தமிழ் வலைப்பதிவுகள்ள ஒரு காலகட்டத்துல துறை சார்ந்த பதிவுகள் அதிகமா வந்துட்டு இருந்துச்சு. ஒவ்வொருதுறையிலும் விஷயம் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருந்தாங்க...இருக்காங்க.. வலையுலகில் நான் காலடி எடுத்து வைத்த புதிதில் இது போன்ற பதிவுகள் நிறைய படிக்க முடிஞ்சது. உதாரணத்திற்கு- சாஃப்ட்வேர் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்.அதையெல்லாம் ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ள பலருக்கு பொறுமை இருக்காது.எனக்கு இல்லை..:-) லட்டு மாதிரி எளிய தமிழில் தெளிவா எழுதி கொடுத்துட்டு இருந்தாங்க. ஆர்வத்துடன் படித்து வந்தோம். ஆனா அது எல்லாம் இப்போ சுத்தமா காணோம்.
புகைப்படக்கலை , மென்பொருள், கணினி, மருத்துவம், பொருளாதாரம், மனோதத்துவம், உயர் கல்வி இப்படி நமக்கு ரொம்பவும் பரிச்சயமில்லாத பல துறைகளை பற்றிய தமிழ் பதிவுகள் என் போன்ற பலரின் அறிவுக்கு சத்தான தீனியை போட்டவை. குறிப்பாக பொருளாதாரம் பற்றிய மா.சிவகுமாரின் பதிவுகள். நான் விரும்பி படிப்பவைகளில் ஒன்று. எதனாலோ அது எல்லாம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டன. அந்ததந்த துறையில் இருப்பவர்கள் அவர்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால், உலக தமிழ்மக்கள் பலருக்கு உதவியாக இருக்கும்.
இதுல விதிவிலக்கா நானும் ரொம்ப நாளா கவனிச்சுட்டு இருக்குற ஒன்னு... இந்த பங்கு சந்தையை பத்தி எழுதுற சரவணகுமார் மட்டும் யாருக்காக எதுக்கு இப்படி மெனகெட்டு மாங்கு மாங்குனு எழுதறார்னு நினப்பேன். (http://panguvaniham.wordpress.com) . அவர் ஆரம்பித்த கால கட்டத்தில் அதுல அதிகமா பின்னூட்டம் நான் பார்த்தில்லை. அப்புறம் யார் வந்து படிக்கிறாங்கன்னு இவர் தினமும் எழுதறார்னு நினச்சதுண்டு. ஆனா இப்ப தான் தெரியுது பின்னூட்டமிடாமல் நிறைய பேர் படிச்சிட்டு இருந்திருக்காங்கன்னு.
அவருடைய ஆர்வத்தினாலேயே தினமும் பங்குச்சந்தை நுட்பங்களை ஆராய்ந்து, நிலவரங்களை சொல்வதோடு நில்லாமல், வர்த்தகம் செய்யக்கூடிய பங்குகளை பரிந்துரையும் செய்துவருகிறார். இவரைத் தொடர்ந்து திரு. சாய் கனேஷ் அவர்களும் பங்குசந்தை நிலவரங்களை அருமையாக தினமும் வழங்கி வருகிறார். இவர்களை தொடர்ந்து Share hunter, பாலாஜி, விஜய்கனேஷ், அஷோக் நாட்டாமை ன்னு நிறைய பேர் இப்போ தினமும் சந்தை பற்றி தங்களின் பார்வையை எழுதிட்டு இருக்காங்க.
கோவை சென்ற போது தோழி ஒருத்தி இந்த பதிவுகளுக்கு பாராட்டு பத்திரம் கொடுத்த போதுதான் இவர்களின் பங்களிப்பின் அருமை எனக்கு தெரிந்தது. சக வலைபதிவர் என்கிற முறையில் அது மனதிற்கு நிறைவாகவும் இருந்தது. முழுநேர தினவர்த்தகம் செய்யும் அவள், இந்த பதிவுகள் அவளுக்கு பேருதவியாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினாள். இது வலைபதிவுகளின் வெற்றியல்லவா!
