Monday, November 06, 2006

தவிக்கும் தலித்துகள்


ஊர்புறங்களில் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளின் தாக்கமோ,வலியோ நம்மைப்போன்ற பெரும்பாலான நகரவாசிகளுக்கு தெரிவதில்லை.ஒருசில தலித்துகளின் வெற்றியையும்,முன்னேற்றங்களையும் மட்டுமே அறிந்திருக்கும் நாம் பெரும்பாலானவர்களின் நிஜத்தை எளிதாக மறந்துவிடுகிறோம் என்பதுதான் உண்மை.அரசு மற்றும் உடகங்களினால் இவர்களது துயரங்கள் வெளிஉலகிற்கு தெரியாதவாறு மறைக்கப்பட்டு வருவதுதான் கொடுமமயின் உச்சம்.பல இடங்களில் இன்றைக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையே தொடர்வதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?.

பீஹார் 'போஜ்பூர்' மாவட்டத்தில், தலித் வகுப்பைச் சேர்ந்த 60 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரான சுகர் ராம் என்கிற பஞ்சாயத்து தலைவர், நாற்காலியில்' உட்கார்ந்து ஊர் கூட்டத்தை நடத்தியதற்காகவே தாக்கப்பட்டுள்ளார்.வறுமைக் கோட்டிற்கு கீழிருக்கும் ஊர்மக்களின் பட்டியலை சரிபார்ப்பதற்காக நடந்த கூட்டத்தில், உயர் சாதியை சேர்ந்த சிலர், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த்த சுகர் ராமை வாய்க்கு வந்த படி "சாலா! துசத் ஹோகர் குர்சி பர் பைடேகா?... ( என்ன தைரியமிருந்தால் தலித் வகுப்பை சேர்ந்த நீ நாற்காலியில் உட்காருவாய்?.. ) பேசி, அடித்தும் இருக்கிறார்கள்.இது பற்றி போலீசில் புகார் கொடுத்தபோது புகாரை மட்டும் வாங்கிக்கொண்டு, FIR பதிவு செய்ய மறுத்து விட்டனர் அங்கு இருந்த அதிகாரிகள்.

மொத்தமுள்ள 2100 வோட்டில் 475 வோட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ள போதும், பஞ்சாய்த்து போர்டில் உயர்சாதியினரே அதிகம் இருப்பதால் தனக்கு அங்கு பாதுகாப்பில்லை என்கிறார் சுகர்ராம். ஆனால் இந்த தாக்குதலை நியாயப்படுத்த மேல் சாதியினர், 'வறுமை கோட்டின் கீழ் இருக்கும் மக்களின் பட்டியலில் உயர் சாதியினரை சேர்க்க மறுத்ததினால்தான் அடித்தோம்' என்று கதை கட்டுகின்றனர்.

நாடெங்கும் நாள்தோறும் இதுமாதிரியான எத்தனையோ அடக்குமுறைகளும், அவமானங்களும் நடந்துவருவது வேதனையானது.இதைத் தடுக்க அரசோ,அல்லது தலித் மக்களின் காவலர்கள் எனக்கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகளோ உருப்படியாக எந்த நடவடிக்கைகளிலும் இறங்காமல் வெறும் வார்த்தைஜாலங்களினால் ஓட்டு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.காலம்காலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் இச்சமூகத்திற்கு என்று தான் விடிவு காலம் வருமோ தெரியவில்லை.

சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இத்தகைய இழிசெயல்கள் தொடர்வது ஒவ்வொரு இந்தியனுக்குமே அவமானமில்லையா?.தாயகத்திற்கு ஒன்று என்றால் எவ்வித பாகுபாடின்றி தோளோடு தோள் நிற்கும் இந்தியர்கள் தன் சக மனிதன் மீது அக்கறையின்றி இருப்பது வேதனையானது.ஏற்றத்தாழ்வுகளை புறந்தள்ளும் சமுதாயத்தை உருவாக்க அம்பேத்கார்களும், பெரியார்களும் வந்துதான் நமக்கு உணர்த்த வேண்டுமென்பதில்லை.நீங்களும் நானும் சேர்ந்தாலே செய்யமுடியும்.

செய்யவேண்டும்.

10 comments:

பங்காளி... said...

ம்ம்ம்ம்....ஒரே ஃபீலிங்ஸாய் போச்சு.

அப்புறம் முக்கியமா வாரத்துக்கு ஒரு பதிவாவது போடுங்க....மக்கள் மறந்துடுவாங்கல்ல...ஹி..ஹி..அதுக்குத்தான் சொன்னேன்.

ரவி said...

ஆமாம் அவர் சொல்வது சரி..வாரம் ஒரு பதிவையாவது இறக்கிடுங்க..

பதிவை பற்றி, இந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகள் பற்றி பலரும் பலவிதங்களில் சொல்லிட்டாங்க..

இது காலங்காலமாக, உள்ளத்தில் ஊறிய விஷயம்..நாம் உயர்ந்த சாதி, அவன் தாழ்ந்த சாதி, அதனால் நாம் உயர்ந்தவர்கள் என்று விஷவிதைகள் தூவப்பட்டன. அதன் விளைவாகத்தான், அந்த விஷவிதை ஆலமரமாக தழைத்து வளர்ந்துள்ள காரணமாகத்தான், இன்னும் பிரிவினைவா(ந்)திகள் அதனை பேசி திரிகின்றனர்..

