Monday, March 26, 2007

வியர்ட்(டே) உருவமானவள்.

நடுவுல இருக்கும் புள்ளிய இரண்டு நொடி உத்துபாருங்க.

என்னங்க இது, வித்தியாசமான பழக்கம் ஏதாவது இருந்தா தான அது வியர்டு?.. பார்த்தா நாம எல்லாருமே 'ஒரு(ரே) மாதிரி' இருக்கோம். அப்புறம் எப்படி அது வியர்டு....:-)).

ஹம்ம்ம் சரி.. கவிதா கூப்பிட்டது எனக்கு லேட்டா தான் தெரிய வந்தது. தனி மடல்ல கவிதா சொல்லியும் நாம இவ்வளவு சுறுசுறுப்பு.. இதுலேயே தெரிஞ்சு இருக்குமே, நான் ஒரு மாதிரின்னு...:-))...

நடை-நடக்குறதுன்னா எனக்கும் என் ப்ரெண்ட்ஸ்க்கும் ரொம்ப பிடிக்கும். தேவையில்லாம நாங்க நடந்த நடையை யாரும் நடந்து இருக்க மாட்டாங்க. அதுக்காகவே Youth Hostel Association, NCC, NSS ல சேர்ந்து ட்ரெக்கிங் போவோம். இது போல பல தடவை ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து நடந்து போயிருக்கோம். ஊட்டிக்கு மேல முக்கூர்தி சிகரத்திற்கும் 4 முறை போயிருக்கேன். அது எல்லாம் ஒரு காலம். ஹ்ம்ம்ம்ம்.. நல்லா 37-40 டிகிரி வெய்யில்ல எங்க போறோம் எதுக்கு போறோம்னு தெரியாம நடப்போம், நடப்போம், நடப்போம், நடந்துட்டே இருப்போம்.

கிருக்கல்- புது நோட் புக் பார்த்தா சும்மா என் பேர எழுதி எழுதி பார்த்துப்பேன். எங்காவது ஒரு புது நோட் புக் பார்த்தா என்னை அடக்கறது எனக்கே கஷ்டம். என் பேரு எழுதுவேன், ரெண்டு கண்ணு வரவேன், ஒரு தெண்ண மரமும் வீடும் வரஞ்சாதான் என் கை நடுக்கம் நிற்கும். இது இன்னைக்கு நேத்து பழக்கம் இல்ல..பல காலமா நல்லா உரம் போட்டு இந்த பழக்கத்த வளர்த்துட்டு வரேன்.

நான் அடிச்ச அரை சதம்- இந்த படத்த நான் எத்தன தடவை பார்த்திருப்பேன்னு எனக்கே தெரியாது. இங்க தில்லி வந்த அப்புறம் கணக்கு வைக்க ஆரம்பிச்சேன். இந்த ரெண்டு வருஷத்தில மட்டும் 51 தடவை பார்த்துடேங்க. என்ன படம்னு பார்க்கரீங்களா. தில்லானா மோனாம்பாள் தான். இன்னும் எத்தனை தடவை வேனா பார்ப்பேன். போனவாரம் சன் டீவில போட்டப்ப 51 ஆவது முறையா பார்த்தேன். முக்கியமா முதல் பாடலும், நலந்தானா பாட்டுல, நாட்டியப் பேரொளி பாடும் இந்த வரிகளுக்கு நடிகர் திலகத்தின் அசத்தல்.......நடிப்புன்னு ஒரே வார்த்தைல சொல்றதுக்கு மனசு வரலை...

''கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் -
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்
''

இது மாதிரி காதலையும் உணர்ச்சிகளையும் வெளிக்கொணர்ந்த காட்சி வேற எந்த படத்திலும் வரலைனு நினைக்குறேன்..நாதஸ்வரம் வாசிச்சுட்டெ கண்களில் நீர் தளும்ப..ம்ம்ம்ம்..ஒவ்வொரு முறையும் என்னுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் வரிகள்... யாரும் இல்லாத அமைதியான இடத்துல எனக்கு இந்த படமும், காதலிக்க நேரமில்லை, படமும் இருந்தா போதும்.

