Saturday, August 07, 2010

கண்ணாடிப் பெண்...


கனவு நினைவு நிம்மதி மகிழ்ச்சி
தேவைகள் தடைகள் எதிர்பார்ப்பு ஏமாற்றம்
பயம் பதட்டம் கவலை வலி
இன்னும் எத்தனையோ வரட்டும்
பகிர்ந்து கொள்ளவும் பாதியாக்கவும்
மௌனம் நிறைத்த அவளின் இதமான அழுத்தம்
ரயில் பயணத்தில் நொடி நேரம் தோன்றி
மறையும் காட்சிகளாய் கடந்திட வைத்த
அவளின் பார்வை
இத்தனைக்கும் கண்ணாடியில் மட்டுமே அவளை...


17 comments:

தோழி said...

எவ்வளவு பெரிய விஷயம், சாதாரணமா சொல்லி விட்டீர்கள்.. தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை...

Thekkikattan|தெகா said...

மேலே தோழி சொன்ன மாதிரி முடிச்சு நல்லாவே போட்டு முடிச்சிக்கீங்க... தன்னுள்ளே இருந்து மட்டும்தான் தனக்குத் தேவையான தன்’நம்பிக்கை tab in எப்போதுமே பண்ணிக்க முடியும்... கவிதையும் எழுத வந்திருச்சு :)

மதுரை சரவணன் said...

//இத்தனைக்கும் கண்ணாடியில் மட்டுமே அவளை..//
கவிதை அருமை. வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

அருமை அக்கா ;)

அபி அப்பா said...

மாற்று திறனாளியின்

மறு பெயர் என் கண்ணாடி!

சொல்லியழுது தொலையேன்

சொல்லாமல் கொல்கிறாய்

என கேட்க தெரியாத பாவமன்னிப்பு

தரும் ஊமைப்பாதிரி இவன்.

Anonymous said...

நல்லா இருக்குங்க மங்கை

Anonymous said...

மதிப்பிற்குரிய மங்கை அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்களை எங்கள் ‘அம்ருதா’ பத்திரிகையில் எழுத அழைக்க விரும்புகிறோம். தங்களது மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் அனுப்ப முடியுமா? தொடர்பு கொள்கிறோம். எங்கள் மின்னஞ்சல் முகவரி: amruthamagazine@gmail.com

அன்புடன்
அம்ருதா ஆசிரியர் குழு

சென்ஷி said...

:))

நல்லாருக்குக்கா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதை அருமை மங்கை
தெகாவின் விளக்கமும் அருமை..
வாழ்த்துக்கள்.. :)

harveena said...

ohh darlinggg,, wowww

ரயில் பயணத்தில் நொடி நேரம் தோன்றி
மறையும் காட்சிகளாய் கடந்திட வைத்த
அவளின் பார்வை,,

Phenomenon of life, come on,, wt a blend,, its just what the doctor ordered,, i can able to see the bounce back overtly,, superb madam,,,

ena madam,, just like that u pointed big things easily, as dharshini said ad labeled as kavidha madiri,, very nice madam really :-)

ரவி said...

பத்திரிக்கையே ஒத்துக்குச்சு, நீங்க சத்தியமா கவிதாயினே !!!

கவிதைக்கு நல்ல தீம் !!! நல்ல பஞ்ச் !!

டுபாக்கூர் பதிவர் said...

நிறைய யோசிக்க வைக்கிற கவிதை...

நல்லாருக்கு!

கோமதி அரசு said...

கவிதை நல்லா இருக்கு மங்கை.

தன்னம்பிக்கை எல்லோருக்கும் மிகமிக தேவை. அதை ஊட்டும் கவிதைக்கு நன்றி.

மங்கை said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி

Prabhas said...

மங்கை...

இது வரை கவிதை என்ற ஒன்றை எழுதவில்லை என்பதை உங்கள் பழைய பதிவுகளை பார்த்து தெரிந்து கொண்டேன்.. அடி மனதில் தோன்றிய உணர்வில் எழுந்த வார்த்தைகளாகவே சென்ற கவிதையும் இதுவும் என்று எனக்கு தோன்றுகிறது.. கவிஞர்கள் சொல்லும் அந்த 'கவித்துவம்' இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் ஏதோ ஒரு எதார்த்தம்...உண்மை இருக்கிறது...நீங்களும் அப்படிப்பட்டவராகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

பொன்ஸ் என்ற பதிவர் ஒரு முறை எழுதி இருந்தார்.. உங்களிடம் பேசும்போதும் உங்கள் பதிவுகளை படிக்கும் போதும் எதார்த்தையும் உண்மையையும் அவர் உணர்ந்தாக..
உங்களின் பதிவுகளை அவ்வப்போது படிப்பவள் நான்...இன்றைக்கு இதை சொல்ல வேண்டும் போல் தோன்றியது...

இதோ அம்ருதாவில் இருந்து அழைப்பு.. உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்...Take it Mangai

Anonymous said...

Great..

காட்டாறு said...

தனக்குள்ளே இருக்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு கவிதை! Simply superb. :)