மனிதனுக்கு மனிதன் நிறத்திலோ, குணத்திலோ, உயரத்திலோ தான் வேறுபட்டவன், சாதியால் அல்ல என்று எத்தனை முறை சொன்னாலும் ஏறாது, சூட்டாங்கோல் வைத்து சுட்டு பொசுக்கினால்தான் ஏறும்...

வாட்டர்வேர்ல்டு மாதிரி கடும் மழை வெள்ளம் அல்லது உலகையே புரட்டி போடும் பூகம்பம் இந்த மாதிரி ஏதாவது வந்தால்தான் சாதியை மறப்பாங்க..

மங்கை said...

நன்றி பங்காளி..

வாரத்துக்கு ஒரு பதிவா?.. போட்டா போச்சு..படிக்கிறது 'மத்ததெல்லாம்'
உங்க தலை எழுத்து...

no problem for me :-))))

மங்கை

மங்கை said...

உங்க கருத்துக்கு நன்றி ரவி..

இருந்தாலும் உங்க மாதிரி at a time 4 பாகம் எல்லாம் போட முடியாது

Anonymous said...

Enga ammini aala kanaom??...

uripadiyaana vishayangala solreenga, aana thodarnthu pathivu poda mateengareenga...

namma jananga kitta peasi ellaam pirayojanam illai.. thiruppi adichaa thaan thirundhuvaanga..

BadNewsIndia said...

ஹ்ம், ஒடுக்குபவர்கள் இருப்பது கொடுமைதான்.
பீஹார் பிரச்சனை அவங்களுக்கு.

நம்ப ஊர்ல இந்த மாதிரி ஒடுக்கற விஷயம் எங்க நடக்குதுன்னு அலசி கொஞ்சம் சொல்லுங்க.

போய் முட்டிக்கு முட்டி தட்டலாம்.

பேசினா மட்டும் போதாது, நாம் எல்லாம் சேர்ந்து ஒருத்தனையாவது திருத்தணும்.

மங்கை said...

BNI

நன்றி... நம்ம ஊர்ல எல்லாம் இந்த அளவுக்கு மோசம் இல்லைனு நினைக்குறேன்..

உங்க முயற்சி, வேகம், எண்ணங்கள் ஹ்ம்ம்ம்... பாராட்டுக்கிறியது... மனசுக்கு நிறைவா இருக்கு..

வாழ்த்துக்கள்

Anonymous said...

Well said Mangai...

உணர்ச்சி பூர்வமா சொல்லி இருக்கீங்க

ராமன்..

Anonymous said...

ஒடுக்கபடும் மக்கள் நிலமை அவ்வாறேதான் இருக்கிறது... அரசியல்வாதிகள் மூலம் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பது நடக்காத ஒன்று.. திருடனா பார்த்து திருந்தனும் அது நடக்கலைன்னா திருந்த வைக்கனும்

Anonymous said...

நம்மூரில் ஏன் நடக்களை
இதுபோல் நிறைய அநியாயம் நடக்குது,
இது என்னோட சின்ன அனுபவம்...

நான் எனது அக்காவின் ஊருக்கு சென்றிருந்தேன் அது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள ஆறாம்பன்னை என்ற கிராமம் , அங்கு நான் என் மச்சானோடு சாலையில் நடந்து வந்து கொன்டுருந்தேன் அப்பொழுது ஒரு கள்ளர் இனத்தை சேர்ந்த ஒருவன் வந்தான் என் மச்சானை பார்த்து பெயர் சொல்லி அழைத்து ரொம்ப மரியாதை குறைவாக பேசினான் இதுக்கும் அவனுக்கு என்னைவிட வயது குறைவு. நான் கேட்டேன் மச்சானிடம் என்ன சின்ன பயன் இப்படி பேசறான் என்று, அதுக்கு அவர் சொன்னார் "அவன் தேவமார் பய்யன் அப்படித்தான் பேசுவான் என்று, இவர்கள் எப்பவுமே இப்படித்தான் இங்கு நடந்து கொள்வார்கள் ஏன்னென்றால் நாம் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் ஆச்சே(நான் பள்ளர் இனத்தைச்சார்ந்தவன்) என்று" எனக்கு அப்பவே உள்ளம் கொதித்தது என்ன கொடுமை இதுவென நினைத்துக்கொன்டேன்,
அவர்கள் சொல்வதைத்தான் அங்கு கேட்கவேன்டுமாம். மீறி நடந்தால் அடிதான் விழும்.
அப்பொழுதுதான் நினைத்தேன் இது போன்ற கொடுமைகள் இன்னும் இந்தியாவில் நடந்து கொன்டுருக்கிறது என்று. ஆனால் இது போன்ற கொடுமைகளைக்கன்டு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். நம் இளைய சமுதாயமும் இதைப்பற்றி அக்கறையே இல்லாமல் இருக்கிறது.
இந்த மானங்கெட்ட மனிதர்கள் என்று திருந்துவார்களோ!!!!!!!!!!!!!!!!!

http://www.keetru.com/dalithmurasu/nov06/m_ponnusami.html