பங்குச்சந்தை பற்றிய அடிப்படைகளை தெரிந்து கொள்ளவும், நுட்பங்களை கற்றுக்கொள்ளவும் பல ஆங்கில தளங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அன்றாடம் அமெரிக்க பொருளாதாரம் சரிவதையும், அது சந்தைகள் மீது ஏற்படுத்தும் தாக்கதையும், தங்கத்தின் ஏற்ற இறக்கத்தையும் பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். இது எதனால் ஏற்படுகிறது?, இதன் பின் புலம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வமிருந்தும், அதை ஆங்கிலத்தில் தேடிப்பிடித்து படித்து தெளிய நமக்கு பொறுமையோ,ஆர்வமோ இருப்பதில்லை.
அதையே எளிய தமிழில் நமக்கு தர கூடிய பதிவர்கள் கண்டிப்பாக நம்மிடையே இருக்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்களை பங்குசந்தையை அலசுவதன் மூலம் இந்த பதிவுகள் நமக்கு தருகின்றன. எத்தனை பேருக்கு இந்த பதிவுகள் இருப்பது தெரியும் என்று தெரியவில்லை.
பங்குசந்தை நிலவரங்களை கூறவும், அன்றைய தினத்திற்கான பரிந்துரைகளைச் சொல்லவும், இந்த நண்பர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது. ஒரு குறிப்பிட்ட பங்கினை பரிந்துரைக்க அந்தப்பங்கின் கடந்த கால நிலை, தற்போதைய நிலை, பங்கின் விலையை நிர்ணயிக்கும் வெளி - உள் காரணிகள் ஆகியவைகளை ஆராய்ந்து, அவை அன்றைய தினத்திற்கு வர்த்தகம் செய்ய ஏற்றதுதான என்பதை கூறி தினவர்த்தகர்களுக்கு உதவி வருகிறார்கள். இதில் மற்றவர்களின் பணம் சம்பந்தப்படிருப்பதால் இவர்கள் அதிக அக்கறையுடனும், கவனத்துடனும் ஆராய்ந்து கூறிவருகிறார்கள்.
கடந்த 4-5 மாதங்களாக பங்குசந்தையில் தினவர்த்தகம் செய்து வரும் சில நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இதில் ஆர்வத்துடன் தினவர்த்தகம் செய்யும் பெண்களும் உள்ளனர். இவர்களில் பலர் குடும்பத் தலைவிகள். இவர்கள் சாதாரணமாக என்னுடன் யாஹூவில் தமிழில் பேசிக் கொண்டே தினவர்த்தகம் செய்வது இன்றுவரை எனக்கு பெரிய ஆச்சிரியமே. இவர்களுக்கு உற்சாகமளித்து உதவுபவர்கள் மேற்கூறிய பதிவுகளை எழுதும் நண்பர்கள் என்பது சந்தோஷமான ஒரு சங்கதி.
பங்குசந்தை பற்றிய அடிப்படையில் இருந்து நுட்பகூறுகள் வரை தாங்கள் கற்றுக் கொண்டது இந்த பதிவுகள் மூலம் தான் என்று இவர்கள் கூறும் போது, இந்தப் பதிவுகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களின் அனுபவத்தினை, ஆற்றலை தன் தாய் மொழியில் அனைவரும் பயன்படுத்திடும் வகையில் எடுத்துரைக்கும் இவர்கள்தான் உண்மையான மொழி பற்றாளர்கள் அல்லது இன உணர்வாளர்கள் என்றால் அது மிகையாகாது.
தினவர்த்தகம் பற்றிய பதிவுகள்
சரவணகுமார் - http://panguvaniham.wordpress.com
சாய்- http://
சரவண பாலாஜி- http://
விஜய் கணேஷ்- http://
அசோக் நாட்டாமை - http://
அலெக்ஸ்- http://sharehunter.wordpress.com
தமிழ் வலைபதிவுகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டுமானால் இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்.தங்களுக்குத் தெரிந்ததை சக தமிழர்களுக்கு உணர்த்துவதன் மூலம் ஒற்றுமையையும், பினைப்பினையும் உருவாக்க இயலும். இந்த பதிவின் நோக்கமும், எதிர்பார்ப்பும் அதுவே.
