Wednesday, April 21, 2010

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

நிர்பந்தங்கள் அற்ற நேசங்களை நினைவில் கொண்டு....இதோ இந்த பாடல்




இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
வசந்த்தின் மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

15 comments:

கவிதா | Kavitha said...

//நிர்பந்தங்கள் அற்ற நேசங்களை நினைவில் கொண்டு...//

ம்ம்ம்ம்ம்ம்..!! :(

மங்கைஜி, ஏனோ இந்த வரிகள் மனதில் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது......

Thekkikattan|தெகா said...

வாவ்! மங்கை is in love :) யாரந்த தோழி, புதிதுபுதிதாய் உலகம் விரிகிறா? ஜஸ்ட் எஞ்சாய்... செம பாட்டுத்தேய்ன்...

அமுதா கிருஷ்ணா said...

நல்ல பாட்டு..பாட்டை கேட்கும் போதே தோழியுடன் இருப்பதை போல் உணர்வு வரும்

அபி அப்பா said...

ஜூப்பரு! இன்னிக்கு எதேற்சையா கேட்டேன்! உடனே இங்கயும் பார்த்துட்டேன்!!!

க.பாலாசி said...

ச்ச்ச... இந்த பாட்டு கேட்டு ரொம்ப நாளாச்சுங்க... நன்றிங்க... அருமையான பாடல்....

ரோகிணிசிவா said...

THANKS FOR SHARING A GOOD SONG !!!

சென்ஷி said...

வட்டத்துக்குள் சதுரம் ;)

thamizhparavai said...

எனக்கும் மிகப் பிடித்த பாடல்.. பகிர்வுக்கு நன்றி...

Unknown said...

ஓல்டு இஸ் கோல்ட்.

மேஸ்ட்ரோவின் பாட்டில் எப்போதும் ஒரு ஆழ்ந்த சோகம் இருக்கும்.உற்றுக் கேட்டால் தெரியும்.பெண்களால் மிகவும்
விரும்பிக்கேட்ட பாடல்.

டவுசர் பாண்டி... said...

மலரும் நினைவுகளாக்கும்...:)

செல்வநாயகி said...

நன்றி... அருமையான பாடல்.

Raji said...

A very nice song...relationships without compulsion ???? :)

தமிழ் அமுதன் said...

இளையராஜாவின் காலத்தால் அழியாத கானங்களில் இதுவும் ஒன்று..!

மங்கை said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக மிக அருமையான பாடல் மங்கை.. நினைவு படுத்தினதுக்கு நன்றிப்பா.. ;)