Monday, November 27, 2006

கர்வா ச்ச்வுத் அன்னைக்கு நம்ம சவுத்:-)

கர்வா ச்சவுத் பற்றி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். இந்த கர்வா ச்சவுத் அன்னைக்கு நம்ம சவுத் பெண்கள் (என்னையும் சேர்த்து தான்) பண்ண ஒரு கூத்த சொல்றேன்.

கர்வா ச்சவுத் பத்தி எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள். கணவன் நல்லா இருக்கனும்னு கார்திக் மாசத்தின் நாளாவது நாள் பெண்கள் விரதம் அனுசரிச்சு, பல வித பலகாரங்கள் பண்ணி, தங்களை நல்லா அலங்கரிச்சு, பூஜை எல்லாம் செய்து கொண்டாடற நாள். தமிழ்நாட்டில கடைபிடிக்கும் வரலக்ஷ்மி பூஜை, காரடையான் நோன்பு மாதிரி தான். கர்வா னா சின்ன மண் பானை. ச்ச்வுத் னா 4 (chaar-4). சின்ன அலங்கரிங்கப்பட்ட மண் சட்டியில பெண்கள் உபயோகப் படுத்தும் பொட்டு, வளையல், சிலர் ரிப்பன்,, இப்ப எல்லாம் லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ், ஐ லைனர் எல்லாம் போட்டு மற்ற பெண்களுக்கு கொடுப்பாங்க. மதியம், வயசில பெரியவங்க யாராவது கர்வா ச்சவுத் கதைய சொல்ல, அதை மத்தவங்க சுத்தி உட்கார்ந்து கேட்கிறது வழக்கம்.

நம்ம வீட்டுக்கு கீழ வீட்டுல ஒரு பஞ்சாபி குடும்பம் இருக்கு. அங்க ஒரு பாட்டி,நம்ம மேல ஒரே லவ்வோ லவ்வு. அன்பு காட்றதிலேயும், அதட்றதுலேயும், ஆதரவு காட்டுறதலேயும், பக்கத்தில மாமியார் இல்லாத குறைய தீர்துட்டு இருக்காங்க.. :-))

போன கர்வா ச்சவுத்துக்கே என்னையும் விரதம் இருக்க சொல்லி வற்புறுத்தல். ஆனா நான் இருக்கலை. பூஜையில மட்டும் கலந்திட்டேன். இந்த முறை விடமாட்டேன்னு ஒரே நச்சு பண்ணி விரதம் இருக்க வச்சாங்க.. பக்கத்தில காரைக்குடியை சேர்ந்த பெண்ணையும், பாண்டிச்சேரியை சேர்ந்த பெண்ணையும் சேர்த்து விரதம் அனுசரிக்க வச்சுட்டாங்க. இதுல காரைக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 3 மாசம் தான் ஆகியிருக்கு. அதனால அந்த பெண் ரொம்ப sincereஆ விரதம் இருந்து பாட்டி கிட்ட என்ன எல்லாம் பண்ணனும்னு கேட்டு ஒரே களேபரம்.

பூஜை எல்லாம் முடிஞ்சு, பரிசு எல்லாம் பரிமாறினதுக்கு அப்புறம் தான் climax. பூஜைக்கு அப்புறம் விரதத்த முடிக்க நிலாவ சல்லடை வழியா பார்த்து, கணவன் கால்ல விழுந்து கும்பிடனும். இது எல்லாம் நமக்கு ஆகுற காரியமா... அங்க இருந்த வடஇந்திய பெண்கள் லைன்னா கால்ல விழுந்து கும்பிட்டாச்சு.. நாங்க மட்டும் நின்னுட்டு இருந்தோம்... புதுப்பெண்.. 'இது எல்லாம் நாங்க பண்ணமாட்டோம். எங்களுக்கு பழக்கமில்லைனு சொல்லீட்டு ஒடீருச்சு... அப்புறம் நம்ம ஆளு, பாட்டி கிட்ட, "பாட்டி இன்னைக்கு ஒரு நாளைக்கு அவங்கள எங்க கால்ல விழ வச்சுறுவீங்க.... அதுக்கப்புறம்?...எதுக்கு ரிஸ்க்..., இது எல்லாம் வேண்டாம்னு ஜோக் அடிச்சு..எங்களை காப்பாத்தீட்டார்.பாட்டி அப்ப என்னை ஒரு லுக்கு விட்டது பாருங்க..மறக்க முடியாது...அந்தப்பக்கம் திரும்பிட்டேன்..

