Wednesday, December 09, 2009

கண்ணா சுகமா கிருஷ்னா சுகமா......

காவியத் தலைவி

தாயில்லாமல் வளரும் ஒரு பெண்ணும்.....தான் தான் தாய் என்பதை சொல்ல முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட தாயும் சேர்ந்து பாடும் பாட்டு...தாயும் மகளுமாக இரு வேடத்தில் செளகார் ஜானகி நடித்த அருமையான ஒரு படத்திலிருந்து.....

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா? என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
இருப்பது எங்கே சொல் என்றேன் அன்னை முகமோ காண்பது நினமோ
கனவோ நனவோ சொல் என்றேன் கனவோ நனவோ சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? - என் கண்மணி சுகமா? சொல் என்றேன்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன் - நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்



Get Your Own Hindi Songs Player at Music Plugin

9 comments:

சென்ஷி said...

இந்தப் பாட்டை இப்பத்தான் கேக்கறேன்...

நீங்க நலமா இருக்கீங்களா...?

டவுசர் பாண்டி... said...

இந்த பாட்டுக்குப் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்குன்னு இன்னிக்குத்தான் தெரியும்...

நல்ல பாட்டு...டேங்ஸ்

ராமலக்ஷ்மி said...

இந்தப் படத்தில் இப்பாடல் காட்சி எனக்குப் பிடித்தமான ஒன்று. வரிகளும் செளகார் ஜானகி உணர்வுப் பூர்வமான நடிப்பும் அற்புதமாய் இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

பெருசு said...

யக்கோவ்

ரொம்ப நாளூ கழிச்சு நேயர் விருப்பம் எல்லா போட்டு இருக்கீங்க.

அருமையான தேர்வு.

goma said...

இன்று தொலைக் காட்சியில் காவியத்தலைவி பார்த்தேன் .இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் யாராக இருந்தாலும் அவர்களைக் கொஞ்சம் ஆட்டிவைத்துவிடும்

கோபிநாத் said...

இப்படி ஒரு பாட்டு இருக்குன்னு இப்போ தான் தெரியுது !!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) எல்லாரும் சுகம்ன்னு தெரியுது..

Anonymous said...

//தான் தான் தாய் என்பதை சொல்ல முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட தாயும் சேர்ந்து பாடும் பாட்டு//
அந்தத் திரைப்படத்தில் அவர் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதாக நினைவில்லை. ஆடல் பாடலில்தான் ஈடுபடுவதாக நினனக்கிறேன்.

பாலாஜி சங்கர் said...

இந்த படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரம் முன்னால் காதலனாக வருவார்
எனக்கு மிக பிடித்த ஒன்று
பகிர்ந்தமைக்கு நன்றி