41 comments:
//தமிழ் வலைபதிவுகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டுமானால் இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்.தங்களுக்குத் தெரிந்ததை சக தமிழர்களுக்கு உணர்த்துவதன் மூலம் ஒற்றுமையையும், பினைப்பினையும் உருவாக்க இயலும். இந்த பதிவின் நோக்கமும், எதிர்பார்ப்பும் அதுவே.//
அருமையான கருத்து அப்படியே வழிமொழிகிறேன்!
எதிர்கால தலைமுறைக்கும் கூட பேருதவியாய் இருக்கப்போகும் தகவல் களஞ்சியமாக வலைப்பூக்கள் திக்ழ இது போன்ற முயற்சிகள் கட்டாயம் தேவை!
useful info, mangai!
can join the sweep stake too ;-)?
\தொடர்ந்து ஒரே மாதிரி என் துறை சார்ந்த விஷயத்தை மட்டுமே எழுதறேன்னு ஒரு எண்ணம். அதனால ஒரு மாறுதலுக்காக வேற ஏதாவது எழுதலாம்னு ஒரு ஆசை.
\\
இந்த மாதிரி ஆசை அடிக்கடி வரட்டும்..அப்பதானே எங்களுக்கும் இப்படி நிறைய பதிவுகள் பதிவர் தெரியவரும் ;))
தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ;)
நான் கூட நிறைய்ய மொக்கையா எழுதிட்டு வந்திட்டு இருக்கேன்க்கா. மொக்கைகளை பத்தி எப்பவாச்சும் ஒரு பதிவு எழுதுனா என்னோட பதிவு லிங்கையும் தரணும் :-)
பங்குசந்தை வர்த்தக பதிவு குழுவினருக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும் :-))
"ஏன் இப்படி இருக்க கூடாது?......"
//
ம்ம் மங்கைஜி இருக்கலாம்.. :) மனிதவளம் பற்றி ஆங்கிலத்தில் ஒன்று தொடங்கி எழுதினேன்.. ஆனால் தொடர்ந்து எழுத முடியவில்லை. .நடுவில் நண்பர் ராஜா தமிழில் எழுதுங்களேன் என்றார்.. முயற்சி செய்கிறேன்.. ஆனால் எனக்கு பிரச்சனை அதை முழுமையாக தமிழ்படுத்தி எழுதும் போது பயன் அளிக்குமா..? ஏனென்றால் எல்லாமே நாம் ஆங்கிலவழியில் தான் கை ஆள்கிறோம்.. அதனால்.. ஒரு சின்ன தயக்கம் இருக்கிறது... :)
முடிந்தால் தெகாஜி ; நீங்கள் எல்லாம் எனக்கு சஜஷன்ஸ் கொடுங்களேன்... pLs :)
உங்களின் அக்கறைக்கும் கவனிப்புக்கும் நன்றி...
நெம்ப தேங்ஸுங்கோவ்
ஹி..ஹி...ம்ம்ம்ம்ம்
//எதிர்கால தலைமுறைக்கும் கூட பேருதவியாய் இருக்கப்போகும் தகவல்///
அதே அதே..அது தான் என் எதிர்பார்ப்பும்...குழந்தைகளுக்கு தாய்மொழியில் எடுத்துக்கூற இந்த பதிவுகள் உதவியாக இருக்கும்..
//இயற்கை நேசி|Oruni said...
useful info, mangai!
can join the sweep stake too ;-//
கண்டிப்பா தெகா...உங்களுக்கு உதவ நிறைய நண்பர்கள் இருக்காங்க..