அதுக்கப்புறம் பாட்டு பாடற டைம்...அப்ப நம்ம புது மாப்பிள்ளை என்கிட்ட வந்து, "என்னங்க! நீங்களாவது அவள அந்த பாட்ட பாட வேனாம்னு சொல்லாம பேசாம உக்கார்ந்துட்டு இருக்கீங்க, எல்லாரும் plan பண்ணிதான் பண்றீங்களா, மானம் போகப் போகுது விளையாடாதீங்கன்னு சொல்லீட்டு போயிட்டார்..மேலும் அவர் அவகிட்டே பாடவேண்டாம்னு சொல்லி பார்த்தார். அவ காதில போட்டுக்கலை...நான் கண்டிப்பா பாடியே ஆவேன்னு ஒரே பிடிவாதம்.... அப்படி என்ன பாட்டு பாட போறான்னு கேக்க ஆவலா இருந்தோம். அப்புறம் அது பாடுச்சு பாருங்க பாட்டு.. 'வசீகரா' ன்னு ஆரம்பிச்சு நிறுத்தவே இல்லை... தமிழ்ல தான் பாடுச்சு...இருந்தாலும் இந்த பாட்டு இந்தியிலேயும் இருக்கிறதுனால பாட்டிய தவிர மத்தவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருச்சு...எல்லாருக்கு ஒரே சிரிப்பு..நல்ல வேளை பாட்டிக்கு சினிமா பாட்ட பத்தி ஒன்னும் தெரியாததுனால தப்பிச்சோம்...

புதுமாப்பிள்ளைக்கு வெக்கம், தர்மசங்கடம் எல்லாம்... அடுத்த நாள் அந்த பெண், "இது அவங்களுக்கான பூஜை தானே, அதனால தான் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச பாட்ட பாடினேன்" சொல்லி ஒரே சந்தோஷ மழை....

ஹ்ம்ம்ம்..எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி.. மறக்க முடியாத சம்பவம்...

இதுல மற்றொரு பெண் பாடின பாட்ட நீங்களும் கேட்கனும்...எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. 'காந்தான்' படத்தில நூத்தன் பாடற பாட்டு... (நம்ம பாழும் பழமும் படம் தான், தங்கத்தில ஒரு குறையிருந்தாலும் பாட்டு..) இந்தியில லதா மங்கேஷ்கரின் காந்தக்குரல் தான் இந்த பாட்டுக்கு முத்தாரம்.

நீங்களும் கீழ இருக்க சுட்டிய க்ளிக்கி கேட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு...

9 comments:

பங்காளி... said...

மங்கை...நீங்க பாடலையா?...பாடிருக்கலாம்ல....

மங்கை said...

நமக்கு தொண்டையில கிச் கிச்..

மனசுக்குள்ளேயே பாடிக்குவோம்..:-))

Sivabalan said...

படிக்க சுவாரசியமான பதிவுங்க..

பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

மங்கை said...

வருகைக்கு நன்றி சிவா

கைப்புள்ள said...

அட! இந்த பஞ்சாபி பாட்டிங்களுக்கெல்லாம் வேலையே இருக்காது போல. நான் டில்லியில இருக்கும் போது புதுசா கல்யாணம் ஆன நண்பன் ஒருவனைப் பார்க்க குர்காவுன் போனேன். அவங்க கீழ் வீட்டுப் பாட்டியும் அவனோட புது மனைவிக்கு ஏகப் பட்ட அட்வைஸாம். கர்வா சவுத் அன்னிக்கு சரோஜினி நகர் போனீங்கனா கையில அழகழகான மெஹந்தி பத்து ரூபாய்க்குப் போட்டு விடுவாங்க. நல்லா எழுதிருக்கீங்க. ஜாலி பதிவு
:)

Thekkikattan|தெகா said...

ஹா...ஹா...ஹா... நல்ல கூத்துப் பட்டறையா இருந்திருக்கும் போல. தலைமுறை இடைவெளிய பாட்டிகிட்ட எல்லோரும் எப்படியோ காட்டிகிட்டீங்க.

இருந்தாலும், அந்த ""வசீகர உன் நெஞ்சினிலே""" தூள் போங்க... அசத்தலா இருந்திருக்கணும்... :-))

மங்கை said...

கைப்ஸ்...

பஞ்சாபி பாட்டிக விவரம் தான்.. இந்த
பாட்டி எனக்கு நல்ல freind.. அதான் சொன்னேன் பாருங்க மாமியார் பக்கத்தில இல்லாத குறைய தீர்துட்டு இருக்காங்கன்னு..:-)).. இப்படியும் ஒரு ஆள் வேனும் இல்ல..

கைப்ஸ் பல விஷயங்கள தெரிஞ்சு வச்சிருக்கீங்க..ஹ்ம்ம்ம்..not bad.. கர்வா ச்சவுத்க்கு நிறைய இடத்திலே இந்த மருதானி பத்து ரூபாய்க்கு போடறாங்க கைப்ஸ்...

வருகைக்கு நன்றி

மங்கை said...

aama thekaa...annaikku romba jollyaa irundhuchu...
"Pudhumappilaiga" irudhaalum rommmmmba vekka paduraanga.. :-))

சத்தியா said...

ம்... நல்லதோர் சந்தோசமான நிகழ்வை சுவையாகத் தந்திருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள் மங்கை.