சண்டை போடுவது, ஆர்க்யூ பண்றது இது எல்லாம் சுட்டு போட்டாலும் வராதுங்க. ஆனா என்ன மாதிரியே என் கிட்ட பழகறவுங்களும் இருக்கனும் எதிர் பார்க்கும் கெட்ட பழக்கம். மத்தவங்க சண்டை போட்டாலும் நானா போய் பேசீடுவேன். அந்த பக்கம் எப்பவும் அதே மாதிரி இருக்காதில்லையா ?
ஹ்ம்ம்....யாரு என்ன கேட்டாலும் செய்ய மாட்டேனு சொல்ல மனசு வராது. ஒரு சிரிப்பு சிரிச்சா போதும் நான் surrender. எதுக்காக இத்தன பரிவு என்று தெரிஞ்சு இருந்தாலும் முகத்தில அடிக்கிறமாதிரி பேசவோ, முடியாதுன்னு சொல்லவோ தெரியாது. எத்தன பட்டாலும் புத்தி வராது. வரவேண்டாம்னு பார்க்கிறேன். (இது நம்மில் பல பேருக்கு இருக்குறத பார்க்குறேன், ம்ம்ம்..சந்தோஷம்). இது கூட வித்தியாசமான பழக்கம்னு நாமளே நினைக்குற அளவுக்கு ஆயிறுச்சு பார்த்தீங்களா. உண்மையில இதை எழுதின அப்புறம் தான் தோனிச்சு, இது என்ன பெரிய விஷயம், இதை எழுதனுமானு. இப்ப நீங்க தான் சொல்லனும்.

சொந்தங்களுடன் கூட்டுக்குடும்பமாய் இருப்பது.- இது ஆசை. இது எல்லாம் இந்த கால கட்டத்துல சாத்தியமில்லாத ஒன்னு தானுங்களே. அதான் இதுல சேர்துட்டேன். இதுல என்னோட விருப்பம் மட்டும் இருந்து பிரயோஜனம் இல்லை இல்ல. இருந்தாலும் ஒரு காலத்துல நிறைவேறும்னு ஒரு நப்பாசையில இங்க சொல்றேன்.

அவ்வளவு தாங்க....

ஆனா நான் ரொம்ப லேட் போல இருக்கு.....நான் 5 பேருக்கு எங்க போக.. இருந்தாலும் இன்னைக்கு, இந்த பாவம் புண்ணியம் பாக்குற மூட்ல எல்லாம் நான் இல்லை

அதனால நான் கண்டுபிடிச்ச 5 பேரு

1)
பங்காளி- http://pangaali.blogspot.com/ - தப்பிக்க எல்லாம் பாக்காதீக, ஆமா சொல்லிபுட்டேன்.

அடுத்து புதுசா வந்தவங்கள கூப்பிடலாம். வித்தியாசமான ஒரு அறிமுகமா இருக்கட்டும். இதுல ரெண்டு பேர தவிர மத்தவங்களோட பதிவுகளை நான் படிச்சதில்லை. நேத்து முகப்புல இருந்தவுங்க இவங்க எல்லாம்.

2) யாழினி அத்தன் -
http://peelamedu.blogspot.com//
3) சண் ஷிவா - http://aaraamthinai.blogspot.com/
4) காட்டாறு-
http://kaattaaru.blogspot.com/
5) முரளி -
http://adhvaithi.blogspot.com/

20 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நடை எனக்கு எட்டிக்காய்.
ஆர்க்யூ பண்ணறது எனக்கு ரத்தத்தில் ஊறினது.இது ரெண்டுல நாம எதிர் எதிர் துருவம். எனக்கு உங்க நட்பு ரொம்ப பிடிக்குது...அதான் ஆப்போஸிட்
போல்ஸ் அட்ராக்ட்க்ஸ் போல:)

அபி அப்பா said...

மங்கை! நடை- இது தவிர மீதி எல்லாம் என் குணங்களோடு ஒத்து போகுது. அதிலும் தி.மோ போன சனி கிழமை பாத்தேன். குறிப்பாக அந்த பாட்டு! ஆக நீங்களும் வியர்டு:-))

கோவி.கண்ணன் said...

