்று வைத்திருக்கிறார்கள்.அது தேசத்தின் பெயராலும் ஒழுக்கத்தின் பெயராலும் யாரை அடித்தால் நாம் கவனிக்கப்படுவோமோ,பொது நன்மையின் பெயரால் கொல்லப்படுகிற உயிர்களுக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை.ஏனென்றால் பெரும்பாலும் திருடர்கள்,பாலியல்தொழிலாளிகள்,திருநங்கைகள் ,பிக்பாக்கெட்டுகள்,உதிரிகள் இவர்களுக்கெல்லாம் எவ்வித அதிகாரமும் கிடையாது..இதெல்லாம் மக்களுக்கும் தெரியும்.உண்மையிலேயே அதிகாரமுள்ள போக்கிரிகளை தொட முடியவில்லையே என்பதன் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்..போலீஸ் செய்கிற போலி என்கவுண்டர்களுக்கும் மக்கள் செய்கிற இம்மாதிரி வன்முறைகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

அபி அப்பா said...

pavama irukku mangkai medam :-(

TBCD said...

மாப் சைக்கலாஜி என்று சொல்லுவார்கள்...தனிமனிதனாக கோழையாக இருப்பவன்..
சந்தர்பம் வாய்க்கும் போது..இப்படி தங்களின் அடிமணதின் வக்கிரத்தை இப்படி வெளிப்படுத்துவான்..
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சைக்கோ ஒளிந்திருக்கிறான்...
பலர் அவனை கட்டுப்படுத்திவடுகிறார்கள்...சிலர் இந்த மாதிரி சமயங்களில் வெளிப்படுகிறார்கள்...
திருடனைக் கல்லால் அடித்து கொன்றவர்கள், ஒன்றுமே நடக்காதவாறு செல்வது நம்ம ஊர்களில் சாதரணம்... தனி மனித பாதுகாப்பு, மனித ஊரிமை இது எல்லாம்...நம்ம ஊரில வரனுமின்னா மக்களுக்காக இருக்கிற அரசாங்கம் வரனும்...

மங்கை said...

நன்றி லட்சுமி..

அன்னியன்..நான் பத்திரிக்கை செய்தியையோ, அதை கொண்டு வந்த தொலைக்காட்சி சேனலையோ குறை சொல்ல வில்லை... இதை பார்த்ததினால் தான் நமக்கு தெரிந்தது.. அங்கு நேர்ந்த கொடுமையை தான் சொல்கிறேன்..

//பொது நன்மையின் பெயரால் கொல்லப்படுகிற உயிர்களுக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை.ஏனென்றால் பெரும்பாலும் திருடர்கள்,பாலியல்தொழிலாளிகள்,திருநங்கைகள் ,பிக்பாக்கெட்டுகள்,உதிரிகள் இவர்களுக்கெல்லாம் எவ்வித அதிகாரமும் கிடையாது..இதெல்லாம் மக்களுக்கும் தெரியும்.///

அருமையா சொலிட்டீங்க...உண்மை.. நன்றி

மங்கை said...

நன்றி அபி அப்பா..

நன்றி TBCD.. அடிப்படை மனித உணர்வு கூட இல்லையே..அது தான் வருத்தமாக இருக்கிறது..ஹ்ம்ம்ம்

மாசிலா said...

மிகவும் பரிதாபத்திற்குரிய மேலும் வன்மையான கண்டனத்திற்குரிய மிருகச்செயல்.

எப்படித்தான் இந்த சமுதாயம் தனது மனித நேயத்தை இழந்ததோ!

இவரும் ஒரு மனிதர்தானே. இவருக்கு மற்றவரைப்போல் உணர்வுகள் இருக்கிறது எப்படி மறுக்க முடிகிறது.

இது இப்படி இருக்க மறுபுரம், அரசியல் சினிமா ஊடக பலமுள்ள தேசத்துரோகிகள் அரச மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்.

இந்நிலை கட்டாயம் மாற வேண்டும்.

பத்திரிகையாளர்கள் மனது வைத்தால், பொதுமக்கள் துணையுடன் எண்ணற்ற சமுதாய மாற்றங்களுக்கு வித்திடலாம்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மங்கை.

துளசி கோபால் said...

சட்டத்தைக் கையில் எடுத்துக்க நம்ம மக்களுக்குச் சொல்லியா தரணும்?
கூட்டம் சேர்ந்தாவே எல்லாரும் அவுங்கவுங்க ( எப்பவோ எதுக்கோ அமுக்கி வச்ச)
கோவத்தைக் கிடைக்கிறவன்மேலே காட்டறதுதான்.(-:

விஜயன் said...