//இந்த மாதிரி ஆசை அடிக்கடி வரட்டும்..அப்பதானே எங்களுக்கும் இப்படி நிறைய பதிவுகள் பதிவர் தெரியவரும் ;))///
கோபி தெரிஞ்விக்கிட்டா மட்டும் போதாது.. படிக்கனும்...ஆதரவு தரனும்
நன்றீ சென்ஷி..நீங்க தான் காதல் சொட்ட சொட்ட கவிதை எழுதறீங்களே.. அடை போய் மொக்கைனு சொல்லிட்டீங்களே..:-)
நன்றி
கவிதா
எழுதும்போது ஆங்கில வார்தைகளை ப்ரேக்கட்ல போடலாம்...தமிழ் வார்த்தை முடிந்தவரை போடலாம்... முயற்சி செய்ங்க...உங்கதுறை பற்றி எழுதினா ரொம்ப உபயோகமா இருக்கும்
\\தாய் மொழியில் அனைவரும் பயன்படுத்திடும் வகையில் எடுத்துரைக்கும் இவர்கள்தான் உண்மையான மொழி பற்றாளர்கள் அல்லது இன உணர்வாளர்கள் என்றால் அது மிகையாகாது\\
உண்மைதான் மங்கை! இவர்களே உண்மையான மொழி உனர்வாளர்கள்!
ஒரு சமயம் நானும் கண்மணி டீச்சர் அவர்களும் கூட நான் மேத்ஸ் அவங்க கெமிஸ்ட்ரின்னு அழகா புரியும்படி பசங்களுக்கு ஸ்பெஷலி +2 பசங்களுக்கு பாடமே எடுக்கலாம்ன்னு இருந்தோம் வலைப்பூ வழியாக(தனியா ஒரு வலைப்பூ ஆரம்பித்து) அந்த நேரம் பார்த்து டீச்சர் பிஸியாகிவிட்டாங்க அதனால அது விட்டு போச்சு.
மலையாளத்துல இது போல ஒரு +2 பசங்களுக்கு அழகா பாடம் சொல்லி கொடுக்கும் ஒரு வலைப்பூ பத்தி கேள்விப்பட்டு அதை பார்த்தேன். ஆனா எனக்கு தமிழ் வழியில் சொல்லி கொடுக்க தெரியாதெனனும் ஆங்கிளத்தில் நடத்தலாம் என்று இருந்தும் ஏனோ முடியாம போச்சு.
என்ன நீங்க சொல்வது போல பின்னூட்டம்ன்னு பார்தா ஒன்னு கூட வராது. ஆனா நீங்க சொன்ன பதிவர்கள் எல்லாம் பின்னூட்டம் எதிர்பார்க்காம இப்படி கடமையை அழகா செஞ்ச பிறகு எனக்கு அந்த ஆசை மீண்டும் தலைதூக்கி இருக்கு! பார்ப்போம்!!
//யட்சன்... said...
உங்களின் அக்கறைக்கும் கவனிப்புக்கும் நன்றி...நெம்ப தேங்ஸுங்கோவ்//
நாங்க தாங்க டேங்கஸ் சொல்லனுமிங்க..
இன்னும் சிறப்பா செய்ய வாழ்த்துக்கள்
ஆனா 1 மொக்கையை பத்தி எழுதும் போது எனக்கு ஜென்ஜி க்கு பக்கத்தில் கூட வேண்டாம் கொஞ்சம் தூரமா ஒரு இடம் கொடுத்தா கூட போதும்:-))
அபி அப்பா
நீங்க சொன்ன சேவை மகத்தானது.. கண்டிப்பா செய்ங்க.. முதல்ல டல்லா இருக்குற மாதிரி இருக்கும்... அதனால பயன் அடையறுவுங்க இருக்காங்கன்னு தெரிஞ்சா நமக்கும் ஆர்வம் அதிகமாகும்
கண்டிப்பா செய்ங்க
திரு.அலெக்ஸ் அவர்களின் பதிவு விடுபட்டிருக்கிறது. அவரின் பதிவினையும் இனைத்திட வேண்டுகிறேன்.
http://sharehunter.wordpress.com
ரொம்ப சரியா சொன்னிங்க நீங்க சொன்ன திரு.பங்குவணிகம் சரவணன் சார் தான் எனக்கும் குரு,இப்ப நான் தன்னம்பிக்கையா வியாபாரம் பண்ணறேன்........என்ன மாதிரி நிறைய பேர் பயனாளியா இருக்காங்க.....ரொம்ப நன்றி அக்கா..............