மங்கை,

எல்லாமே நல்ல பழக்கமாகவே இருக்கு,
தில்லான மோகனாம்பாள் பற்றி சொல்வது உண்மைதான். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் !

பங்காளி... said...

இதெல்லாம் ஆவறதில்ல....சொல்லீட்டேன். நாம்பாட்டுக்கு சிவனேன்னு ஆடிக்கொரு பதிவு அம்மாவாசைக்கொரு பதிவுன்னு போட்டுட்டு இருக்கேன்......என்ன புடிச்சி உண்மையச் சொல்லுடான்னு வம்பு பண்றீங்க......

ஞானவெட்டியான் said...

குறையென எண்னினால் குறைதான்; அதுவே நிறையாகும்.

✪சிந்தாநதி said...

//ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து நடந்து//

???
கார்லயே ஒண்ணரை மணிநேரம் ஆகுமே?

மங்கை said...

லட்சுமி நன்றி...

தமிழ்மணத்திலேயும், தில்லியிலேயும் எனக்கு கிடைத்த முதல் தோழி நீங்க தான்...நன்றி...

மங்கை said...

அபி அப்பா, கோவி நன்றி...

பங்காளி..

நீங்க தான் சிவேன்னு இருகீங்களா.. அப்ப நாங்க எல்லாம்... அந்த கதை எல்லாம் வேணாம்.....

மங்கை said...

//ஞானவெட்டியான் said...
குறையென எண்னினால் குறைதான்; அதுவே நிறையாகும். ///

நன்றி ஐயா...


✪சிந்தாநதி said...
//கார்லயே ஒண்ணரை மணிநேரம் ஆகுமே?//

ஆமா சிந்தாநதி..காலையில ஆரம்பிச்சோம்..இராத்திரி மெதுவா போய் சேர்ந்தோம்... ஒரு 44 பேர்.. ஒரு முறை 52 பேர், மற்றொரு முறை 28 பேர்... அருமையா இருந்துச்சு...ஹ்ம்ம்

சிவபாலன் said...

மங்கை

நடக்கிறது நம்ம ஊர் ஆளுங்களுக்கு ரொம்ப பிடித்தமான விசயம் போல.. Ha Ha Ha..

நல்லாயிருக்குங்க.. உங்க வித்தியாசமானவைகள்..

யாழினி அத்தன் said...

நடை

இது போல பல தடவை ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து நடந்து போயிருக்கோம். ஊட்டிக்கு மேல முக்கூர்தி சிகரத்திற்கும் 4 முறை போயிருக்கேன்.

காலேஜ்ல படிக்கும்போது நானும் நடந்து போயிருக்கேன். ஆனா இந்த சிகரத்தை பத்தி கேள்விப் பட்டதே இல்ல. கொஞ்சம்
wierd-ஆகத்தான் இருக்கு

கிருக்கல்

ஒரு தெண்ண மரமும் வீடும் வரஞ்சாதான் என் கை நடுக்கம் நிற்கும்.

மத்தவங்களுக்காக ஒரு unpaid artist-ஆக நீங்க இருந்தது ஒரு விதமான சேவை குண்ம்னுகூட சொல்லலாம்

நான் அடிச்ச அரை சதம்

போனவாரம் சன் டீவில போட்டப்ப 51 ஆவது முறையா பார்த்தேன்.

சீக்கிரம் செஞ்சுரி போட என் வாழ்த்துக்கள்..ஹி..ஹி...

சண்டை போடுவது, ஆர்க்யூ பண்றது

எதுக்காக இத்தன பரிவு என்று தெரிஞ்சு இருந்தாலும் முகத்தில அடிக்கிறமாதிரி பேசவோ, முடியாதுன்னு சொல்லவோ தெரியாது.

பேசறது வேஸ்ட்-ன்னு நினைச்சா, கைல கூட பதில் சொல்லலாம். ஆனா திருப்பி வாங்கிக்கிற திறன் வேணும்.

எத்தன பட்டாலும் புத்தி வராது.

இந்த wierd குணம் ஒரு National Character. அதனால wierdன்னு சொல்ல முடியாது.