என்னத்த சொல்றது?

குற்றம் செய்தவர்களின் பின்னனியை வைத்தே நீதியும், தண்டனைகளும் செயல்படுத்தப் படுவது வே(வா)டிக்கை தான்.

நம்முடைய வீரமும் தீரமும் எளியோரிடம் தானே காட்ட முடியும்?

டி.அருள் எழிலன் said...

நான் எழுதியதில் சஞ்சய்தத் பற்றி சொல்ல மறந்து விட்டேன்.புனேயில் உள்ள ஏரவாடா சிறையில் இருந்து அவர் ஜாமீனில் வெளிவந்த போது அவரை கைகுலுக்கி கட்டிபிடித்த காவல்ர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.ஒரு நடிகரை(மனதுக்கு பிடித்த நடிகரை) அணைக்கிறோம் என்கிற மனோபாவத்தில் அணைத்திருக்கலாம்.அதற்காக அந்த காவலர்களை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டியதில்லை.
ஏனென்றால் ஜெயேந்திரர் வழக்கில் ஒரு நீதிபதி ''நான் ஸ்வாமிகளின் பக்தன் அதனால் நான் இந்த வழக்கை விசாரிக்க முடியாது"என்று சொல்லும் போது நமது அதிகார வர்க்கம் அந்த நீதிபதிக்கு என்ன தண்டனை கொடுக்கும்.அவரது செலவினங்கள் அனைத்தும் எனது வரிப்பணத்தில் நடக்கும் போது அவர் எப்படி விசாரிக்க முடியாது என சொல்ல முடியும்...அதிகாரத்தில் உள்ளோருக்கு முன்னால் மண்டியிட்டு கிடக்கும் நமது சட்ட சாசனம் ஏன்.ஏழைகளிடமும் செல்வாக்கற்ற சமூகங்களிடமும் கறாராக நடந்து கொள்கிறது.சஞ்சய் தத்தைப் பாற்றி மீடியாக்கள் உருவாக்குகிற நெகிழ்ச்சியான பிம்பத்தில் ஏன் கால் பங்கை கூட பாராளுமன்ற தாக்குதலில் தூக்கு கைதியாக இருக்கும் முகம்மது அப்சலுக்கு காட்ட மறுக்கிறது.மான் வேட்டையில் கைது செய்யப்பட்டிருக்கும் சல்மான் கானைப் பற்றி வருகிற செய்திகளை பாருங்கள்...இதெல்லாம் பார்ப்பன இந்து மனோபாவமும் தேசப்பற்று என்கிற ஒரு போலி பெருமிதமிம்.இதில் கலந்திருக்கிறது...என்னைப் பொறுத்தவரையில் சஞ்சய்தத்துக்கு கருணை காட்டப்பட வேண்டும்..அதே கருணை சட்டத்தின் அகோர விழிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் பல உயிர்களுக்கும் காட்டப்பட வேண்டும்...எதையும் ஒற்றை அர்த்தத்தோடு நவ காலனிய உலகில் அணுக முடியாது....

(சஞ்சய்தத் விவகாரத்தை வைத்து இந்திய நீதி குறித்த சிந்தனைதான் இது.வேறு ஒன்றும் இல்லை)

delphine said...

பெண்ணின் சங்கிலியை அறுத்தது பெரிய தப்பு. அதற்காக இப்படியா?

அபி அப்பா said...

டீவீ பார்த்து நீங்க போடும் 2வது பதிவு இது!

கோபிநாத் said...

:-((

வேதா said...

அய்யோ அந்த கொடுமையை நீங்களும் பார்த்தீங்களா? என்னால அதை பார்த்துட்டு அப்புறம் டிவி பார்க்கவே பிடிக்கல இதை படம்பிடித்த புண்ணியவான் யாரோ? :(

PPattian said...

கொடுமைங்க.. இது மாதிரி ஒரு சம்பவத்தை நான் நேர்ல பாத்திருக்கேன். திருடனை கட்டி வச்சி தர்ம அடி அடிச்ச "பெரிய மனுஷங்க"'கிட்ட வேண்டாம்னு சொல்லப் போய் நான் வாங்கின திட்டுகளுக்கு அப்புறம்.. அந்த இடத்தில நிக்க பிடிக்காம விலகி போக மட்டுந்தான் என்னால முடிஞ்சது..

வல்லிசிம்ஹன் said...

Ippothaan t.vla paarththen.

bayangaramaa irunthathu.:((((

Thekkikattan|தெகா said...