ரொம்ப சரியா சொன்னிங்க நீங்க சொன்ன திரு.பங்குவணிகம் சரவணன் சார் தான் எனக்கும் குரு,இப்ப நான் தன்னம்பிக்கையா வியாபாரம் பண்ணறேன்........என்ன மாதிரி நிறைய பேர் பயனாளியா இருக்காங்க.....ரொம்ப நன்றி அக்கா..............
நானும் வாழ்த்திக்கிறேன்ப்பா.. நானும் கத்துக்க முயற்சி செய்து அந்த பக்கம் அடிக்கடி எட்டி எட்டி தான் பார்க்கிறேன்..:) கொஞ்சம் என் அறிவுக்கு கஷ்டமாத்தான் இருக்கு..
நன்றி பாலா...:-)
லட்சுமி
என்னையும் லிஸ்ட சேர்த்துகோங்க.. நமக்கும் விளங்கல.. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போம்
தங்களை போன்றவர்களின் அங்கிகாரம் இருந்தால் இன்னும் நிறைய விசயங்களை செய்வோம், உங்களின் அழகான வலைபூவெனும் தோட்டத்தில் எங்களின் பூக்களை வைத்து அழகுபார்த்தமைக்கு எங்கள் அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி - சரவணபாலாஜி
தங்களை போன்றவர்களின் அங்கிகாரம் இருந்தால் இன்னும் நிறைய விசயங்களை செய்வோம், உங்களின் அழகான வலைபூவெனும் தோட்டத்தில் எங்களின் பூக்களை வைத்து அழகுபார்த்தமைக்கு எங்கள் அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி - சரவணபாலாஜி
சரவணபாலாஜி
அங்கீகாரம் உங்களுக்கு ஏற்கனவே கிடைச்சிடுச்சு...
மேலும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்
நன்றி
ஆமாம் இப்ப நிறைய குறைந்து போச்சி.. ஏன்னா அதற்கான ஆதரவு இல்ல முக்கியமா பின்னுட்டம் யாரும் சுத்தமா போடுவது இல்ல.. :(..
ஆனா தமிழ்நெஞ்சம், பிகேபி மற்றும் சில நண்பர்கள் டெக்னாலஜி பதிவுகளை தொடர்ந்து எழுதிட்டு வராங்க.. படிச்சி பாருங்களேன் நிறைய புது விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..
ரொம்ப சரியா சொன்னிங்க அக்கா
ஆர்வகோலாறில் இறங்கி
திக்குதிசை தெரியாமல் திண்டாடிதெருவில் நின்ற எனக்கு சரியான வழியை காட்டியது (என்னை காப்பாற்றியது என்றே சொல்லலாம் )
நீங்க சொன்ன திரு.பங்குவணிகம் சரவணன் சார் தான், அவர்தான் எங்கள் குரு,இப்ப நானும் தன்னம்பிக்கையா வியாபாரம் பண்ணறேன்........என்ன மாதிரி நிறைய பேர் பயனாளியா இருக்காங்க...
(பங்கு சந்தையை பத்தி எழுதுற சரவணகுமார் மட்டும் யாருக்காக எதுக்கு இப்படி மெனகெட்டு மாங்கு மாங்குனு எழுதறார்னு நினப்பேன். (http://panguvaniham.wordpress.com) . அவர் ஆரம்பித்த கால கட்டத்தில் அதுல அதிகமா பின்னூட்டம் நான் பார்த்தில்லை. அப்புறம் யார் வந்து படிக்கிறாங்கன்னு இவர் தினமும் எழுதறார்னு நினச்சதுண்டு. ஆனா இப்ப தான் தெரியுது பின்னூட்டமிடாமல் நிறைய பேர் படிச்சிட்டு இருந்திருக்காங்கன்னு.)
ரொம்ப சரியா சொன்னிங்க
..ரொம்ப நன்றி மிக்க நன்றி ; அக்கா..............
முருகன்
சென்னை
தினசரி வர்த்தகத்தில் இல்லாவிடினும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். தந்திருக்கும் வலைப்பூக்களின் சுட்டிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மிக்க நன்றி மங்கை.