இருந்தாலும் ஒரு காலத்துல நிறைவேறும்னு ஒரு நப்பாசையில இங்க சொல்றேன்.

இந்த நப்பாசை எனக்கும் ரொம்ப இருக்கு. திரும்பி போய் பீளமேட்ல செட்டில் ஆகனும்னு நினைச்சு பார்த்தா கொஞ்சம் சந்தோசமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்கு. போன வருசம் போனப்போ எல்லாம் ஆன வில, குதிர வில ஆயிட்ட மாதிரி தெரிஞ்சது. நிறைவேறுமான்னு காலம்தான் பதில் சொல்லனும். அதனால, இது நிச்சயமா ஒரு wierd-ஆன ஆசைதான்.

இலவசக்கொத்தனார் said...

//வியர்ட்(டே) உருவமானவள்//

அப்படின்னா உங்க பிறந்த நாளை வியர்ட் 'டே' வா கொண்டாட வேண்டியதுதான்!!

தென்றல் said...

/தில்லானா மோனாம்பாள் தான். இன்னும் எத்தனை தடவை வேனா பார்ப்பேன். போனவாரம் சன் டீவில போட்டப்ப 51 ஆவது முறையா பார்த்தேன்..../
51ஆ? நான் 5 தடவை பார்த்துட்டு
எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் கிறுக்குனேன்.
/
நாட்டியப் பேரொளி பாடும் இந்த வரிகளுக்கு நடிகர் திலகத்தின் அசத்தல்.......நடிப்புன்னு ஒரே வார்த்தைல சொல்றதுக்கு மனசு வரலை...

''கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் -
இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார் ''
/
அருமைங்க! நான் ரசித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. (இப்படி படம் முழுவதும் சொல்லிகிட்டே போடலாம்...)

தென்றல் said...

/சொந்தங்களுடன் கூட்டுக்குடும்பமாய் இருப்பது.- இது ஆசை/

இதுக்கெல்லாம் 'மேல இருந்து' வரம் வாங்கிட்டு வரணும்..
நான் வாங்கிட்டு வரல...;((

மங்கை said...

சிவபாலன் உங்களுக்கும் நடை னா ரொம்ப பிடிக்குமா?

ரமேஷ், இ.கொ, தென்றல் நன்றி

இ கொ..உங்களுக்கு என்ன இந்த பிறந்த நாள்னா ரொம்ப பிடிக்குமா.:-))

சினேகிதி said...

haha ..chumma oru paper a parthale nan 2 kannu keeruvan...athuvum exam ku padikira time la nan kanaku seithu parkira papers a vida keeri keeri eriyira papers than athikam:-)))

appa nenega nalla slim a?:-))) niraya nadakaathneg kaal paavam.

மங்கை said...

//athuvum exam ku padikira time la nan kanaku seithu parkira papers a vida keeri keeri eriyira papers than athikam:-)))//

:-))))

அடியேனும் அப்படியே...சினேகிதி இங்க நிறைய கிருக்குக இருக்கோம் போல..

நாகை சிவா said...

நீங்க சொன்ன அந்த தில்லானா பாட்டு சான்ஸ்சே இல்லங்க... என்ன வரி.... அடிக்கடி நான் கேட்கும் பாட்டு....

மங்கை said...

வாங்க சிவா...

அந்த பாட்டு

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு எவரும் அறியாமல் சொல் இன்று

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

சிவா...எந்த வரிய விடறது, எந்த வரிய பாராட்டறதுன்னு தெரியாது..
ம்ம்ம்ம்..வரிகளை படிச்சாலே மனசு லேசாகுது...

கருத்துக்கு நன்றி சிவா..

நாகை சிவா said...

விரிவா பாட்டயே போட்டு வீட்டீர்கள்....

நீங்க சொன்ன வரிகள், "சிவா"ஜி யின் புருவம், பத்மினியின் முக பாவனை, இசை என்னங்க சொல்லுறது. இந்த காலத்து பிள்ளையான என்னயே அந்த பாட்டு ஒவ்வொரு முறை கேட்கும் போதும் அசர வைக்குது....