Tuesday, August 03, 2010

வெளிச்சம்....


ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்..
என் சுயநினைவை கிழித்துக்கொண்டு ச்சோவென பெய்கிறது மழை
முகத்தில் அறைகிறது காற்று

மழையும் நிற்கப் போவதில்லை..
இந்த காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்???
கைகளை கேடயமாக்கி சுருண்டு கொள்கிறேன்
இந்த இரவு விடியாமலே போய்விட்டால்???
அறையெங்கும் அவநம்பிக்கைகள்

இறுதி நிமிடங்களில் இரவு - அதைக்
கிழிக்கும் ஒளிக்கீற்று வரவேண்டும்
சூரியனை மிரட்டலாம்தான்...எடுபடுமா?
அவநம்பிக்கைகள் மீது வெறுப்பு படர்கிறது

கருப்பையின் கதகதப்பிற்கு ஏங்கிக்கிடக்கிறேன்
மழைச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது
கண்ணுக்குள் கருமை நிறைந்திருக்கிறது
இந்த கருமைக்குள் தொலைந்து விடுவேனோ...

நிசப்தத்தை கிழிக்கும் என் எண்ணங்களின் கூக்குரல்
வெளிச்சம் தானாய் வராது விழிக்காத வரையில்
அதிர்ந்து எழுகிறேன், மெல்லிய வெளிச்சம் அறையெங்கும்..

நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்...



51 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹேய்ய்ய். எங்கம்மிணி கவிதை எழுதிட்டாங்கோ . :)

நல்லா இருக்கு

ரவி said...

அருமை !!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காற்று தூக்கிட்டு போற அளவுக்கா இருக்கீங்கம்மணி ..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெளிச்சம் தானாய் வராது விழிக்காத வரையில்//

அதானே.. ம்.. பக்கெட் தண்ணிய ஊத்துங்கப்பா..

வெங்கட் நாகராஜ் said...

///நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்...///


நம்பிக்கையில் தானே வாழ்க்கையே.. அழகாய் இருக்கிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.

டுபாக்கூர் பதிவர் said...

கவிஞர்.மங்கை...

ஹைய்...இது கூட நல்லாருக்கு, இனி அடிக்கடி இந்த மாதிரி எழுதுங்க தாயீ...

Thekkikattan|தெகா said...

இவ்வளவு சரக்கை வைச்சிக்கிட்டுத்தான் கொடுக்காம வைச்சிருக்கீங்களா...

இந்த மழையை எதுக்கெல்லாம், எப்படியெல்லாம் பயன் படுத்திக்கிறாங்க... :)

மழை, இருள், வெளிச்சம், இரண்டும் கலந்ததுன்னு எல்லா நேரத்திலும் நம்மை சூழ்ந்துதான் இருக்கிது, ஆனா நம்ம மண்டை எந்த சூழ்நிலையில் அந்த நேரத்தில இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி அழகாவோ அல்லது பயமுறுத்தி முழுங்கிடுற மாதிரியோ அவதாரம் எடுக்கிது போலவே!

சொல்லாடல் சரளமா இருக்குது...

காட்டாறு said...

எங்கிருந்தாய் இத்தனை நாளாய் கவிதாமணி? :-) மண்டபத்திலே யாரும்????? ஜும்மா... கேட்டுக்குறேன்...

அருமையா வந்திருக்கு கவிதை. மேலும் தொடர வாழ்த்துக்கள்

காட்டாறு said...

// delphine said...
நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்"""///
I will be with you in Kovai this Friday.. Cheer up..
//

enjoy enjoy! நானு????

கவிதா | Kavitha said...

மங்கைஜி கவிதை முடியும் போது "வெளிச்சம்" வந்துடுது.. :)

தமிழ் அமுதன் said...

///நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்...///

அருமை...! இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாங்க...!;;)

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குக்கா கவிதை :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதா | Kavitha said...

மங்கைஜி கவிதை முடியும் போது "வெளிச்சம்" வந்துடுது.. :)//

சூப்பர் கமென்ட் ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

லேபிளைப்பாருங்கய்யா..
கவிதை மாதிரியாம்.. கவிதைக்கே மாதிரியா இது.. ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு said...

எங்கிருந்தாய் இத்தனை நாளாய் கவிதாமணி? :-)//

கேக்கிறாங்க பாருங்க இந் த அம்மணி எங்க இருந்தாங்களாம் ?