//ஆனா தமிழ்நெஞ்சம், பிகேபி மற்றும் சில நண்பர்கள் டெக்னாலஜி பதிவுகளை தொடர்ந்து எழுதிட்டு வராங்க.///
நன்றி சந்தோஷ்..பயனுள்ள தகவல்
வைகரைதென்றல் நன்றி
நன்றி ராமலக்ஷ்மி--:-)
வணக்கம்
நீங்கள் கூறியுள்ள பங்குவணிகம் திரு.சரவணக்குமார் சார் அவர்கள்தான் எனக்கும் குரு. மேலும் நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து தினவர்த்தகம் பற்றிய பதிவுகளும் புதிதாக வர்த்தகத்தில் ஈடுபட்டு பலவிதத்தில் இழப்பை சந்தித்தவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது என்றால் மிகை ஆகாது. எவ்வளவு பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமி
தமிழில் இருக்கும் இந்த பதிவுகளின் மூலம்தான் நம் மக்கள் பயனடைகிறார்கள். இந்த பதிவின் மூலம் உங்களுக்கும், திரு.சரவணன் சார், சாய் சார் மற்றும் நண்பர்கள் விஜய்கனேஷ், சரவணபாலாஜி, அலெக்ஸ், அசோக் நாட்டாமை ஆகியோருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
By,
Raji
ராஜி
நன்றி...உங்கள் உழைப்பும் ஆர்வமும் பாராட்டுகுறியது..வாழ்த்துக்கள்
madam,, its really a nice thing to share this info,,, i m also one of the follower of saravanan sir only,, more than language he use,, how he transfers, convey what he about to say, matters a lot,,:-)its good in his path,, applause to him,, and vijay too s quite good n his elevation,, thank you for all
பங்கு சந்தை என்னும் கடலில் ஆழம் தெரியாமல் ,நீச்சலும் தெரியாமல் ஆங்கிலமும் அதிகம் புரியாமல் தவித்து கொண்டு இருந்த என்னை போன்றவர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்து காப்பாற்றியது பங்கு வணிகம்
திரு சரவண குமார் அவர்கள் தான். பங்கு சந்தை பற்றிய பல நுணுக்கங்களை
பொறுமையுடனும்,அக்கறையுடனும் எங்களுக்காக இலவசமாக கற்று கொடுத்தவர்.
திரு சரவண குமார் போன்றவர்கள் எங்களுக்கு அறிமுகம் ஆனது எங்கள் அதிஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் சந்தை விவரங்களை பதிவிடும் மற்றவர்களுக்கும்
நன்றிகள்!!
எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி அறிய வைத்த வலைப்பதிவு
http://panguvaniham.wordpress.com
தான்.
நன்றி அவரின் பெயரை வெளியிட்டதற்கு.
எனது வலைப்பூவை தொடங்கும் முன்னரே நான் இவரது வலைப்பூவை தொடர்ந்து படித்துவந்தேன்.
இதற்கப்பிறகே டீ-மேட் அக்கௌண்ட் ஓப்பன் செய்தேன். இவர்கள் மெனக்கெட்டு எழுதுவது வீண்போகவில்லை.
இந்தப் பதிவு வாயிலாக திரு. சரவணகுமார் அவர்கட்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
நன்றி வீனா...உங்கள் முயற்சியில் வெற்றியடைய வாழ்த்துக்கள்
நன்றி அமுதன்..:-)
அமிர்தவர்ஷினி அம்மா said... எனக்கு ஷேர் மார்க்கெட் பற்றி அறிய வைத்த வலைப்பதிவு http://panguvaniham.wordpress.com
தான்.
நன்றி அமிர்தவர்ஷினி..:-)
உங்களைப் போல பலர் பயன் அடைந்திருப்பார்கள் என்று அறியும் போது பெருமையாக இருக்கிறது.. தொடர்ந்து இந்த நண்பர்களுக்கு ஆதரவு அளிக்கமாறு வேண்டுகிறேன்
அட! இது நல்லா இருக்கே!!!
பேசாம சந்தையில் நுழைஞ்சு பார்க்கலாமா?
நல்ல கருத்து.
நன்றி துளசிக்கா..முயன்று தான் பாருங்களேன்..:-)
நன்றி அமுதா...:-)
நன்றி சகோதரி...
Post a Comment