Wednesday, November 17, 2010

காற்று வெளியிடைக் கண்ணம்மா

இதை விட ரொமாண்டிக்கான ஒரு பாடலை கேட்டதில்லை...

கண்ணம்மா கண்ணம்மா என்று உருகி உருகி காதலியை வர்ணித்து, இளமைத் துடிப்பு நிறைந்த பாரதி, காதலன் காதலியையும், காதலையும் நம் கண் முன்னே வைக்கிறார்.



காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன்

வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா
ம்ம்ம்
கண்ணம்மா
ம்ம்ம்

கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த்
தீயினிலே வளர் சோதியே – என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(காற்று)

படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்

12 comments:

Compassion Unlimitted said...

Kadanda kaalatthhu paattirku nandri, varigal indrum /Endrum porundhume

Ennudaya post pakkam varugai thaarungal

nandri

TC
CU

Thamiz Priyan said...

http://www.youtube.com/watch?v=in_ss5qYtzY

கோபிநாத் said...

கிளம்பு காத்து வரட்டுமுன்னு சொல்ற மாதிரியே இருக்கு தலைப்பு ;)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ சூப்பர் பாட்டு.. கண்ணம்மா .ம்ம்.. கண்ணம்மா.. ஆகா.. :)

chandru2110 said...

ஜெமினியோட நடிப்பும் ரொம்ப நல்ல இருக்கும் , இந்த பாடலில், எப்போதும்.

தோழி said...

இன்னைக்கு தான் முதல் தடவை கேட்கிறேன்.. நல்ல இசை.. நன்றாக இருக்கிறது.. ரசித்தேன்..

சென்ஷி said...

அருமையான பாடல் அக்கா.. பகிர்விற்கு நன்றிகள்..

டுபாக்கூர் பதிவர் said...

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்....நிலவூறித் ததும்பும் விழிகள்...

எத்தனை காதலான வர்ணிப்புகள்...பாரதியார் த க்ரேட் :)

ADHI VENKAT said...

எத்தனை இனிமையான அர்த்தம் பொதிந்த பாடல். நன்றி.

காட்டாறு said...

அட! முன் தினம் தான் இந்த பாடலை பாடிக் கேட்டேன். இன்று பதிவு வந்து விட்டது. உருகி உருகி கேட்கக் கூடிய பாட்டு. எப்போ கேட்டாலும் மனதில் மலரும் எண்ணங்கள்... அப்பப்பா... கணம் தோறும் மகிழ்ச்சி தான்.

மங்கை said...

Pinnootamitta Nanbrakaluku nandri

கலகலப்ரியா said...

:x.. நன்றி மங்கை...