ஓ வெளிச்சம் காட்டாறா வருதோ :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வெளிச்சம்ன்னா.. ஒளிமயமான எதிர்காலமா அம்மணி.. அட இவங்க சிவாஜி ரசிகையில்ல.. சரி சரி.. :)

ஆயில்யன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

லேபிளைப்பாருங்கய்யா..
கவிதை மாதிரியாம்.. கவிதைக்கே மாதிரியா இது.. ;)) //

அட! ஆமாம் !இப்புடிக்கூட யோசிக்கலாம்ல :)

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்

மதுரை சரவணன் said...

//நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்..//


மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

ஒரு மனுஷன் ஒருநாள் இல்லைன்னா என்னென்ன வேலை எல்லாம் நடக்குது இங்க..;))))

மங்கைக்கா கவிதை...அதுல முத்துக்கா கும்மி வேற ;-))

சூப்பருண்ணேன் ;)

Raji said...

huga andd tones of love..loved that poem..we all want you back in your blog very often

சென்ஷி said...

மைக் டெஸ்டிங்...

1... 2... 3...

சென்ஷி said...

எப்படி யோசிச்சாலும் எப்படி கும்மி அடிக்கறதுங்கறது மறந்து போயிடுச்சே.. நான் இப்ப என்ன செய்யறதுன்னு தெரியலையே :((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட சென்ஷி இலக்கியவாதி ஆனாதால் கும்மி மறந் துடுச்சா .. இல்ல செலக்டிவ் அம்னீசியாவா. ? :)

சென்ஷி said...

@ முத்துக்கா...

நல்லவேளை ஞாபகப்படுத்துனீங்க.. நான் இலக்கியவாதியாகிட்டேன்ல.. அதான் பிரச்சினை போல.. பரவால்ல. கவிதைக்கு விமர்சனம் எழுதி என்னோட இருப்பை நிரூபிச்சுடறேன் :)

கோமதி அரசு said...

/இனி தொலைந்து விட மாட்டேன்/

நம்பிக்கை இருந்தால் நிச்சியம் வெளிச்சம் வரும் மங்கை.

கவிதை மிகவும் நன்றாக இருக்கு மங்கை .

தொலைய வேண்டாம், இருப்பை இப்படி கவிதை மூலம் அறிவித்துக் கொண்டே இருங்கள்.

harveena said...

come onnnnn darling, wt a restart,, this s wt i need frm ur end,, woww,, such a nice stances,, endg s simply superbbb,, rockinggg madam,,

நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்"""/// cheers

nanum ida madiri eludanum nu than try panren,, mmm onum velaiku agalaa,, partiban kita training polam nu pakaren,,,,

comeee on,,

// delphine said...
நம்பிக்கை துளிர்க்கிறது...
இனி தொலைந்து விடமாட்டேன்"""///
I will be with you in Kovai this Friday.. Cheer up..
//

enjoy enjoy! apooooo நானு????

மங்கை said...

வாங்க டாக்டரம்மா...நன்றி....

மங்கை said...

லட்சுமி..லட்சுமி

ஏன்பா... சத்தியமா இந்த மாதிரி கவிதை எல்லாம் எழுத மாட்டேன்...
நீங்க கொஞ்சம் சாந்தம் ஆகுங்க...:(

மங்கை said...

காத்து அடிச்சு தூக்கிட்டு போகிற மாதிரி நான் ஆனேன்னா அப்புறம் என்ன.. நடக்கிற காரியமா

மங்கை said...

//மழை, இருள், வெளிச்சம், இரண்டும் கலந்ததுன்னு எல்லா நேரத்திலும் நம்மை சூழ்ந்துதான் இருக்கிது, ஆனா நம்ம மண்டை எந்த சூழ்நிலையில் அந்த நேரத்தில இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி அழகாவோ அல்லது பயமுறுத்தி முழுங்கிடுற மாதிரியோ அவதாரம் எடுக்கிது போலவே!///

உண்மை தெகா... சரக்கெல்லாம் இல்லை... பதில் உங்க கருத்துலயே இருக்கு

மங்கை said...

//நம்பிக்கையில் தானே வாழ்க்கையே.. அழகாய் இருக்கிறது உங்கள் கவிதை. வாழ்த்துக்கள்.///


நன்றி நாகராஜ்..முதல் வருகை..:)

மங்கை said...