ஓ! மற்றுமொரு இடத்தில், திருடியவனின் கெட்ட நேரத்தால் மாட்டிக் கொண்டான், நம்ம மக்களின் பழைய கோபங்களை எல்லாம் அவன் மேல் காட்டி விட்ட கதைதானே. இது ஊர் எங்கும் நடக்கும் நிகழ்சிதானே மங்கை. இருந்தாலும், இதனை ட்டி.வியில் வேறு காட்டி பார்த்து மகிழ்வது அதீதம்தான்.

Anonymous said...

இது மாதிரி கேவலங்கள் இன்னும் நடக்குது. என்னத்த சொல்ல‌

Unknown said...

இதே போல் நடத்தையை கோடிக்கணக்கில் சுருட்டும் அரசியல்வாதிகளிடம் காண்பிப்பார்களா?

வவ்வால் said...

மக்களை விடுங்க அவங்க போலீஸ் மீது நம்பிக்கை இல்லாததால் கூட இப்படி செய்து இருப்பார்கள் , ஆனால் சட்டத்தின் காவலர்கள் பைக்கில் கட்டி இழுத்து சென்றது மிகப்பெரிய குற்றம். அவர்களுக்கு என நடத்தை விதிகள் இருக்கு! சாதாரணமான குற்றவாளிகளுக்கு கை விலங்கு போடுவதே தவறு என நீதிமன்றங்கள் அறிவுறுத்தி இருக்கு!

இதெல்லாம் எங்கே கேட்க போறாங்க காக்கி சட்டைகள்!

மங்கை said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி

கோவி.கண்ணன் said...

கொடுமை,

ஊர் கூடி செய்தால் குற்றமில்லை என்ற லாஜிக் போல இருக்கு.

இதற்கு பதில் அவனுக்கு 1 வருட சிறைஇ தண்டனை கொடுத்திருக்கலாம். சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட *மாக்கள்*

ஜே கே | J K said...

எல்லா செய்திதாள்களிலும் கூட இதுவே முக்கிய செய்தியாக இருந்தது.

சட்டம், ஒழுங்கு, நீதி எல்லாமே பணம். அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது.

... நினைக்கையில் வெறுப்புதான் மிஞ்சுகிறது.

மங்கை said...

நன்றி கோ.வி, JK

நாகை சிவா said...

உள்ளேன் மேடம் போட வந்தேன்...

இந்த பதிவை பற்றி சொல்ல தற்சமயம் ஏதும் இல்லை.... விரைவில் விவாதிக்கலாம்.

கண்மணி/kanmani said...

மங்கை ஜெயிலுக்குப் போகும் அல்லது கோர்ட்டுக்குப் போகும் சினிமா/அரசியல்வாதி/பெரும்புள்ளிகள் ஏதோ சாதனைக்கு விருது வாங்கப் போவதுபோல கையாட்டுவார்கள்.

சஞ்சய்தத்தை கட்டி பிடிப்பார்கள்.
ஆனா இதுபோல ஏழ்மையில் உள்ளவர்கள் செய்தால் இப்படித்தான் வீரம் காட்டுவார்கள்.இருப்பினும் குற்றம்தான் அதற்காக இப்படியா காடுமிராண்டித்தனமாய்................
அதை விடியோ எடுக்கும் மனத் திண்மையை என்ன சொல்ல.......

பங்காளி... said...

அந்த போலீஸ்காரர வூட்டுக்கு அனுப்பீட்டாங்களாமே...

எல்லாம் நீங்க கோவமா பதிவு போட்டதாலதான்னு சபைல பேசிக்கறாங்களே...உண்மையா...ஹி..ஹி...

மங்கை said...

வாங்க புலி...ரொம்ப நாளா ஆளக் காணோம்?

மங்கை said...

கண்மணி...

இப்ப தான் கேமரா மொபைல் இருக்கேப்பா....இது வெளியே வரலைன்னா எப்படி தெரியும்...ஆனா திரும்ப திரும்ப போட்டு போட்டு காமிச்சதுதான் கஷ்டமா இருந்துச்சு

மங்கை said...

பங்காளி...

கிண்டலா...

நம்மள பத்தி கூட பேசிக்கிறாங்களா... பரவாயில்லையே...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சம்பந்தப்பட்ட காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த பணி நீக்கம் என்ன பெரிதாக செய்துவிடப் போகிறது//

காவலரகளாக இருந்தாலும் அவர்களுக்கு பொதுமக்களுக்கு விதிக்கப்படுகின்ற தண்டனையை விடவும் பல மடங்கு nhடுக்கப்படவேண்டும். கடுமையான சட்ட்கள் நடைமுறைப்படுத்தாதவரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்

காவலர்கள் எனறவுடன் பொதுமக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் பயம் வரக்கூடாது