Thursday, December 24, 2009
மூன்றே நாட்களில் முடிந்த வழக்கு....நம்புங்கள்
நம் நாட்டில் ஒரு சிவில் வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான வழக்குகள் அந்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், புதிதாகத் தாக்கல் செய்யப்படும் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை காலதாமதம் ஆகிறது. இது நம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம் என்று கூட சொல்லாம்.
ஆனால் கொல்கத்தா உயர்நீதி மன்றம் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணிக்கு, வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்றே நாட்களில் தீர்ப்பு வழங்கி சாதனை படைத்திருக்கிறது.
பம்பி தாஸ் என்ற பெண்மணி எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர். ட்ரான்ஸ்போர்ட் பிஸினஸ் நடத்தி வந்த கணவர் எச்ஐவி நோய்க்கு ஆளாகி 2006 ஆம் ஆண்டு இறந்து போனார். எங்கேயும் நடப்பது போல இவருக்கும் கணவர் வீட்டார் பூரிவீக சொத்தை பிரித்து கொடுக்க மறுக்கவே, பம்பி தாஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
நோயின் தன்மையை கருத்தில் கொண்டு, உயர்நீதி மன்றம் வழக்கு விசாரனையை மூன்றே நாட்களில் முடித்து தீர்ப்பு வழங்கி இருப்பது மிகவும் ஆறுதல் அளிக்கும் விஷயம்.
பம்பி தாஸ் நியாயம் கோரி பல பேரிடம் கெஞ்சிப் பார்த்தும் முடியாமல் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியால் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரின் உடல்நிலையை மனதில் நிறுத்தி, காலதாமதமாக தீர்ப்பு வழங்குவதால் எந்த உபயோகமும் இல்லை என்று மூன்றே நாட்களில் வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இந்த மாதிரி மேட்டர் எல்லாம் உங்க கண்ணுலதான் சிக்குது.
மூணு நாள்ல தீர்ப்பு கொடுத்தது சரிதான்...ஆனா அப்பீல்னெல்லாம் இருக்கே....
டவுசர் பாண்டிக்கு ரிப்பீட்டு...
மறுபடியும் பிசியா எழுத ஆரம்பிங்கக்கா..
நல்ல விசயம்.. ஏனுங்கம்மணி இந்த ராத்தூர் விசயமா எதாச்சும் போடுவீங்களாக்கும்னு பார்த்தேன்..டைம்ஸ் ஆஃப் இண்டியா பாத்தா போட்டிருப்பீங்களோ..?
///டவுசர் பாண்டி... said...
இந்த மாதிரி மேட்டர் எல்லாம் உங்க கண்ணுலதான் சிக்குது.மூணு நாள்ல தீர்ப்பு கொடுத்தது சரிதான்...ஆனா அப்பீல்னெல்லாம் இருக்கே///
உண்மை தான்...தொண்டு நிறுவனங்கள் இருக்கு... உறவினர்கள் இனியாவது உதவிக்கு வருவாங்க.. அப்பீல்கெல்லாம் போக மாட்டாங்கன்னு நினைக்கறேன்.. குழந்தைகள் இருக்கும்போது... ம்ம்ம்
நன்றி சென்ஷி..
லட்சுமி... இப்ப எது படிப்பதும் ரொம்ப கம்மி ஆயிடுச்சு ..:)
நல்ல பதிவு...! அடிக்கடி எழுதுங்க மேடம்..!
Post a Comment