வாங்க ரவி....ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க..நன்றி

மங்கை said...

// பிரபல பதிவர் said... கவிஞர்.மங்கை...
ஹைய்...இது கூட நல்லாருக்கு, இனி அடிக்கடி இந்த மாதிரி எழுதுங்க தாயீ.//

பெரிய மனசு பண்ணி பிரபல பதிவர்கள் எல்லாம் வராங்கப்பா..

மங்கை said...

// காட்டாறு said...

எங்கிருந்தாய் இத்தனை நாளாய் கவிதாமணி? :-) மண்டபத்திலே யாரும்????? ஜும்மா... கேட்டுக்குறேன்.//

இப்படி ஆகும்னு தெரியும்...

மங்கை said...

காட்டாறு தாயீ...

பொலம்பல்ல இருந்தே தெரியலையா.. அது இந்த அம்மணி தான்னு

மங்கை said...

///கவிதா | Kavitha said...

மங்கைஜி கவிதை முடியும் போது "வெளிச்சம்" வந்துடுது.. :)///

நன்றி கவிதா...:).. வந்து தானே ஆகனும்...

மங்கை said...

தமிழ் அமுதன் said...
//அருமை...! இத்தன நாள் இந்த கவிஞர் எங்க இருந்தாங்க...!;;)///

வேனாம் அனுதன்..கவிதை எல்லாம் வேனாம்..போதும்.. நன்றி:))

மங்கை said...

//நான் ஆதவன்☀ said... நல்லாயிருக்குக்கா கவிதை :)//

நன்றி ஆதவன்..:)

லட்சுமி...ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல...

மங்கை said...

//ஆயில்யன் said...
கவிதைக்கே மாதிரியா இது.. ;)) //
அட! ஆமாம் !இப்புடிக்கூட யோசிக்கலாம்ல :) //

நன்றி ஆயில்யன்...முத்து பேச்சு கேட்காதீங்க..;)

மங்கை said...

நன்றி மதுரை சரவணன்...:)

மங்கை said...

கோபிநாத் said...
ஒரு மனுஷன் ஒருநாள் இல்லைன்னா என்னென்ன வேலை எல்லாம் நடக்குது இங்க..;))))//

கோபி தம்பி...இதுக்குதான் சாக்கிறதையா இருக்கனும்..இல்லன்னா இப்படித்தான் நாங்க...

மங்கை said...

நன்றி ராஜி...:)

மங்கை said...

//Blogger சென்ஷி said...

எப்படி யோசிச்சாலும் எப்படி கும்மி அடிக்கறதுங்கறது மறந்து போயிடுச்சே.. நான் இப்ப என்ன செய்யறதுன்னு தெரியலையே :((//

இது எல்லாம் ஓவர்..ரொம்ப ஓவர்

எல்லாம் இலக்கிய வியாதி புடுச்சுட்டு ஆட்டுது...

மங்கை said...

கோமதிம்மா...

நன்றி...

//தொலைய வேண்டாம், இருப்பை இப்படி கவிதை மூலம் அறிவித்துக் கொண்டே இருங்கள்.//

:)))

மங்கை said...

harveena said...
come onnnnn darling, wt a restart,, this s wt i need frm ur end,, woww,, such a nice stances,, endg s simply superbbb,, rockinggg madam,,
nanum ida madiri eludanum nu than try panren,, mmm onum velaiku agalaa,, partiban kita training polam nu pakaren,,,,comeee on//

நீ எழுது வீனா.. நீ எழுத்றது தான் கவிதை

harveena said...

haha madam,, ullagam thangadhuu,, nanlam ' kanmani anbodu kadalan ' case,, hahha

தோழி said...

வெளிச்சம் நிறையும்... நிறையட்டும்..

மங்கை said...

நன்றி தோழி...

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

sathishsangkavi.blogspot.com said...

வணக்கம்....

எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு உள்ள உங்கள் பதிவுகளை பார்த்தேன் எனக்கு தேவையான நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்

எனது இப்பதிவை பாருங்கள்...

திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியமா?

http://sangkavi.blogspot.com/2010/08/blog-post_05.html


நான் எவ்வாறு இவர்களுக்கு உதவுவது என்று கூறுங்கள்

Anonymous said...

//வெளிச்சம் தானாய் வராது விழிக்காத வரையில்//

Very Nice... Expecting more such poems from u.