Friday, October 15, 2010

நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவ்ள் இல்லை!

கடந்த பத்து நாட்களில் இரண்டாவது முறையாக எனது வலைப் பதிவு ஹேக் செய்யப் பட்டிருக்கிறது. இரண்டு முறையும் பதிவினை மீட்டெடுத்து விட்டேன். அந்த தொடர் முயற்சியாளருக்கு எனது வாழ்த்துக்களும், அனுதாபங்களும்....

வாழ்த்துக்கள், வெற்றிகரமாய் எனது வலைப் பதிவுக்குள் நுழைந்து என் பெயரில் விடை பெறுவதாக பதிவு போட்டதற்கு, அனுதாபங்கள் அவரின் பிறழ்ந்த மனநிலையை நினைத்து....வாழ்க்கை என்பது இந்த பதிவோடு முடிவதில்லை நண்பரே, இதைத் தாண்டியது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

ஒரு வலைப் பதிவினை முடக்குவதால் என்னை முடக்கிவிட முடியும் என நினைப்பதில் அபத்தமானது.எனக்கு இதை விட பல முக்கியமான வேலைகள் இருக்கிறது.எனவே நீங்கள் தொடர்ந்து முயற்சியுங்கள்....உங்களால் இந்த வ்லைப் பதிவினை முடக்கிட முடிந்தால் இன்னொரு வலைப் பதிவு தொடக்க எனக்கு நேரமாகாது, அதையும் முடக்குங்கள்....நான் போய்க் கொண்டே இருப்பேன், நீங்கள் என் பின்னால் நாய்க் குட்டி மாதிரி தொடர்ந்து ஓடிவரலாம். அதுல் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை....

ஏனெனில் நான் இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் அஞ்சுகிறவள் இல்லை.

Monday, October 11, 2010

kasme vade pyar wafa @ கனவு காணும் வாழ்க்கை யாவும்

மனோஜ் குமார் இயக்கத்தில் 1967 ல் வெளியாகிய இந்தப் படம் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட். மேலும் பல பல விருதுகளை பெற்றது இந்த படம். 

அப்பா சொல்லுவார், அந்த கால கட்டதில் பிறந்த குழந்தைகளுக்கு பிரான் என்று பெயர் கூட வைக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு கொடுமையான வில்லனாக கொடிகட்டி பறந்தவர் பிரான்.  முதல் முதலாக வில்லன் கதாபாத்திரத்தை விட்டு இந்த படத்தில்தான் அவர் ஒரு பாஸிடிவ் ரோல் செய்திருக்கிறார்.

பிரானின் அசாத்திய நடிப்புத் திறமை இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது, கமாரின் வரிகள், மன்னா தே இன் குரல், கல்யான்ஜி ஆனந்த ஜீ யின் இசை.. ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு நம் மனதை அள்ளிச் செல்லும். 

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது கிடைத்த்து....



---------------------------------------------------------------------------------------------------
இந்தப் பாடல் அச்சு அசலாய் தமிழ் பாடல் ஒன்றை நினைவுக்கு கொண்டு வருகிறதல்லவா....இவை இரண்டும் வேறு வேறு கால கட்டத்தில் எடுக்கப் பட்ட படங்கள்....கல்யாண்ஜியின் அனுமதியோடு இளையாராஜா இந்த மெட்டினை பயன்படுத்தியதாக கேள்வி..... 


Sunday, October 03, 2010

ரசித்ததோர் தருணம்


உன் கனிவில் அந்த குழைவில்
காட்டும் அன்பில் அரவணைப்பில்
கவனமாய் ஊட்டிய அன்னத்தில்
ரசித்துச் செய்து விட்ட அலங்காரத்தில்
ஆசையாய் அழுந்தத் தந்த முத்தத்தில்
உயிர்த்தெழுகிறது அந்த பொம்மை

ஒரு நிகழ்வு ஏற்படுத்தும் உணர்வை அதன் தன்மை மாறாமல் கவிதை வடிவமாகக் கொடுப்பதற்கு எல்லோராலும் முடியாது. கடலூர் பள்ளியின் மேற்பார்வையின் போது எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டதென ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கவித்துமான படைப்புகளை தருபவர்கள் அதையே அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

வகுப்பறையில் ஒரு குழந்தை, பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த  கணத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்வை, கவிதையாய் நடந்த அந்த நிகழ்வை எழுத்தாக்கியிருக்கிறேன். அவ்வளவே!